template_id
int64
1
2
template_lang
stringclasses
1 value
inputs
stringlengths
132
27.8k
targets
stringlengths
63
27.6k
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மதுராந்தகம் மன்னன், வெள்ளை யானை, மருத்துவர்கள், பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், இந்திரன், ஐராவதம் என்னும் யானை, மடையன், முட்டாள், யானைப் பாகன் தலைப்பு: வெள்ளை யானை பறக்கிறது
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணர், வீரன் தலைப்பு: மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான். "எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார். வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது. வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார். "வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன். கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர். நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: '' முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?'' முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு ''பார்த்தீனியம்'' செடியாகப் பிடுங்கிப் போடஆரம்பித்தார். ''மேலெல்லாம் ஊறல் எடுக்கும்னு சொல்வாங்களே'' என்று சொன்னபோது அவர் சிரித்தார். ''ஊறல் எடுக்கும்னு பயந்துக்கிட்டே பூடுங்கினா ஊறல் எடுக்கத்தான் செய்யும்'' - இரண்டு கையிலும் மாறி மாறிப் பிடுங்கப் பிடுங்க, ஐந்து நிமிடத்துக்குள் இரண்டு கொத்துச் சேர்ந்து விட்டது. இங்கேயிருந்து எட்டித் தூர வீசினது எல்லாம் காம்பவுண்ட் சுவரில் மோதி மண்ணுதிர விழுந்தது. ''பச்ச நாவியை நட்டு வச்சிட்டுப் பிடுங்கினாக் கூட மண்ணு வாசனை மண்ணு வாசனைதான். அது புல்லுண்ணு அள்ளுதா. புழுவுண்ணு தள்ளுதா'' - யார் முகத்தையும் பார்த்துப் பேச வேண்டிய அவசியம் அவருக்குக் கிடையாதுபோல. நான் ஒப்புக்கு இப்படி நடையில் நிற்கினேறே தவிர என்னைப் பார்க்கவே இல்லை. வழக்கம் போல, மஞ்சனத்தி மூட்டில், அவர் கன்றுக்குட்டியைக் கட்டினதோடு சரி. ''சுத்தம் பண்ணிவிடலாமா?'' என்று கேட்கக் கூட இல்லை. மண்வெட்டி மாத்திரம் வரும்போது தோளில் இருந்தது. நேற்று நல்ல மழை. மழை பெய்கிறதற்குத் தேர்ந்தெடுக்கிற நேரம் எப்போதுமே அழகாகத்தானே இருக்கும். நல்ல வெயிலடித்த ஒரு நாள் முடியும்போது, சாயந்திரம் ஆறு ஆறேகாலுக்கு ஆரம்பித்தது அது. வெளிச்சம் இருக்கும்போது துவங்கி, அடர்ந்து பெய்கையில் இருட்டி விட்டிருந்தது. காற்றோ இடியோ இல்லாமல், நிர்ணயித்து வைத்த வேகத்துடன் அது கொட்டக் கொட்ட சாலையிலிருந்து பள்ளமான இந்தத் தெருவுக்குள் தண்ணீர் வழிய ஆரம்பித்தது. பப்பாளி மரத்தில் ஒரு காகம் இருந்து கத்தியது. ஒரு ஆட்டோ ''விசுக்''கென்று பிள்ளைகளுடன் சீறியது. புதிதாகச் சாலை முனையில் கட்டப்பட்டிருக்கிற வணிக வளாகத்தின் தாழ்வாரங்களில் ஒதுங்கிக் கொண்டிருந்தவர்களும் தலையைக் குனிந்தபடி ஓடுகிற தண்ணீரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். மேல் துண்டால் தலையை மூடிப்போர்த்தி நனைந்து கொண்டே வருகிறவரை இங்கிருந்து பார்க்கும்போதே அடையாளம் தெரிந்துவிட்டது. மாட்டைத் தேடி வருகிறாரா? மாடு மேய்ந்து கொண்டிருக்கிறதாக இருந்தால், பஞ்சு மிட்டாய்க்காரன் மணி மாதிரி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்திருக்குமே. இன்றைக்கு இல்லையே. எதிர்ச் சாரியிலிருந்து குறுக்கே சாடி, இந்த வீட்டுக்கு அவர் தாவிவர முயன்றபோது, அதே வேகத்தில் ஒரு ஆட்டோ அவரை மோதித் தள்ளிவிடுவது போலப் பாய்ந்து, சடக்கென்று வளைந்து திரும்பி மேடு ஏறிச் சாலைக்குப் போய் மறைந்தது. ''பார்த்துக் போ...... பார்த்துக் போ'' - அவர் வாசல் கதவைத் திறக்கும்போது பதற்றத்தில் இரண்டு அடி கீழே இறங்கி, '' என்ன தாத்தா, ஆளை அடிச்சுக் கொல்லப் போகிற மாதிரி அவன் போகிறான். நீங்க என்னடான்னா ''பார்த்துப் பார்த்து''ன்னு என்னமோ ஆசிர்வாதம் பண்ணிவிட்டு வாரீங்களே. ரெண்டு திட்டுத் திட்டினால் என்ன?'' முக்காடு போட்டிருந்த துண்டைப் பிழிந்து கையில் வைத்து உதறிக் கொண்டே அவர் சொன்னது நன்றாக இருந்தது. ''தண்ணியைப் பார்த்தா பயம் வேணும்னா வரலாம். கோபம் வரலாமா? எப்பமாவது உனக்கு தண்ணியைப் பார்த்துக் கோபம் வந்திருக்கா? சொல்லு. அதுவும் இது மழைத்தண்ணி, பள்ளம் எங்கே எங்கேண்ணு ஓடியார தண்ணி'' - என்று சொல்லிக்கொண்டே துண்டை மறுபடி ஒரு உதறு உதறினார். ''அவன் அவசரம் அவனுக்கு'' என்று மீண்டும் சொன்னார். ''புள்ளைகள்ளால் இன்னும் வரலையா?'' என்றார். '''நான் வந்த விஷயம் வேறே. இந்த இடத்தையெல்லாம் சுத்தம் பண்ணணும்னு என்னிக்கோ சொன்னியே. மம்பட்டியோட நாளைக்கு வாரேன்''. ''இதைச் சொல்லுறதுக்கா இப்படி மழையிலே நனைஞ்சுகிட்டு வந்தீங்க?'' ''ஒவ்வொண்ணுக்கும் ஒரு முறை இருக்குல்லா, தாயி'' - என்று மறுபடியும் முக்காடு போட்டுக் கொண்டு, வெளிக் கதவைத் தள்ளினார். மழை பெய்யும்போது, கதவு திறப்பதும் மூடுவதும் கூட வேறு மாதிரி இருந்தது. அப்போது அவர் அவ்வளவு பழக்கமாகவில்லை. சொல்லப்போனால், அவரைச் சத்தம் போடுகிற சந்தர்ப்பமாக அது இருந்தது. காலிமனையாகக் கிடக்கிற அடுத்த இடத்தில் செடி கொடிகள் அதிகம். அதற்குப் பின்னால் இதே போல் காலியாக இருக்கிற இன்னொரு மனையின் முட்கம்பியை நெகிழ்த்திக் கொண்டு இருட்டுகிற நேரத்தில் இவர் பசுமாட்டை ஓட்டியபடி வருவதும், அந்தப் பசுவின் கழுத்தில் அந்தப் பஞ்சு மிட்டாய் மணி அடிப்பதும், அது போடுகிற சாணி குப்பம் குப்பமாகக் கிடப்பதும், அப்படி ஒரு நாளில், இன்னும் சற்று இருட்டின நேரத்தில், இவர் ''ஹாவ், ஹாவ்'' என்று சத்தம் கொடுத்துக் கொண்டு நடமாடும்போது, இரண்டு நாட்களுக்கு முன்பக்கத்து டாக்டர் வீட்டில் யாரரோ சுவர் ஏறிக் குதித்து விட்டதாகச் சொல்யிருந்த பதற்றத்தில் - ''யாரது?'' என்று நான் அதட்டியபோது ''கண்ணுக்குட்டியைக் காணோம். தேடுதேன் தாயி'' என்றார். எருக்கலஞ் செடிகளுக்கும், வேலிக் கருவைக்கும் இடையில் இன்னும் ஒரு புதர் போல அவர் அசைந்து கொண்டு பதில் சொன்னார். ''கண்ணுக்குட்டியைத் தேடுகிற நேரமா இது?'' - மறுபடியும் அதே அதட்டல். பயத்தை மறைக்க எழுப்புகிற உரத்த குரல். ''இப்ப தொலைச்சிட்டு, நாளைக்கு உதயத்திலேயா நீ தேடுவே? சொல்லு'' - வேறு திசைகளில் திரும்பித் திரும்பித் தேடிக் கொண்டே எனக்கும் ஒரு பதில் வந்தது. ''என்ன மரியாதையில்லாமல் போயிட்டிருக்கு பேச்சு?'' ''நான்''லா அதைச் சொல்லியிருக்கணும்'' - என்று இருட்டுக்குள் இருந்து பதில் வந்தது. ''ஹாவ், ஹாவ்'' - என்கிற சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுக்குள் தேடிக் கொண்டே நகர்ந்து போனது. மறுநாள் தபால்காரர் வருகிற நேரம். மணி அடிப்புக் கேட்டுக் கதவைத் திறந்தால் இவர். பாசிப் பயிறுக் கலரில் ஒரு கிழிந்த ஸ்வெட்டர். முழுக்கை ஸ்வெட்டருக்கும் வெளியே தெரிகிற நீலநிறச் சட்டை, வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். ஒரு காலில் ஒரு ஹவாய்ச் செருப்பு. வலது காலில் இன்னொரு நில ஹவாய். ''கண்ணுக்குட்டி கிடைச்சுட்டுது, தாயி'' என்றார். நெற்றியில் பச்சை குத்தியிருந்தது. பழுக்கப் பழுக்க நரைத்த மீசை. கண் இடுங்கி, பார்வை அப்படியே குளிர்ந்து கிடந்தது. தான் யார் என்று அவரே முடிச்சை அவிழ்ப்பது போல், ''நேற்று ராத்திரி வீட்டுக்குப் போய்ச் சேர்கிறதுக்குள்ள, இது போய்த் தொழுவத்தில் ஒண்ணுந்தெரியாதது. மாதிரி நின்னுக்கிட்டு இருக்கு. இருட்டுக்குள்ளே நேத்து முகம் தெரிஞ்சிருக்காட்டாலும் உனக்கு நான் தகவல் சொல்கிறதைச் சொல்லணும்லா'' - இதைச் சொல்லும்போதே ''கீணூங்'' என்று மணிச்சத்தம் கேட்டது. ஒரு மாதிரித் தகர மணி. மறுபடியும் ''கிணூங்'' என்று கேட்கிறபோது, ''தேடுனது இந்தக் கண்ணுக்குட்டியைத்தான். உன் வீட்டுக்கு எதுக்கே மஞ்சணத்தி மூட்டுலதான் கட்டிப் போட்டிருக்கேன்'' நான் அந்தச் செவலைக் கன்றுக்குட்டியையே பார்த்தேன். அது குனிந்து, தலையை அசைத்து அசைத்துப் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. ''அழகா இருக்குல்லா. இதுக்கு அம்மாக்காரி இதை விட அழகு'' என்று சொல்லி விட்டு நடையை விட்டு இறங்கி 'ஹாவ். ஹாவ்'' என்றார். ''கிணூங்''. குனிந்த தலை நிமிர்ந்து மான் மாதிரித் திரும்பியது. காது விடைத்துச் சிலிர்த்து உயரமாகி, சத்தம் வந்த திசையைப் பார்த்தது. காதில் ஓடின நரம்புப் புடைப்பும், காதோர விளிம்பின் கீற்று முடிகளும் அவருடைய குரலைத் தேடின. அசையாமல் நின்று பார்வையுடன் மினுங்கிய கண் அபூர்வமாகப் பளபளத்தது. அவர் எருக்கலஞ் செடிக்குப் பக்கத்தில் இறங்கினார். வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒற்றையடித் தடங்களை அவரைப் போல ஆட்கள்தான் உண்டாக்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அவர். ''இன்றைக்குப் பள்ளிக்கூடம் கிடையாதுல்லா உம் பிள்ளைகளுக்கு?'' - வந்து நின்றதுமே கேட்டார். ''என்ன பண்ணிக்கிட்டு இருக்கு வீட்டுக்குள்ள?' ''டீவி பார்த்துக்கிட்டு இருக்கும். இல்லை அக்காளும், தம்பியும் அடிபிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்குங்க'' ''கொஞ்ச வரச்சொல்லேன். பார்ப்போம்.'' மூணு தடவை கூப்பிட்டு நாலாவது தடவை கூப்பிட ஆரம்பிக்கும்போது பையன் வந்தான். ''அக்கா எங்கேடா?'' என்று கேட்கும்போது அவளும் வந்துவிட்டிருந்தாள். ''வண்டியைக் காணுமே. இன்னைக்கும் ஆபீஸ் உண்டா உங்க அப்பாவுக்கு?'' - என்று பையனைப் பார்த்துக் கேட்டார். பையன் வெறுமனே தலையை ஆட்டினான். பெண் அவர் பக்கத்தில் போய் சிரித்துக் கொண்டு, ''ஊருக்கும் போயிருக்காங்க தாத்தா ஏன் கேட்க?'' என்றது. ''வெளியில் வரச் சொல்லத்தான். வீட்டில இருக்கிறது மாதிரிக் கொஞ்சநேரம் வெளியிலயும் இருக்கணும்லா?'' ''எதுக்கு இருக்கணும்?'' ''இந்த அருகம் புல்லு, துளசி, தும்பை, அந்த வேப்பமரம், கோவைப்பழம், மஞ்சணத்திப் பூ, நான், எங்கண்ணுக்குட்டி இப்பிடி எவ்வளவு இருக்கு வெளியிலே'' - என்று அவர் சொல்லும்போது, ''பாம்பு இருக்குமா?'' என்று ஜடையை ஒதுக்கிக் கொண்டே அவள் கேட்டதும் அவர் பெரிதாகச் சிரித்தார். ''இருந்தா என்ன? அதையும் பாரு.'' ''பயமாருக்கும்.'' ''பார்த்துட்டுல்லா பயப்படணும். பார்க்காமலே பயப்புட்ட எப்படி?'' இருபாகம் நீளமுள்ள, ''தெருவுக்கு அந்தக் கரையில் தலையும் இந்தக் கரையில் வாலும் இருக்கிற'' பாம்பு பற்றிச் சொல்ல ஆரம்பித்ததுடன் அவருடைய வினோத உலகம் பிள்ளைகள் இருவரையும் இழுக்க ஆரம்பித்து விட்டது. ஐந்த தலையுள்ள, நாகரத்தினம் கக்கிவிட்டு இரை தேடுகிற பாம்புக் கதையை அவர் சொல்லும்போது, நான் ஒருத்தி இருக்கிறதே அவர்களுக்கு மறந்த விட்டது. ரகசியங்கள் நிரம்பிய அடர்ந்த கானகத்துள், ஒரு பரிவு நிறைந்த மந்திரவாதியின் இரண்டு கைகளிலும் ஆளுக்கு ஒருபுறமாக அழைத்துச் செல்லப்படுவது போல, அவருடன் இரண்டும் புறப்பட்டன. ''செருப்புப் போட்டுக்கிடுங்க'' - நான் நடையில் நின்று சத்தம் கொடுத்தேன். ''செருப்பு என்னதுக்கு? ஒரு இடத்தில் முள்ளை மிதிக்கும். இன்னொரு இடத்தில் புல்லை மிதிக்கும். சரியாகப் போகும் எல்லாம்'' அவர் சொல்வதையும் கேட்கவில்லை. நான் சொல்வதையும் கேட்கவில்லை பிள்ளைகள். ''டே....