text
stringlengths 16
178
|
---|
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. |
அஃகம் சுருக்கேல். |
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா? |
அகட விகடமாய்ப் பேசுகிறான். |
அகதிக்கு ஆகாசமே துணை. |
அகதிக்குத் தெய்வமே துணை. |
அகதி சொல் அம்பலம் ஏறாது. |
அகதி தலையிற் பொழுது விடிந்தது. |
அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும் வெள்ளிபூராடம். |
அகதியைப் பருதி கேட்கிறதா? |
அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே. |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
அகத்துக் கழகு ஆமுடையான். |
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா. |
அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது? |
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லா மடங்கும். |
அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன? |
அகம் ஏறச் சுகம் ஏறும். |
அகம் மலிந்தால் அஞ்சும் மலியும். |
அகம் குறைந்தால் அஞ்சும் குறையும். |
அகம் மலிந்தால் எல்லாம் மலியும், அகம் குறைந்தால் எல்லாம் குறையும். |
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. |
அகல இருந்தால் பகையும் உறவாம். |
அகல இருந்தால் புகல உறவு. |
அகல இருந்து செடியைக் காக்கிறது. |
அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம். |
அகல்வட்டம் பகல் மழை. |
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். |
அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம். |
அகா நாக்காய்ப் பேசுகிறான். |
அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுறது. |
அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? |
அகிலுந் திகிலுமாக. |
அகோர தபச விபரீத சோரன். |
அகோர தபசி விபரீத நிபுணன். |
அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா? |
அக்கரைப்பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு. |
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. |
அக்கறை தீர்ந்தால் அக்காள் முகடு குக்கா. |
அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன? |
அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன் கைகால் பட்டுக் கிழியப்போகிறது மடித்துப் பெட்டியிலேவை யென்கிறான். |
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச் சிற்றாடை என்கிறதாம் பெண். |
அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு. |
அக்காள் உண்டானால், மச்சான் உண்டு. |
அக்காள் உறவும் மச்சான் பகையுமா? |
அக்காளைக் கொண்டால், தங்கையை முறைகேட்பானேன்? |
அக்காள் தான் கூடப்பிறந்தான், மச்சானும் கூடப்பிறந்தானா? |
அக்காளைப்பழித்துத் தங்கை அபசாரியானாள். |
அக்காளைப்பழித்துத் தங்கை மோசம்போனான். |
அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும். |
அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா? |
அக்கிராரத்துக்கு ஒரு ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர். |
அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல. |
அக்கிராரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? |
அக்கினிதேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான். |
அக்கனிப்பந்தலிலே வெண்ணெய்ப்பதுமை ஆடுமா? |
அக்கினி மலையிலே கர்ப்பூரபாணம் பிரயோகித்தது போல. |
அக்கினியைத்தின்று கக்குகிறபிள்ளை, அல்லித்தண்டைத் தின்கிறது அதிசயமா? |
அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது. |
அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது? |
அக்குத்தொக்கில்லாதான் ஆண்மையும், வெட்கஞ்சிக்கல்லாதான் தோஷமும், மிக்கத் துக்கப்படாதான் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்னத்துக் கொக்கும். |
அங்கங்கு குறுணி அளந்துகொட்டி இருக்கிறது. |
அங்கத்திலே குறைச்சலில்லை ஆட்டடா பூசாரி. |
அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா? |
அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலசினாலும் தோஷம் இல்லை. |
அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது. |
அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கேபார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை. |
அங்காடி விலையை அதிர அடிக்காதே. |
அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கரிவேப்பிலை என்பாள். |
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூறு வழியாய் வரும். |
அங்கிடு தொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு. |
அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான். |
அங்கும் தப்பி இங்கும் தம்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பட்டன் (திம்மட்டிராயண்). |
அங்கே போனேனோ செத்தேனோ. |
அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்குவாடி காற்றாய்ப் பறக்கலாம். |
அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிட சத்துக்கு வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று தாலியறுப்பதே மேல். |
அசலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறது. |
அசலார் குற்றம்போல் தன் குற்றம் பார்த்தால் தீதுண்டோ மன்னுயிர்க்கு? |
அசலிலே பிறந்த கசுமாலம். |
அசலும் பிசலும் அறியாமல் அடுத்தாரைக் கெடுக்கப்பார்க்கிறான். |
அசல் வாழ்ந்தால் ஐந்துநாள் பட்டினி கிடப்பாள். |
அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா? |
அசல் வீட்டான்பின்ளை ஆபத்துக்குதவுவானா? |
அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு ஆமுடையானை அடித்தாளாம். |
அசல் வீட்டுக்குப்போகிற பாம்மைப் கையாலே பிடிக்கான் |
அசல் வீட்டுப் பிராமணா, பாம்மைப் பிடி, அல்லித்தண்டுபோலக் குளிர்ந்திருக்கும். |
அசவாப் பயிரும், கண்டதே உறவும். |
அசுணமாச் செவிப் பறை அடுத்ததுபோலும். |
அசைந்துதின்கிறது மாடு அசையாமல்தின்கிறது வீடு. |
அசைப்புக்கு ஆயிரம்பொன் வாங்குகிறது. |
அசைவிருந்தால் விட்டுப்போகமாட்டான். |
அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான். |
அச்சம் ஆண்மை குலைக்கும். |
அச்சாணி அன்னதோர் சொல். |
அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது. |
அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு. |
அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு. |
அச்சியென்றால் உச்சி குளிருமா? அழுவணம் (ஐவணம்) என்றால் கை சிவக்குமா? |
அச்சில்லாத் தேர் ஓடவும் ஆழுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா? |
அச்சு ஒன்றா வேறா? |