டேய். இந்தக் குட்டிப் புழுவைப் பாரேன். பச்சைக் கலரா இருக்கு.'' - அக்காவின் சத்தம் வந்த இடத்தை நோக்கி, இவருடைய கைகளில் இருந்து திருகிக் கொண்டு ஓடினான். ஓடும்போது, ''கிணூங்'' என்று மணிச் சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது. கேட்கவில்லை. அப்படி ஒரு நினைப்பு. நிஜமாகவே ஒரு பாம்பு நடமாடுவதைப் பார்த்த பிறகுதான் செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தோன்றிற்று. பாத்திரம் கழுவுகிற, துணி துவைக்கிற இடத்தில் சிமெண்ட் தளம் பெயர்ந்து விரிசல் விட்டிருந்த இடத்தில் கன்னங்கரேர் என்று ஒரு பாம்பு சுண்டுவிரல் பருமனுக்குப் படுத்துக் கிடந்திருக்கிறது. ''கருமெழுகா இருந்துது. காலை மாத்திரம் ஒரு எட்டுத் தள்ளி வச்சிருந்தேனோ, போட்டு வாங்கியிருக்கும்'' என்றும், அது கொஞ்சம் கூடச் சட்டை பண்ணாமல், நெளிந்து தலைதிருப்பி புடைக்குள் மறுபடி அசங்காமல் போனதையும், மினுமினுன்ணு எண்ணெய் தடவின உளுந்து மாதிரிப் பளபளத்ததையும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேலை பா‘க்கிற சரசு சொல்லச் சொல்ல பயம் ஜாஸ்தி ஆயிற்று. ''எல்லாத்தையும் வெட்டித் துப்புரவு பண்ணினால்தான் நல்லது. அது அதுக்குத் தோதுவான இடத்தில் அதுஅது நடமாடுகிறதில் என்ன் ஆச்சரியம் இருக்கு'' - கையில் வெதுவெதுப்பான காப்பித் தம்ளரை வைத்துக் கொண்டு, ஒரு வாய் குடிப்பதும், கொஞ்சநேரம் மௌனமாக அந்தச் செடிகளின் அடர்த்திகளையே துளாவுவதுமாகப் பார்த்துக் கொண்டே, ராத்திரி முழுவதும் ரயிலில் பயணம் செய்து எழுந்திருந்து வந்த முகத்தோடு, நெல்லையப்ப மாமா கூடச் சொன்னார். அவர் விடியக்காலம் நாலரை அஞ்சு மணிக்கு வந்து சேர்கிற ரயிலில் இப்படி வருவதும், பல் தேய்த்த கையோடு, இப்படிக் காப்பித் தம்ளருடன், முன்வாசலிலோ புறவாசலிலோ வந்து நின்று கொண்டு பார்ப்பதும், எதையாவது சொல்வதும், வேறு யாரும் சொல்லாததாக இருக்கும். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் ஒரு தடவை - ''இங்கே வா'' என்று கூப்பிட்டு, விடிய ஆரம்பிக்கிற அந்த நேரத்தில் நீலக்குமிழ் போல ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னார். சொல்லச் சொல்ல நட்சத்திரம் மட்டுமே ஆயிற்று வானம். அப்போது வீசிய குளிர்ந்த காற்றை நட்சத்திரம் அனுப்பியது போல இருந்தது. ''ஒவ்வொரு ஊருக்கும் மாற்றிப் போகும்போதும் மூணு நாலு வருஷம் ஏதாவது ஒரு செடியை உன் கையால் நட்டு வச்சிருக்கியா எந்த வீட்லேயாவது?'' - அவர் கேட்கும்போது சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சொல்லாத அந்தப் பதில் வெவ்வேறு நேரங்களில் மனதில் முளைத்துக் கொண்டே இருந்தது அப்புறம். ''துப்புறவு பண்ணினால்தான் நல்லது'' - என்று நெல்லையப்ப மாமா சொல்லி விட்டுப் போன அன்றைக்குத்தான் தாத்தாவைக் கேட்கத் தோன்றிற்று. தாத்தாவை எப்படி வேலை ஏவுகிறது என்கிற தயக்கம் அதிகமாக இருக்க, அவரில்லாவிட்டாலும் அவருக்குத் தெரிந்த யாரையாவது வரச்சொல்லிச் சுத்தம் பண்ணலாம் என்ற யோசனை. தற்செயலாக அவரும் வந்து தண்ணீர் குடிக்கக் கேட்டார். நல்ல வெயில். வாங்கி கடகடவென்று அண்ணாந்து குடித்து விட்டு, ''ஹ'' என்று காலிச் செம்பை நீட்டும்போது . ''ஒரு உதவி பண்ணணும்'' - என்று ஆரம்பித்தேன். ''பண்ணீருவோம்'' - தாத்தா உள்ளங்கையில் வைத்திருந்த தண்ணீரை இரண்டு கண்களிலும் அப்பி, முகம் முழுவதும் நனைகிற மாதிரி வழித்து விட்டுக் கொண்டார். ''இந்தச் செடியை எல்லாம் வெட்டி....'' ''அதுக்கென்ன சுத்தம் பண்ணீருவோம்'' - என்று தாத்தா முடித்துவிட்டு, ''இன்னொரு நாளைக்கு ஞாபகப்படுத்து தாயி வெயிலுக்கு முன்னால் ஆரம்பிச்சிடுவோம். எம்பொறுப்பு இது'' - என்ற சொல்லிவிட்டுப் போனார். ''என் பொறுப்பு'' என்கிற வார்தை ரொம்பப் பிடித்திருந்தது. சிலபேர் இப்படி எதையாவது சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். திரும்பத் திரும்ப அது நாள் முழுவதும்கேட்டுக் கொண்டே இருந்தது. ''துளசிச் செடியையும் வெட்டீரவா?'' - நடையை ஒட்டி நாலைந்து மூடு மூடாக வளர்ந்திருந்த இடத்திலிருந்து கேட்டார். ரொம்ப அடர்த்தியாகவும், சில சமயங்களில் சரசரவென்ற அதற்குள் நகர்வதுபோல ஒரு பயத்தையும் ஏற்கெனவே உண்டாக்கி இருந்தது அது. ''ஏன் வெட்டினா என்ன?'' ''பொதுவாக வெட்டமாட்டாங்க'' ''தானாத்தானே வளர்ந்திருக்கு. நாங்க வளர்க்கலை.'' ''அப்போ தானாத்தானே கருகணும்'' - தாத்தா இப்போது சிரித்தார். ''நீ பெருமாளைக் கும்பிட மாட்டியோ என்னவோ. நாங்க கும்பிடுவோம்.... சென்ட்ராயப் பெருமாள்....'' தாத்தா இரண்டு துளசி இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்ட கையை உயர்த்திக் காட்டினார். ''கோப்பாளம் போட்டிருக்கேனே, பார்க்கலையா?'' என்றார். புருவம் சுருக்கின மாதிரி நெற்றியில் பச்சை இருந்தது. தாத்தா துளசிச் செடிகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது வேறு மாதிரி ஆகிவிட்டிருந்தார். ''செடிண்ணா எல்லாம் செடிதானேங்கியா?'' - அவர் கேட்கும்போது நான் ஒன்றும் சொல்லவில்லை. ''ஒண்ணு நிக்கட்டும், ஒரு அவசரத்துக்குக் காய்ச்சல், மண்டையிடிண்ணு குடினிப் போடணும்னா யாருக்காவது உதவும்'' - இதையும் அவரே சொன்னார். சொல்லிவிட்டுப் பிடுங்க ஆரம்பித்தபோது, காற்ற முழுவதும் துளசியின் வாடை நிறைந்தது. இலைகள் உருவப்பட்டும், கசங்கியும், வேர்கள் பிடுங்கப்பட்டுமாக முழு வீச்சில் ஒரே துளசியின் மணமாகப் பரவும்போது, '' என்னதும்மா வாசம் அடிக்கு?'' என்று பாவாடை தடுக்க ஓடிவந்து என் பக்கம் நின்றவளிடம், ''துளசி'' என்றேன். ''துளசியா?'' என்று கீழே இறங்கி ஓடிப் போய் தாத்தா பக்கத்தில் பிடுங்கிக் கிடக்கிற துளசிச் செடியை இரண்டு கைகளிலும் அள்ளி முகர்ந்து கொண்டு, ''நல்லா இருக்கு'' என்று மறுபடி முகர்ந்தது. தாத்தா அப்படியே சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு தலையை வருடினார். ''சென்ட்ராயப் பெருமாள் கோவிலுக்குப் போவுமா?'' என்றார். ஒரு புல் பூண்டு இல்லாமல் வீட்டைச் சுற்றி அப்படிச் சுத்தமாக வெட்டியிருந்தது. மேடு பள்ளம் எல்லாம் கொத்தி எடுக்கப்பட்டுத் தன் தரையாகி, ஒரு வெதுவெதுப்பான மண்வாசனை மட்டும் வெயிலோடு வெயிலாகப் போய்க் கொண்டிருந்தது. பரசிப் பரசி அள்ளின விரல் தடம். நெல் கிண்டியது போலத் தோட்டம் முழுவதும் கிடந்தது. பின் வீட்டுக் காம்பவுண்டுச் சுவரின் இடுக்கிலிருந்து ஒரு வேப்பங்கன்று மட்டும் அசைந்தது. ''தம்பிக்கு முடி வெட்டினது மாதிரி இருக்கு'' - இதை எப்படிச் சொல்லத் தோன்றியது அவளுக்கு என்று தெரியவில்லை. ''காலு பொதுக்குப் பொதுக்குண்ணு அப்பிடியே அமுங்குதும்மா'' - இதையும் உடனடியாக அவளே சொனாள். ஒரு வினாடி முடிவெட்டின தலையுடன், விநோதமான முகத்துடன் பசுபதி சலூனிலிருந்து வருகிற மாதிரி இருந்தது. புறவாசல் கதவைத் திறந்து கொண்டு மேலே போட்டிருந்த துண்டை உதறி, வாதமடக்கி மரத்தின் கிளையில் போட்டு விட்டு, அப்பா குளிப்பதற்குத் தண்ணீர் அடிகிற மாதிரி ஊர் ஞாபகம் வந்தது. எத்தனை கொடிகட்டிக் கொடுத்தாலும் சரி. அப்பா குளிக்கப்போகும்போது துண்டை இப்படி மரத்தில் தான் போடுவார். வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவின் மேல் அல்லது அவருடைய நாற்காலி முதுகில். சிராய் சிராயாக முடி அப்பின அப்பாவின் சிட்டித் துண்டுவாடை எப்படி இருக்கும் முக்கட்டு மாதிரி மூன்ற புள்ளியும் இரண்டு கோடும் பக்கத்தில் போட்ட வண்ணான் குறியை இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிந்தது எவ்விதம். திடீரென்று நடு வீட்டுப் பட்டாசலில் உட்கார்ந்து வெளுத்த உருப்படி எல்லாம் கணக்குப்பார்த்து வாங்கித் கொண்டிருப்பது போல இருந்தது. ''அடுத்த வெள்ளைக்கு நாச்சியாரு உங்க ஊரிலே இருப்பியோ'' என்று இசக்கி சொல்கிறாள். வாசல் முழுவதும் பந்தல் போட்டு இருட்டிக் கிடக்க, ஒரு பச்சைக் சுங்குடிச் சேலையுடன் வாசல் நடைக்கு அந்தப்புறம் இசக்கி நிற்கிறாள். அவள் தன்னிச்சையாகப் பிடித்துக் கொண்டுள்ள நிலைப்படி இடுக்கில் கூழ்வற்றல் ஊற்றின மாதிரிச் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது வெள்ளையாக. கொட்டகைக் கால் நுனியில் அல்வான் துணிச் சிவப்பும், மாங்குலையும் அசைந்து கொண்டிருந்தன. மூலையில் யாரோ வெற்றிலை போட்டுத் துப்புயிருக்கிறார்கள். '' என்ன தாயி, அப்பிடியே சிலை கணக்கா நிண்ணுட்டே?'' தாத்தா சத்தம் கேட்டது. பக்கத்து மனையின் வேலியைத் தளர்த்திக் கொண்டு, நீர்க்கருவைக்கும் எருக்கலஞ் செடிகளுக்கு மத்தியில் இருந்து அவர் வந்து கொண்டிருந்தார். ''இதைக் கொஞ்சம் பிடி'' என்று நீட்டினார். கையில் முழுதாக வளர்ந்து பூத்துக் கொண்டிருந்த கேந்திச் செடி மண்ணும், வேரும் இலையுமாக இரண்டு மூன்று இருந்தது. ''உம்புள்ளைகளை எங்கே காணும்?'' என்றார். ''இங்கே நிண்ணுகிட்டு இருந்துட்டு, இப்பதா உள்ளே போச்சு'' ''வரச்சொல்லு. வரும்போது பேத்தியை ஒரு வாளித் தண்ணி கொண்டாரச் சொல்லு.'' ''தாத்தா நடைக்குப் பக்கத்தில், ஏற்கனவே துளசிச் செடியெல்லாம் பிடுங்கிப் போட்ட இடத்தில் ஒரு குச்சியை வைத்து மேலும் மேலும் ஆழமாகத் தோண்டினார். ''நீ சீலைக்காரி அம்மன் கோவில் பாத்திருக்கியா?'' என்றார் ''இல்லை'' என்றேன். ''ஆய்யப்பன் கோவில் போயிட்டு வார சாமி பூராவும் அம்புட்டு மாலையும் அங்க கழட்டிச் கழட்டிப் போட்டிருக்கும்.'' - தாத்தா சொல்லும்போது எனக்கு பஸ் கம்பியில் தொங்குகிற மாலைகள் தான் ஞாபகம் வந்தது. ''இது எல்லாம் கல்யாண மண்டபத்துக்குப் பின்னால் முளைச்சுக் கிடந்துது. இன்னும் பத்துச் செடி பிடுங்கலாம் இப்பிடி.'' ஒரு பிளாஸ்டிக் வாளியும், கோப்பையுமாகத் தூக்க முடியாமல் அக்காளும் தம்பியும் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஆரஞ்சு நிற வாளியில் தண்ணீரும், கோப்பையும், வாளிக் காவடியும் வெயிலில் வெவ்வேறு நிழல்களுடன் அலம்பியது. ''வந்துட்டீங்களா?'' என்று தாத்தா சிரித்தார். அந்தச் சிரிப்புடன் எல்லாம் அமைதியாகி விட்டது போல இருந்தது. வெயில் அடிக்கும் போது சத்தம் கேட்கவா செய்யும். காலி ஊஞ்சல் அசைகிற சத்தம் வெயிலிலிருந்து வருவது போலத் தோன்றிற்று. கல் உடைப்பது மாதிரி, முற்றின கருங்கல்லில் உளி விழுவது போலத் தூரத்தில் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வேப்ப மரத்தில் இருந்து காக்கை பறந்து போன நிழல் தரையோடு இழுபட்டு மறைந்தது. ''கிணூங்'' என்று மணிச் சத்தம் கேட்டது. தாத்தா ஒவ்வொன்றாக ஒவ்வொருத்தர் கையில் கொடுத்து, மூன்று கேந்திச் செடிகளையும் நட்டு வைத்தார். இரண்டு செடிகள் ஏற்கெனவே பூத்திருந்த பூவுடன் மிகச் சிறியதாக அசைந்தன. இன்னொன்று சிறியதாகக் கொத்துமல்லிச் செடி மாதிரி அழகாக இருந்தது. தண்ணீர் விடச் சொன்னார். பாத்தி நிரம்பி, மண் உறிஞ்சிக் கொப்புளங்கள் தணிந்து வெடித்தன. தலையை வருடுவது போல் செடிகளைப் பிள்ளைகள் இரண்டும் தடவிக் கொடுத்தன. ஏதோ இதே இடத்தில் ஏற்கெனவே வளர்ந்து, ஏற்கெனவே பூத்திருப்பது போலச் செடிகள் அசைந்தன. ஒரே ஒரு துளசிச் செடி பக்கத்தில் இருந்தது, தாத்தா வேறு ஒன்றும் சொல்லவில்லை. ''ஒண்ணைப் பிடுங்கினா, ஒண்ணை நடணும் இல்லையா'' - என்று மட்டும் சொன்னார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நடுகை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: டாக்டர் வீரபத்திர பிள்ளை, கம்பௌண்டர் வெங்கடசாமி, ஏட்டு கந்தசாமி பிள்ளை, கோயிலூர்க் கணியான், ராக்கன் தலைப்பு: செவ்வாய் தோஷம்
முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால், உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப்போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு. டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி., அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக் கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. "கைராசிக்காரர்" என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்து வந்தது. அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டிகட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார். கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக்கொடி போட்ட டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுள்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்திற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில், குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தாயரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச் சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச்செல்ல வேண்டியதாக இருந்தது. கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் "ரவுண்டு வரும்" ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது. ரத்த காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது. இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப்பிரிவு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளைகூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார். டாக்டா வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இது மாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார் . கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, "யாருடா அது?" என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார். இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். "என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!" என்று "பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?" என்றார் கந்தசாமி பிள்ளை. "பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதிவையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!" என்றார் டாக்டர். "நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!"என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை. டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார். கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல்நாக்கில் பதிந்து விறைத்துக்கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது. "சாக்கை அப்புறம் எடுத்தெறி!" என்றார் டாக்டர். பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்தால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுகிக் கிடந்தன. "சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையில் கெடத்துங்கடா!" என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர். "உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது" என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார். அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. "அதாரது?" என்ற குரலுக்கு, "நான்தான் நாயுடு!" என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார். பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!" எனறு சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை. "பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது அதாத்தானிருக்கும்!" என்றார் நாயுடு. "நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!" என்று சொல்லி, டாக்டர், "ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?" என்று அதட்டினார்.", "வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார். "ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வத்திருதேன்!" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு. டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார். உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார். "வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்; என்றார் நாயுடு. "உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலே இருந்தாப் போய்ப்பாரும்!" என்று அதட்டினார் டாக்டர் "இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்" என்றார் நாயுடு. "பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!" என்று சொல்லிக்கொண்டே மேல்துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, கைகளைத் தோளுக்குமேல் உயர்த்தி சுடக்க முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர். "நீங்க எங்ககூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!" என்ற தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர். "என்னதான் சொல்லுமே!", "நீங்க வாருங்க, ஸார்!" என்று ஷெட்டுக்கன் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர் "டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!" என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார். அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், "என்னவே, வேலை!" என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப் போல், காயத்தை விரித்துப்பிடித்துக் காண்பித்து, "இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!"என்றார். "ரத்தம் இருந்தாலும் பிணமானபின் வடிவதை எங்கே கண்டீர்?" என்று கொண்டே நெருங்கினார் டாக்டர். "ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?" என்றார் நாயுடு. டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம். டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது. "அப்புறம்!" என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது. "வாருங்க, போவோம்!" என்று வெளியே வந்த கம்பௌண்டர், இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?" என்றார். "கோயிலூர்க் கணியான் செத்துப்போனானே அவனைப் பொதைக்கத் தானே செய்தார்கள்?" என்று கேட்டார் தோட்டியிடம். "ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!" என்றான் தோட்டி ராக்கன். "எப்படா நடந்தது?", "சாயங்காலம் சாமி!", "வருகிறீர்களா. போவோம்?" என்றார் கம்பௌண்டர். "அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!" என்றார் டாக்டர். "ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம்; ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!" என்றார் நாயுடு. "நான் வரமாட்டேன் சாமி; எனக்குப் புள்ளை குட்டியில்லே" என்றான் ராக்கன். "நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!" என்று தேற்றினார் கம்பௌண்டர். இந்தப் பரிசோகனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு. வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை; வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான். சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பல்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது. "எங்கடா அவனைப் பொதெச்சாங்க?" என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிகிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு. "அதோ, அந்த்க் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!" என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை.... நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது. கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது. அடுத்த கணம் அமைதி. அதே பேய் அமைதி! நடந்துகொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தறையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர். "சாமி, நான் வரமாட்டேன், பேய்!" என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன். மண்வெட்டி, ஓடிய வேத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துப்கொள்ள அவன் தாமதிக்கவில்லை. "நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதுல்ல!" என்றார் ஏட்டுப்பிள்ளை. "சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம்; அது நாயில்லை!" என்றார் கம்பௌண்டர். மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரித்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார். ஆற்றருகில் உள்ள இடந்தானே; வேலை சுளுவாக நடந்தது. "அதே வெள்ளையா என்னமோ தெரிகிறது!" என்றார் கம்பௌண்டருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர். ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெயியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துக் தூக்கவே பிரேதம் தென்பட்டது. டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார். பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது. புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம் போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது. "அவன் எமை ஆடுது!" என்று அலறிக்கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர். நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார். பிரேதத்தின் வலத இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள். பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை. வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது. "வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?" என்றார் நாயுடு. வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன. "இதோ பாருங்கள்!" என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு. புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!. மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள். "ரிப்போர்ட் எப்படி எழுத?" என்று கைகளை மணலால் தேய்த்துக் கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டது போல அவ்வளவு பிரமை. "பயத்தால் மரணம் என்று எழுதிப்புடும்!" என்றார் கம்பௌண்டர். "நாயுடு, இது எப்படித் தெரிந்தது?" என்றார் டாக்டர். "அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!" என்றார் கம்பௌண்டர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான். மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும், இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய். போய் வா, என்றான். துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன். வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன். இரவு நேரம், அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன. அங்கிருந்த எறும்பு ஒன்று, ஓடி வாருங்கள், கூட்டமாக ஓடி வாருங்கள், நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லை. அரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறது. பெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறது, என்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது. இதைக் கேட்ட அரசன், இரண்டு சொட்டு தேன், தேன் வெள்ளமா? ஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையா? இந்த எறும்பிற்கு அறிவே இல்லையா? இப்படியா வருணிப்பது? என்று நினைத்தான், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் அவன். அருகிலிருந்த அரசி, ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள். ஒன்றும் இல்லை, என்று மழுப்பினான் அவன். சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தான். அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள். அறையில் இனிய மணம் பரவியது. அங்கிருந்த ஆண் ஈ ஒன்று, பெண் ஈயை அழைத்து, எவ்வளவு இனிய சூழல் வா! நாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம். மகிழ்ச்சியா இருப்போம். இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்றது. என் முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையா? என்று நினைத்தான் அரசன். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மீண்டும் கலகலவென்று சிரித்தான். ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டாள் அரசி. ஒன்றும் இல்லை, என்று வழக்கம் போல மழுப்பினான் அவன். உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன். என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்பு, என்று கோபத்துடன் சொன்னாள் அவள். என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன். நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், என்று வற்புறுத்தினாள் அவள். உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும், என்றான் அவன். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும், என்று அடம்பிடித்தாள் அவள். என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான் அவன். என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும். நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன். அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வை. என்று வருத்தத்துடன் சொன்னான் அவன். பொழுது விடிந்தது. வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன். மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான். அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது. உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக வந்து கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏ! சேவலே! உனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதா? நமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர். இன்று மாலை இவர் இறக்கப் போகிறார். எல்லோரும் சோகமாக இருக்கின்றனர். இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயே? இது நியாயமா? என்று கேட்டது. அதற்குச் சேவல், நம் அரசர் பெரிய முட்டாள். அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவி. அவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார். எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன். மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன், என்று பதில் சொன்னது. இந்தச் சிக்கலிலிருந்து அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதா? என்று கேட்டது நாய். அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன். அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும். எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்றது சேவல். நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன். அரண்மனை திரும்பினான் அவன். மாலை நேரம் வந்தது. அவன் அருகே வந்த அரசி, இப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களா? என்று கேட்டாள். நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும். அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன், என்றான் அரசன். நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன். எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும், என்றாள் அவன். அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன். கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஒங்கி அடித்தான். பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லை. மென்மையான அவளுடைய உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியது. ஐயோ! போதும் அடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மையும் வேண்டாம். சவுக்கடியும் வேண்டாம், என்று அலறினாள் அவள். சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான் அவன். அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விலங்குகள் பேசுவது புரிந்தால்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு " முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?" என்று கேட்டான். " மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்" என்றார் முல்லா. " அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?" என்று முரடன் கேட்டான். " உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார். " என்ன சிரிக்கிறீர் " என்று முரடன் கேட்டான். " அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் " என்றார் முல்லா. " தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?" என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான். முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார். " நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் " என்றார் முல்லா. " முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான். " அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் " என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வானத்தில் பறந்த தங்கப் பறவை!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், சொர்க்கம், பூனை, யானை, அறிவு தலைப்பு: சிறந்த ஆயுதம்
சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், "ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!" என்றார். "ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!" என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், "பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?" என்று கேட்டார். "பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!" என்றார் பீர்பல். "ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!" என்று பீர்பல் சொல்ல, "அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!" என்றார் பீர்பல். "பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?" என்று சலிப்புடன் அக்பர் கேட்க, "பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை" என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், "திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?" என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்."வாள்!" என்றார் ஒருவர். "இல்லை!" என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!" என்றார். "எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!" என்றார் மற்றொருவர்."பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!" என்றார் பீர்பல். "சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?" என்று அக்பர் கேட்க, "சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!" என்றார் பீர்பல்."வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!" என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். "சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்றார் பீர்பல்.மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, "பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!" என்று மனதாரப் பாராட்டினார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஆடு, காடு, ஆறு, பாலம் தலைப்பு: இரண்டு முட்டாள் ஆடுகள்
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன. அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது. வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும் இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது. சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான். படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது. உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான். இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...? அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...? அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள். இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள். பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள். இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹ’... ஹ’.... ஹ’... பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே வேற என்னச் செய்ய சொல்றே அமுதா... ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான். சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது. இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது. இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள். ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... 'தாளடி' போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு.... சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும். பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு 'மா'வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி? பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது. நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி' பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது. மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது. ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம். தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு, இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது. மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது. அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது. வித்துப்புடலாம்...? ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு? அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள். இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான். கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான். அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது. முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது. 'என்ன பண்றது' 'யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா' 'ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க. 'ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்.' 'ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு. அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான். 'நேரமாயிடுச்சு' படுப்போம் என்றார் அப்பா. 'சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி' - ல் சாய்ந்தாள். காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார். அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான். அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது. அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்? நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் 'கண்கள் ஈரமாகியது'.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முப்போகம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மிஸோ, டைரியோ, பென்கேய், சீடன் தலைப்பு: புளித்த மிஸோ
மிஸோ என்பது ஜப்பானியர்கள் உபயோகப் படுத்தும் ஊறுகாய் போன்ற சத்துள்ள உப்பான சாப்பிடும் உணவுப் பொருளாகும். ஜப்பானியர்கள் மிஸோ சூப்பினை காலையில் உடல் சத்திற்காக சாப்பிடுவார்கள். மிஸோவினை உபயோகப் படுத்தி மதிய, இரவு உணவுப் பதார்த்தங்களையும் செய்வார்கள். மிஸொவினை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து புளிக்க வைத்து எடுத்து வைத்து விடுவார்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மிஸோ பல நாடகளுக்கு கெடாமல் இருக்கும். மிஸொவுடன் அரிசி, கோதுமை, அவரைவிதை மற்றும் சோயா மொச்சைக் கொட்டை போன்ற பொருட்களுடனும் சேர்க்கப் பட்டு சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தப் படும். மிஸோவினைப் பற்றிய இந்த சிறுகுறிப்பு இன்றைய ஸென் கதைக்கு உபயோகமான தகவலாகும். பென்கேயின் மடத்தில் இருந்த சமையல்காரத் துறவி டைரியோ (ஸென் மடத்தில் இருக்கும் துறவிகள் தியானம் மட்டும் அல்லாமல் மற்ற பிற வேலைகளையும் செய்வது வழக்கம். சுழற்சி முறையில் ஒரு வேலையிலிருந்து மற்ற வேலைகளுக்கு அனுப்பப் பட்டனர்.), பென்கேயின் வயதினைக் கருத்தில் கொண்டு இனி அவருக்கு புதிதாக தயார் செய்த சுவையுள்ள மிஸோவினை மட்டுமே தருவது என முடிவெடுத்தான். கொஞ்ச நாட்களாகவே தனக்கு வரும் மிஸோவானது சுவையுடனும் மிகவும் புதிதாக தாயாரிக்கப் பட்டதாகும் இருந்ததைக் கவனித்த பென்கேய் தன்னுடைய சீடர்களை அழைத்து "யார் இப்பொழுது எல்லாம் சமைப்பது?" என்று கேட்டார். டைரியோவினை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். டைரியோவிடமிருந்து தன்னுடைய வயதிற்கும் தகுதிக்கும் புதிதாக தயாரிக்கப் பட்ட மிஸோக்களையேத் தான் சாப்பிட வேண்டும் என்பதினைக் கேட்டறிந்தார். அதைக் கேட்ட உடனேயே, "அப்படியானல், இனி நான் சாப்பிடவேக் கூடாது என்று சொல்கிறாயா?" என்றவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார். டைரியோ கதவின் வெளியே நின்று கொண்டு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். பென்கேய் எந்தப் பதிலும் கூறவில்லை. ஏழு நாட்களுக்கு டைரியோ கதவின் வெளிப்புறம் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அறையின் உள்ளே இருந்தார். முடிவில் நம்பிகையையும் பொருமையையும் இழந்த டைரியோ சத்தமாக பென்கேயிடம், "கிழவா, நீ வேண்டுமானல் சாப்பிடாமல் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞனான சீடன் சாப்பிட வேண்டும். என்னால் இப்படியே தொடர்ந்து உணவு சாப்பிடாமலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது!" என்று கத்தினான். அந்த சமயத்தில் கதவினைத் திறந்தார் பென்கேய். புன்னகையுடன் டைரியோவைப் பார்த்த பென்கேய், "என்னுடைய சீடர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன். நீ ஆசிரியராகும் போது இதனை மறந்துவிடாதே" என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: காவல் நிலையத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சிகள் முருகேசனின் உதட்டில் புன்னகையை நிரப்பியிருந்தன. உண்மையிலேயே, இத்தனை வருடங்கள் நேர்மையாகப் பணியாற்றியவர் இன்ஸ்பெக்டர் முருகேசன். இன்றோடு அவர் பணி முடிகிறது. பஜாஜ் பல்சரில் 60 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தார். முருகேசனுக்குப் பின்னால், மாலையுடன் முன்னாள் எஸ்.ஐ., பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். பாண்டியன் முருகேசனைவிட இரண்டு வயது மூத்தவர். முன்னரே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருவரும் நீண்டநாள் நண்பர்கள். "ஹூம்..." என்ற பெருமூச்சுடன் பாண்டியன் பேச ஆரம்பித்தார். "என்ன, முருகா... இனிமே காலைலயிருந்து சாயந்தரம் வரைக்கும் சும்மாவேதான் இருக்கணும். ஒன்னு பண்ணு! பேசாம நம்ம 'யூனியன் கிளப்'புல வந்து சேர்ந்துடு. நம்மள மாதிரி ரிட்டயர்டு கேஸ•க ஒரு நாலஞ்சு அங்க இருக்கு. காலைல ஆறு மணிக்கு ஜாகிங்... ஏழு மணிக்கு பேட்மிட்டன்... எட்டு மணிக்கு வீட்டுல மருமக கையால சாப்பாடு, பத்து மணிக்கு திரும்ப 'கிளப்'புக்கு வந்துடு. பகல் பூராம் கேரம் போடு... ரம்மி... நல்லா பொழுதுபோகும். என்ன சரியா?" "சான்ஸே இல்ல அண்ணாச்சி... சும்மா ஒக்காந்து அரட்டை அடிக்குறது, நேரத்தப் போக்குறதெல்லாம் எனக்குப் புடிக்காது, என் போலீஸ் வேலைக்குத்தான் ரிட்டயர்டு. வேற ஏதாவது வேல இருந்துக்கிட்டேதான் இருக்கும்... பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்..." என்றார் முருகேசன். பேசிக்கொண்டே வந்த முருகேசன், கடைசி நேரத்தில் டிராபிக்கின் சிவப்பு விளக்கைப் பார்க்க, தடுமாறி நின்றார் முன்னால் நின்று கொண்டிருந்த டூவீலரில் லேசாக மோதி நின்றது பைக்... "மன்னிச்சுக்கோ தம்பி" என்றார் முருகேசன். இடிபட்டவனது டூவீலர் புத்தம் புதிது போலும். மிகவும் கோபமாக கத்த ஆரம்பித்தான். "கண்ண எங்கய்ய" வச்சிருக்க... வயசாயிருச்சுன்னா கண்ணாடி போட வேண்டியதுதானே... ஒழுங்காப் போயா ரோட்டுல" என்றான். அங்கிருந்த டிராபிக் கான்ஸ்டபுள் வேகமாக வந்தான். முருகேசனுக்கு 'சல்யூட்' அடித்துவிட்டு, இடிபட்டவனிடம் திரும்பினான். "டேய் வண்டில ஏதும் உடையலைல பேசாமாகப் போ" என்று அதட்டினான். பச்சை விளக்கு விழ இடிபட்டவன் பேசாமல் முறைத்துக் கொண்டே சென்று விட்டான். டிராபிக் காண்ஸ்டபுள், முருகேசன் ஓய்வு பெற்றதைப் பற்றி விசாரித்து, வழியனுப்பினான். "பாத்திங்களா அண்ணாச்சி... ரிட்டயர்டு ஆனாலும் அந்த மரியாத குறையுதான்னு... நான் எப்பவும் இப்படியேதான் இருப்பேன். நீங்க வேணாப் பாருங்க..." என்றார் முருகேசன். வீட்டிற்குள் முருகேசன் நுழைந்ததும், மீண்டும் மாலை... மீண்டும் வாழ்த்து... முருகேசனின் மகன் ரமேஷ் அருகில் வந்தான். "அப்பா... இங்க பாருங்க...இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது... (முருகேசன் மறுத்துப் பேச வர, அவரைப் பேசவிடாமல் நிறுத்தினான்.) ம்.... எதுவும் பேசக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... வீட்டு வேல எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். உங்க பைக்க மட்டும் எடுத்துக்கிறேன். ஓகேவா?" கடைசி வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தார் முருகேசன். கையிலிருந்த 'பைக்' சாவியை வாங்கிக் கொண்டு ரமேஷ் கிளம்பினான். அவரால் எதையும் பேச முடியவில்லை. மறுநாள், காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, ஈஸிச் சேரில் அமர்ந்து கொண்டு செய்தித் தாளுக்காகக் காத்திருந்தார். காலை ஏழு மணிவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மற்ற எல்லோரும் வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவரால் அதற்கு மேல் பொறுமையாக அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஏதாவது வேலை இருக்கிறதா என்று அங்குமிங்கும் பார்த்தார். செடிகளுக்குத் தண்ணீர் இன்னும் ஊற்றப்படாமல் இருந்தது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு குடத்தில் தண்ணீர் தூக்கப் போனார். அவசரமாக கிளம்பும் நேரத்தில் ஏதாவது வாக்குவாதம் வருவது இயல்பு. அந்தக் கோபத்தில் ரமேஷ், வெறுப்பாக வந்து கொண்டிருந்தபோது, தண்ணீர் குடத்தோடு வந்த முருகேசன் அவன் மீது இடித்து விட்டார். "ஏம்ப்பா... பேசாம ஒக்கார வேண்டியதுதான? கண்ணுமண்ணு தெரியாம வந்து மோதுறீங்க" என்றான் ரமேஷ். முருகேசன் அதிர்ந்து போனார். டிராபிக் சிக்னலில் இடிபட்ட இளைஞன் திட்டியவார்த்தைகள் ஒருமுறை நினைவிற்கு வந்தது. தனக்கு, 'எது நடக்கக் கூடாது' என நினைத்தாரோ அது நடக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. காலை பத்துமணி, இருப்பு கொள்ளாமல் முருகேசன் எழுந்து சாலையில் நடக்கத் தொடங்கினார். அந்த டிராபிக் சிக்னலின் கான்ஸ்டபுல் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு முன்னால் நடந்து சென்றார். கான்ஸ்டபுள் அவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு, மீண்டும் வேலையில் ஈடுபடத் தொடங்கினான். அந்தப் புன்னகையில் 'நடிப்பு' இருப்பதுபோன்று அவருக்குத் தோன்றியது. பாண்டியனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது முருகேசனுக்கு. 'யூனியன் கிளப்' புக்கு சென்றார். பாண்டியன் கேரம் போர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தார். முருகேசனைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவரை அழைத்துச் சென்று தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றவர்களாகவே இருந்தனர். முருகேசன் மெதுவாகக் கேட்டார், "ஆமா... இங்க மெம்பராவதற்கு எவ்வளவு கட்டணும்". எதார்த்தமாகக் கேட்பது போல நடித்தார். பாண்டியன் அவரைக் குத்திக்காட்ட விரும்பவில்லை. அவருக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று! அவரும் ஓய்வு பெற்றவர் தானே! காற்றடித்த போது, மரம் ஒன்றிலிருந்து புதிதாக ஒரு சருகு உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அங்கே ஏற்கனவே மண்ணோடு பதிந்த நிலையில் நிறைய சருகுகள்... புதிய சருகு விறைப்பாக நின்றது. காற்றுக்கு அங்குமிங்கும் ஓடியது. ஒரு காலடி வந்து அதை மிதித்தபோது அதுவும் மண்ணோடு பதிந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புதிய சருகு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், நாடகம், வாயிற் காப்போன், 30, கசையடி, 15 தலைப்பு: கிடைத்ததில் சம பங்கு
கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், சரண்யன், சரண்யன்நின் மகன் நம்பி, சோதிடர், குரு ஞானேந்திரர், விவாசாயி, விவாசாயி மகன் சுகுமாரன் தலைப்பு: நல்ல பகைவன்
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!" என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று. விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன். அவரிடம், சோதிடர், "உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்" என்றார். அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், "உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்" என்றார். ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான். சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை. சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, "தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!" என்றார். நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். "நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்" என்றான். முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் "நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார். "குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்" என்றான். "ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்" என்றார். "வேண்டாம் குருவே!" என்ற சுகுமாரன் "அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்" என்றான். சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர். இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் "சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!" என்றார். அதற்கு சுகுமாரன் "குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்" என்றான். அதற்கு ஞானேந்திரன் "மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்" என்றார். அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், "தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்" என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, "ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!" என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார். அதற்கு நம்பி, "என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!" என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். "சுகுமாரா!" என்று தொடர்ந்த நம்பி, "நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!" என்றான். நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும். "சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!" என்றான். விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, மனைவி, துப்பாக்கி, திருமணம் தலைப்பு: கற்பனை காதலி
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , "நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் "என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். "எப்போது அவள் வ்ருகிறாள் ? "என்று கேட்டார். "இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு" என்றான் அவன் அந்த நாள் நசுருதீனின் பொழுது மனஅமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். "இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது "என்று முடிவு செய்திருந்தார். நேரம் போய் கொண்டே இருந்தது. அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை. இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது. அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. "தனக்கு திருமணம் ஆகவில்லை "என்பது
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிங்கம், காட்டுச் சேவல், யானை தலைப்பு: கவலைப்படாதே சகோதரா!
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது."எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது. அதைப்பார்த்த சிங்கம், "ஏய்……..ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே…..எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.அதற்கு யானை, "இதோ……என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்……….என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்………."என்றது. அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.“ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர். குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, “நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்” என்றனர்.“வெளியூருக்கா? ஏன்?” என்று கேட்டான், மட்டி. “இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்” என்றான், திருடரில் ஒருவன்.“ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்” என்று பாராட்டினார், பரமார்த்தர்.ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. “இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்” என்றான்.அதைக் கேட்ட திருடர்கள், “சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?” என்று கேட்டனர்.“ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!” என்று ஒப்புக் கொண்டான் மட்டி.மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் “குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே” என்று கேட்டான்.“ஓ! தாராளமாக உதவி செய்வோம்” என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.“குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்” என்றான், முட்டாள்.“யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், “சீக்கிரம் செய்யுங்கள்” என்று அவசரப்படுத்தினர்.பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.“சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.“அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று திட்டினார்கள்.“சத்தம் போட்டால் என்ன தப்பு?” என்று கேட்டான் மடையன்.குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, “முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!” என்று உண்மையைக் கூறினர்.அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.“என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?” என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.“ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!” என்று கத்தினான், மட்டி.அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.“அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என்று கட்டளை இட்டனர்.அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.“சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மண்டு.“நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், “சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்” என்றான்.குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாழ்க இராமர் வாழ்க சீதை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: யூத கதை, மனிதன், கூட்டம், இசை நிகழ்ச்சி, கல்யாணம், ஜன்னல், தூக்கம், அலாரம், குழப்பம், சோகம், மனைவி, கேஸ் கம்பெனி, சிந்தனை, மோசமான அழிவு, சூனியம், கற்பனை தலைப்பு: உறங்கும் மனிதன்
நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும். உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ. நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும். அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது. அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான். அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான். நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்! நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன். ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான். தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம். அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, "நான் என்ன செய்திருக்கிறேன் பார்!" என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான். திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய். நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான். இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது. நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்? மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான். மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய். எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்? இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்? நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான். இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சந்திரி அக்கா, கொச்சேமான், ஜோசியர் தாத்தா, ராஜப்பன், சார், குஞ்ஞப் பாட்டி, நீலம் மாமி, பூசாரி தலைப்பு: நிழலாட்டம்
சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வாக்கில்தான் வருவார். பகல் முழுக்க அப்பாவிடம் சாஸ்திரம் பேசிவிட்டு மத்தியானம் சாப்பிட்டு கண்ணயர்ந்து விட்டுப் போவார். ஆற்றங்கரைப் படிக்கட்டில் புஸ்புஸ் என்று அவர் ஏறி வருவதை நான் தான் முதலில் பார்த்தேன். புருவங்களில் வேர்வை திரண்டு மினுங்கியது. "ஜோசியர் தாத்தா" என்றேன். "உங்கப்பா எங்கேடா?" என்றார். "குளிக்கிறார்" வேட்டி நுனியைத் தூக்கி முகத்தைத் துடைத்தபடி, கூனல் முதுகுடன், விடுவிடுவென்று நடந்தார். நான் அவருக்குப் பின்னால் ஓடினேன். திண்ணையில் அமர்ந்து சாஸ்திரக் கட்டை பக்கத்தில் வைத்துவிட்டு, "உங்கப்பன்கிட்ட போய் சொல்லுடா" என்றார். நான் அம்மாவிடம்தான் போய் சொன்னேன். அம்மா குளியலறைக்குள் போனாள். தண்ணீர் கொட்டும் சத்தம் நின்றது. பாதி துவட்டியபடி அப்பா என்னருகே போன போது வெந்நீரின் ஆவி என்மீது பட்டது. லைப்பாய்சோப்பின் இனிய மணம். அப்பாவைப் பின் தொடர்ந்தேன். உற்சாமாகச் சிரித்தபடி அப்பா ஏது இத்தனை தூரம் என்று கேட்டபடி ஓரத்து அறைக்குப் போனார். ஜோசியர் தாத்தா உற்சாகமே இல்லாமல் வா. ஒரு விசேஷம் இருக்கு என்றார். அப்பா சலவை வேட்டியை மொடமொட வென்று சுற்றியபடி வந்தார். அவர் உடலின் ஈரத்தில் அது ஆங்காங்கே நீலநிறம் பெற்றது. தாத்தாவின் உடல் உலர்ந்து விபூதிப் பட்டைகள் தெளிவடைந்தன. அப்பா அருகே உட்கார்ந்தார். "காப்பி சாப்பிடுது..." என்றார் தாத்தா. "இருக்கட்டும் பார்க்கலாம்" என்றார். அம்மா பித்தளை செம்பில் காப்பி கொண்டு வந்தாள். தாத்தா பெரிய டம்ளரில் வழிய வழிய ஊற்றி மூன்று முறை பருகினார். "அப்பாடா" என்றார். மறுபடி வேர்க்க ஆரம்பித்தது. அப்பா, "என்ன சங்கதி" என்றார். தாத்தா திரும்பி என்னைப் பார்த்தார். அப்பா, "போடா, போய் குளி" என்றார் பின்கட்டுக்கு வந்தேன். தங்கம்மா நெல்லை வேக வைத்துக் கொண்டிருந்தாள். குட்டுவம் களக்களக் என்று சிரிப்பை அடக்க முயல்வது போலிருந்தது. எரியும் தென்னை மட்டைகள் டப் டப் என்று வெடித்தன. தொழுவிற்குப் போய் பசுக்களை வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நேரமாகிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் ரொம்ப தூரம். என்ன விஷயம் என்று தெரியாமல் எப்படி போவது? சிறிது நேரம் கழித்து தாத்தா ஜோசியக் கட்டுடன் கோயில் முற்றத்தில் நடந்து போவது தெரிந்தது. வீட்டுக்கு வந்தேன். அப்பா அதற்குள் சட்டை போட்டு குடையுடன் நின்றிருந்தார். நின்றபடியே காப்பி பருகிவிட்டு, அப்ப நான் வர்றேன்" என்றார். அவர் ஆபீஸ் போகவில்லை. ஆற்றுப்படிகளில் இறங்கிச் சென்றார். சமையலறைக்கு ஓடி அம்மாவிடம், அப்பா எங்கே போகிறார்?" என்று கேட்டேன். அம்மா, நான் அதுவரையிலும் பல்கூட தேய்க்காமல் இருப்பதைக் சொல்லிக் திட்டினாள். கொல்லைக் பக்கத்துக்குப் போனேன். தங்கம்மா பெரிய சல்லடைக் கரண்டியால் நெல்லை அள்ளி பனம் பாயில் கொட்டிக் கொண்டிருந்தாள். குட்டுவத்திலிருந்து ஆவி எழுந்தது. பாய் நெல்லின் மீது மேகம் பரவி எழுந்தது. இனிமையான புழுங்கல் மணம். நெல்மணிகள் வெடித்து புன்னகை புரிவதுபோல இருந்தன. தங்கம்மா ஆற்றில் விழுந்து எழுந்தவள் போல தெரிந்தாள். "கொச்சேமான் வடக்கேடத்துக்குப் போவேல்லியா?" என்றாள். எதுக்கு? அப்போதுதான் சந்திரி அக்கா பற்றி அறிந்தேன். எனக்குப் புரியவில்லை பல் தேய்ப்பதை நிறுத்திவிட்டு, "பீடை என்றால் என்ன?" என்றேன். "செண்ணு பாக்கணும். கொச்சேமானுக்கு அருமந்த அக்காதானே" என்றாள். சிக்கலான ஏதோ விஷயம் என்று புரிந்தது. முன்பு அக்கா திரண்டு குளித்த போது, பத்து நாள் என்னை அந்தப் பக்கம் அண்டவே விடவில்லை. மூலைப்புரையின் கரிபிடித்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோத நாலு உலக்கைகளால் வேலி கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்து, பச்சரிசி மாவு உருண்டை வேண்டுமா என்று சைகையால் கேட்டாள். மாவு உருண்டையும், உளுந்தங்களியும் தின்று அலுத்துப் போயிருந்ததனால் நான் வேண்டாம் என்றேன். அவளைப் பார்க்வே வினோதமாக இருந்தது. அவசர அவசரமாக இட்லியை விழுங்கிவிட்டு., புத்தகப் பையுடன் கிளம்பினேன். பையை செல்வராஜின் பெட்டிக் கடையில் போட்டுவிட்டு கீழக்கடவு வழியாக ஆற்றைக் கடந்தேன். அங்கு ஆழம் அதிகம். காற்சட்டை நனைந்து விட்டது. ஆற்றின் மறுகரையில், வயல் வரப்பு வழியாக ரொம்ப தூரம் போக வேண்டும். கையை விரித்துக் கொண்டு ஓடினேன். பிளேன் ஆக மாறி மிதக்க ஆரம்பித்தேன். தரையெல்லாம் பச்சை நிறமாக அலையடிக்கும் வயல்கள். தென்னந்தோப்பின் அரையிருட்டில் புகுந்து மேடேறிய போது வடக்கேடத்து மச்சுவீடு தெரிய ஆரம்பித்தது. ஒட்டுக்கூரை கன்னங்கரேலென்று இருந்தது. முற்றத்தில் மூன்று பலா மரங்கள். கண்ணி, நீலி, சக்கி என்று பெயர். சகோதரிகள், கண்ணிக்கு நூறு வயது ஆகிவிட்டது. காய்ப்பதில்லை. போன வருடம் மட்டும் ஒரே ஒரு பழம் கிடைத்தது. அதை அறுக்கும் போது சந்திரி அக்கா என்னைக் கூப்பிட வந்தாள். குளித்து விட்டு அப்படியே எங்கள் வீட்டுக்கு வந்து, அம்மாவிடம் கதை பேசிவிட்டு பத்திரிகையெல்லாம் வாங்கிக் கொண்டு, மகாதேவர் கோயிலில் கும்பிட்டு விட்டுத்தான் திரும்பிப் போவாள். அன்றைக்கு ராஜப்பன் கூட வந்தான். அக்கா அவனிடம் கண்ணிப் பலாவைப் பற்றித்தான் பேசியபடி வந்தாள். ஊரில் உள்ள எல்லா வரிக்கைப் பலா மரங்களும் அதன் வம்சம்தான். அக்கா தோள் நிறைய ஈரத் துணிகளை முறுக்கிப் போட்டிருந்தாள். கூந்தல் நுனியிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ராஜப்பன் ஏதோ சொல்ல, அக்கா சிரித்தாள். இரண்டு பேரும் என்னைப் பார்த்தார்கள். ராஜப்பன் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தலிருந்த குட்டி பள்ளிக்கூடத்தில் வாத்தியார். அவனைப் பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் ராஜப்பா சார் என்று சொல்ல வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தாள். "ராஜப்பா நீதான் பலாப் பழத்தைப் பறிக்கப்போகிறாயா?" என்று கேட்டேன். அக்கா என் தலையில் ஓங்கி அரைந்து, "பெயர் சொல்லியா கூப்பிடுவது கழுதை?" என்று திட்டினாள். உண்மையிலேயே அவளுக்கு பயங்கர கோபம். கண்களும் மூக்கும் சிவந்து விட்டன. "ராஜப்பா சார்" என்று நான் ஈனஸ்வரத்தில் சொன்னேன். சரி சரி விடு. என்று ராஜப்பா சார் சொன்னார். என் தலையை வருடி, "சின்னப்பையன் தானே? பெரியவங்க பேச்சைத்தானே அவன் கேப்பான்" என்றார். ராஜப்பா சார் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். அதே சமயம் கோபமும் வந்தது. தலையை உதறினேன். வீடு நெருங்கியதும், அக்கா தலையை அசைத்து விட்டு விலகி, கொல்லைப் புறமாகப் போனாள். நானும் ராஜப்பா சாரும் முகப்பு முற்றத்துக்கு வந்தோம். குஞ்ஞ"ப் பாட்டி திண்ணையில் கம்பிளி மேல் உட்கார்ந்திருந்தது. காலெல்லாம் குந்திரிக்கத் தைலம். தாங்க முடியாத நாற்றம். பாட்டியின் பக்கத்தில் போனால்தான் வாய் வேறு மாதிரி நாறுவதை உணர முடியும். "ஏண்டா ராஜப்பா நீயா ஏறப் போகிறாய்?" என்று பாட்டி கேட்டாள். "ஓம் அம்மிணி" சார் சொன்னார். "எப்பிடி ஏறுவியோ என்ன இழவோ! நாலெழுத்துப் படிச்சு தொலைச்சுப்பிட்டே. அங்கே பள்ளிக்கூடத்திலே என்னடா சொல்லி குடுக்கிறே? மரம் ஏறவா? ஹெஹெஹெ" பாட்டியின் வாயில் மூக்குப் பொடி நிறத்தில் இரண்டு பற்கள் காணப்பட்டன. "சார் தான் மூணாம் கிளாஸ் பயக்களுக்கு கிளாஸ் டீச்சர் பாட்டி" என்றேன். "சாரா? யாருடா அது?" தணிந்த குரலில், "ராஜப்பா சார்" என்றேன். "தூ, உன் வாயைப் பொசுக்க. நாய் கெட்ட கேட்டுக்கு வாலுக்கு பட்டுக்குஞ்சலம் வேணுமா? ஏண்டா ராஜப்பா. ஏரப்பாளி, நீயாடா சொல்லிக் குடுத்தே இப்பிடி?" சார் புன்னகை புரிந்தபடி, "இல்லம்மணி" என்றார். என்னைப் பார்த்து, ஏதோ கண்ணைக் காட்டினார். "இல்லைபாட்டி அக்காதான்...." என்று நான் ஆரம்பித்தேன். சார் உடனே, அக்காகிட்டேயிருந்து ஒரு கயிறு வாங்கிட்டு வா ஓடு" என்றார். நான் கயிறு வாங்கி வந்தேன். சார் சட்டையைக் கழட்டி விட்டு, வேட்டியைத் தார் பாய்ச்சினார். சாரின் உடம்பு கருப்பாக, பளபளப்பாக, கோயில் வீரபத்ரன் சிலை மாதிரி இருந்தது. பவுன் சங்கிலி போட்டிருந்தார். அதைக் கழட்டி மடியில் செருகினார். அடிமரப் பொந்தில் கையை வைத்து தொத்தி ஏறினார். அவருடைய தோளிலும், கைகளிலும், முதுகிலும் தசைகள் இறுகி அசைந்தன. இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்தது. பெரிய பாம்பு மரத்தில் ஊர்ந்து ஏறுவது போல அது மேலே சென்றது. வலப்பக்க நுனிக் கிளையில் குரங்கு போல ஊர்ந்து சென்றார். பலாப்பழ காம்பில் கயிற்றின் நுனியை முடிந்த பிறகு வெட்டினார். கிளை வழியாக கயிற்றைப் போட்டு இறக்கினார். பலாப்பழம் பலூன் போல கீழே வந்தது. தரையைத் தொட்ட பிறகுதான் அது எத்தனை பெரிது என்று தெரிந்தது. முள்ளெல்லாம் மழுங்கி விட்டிருந்தது. மணம் வந்தது. அக்கா ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தாள். "டேய்" என்றாள். ஓடிப்போய் "என்னக்கா?" என்றேன். "சார் கிட்டே பழம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொல்லு" சார் திரும்பிப் பார்த்து சிரித்தார். கைகளை உரசி அரக்கை உருட்டியபடி, படிகளில் அமர்ந்தார். அவருடைய பல்வரிசை அழகாக இருந்தது. அக்கா அந்தப் பலாப்பழத்தை கமுகம் பாளையை கீழே வைத்து அரிவாளால் வெட்டினாள். சாறு ஊறி பாளையில் கொட்டியது. சுட்டு விரலால் வழித்து என் நாவில் தடவினாள். நெற்றியை மோதியது இனிப்பு. சுளைகளை எடுத்து தட்டில் போட ஆரம்பித்தாள். "டம்ளரில் கொஞ்சம் சாறு தாறேன் சாருக்கு கொண்டு போய் கொடுக்கிறாயா? யாருக்கும் தெரியக்கூடாது" என்று என்னிடம் அந்தரங்கமாகக் கேட்டாள். அப்படி அவள் கேட்டதில் நான் மிகவும் பூரிப்பு அடைந்தேன். அதற்குள் பாட்டி வந்து விட்டாள். பக்கத்தில் அவள் உட்கார்ந்த போது பலாப்பழ வாசனை மறைந்தது. "எவ்வளவு சுளைடி இருக்கு?" என்றாள். அக்கா எதுவும் சொல்லவில்லை. "ரெண்டு சுளையை இப்பிடி போடு. வாய் ஒரு மாதிரி இருக்கு. கிருஷ்ணா குருவாயூரப்பா...." அக்கா பேசாமல் இரண்டு சுளையை பாட்டி கையில் வைத்தாள். பாட்டி முகமே சப்பி விரிய மெல்ல ஆரம்பித்தாள். "அந்த ராசப்பன் பயலுக்கு ரெண்டு சுளை குடு. அங்கியே நிற்கிறான்." பாட்டி இன்னொரு சுளையை எடுத்தாள். "அந்த காலத்திலெல்லாம் பலாப்பழ மட்டையே ஆசையா வாங்கிட்டு போவான்கள். இப்போ அவன்களுக்கு காலம் வந்திருக்கு..." நான் எட்டிப் பார்த்தேன். சார் சட்டையை மாட்டிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார். "சார் போகிறார் என்றேன்", "போனால் போறான். மாசச் சம்பளம் வாங்குகிறவன்தானே? இங்கே மாதிரி ராச்சாப்பாட்டுக்கு பலாப்பழ மட்டையா அவனுக்கு...? கலிகாலம்! மாதவா, கோபாலா" பாட்டி சொன்னாள். அக்கா பேசாமல் சுளைகளை இணுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு "இருடா அக்கா கொல்லைக்கு போய் விட்டு வந்திடறேன்" என்று எழுந்து போனாள். நான் நாலைந்து சுளைகளைப் பிய்த்தேன். சரியாக வரவில்லை. எழுந்து கொல்லைப் பக்கம் போனேன். மூத்திரப் புரையின் மேலாக அக்காவின் தலை தெரியவில்லை. இடது பக்கம் மஞ்சணாத்தி மரத்தடியில் அக்காவும் சாரும் நின்றிருந்தனர். சார் சிரித்தபடி ஏதோ சொன்னார். அவர் கையில் வாழையிலையில் பலாச் சுளைகள் இருந்தன. நான் நினைத்தபடி வீட்டு முற்றத்தில் கூட்டம் ஏதும் இல்லை. அப்பாவும், அச்சு மாமாவும், சந்திரன் அண்ணாவும், சிவன் அண்ணாவும், பிரபாகரன் மாமாவும், ஒரு கருப்பு நிற தடியனும் பாட்டியும் மட்டும் திண்ணையில் ஏதோ பேசியபடி இருந்தார்கள். கொல்லைப் பக்கத்துக்கு போனேன். நாலைந்து பெண்கள் தென்பட்டனர். சாவித்திரி மாமியும், பங்கஜம் மாமியும் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஊடே புகுந்து, சமையலறைக்குள் நுழைந்தேன். இருட்டாக இருந்தது. அங்கும் சில பெண்கள் நின்றிருந்தனர். ஒரு மாமி என்னிடம், "யாருடா நீ?" என்றாள். இன்னொரு மாமி "நீ விசாலத்தின் பிள்ளைதானே? உங்கம்மா வரவில்லையாடா?" என்றாள். நாள், "அப்பா இதை நீலம் மாமியிடம் கொடுக்கச் சொன்னார்" என்றேன். உள்ளே போ" என்றாள். உள் அறையில் யாருமில்லை. வடக்கேடத்து வீடு மிகவும் பழையது. பாழடைந்த நிறைய அறைகள். பக்கவாட்டு அறையில் உறிகளும். அடுக்குப் பானைகளும் இருட்டுக்குள் இருக்கும். அங்கு சிறு மண்ணெண்ணை விளக்கு எரிந்தது. பெரிய நிழல் சுவரில் விழுந்தது. அக்காவின் நிழல். அக்கா தலையை அங்குமிங்கும் திருப்பியபடி, "ஊம்ஊம்!" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தலை கலைந்திருந்தது. முகம் வீங்கியது போல இருந்தது. அருகே நீலம் மாமி. இன்னொரு பாட்டி சுவரோடு ஒட்டி நின்றிருந்தாள். மாமி திரும்பிப் பார்த்து என்னிடம், "என்னடா" என்றாள். அக்கா? என்றேன். ஓடு இங்கே நிற்காதே" என்று கடுப்பாகச் சொன்னாள். நான் கொல்லைப் பக்கம் வந்தபோது இன்னும் ஒரு பாட்டி விசுவிசுவென்று வருவதைப் பார்த்தேன். கல்லத்தி வீட்டில் நாராயணிப் பாட்டி பர்ஸ் போன்ற வாயைத் திறந்தபடி, சாவித்திரி மாமியிடம், " ஏண்டியம்மா இது, கேட்டதெல்லாம் சத்தியமா? இதென்ன கொடுமை? கலிகாலம் முத்திப் போயிட்டதா?" என்றாள். "போய்ப் பாருங்கள் பாட்டி. உட்கார்ந்திருக்கிறது மூதேவி" என்றாள் சாவித்திரி மாமி. பாட்டி குரலைத் தாழ்த்தி "யாரு"? என்றாள். எல்லார் முகமும் ரகசியத்தைக் காட்ட ஆரம்பித்தது. சாவித்திரி மாமி என்னை கவனித்து. "நீ இங்கேயா நிற்கிறாய்? ஓடு வீட்டுக்குப் போ" என்றாள். நான் தயங்கி நின்றேன். "உள்ளே போய் பார்க்கிறது" என்று மாமி சொன்னாள். "அய்யோ அம்மை முகத்தில் முழிக்க என்னால் முடியாதம்மா. அம்மே பரதேவதே..." பாட்டி கை கூப்பியபடி பின்னடைந்தாள். வெயில் பிரகாசமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தோட்டமெங்கும் நிழல்கள் பின்னி அசைந்தன. வாலை செங்குத்தாக தூக்கியபடி ஒரு நாய் போனது. வாழைக் கூட்டம் அருகே தரை குளிர்ச்சியாக இருந்தது. கரிய மண்ணில் ஒரு மென்மையான குழி. அந்த நாயின் இடமாக இருக்க வேண்டும். அங்கிருந்து பார்த்த போது வீடு தொலைவில் சத்தமே இல்லாமல். இருப்பதுபோல இருந்தது. வாழைக் கூட்டத்தில் ஒரு குலை தென்பட்டது. அதன் பூவுக்குள் தேன் இருக்கும். சந்திரி அக்கா எடுத்துக் கொடுப்பாள். யாரிடம் உதவி கேட்பது என்று புரியவில்லை. வீட்டின் மறுபுறம் பாழடைந்த தொழுவம். அதன் படிக்கல் மீது காளி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். கண்கள் மூடியிருந்தன. புகையிலை மெல்லும் போது கண்களைத் திறக்க மாட்டாள். நான் அருகே போய் "காளி" என்றேன். "ஆரு?" என்றபடி கண்களைத் திறந்தாள். "ஆரு கொச்சா? இங்க எதுக்கு வந்தது?" நான் அவள் மடியில் ஏறி அமர்ந்தேன். "சந்திரி அம்மிணியைப் பாக்கவா வந்தது. அம்மிணிக்கு பீடையில்லா வந்திருக்கு?" காளி என் தலைமயிரை விலக்கிப் பார்த்தாள். "அம்மைக்கு நேரமே இல்லியாக்கும்? பேனு புளுத்து கெடக்குதே?" என்றாள் "பீடை என்றால் என்ன காளி?" என்றேன். "சாமி வந்து மனியனுக்க மேத்த கேறுய தாக்கும்" நான் அவள் முகவாயைத் திருப்பு "மலைச்சியம்மன் சாமிதானே?" என்றேன். "ஆரு சென்னாவல இதையொக்க? " நான் சிரித்தேன். "எனக்குத் தெரியும்" என்றேன். "மலைச்சியம்மன் கண்கண்ட அம்மையாக்கும். கொச்சு கும்பிடணும்" காளி என் கையைப் பற்றி கூப்பி வைத்தாள். " சாமீய் சந்திரியக்களுக்கு எல்லாம் செரியாவணும் சாமீய் - சொல்லணும்" நான் உற்சாகமாக அதைச் சொன்னேன். காளி என்னிடம் "கொச்சு மலைச்சியம்மன் காவுக்கு செண்ணு பாத்ததுண்டா?" என்றாள். ஒரு தடவை போயிருக்கிறேன், ஐப்பசி மாதக் கொடைக்கு, மழைக்காலம் தெற்கு மடம் வயல்கரையில், பெரிய தோட்டத்தின் விளிம்பில், ஏழெட்டுப் புளிய மரங்கள் கூட்டமாக நின்றன. புளியம் சருகு மெத்தை போல பரவியிருந்தது. நடுவே கல்லாலான சிறு மேடை. அதில் ஒரு சிறு சூலாயுதம். அதுதான் காவு. அன்றைக்கு எல்லாரும் குடை வைத்திருந்ததனால் யானைக் கூட்டம் மாதிரி இருந்தது. பூசாரி கண்ணன் கூட தலைக்குடை வைத்தபடிதான் பூசை செய்தான். பக்கத்தில் பெரிய நீரோடை சிவப்பு நிறமாக சுழித்து ஓடியது. வயல் வெளியில் மழை புகை போல காற்றில் அலையலையாக பரவிச் சென்றது. புளிய மரக் கிளைகள் எம்பி எம்பி விழுந்தன. மேலே ஒவென்று இலைகள் இரைந்தன. அப்பா என்னைத் தூக்கி வைத்திருந்தார். நான் குடையிலிருந்து சொட்டிய நீரை கையால் பிடித்தேன் என்று தொடையில் கிள்ளினார். பூசாரி குனிந்தபோத அவன் பின்புறத்தில் மழை கொட்டியது. பீடத்துக்கு செந்தூரம் வைத்த உடனே ரத்தமாக கரைந்து ஓடி வாய்க்காலில் கலந்தது. அரளிப்பூக்கள் தயங்கித் தயங்கி ஓடை நோக்கிச் சென்றன. சோமன் அண்ணாவின் கையில் இருந்த கூடையில் மூன்று சேவல்கள் இருந்தன. ஒன்று சிவப்பு மற்ற இரண்டும் வெள்ளை, ஈரத்தில் உடலைக் குறுக்கி சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தன. பூசாரி சிவப்புக் கோழியை எடுத்தான். அதன் தலையையும் ஒரு காலையும் ஒரு கையால் பற்றினான். இன்னொரு கையால் இன்னொரு காலைப் பற்றினான். சூலாயைதத்தின் மீது தூக்கி ஒரே குத்தாகக் குத்தினான். கோழி துடிதுடித்தது. அப்படியே இறக்கி விட்டு அடுத்த கோழியை எடுத்தான். மூன்று கோழிகளும் சூலத்தில் கிடந்து வட்டமிட்டுத் துடித்தன. ரத்தம் வழிந்தது. ஓடையை நோக்கிப் போனது. திடீரென்று மின்னல். பிறகு இடி. நான் அப்பாவின் கழுத்தை இறுகப் பற்றினேன். எல்லோரும் "அம்மே, மலைநீலி! மகாமாயே" என்று கூவினார்கள். ரத்தத்தைப் பிரசாதமாக தந்தார்கள். என் நெற்றியில் கூட அப்பா போட்டு விட்டார். திரும்பி வரும் வழியில் வயல்கள் எல்லாம் நிரம்பி சிவப்பாக, தண்ணீர் விரிந்து கிடந்தது. வாய்க்கால்கள் கொப்பளித்தச் சென்றன. ஆற்றில் வெள்ளம், திருவட்டாறு போய் பாலம் வழியாக திரும்பி வர வேண்டியிருந்தது. "அந்த மலைச்சியம்மனா அக்கா மேல் கூடியிருக்கிறது?" என்று கேட்டேன். "அம்மைக்கு கொடை திகையேல்ல. எளகிப் போட்டாள். இனி அவ மனசடங்காம போவ மாட்டா. அவளுக்கு மனசு அணையாத்த தீயில்லா? குடும்பத்த எரிச்சுப் போடுமே" என்றாள் காளி. உள்ளிருந்து சாவித்திரி மாமி, "காளீ காளீ" என்றாள். "ஓம் அம்மிணி", "அங்கே என்ன செய்யே? பூசாரி வந்தாச்சு வா" காளி என்னை இறக்கி விட்டாள். "கொச்சு வீட்டுக்குப் போவணும். இஞ்ச நிக்கப்படாது கேட்டுதா? சந்திரியம்மிணிக்கு நாளைக்கு செரியாப் போடும் என்றாள். நான் யோசித்தேன். பிறகு கண் மறைவாகப் பதுங்கினேன். பாழடைந்த தொழுவம் வழியாக வீட்டுக்குள் நுழைய ஒரு இடுக்கு உண்டு. நானும் சந்திரி அக்காவும் ஒளிந்து விளையாட அதைப் பயன்படுத்துவது உண்டு. அதன் வழியாக உள்ளே போனேன். தூசும் ஒட்டடையும் மண்டிய அறையில், மாடிப்படி மச்சுக்கு போனது. ஒட்டடையைப் பிய்த்தபடி ஏறினேன். மச்சுப்பலகை உளுத்திருந்தது. கிச்கிச் என்று எலிகள் கலைந்து ஓடின. வெளவால் ஒன்று கலைந்து டபடபவென்று தலைக்கு மேலாகப் பறந்தது. அப்படியே நின்றேன். வெளவால் கூட்டம் மச்சின் கூரை முழுக்கப் பரவியிருந்தது. கலைந்தால் அவ்வளவுதான். இருட்டுக்கு கண் பழகிய போது அவற்றின் நீர்மணி போன்று கண்களின் மினுக்கம் தெரிந்தது. மெதுவாக நடந்து போனேன். அங்கங்கே மச்சுப் பலகை உடைந்து கீழிருந்து ஒளி வந்தது. கூரைமேல் நிழல்கள் ஆடின. ஒரு இடைவெளி வழியாக கீழே ஆள் நடமாட்டம் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். கீழே கூட்டம். அதன் நடுவில் பாய் விரிக்கப்பட்டிருந்தது. மணை ஒன்று போடப்பட்டிருந்தது. ஒரு தீப்பந்தம் ஓரமாக எரிந்தது. சாவித்திரி மாமி பெரிய கெண்டியில் தண்ணீரும், கமுகம் பூக்குலையும் கொண்டு வைத்தாள். அரளிப் பூக்கூடை, சீவிய இளநீர் காய்கள், கனல் புகைந்த தூபத்தட்டு. செந்தூரத்தட்டு என்று வரிசையாக வந்தன. ஜோசியர் தாத்தா ஒவ்வொன்றாகச் சரி பார்த்தார். செந்தூரத் தட்டு எங்கே? முக்கியமானதை மறந்துடுங்க" என்று இரைந்தார். நீலம் மாமி, "அதோ இருக்கு" என்று தணிந்த குரலில் சொன்னாள். "அது அப்பவே சொல்லித் தொலைக்கிறது மூதேவி" என்றார் தாத்தா. அப்பா உள்ளே வந்தார். துண்டால் முகத்தைத் துடைத்தபடி "சின்னவங்க யாரும் இங்கே நிக்க வேண்டாம்" என்றார் பூசாரி மெதுவாக பூனை போல வந்தான். மார்பு வெளிறி எலும்பெலும்பாக இருந்தது. மீசை இல்லை. குடுமி ஒரு பக்கமாக சாய்ந்து. இருந்தது அக்குளில், இருபுறமும் மணி கட்டிய, கட்டெறும்பு நிறம் கொண்ட, பெரிய பிரம்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்தபோதே "விஷ்க்" என்று அது சீறும் ஒலி கேட்டது. கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்து திறந்தான். கைமணி, கொப்பரை சம்புடம், சிறிய மரச்செம்பு எல்லாவற்றையும் எடுத்தப் பரப்பினான். காலை மடக்கி முதுகை நிமிர்த்தி அமர்ந்து கொண்டான். அவன் உதடுகள் படபடவென்று துடிக்க ஆரம்பித்தன. எல்லாரும் அமைதியாக நின்றார்கள். அப்பா கைகளை மார்பில் கட்டியபடி நின்றிருந்தார். பூசாரி கண்களைத் திறந்து, சைகை காட்டினான். அப்பா மெல்ல "கொண்டு வரச் சொல்லு" என்றார் உள்ளிருந்து காளியின் மீது சாய்ந்தவளாக, நடை தடுமாற அக்கா வந்தாள். அவளை பூசாரி முன் பிடித்து உட்கார வைத்தார்கள். அக்காவின் தலை தொய்ந்து முகவாய் மார்பில் அழுந்தியது. தலைமயிர் முகத்திலும் மடியிலுமாக சரிந்தது. பூசாரி மந்திரத்தை உரக்கச் சொன்னான். தூபத்தட்டில் சாம்பிராணியைப் போட்டான். புகை குபீரென்று எழுந்து என்னை நோக்கி வந்தது. சாம்பிராணியின் மணம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. பூசாரி அக்காவைக் கூர்ந்து பார்த்தான். பிறகு அக்காவிடம் "ஆராக்கும் நீ" என்று தணிந்த குரலில் கேட்டான். அக்காவிடம் "ம்ம்ம்..." என்றாள். "சொல்லிப்போடு ஆராக்கும் நீ", "ம்ம்ம்..." சொல்லாம உன்னை விடப் போறதில்லை. மரியாதியா சொல்லிப்போடு. நீ ஆருடி கூதறமேளே?" பூசாரியின் குரல் முழுங்கியது. அக்கா திடீரென்று உரக்கச் சிரித்தாள். முரட்டு ஆண்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரே சமயம் சிரிப்பது போல இருந்தது. "நானா? நான்தேம்பில உன்னைப் பெத்தது அந்தக் குரல் கூட அக்காவின் குரலாக இல்லை. இறுக்கமும் கரகரப்பும் கொண்ட பெண் குரல். பூசாரி சிரித்தான். "இத வேற வல்ல எடத்திலயும் வச்சுக்க கேட்டியா? இது கொறே கண்டவனாக்கும் நான். மரியாதையா சொல்லிப் போடு. ஆராக்கும் நீ?" அக்கா நிமிர்ந்து பார்த்தாள். முடி விலகியது. அவள் முகம் சீற்றம் மிகுந்து இருந்தது. கண்கள் முடிப்புரைக் காலில் அம்மன் சிலையின் கண்கள் போல சிவப்பாக வெறித்தன. பூசாரி பிரம்பை எடுத்தான். வலக்கையால் திடீரென்று கொப்பரைச் சம்புடத்திலிருந்து சாம்பலை அள்ளி அக்கா முகத்தில் வீசினான். அக்கா "ஆ" அலறினாள். என் உடம்பு நடுங்கியபடி இருந்தது. நரியின் ஊளை போன்றிருந்தது அது. பூசாரி பிரம்பால் மாறி மாறி அடித்தான். "அடிபில! அடிபில மோன! அடிபில" என்று கூவியபடி அக்கா தலை மயிரைச் சுழட்டி சுழன்றாடினாள். உரக்கச் சிரித்தாள். சீறும் நாயின் பற்கள் போல அவள் பற்கள் ஈறுடன் வெளித் தெரிந்தன. குரல்வளை புடைத்து, பச்சை நரம்புகள் நெளிந்தன. கையை நீட்டினாள் விரல்கள் ஸ்பிரிங் கத்தியின் நுனி போல வெடுக் வெடுக் என்று விரிந்து கொண்டன. மணிக்கட்டு மட்டும் சுழன்றது. முழுமையாக இரண்டு முறை சுழன்று நடுநடுங்கியது. கையின் சதைகள் இழுபட்டு அதிர்ந்தன. பூசாரி கூட ஒரு கணம் அடிப்பதை நிறுத்தி விட்டான். சமையலறைக்குள் இருந்து "அம்மே பரதேவதே" என்று அலறல் ஒலிகள் கேட்டன. அப்பா கூட கன்னத்தில் போட்டு கொண்டார். பூசாரி தன் பெட்டிக்குள்ளிருந்து ஒரு குவளையை எடுத்து அதிலிருந்து சிவப்பு நிறத்தூளை அள்ளி அக்கா முகத்தில் ஓங்கி ஓங்கி வீசிறினான். வத்தல் மிளகாய் கமறல் நெடி எழுந்தது. அக்காவின் நாக்கு வெளியே வந்தது. நாயின் நாக்கு போல மோவாயைத் தாண்டி கீழிறங்கித் தொங்கியது. பூசாரி பெட்டியிலிருந்து வெண்ணிறக் குச்சியொன்றை எடுத்தான். அது ஒரு எலும்புத் துண்டு என்று தெரிந்தது. அதன் உருண்ட நுனியால் அக்காவின் கைகளிலும் எலும்பு மூட்டுகளிலும் அடிக்க ஆரம்பித்தான். அக்கா தூக்கி விசிறப்பட்டவள் போல விழுந்து துடித்தாள். அவள் உடம்பு அட்டைபோல சுருண்டு உடம்பு இறுகியது. தலை தொடையிடுக்கில் நுழைந்தது. அது ஒரு மனித உடம்பு என்றே தோன்றவில்லை. பூசாரி தூபத்தணலில் செருகப்பட்டிருந்த இரும்புக் கரண்டியை எடுத்தான். அது கனலாக ஒளிர்ந்தது. பின் வெண்ணிறச் சாம்பல் நிறம் பெற்றது. அதை அக்காவின் கால்களிலும் புஜங்களிலும் வைத்து இழுந்தான். அக்கா பாய்ந்து எழுந்து அலறியபடி ஓட ஆரம்பித்தாள். காளி பிடிக்க முயல, ஒரே உதறலில் அவளைதூக்கி வீசினாள். பூசாரி அக்காவின் கால்களை அடித்து மடக்கி வீழ்த்தினான். தலைமயிரை அள்ளி இழுத்து போட்டு மீண்டும் சுட்டான். அக்கா திடீரென்று அவளுடைய சொந்தக் குரலில் வேண்டாம் வேண்டாம் விட்டுடு என்னை விட்டுடு என்ற கதறினாள். அக்கா என்று நானும் கதறியிருப்பேன். அந்தக் திகிலிலும் நான் எங்கிருக்கிறேன் என்ற உள் பிரக்ஞை எனக்கிருப்பதை அறிந்தேன். "செல்லு இல்லெங்கி பொசுக்கிப் போடுவேன்" என்றான் பூசாரி. அக்கா மீண்டும் அந்த கட்டைக் குரலில் "செல்லிப் போடுதேன் வேண்டாம் செல்லிப்போடுதேன் என்றாள். வாசல்களில் கூட்டம் முண்டியடித்தது. அக்கா விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிறகு ஒப்பாரிப் பாட்டின் நீட்டல்களோடு விளங்காத சொற்களில் கூவி அழுதாள். கண்ணீர் கொட்டியது. "செல்லிப் போடு ஆராக்கும் நீ?" என்று பூசாரி கேட்டான். "நான்தான்" என்றாள் அக்கா. "நான் எண்ணு சென்னா?" அக்கா தலையை ஆட்டி, விசும்பியபடி, "மலைச்சியாக்கும் நான்" என்றாள். கூட்டம் பிதுங்கி சிலர் அறைக்குள் வந்து விட்டனர். "ஓகோ நீதானா செரி, எதுக்கிப்பம் இஞ்ச வந்த?" அக்கா ஓங்கி மார்பில் அறைந்தபடி அழுதாள். அழுகை ஏறி ஏறி வந்தது. சின்னையன் பயல் ஆற்று வெள்ளத்தில் போனபோது அவன் அம்மா அப்படித்தான் கதறிக் கதறி அழுதாள். அழுகை சற்றுக் குறைவதும், பின்பு பீறிடுவதுமாக இருந்தது. "உனக்கென்னவேணும்? செல்லிப் போடு" என்றார் பூசாரி. "பாவியளா, மண்ணாப் போன படுபாவியளா, எனக்க பொன்னு தம்புரானை எனக்கு குடுத்துப் போடுங்கலேய்! எனக்க தம்புரான் எக்கு வேணும்பிலேய் கொண்ணு போட்டியளே பாவிப் பயலுவளே. இந்த கொலம் வெளங்குமா? வெளங்கு விடுவேனா?" அப்பா கும்பிட்டார். பூசாரி உரக்க "ஆரு ஆரக் கொண்ணா? அதைச் சொல்லு. பரிகாரம் வல்லதும் உண்டெங்கி செய்வம்" என்றான். "எனக்க பொன்னுதம்புரானை கொண்டு போட்டியளே பாவி மக்கா. எனக்க கும்பி ஆறதில்லையே. எனக்கு கும்பி அடங்கேல்லியே. எனக்கு கெதி மோட்சம் இல்லியே" திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள். சத்தம் மச்சுக்கு கேட்டது. கைகளைத் தூக்கியபடி காட்டுப் பூனை போல உறுமினாள். "விடமாட்டேன். கொளம் தோண்டிப்பிட்டு தான் போவேன். இந்தக் குடும்பத்துக்க தாய்வேரை அறுத்துப் போட்டுத்தான் அடங்குவேன். எனக்கு கும்பி அடங்கேல்ல." பூசாரி பாய்ந்து எழுந்து மீண்டும் அடிக்க ஆரம்பித்தான். பிரம்பு அறையின் உள்ளே சுழன்று பறப்பது போலிருந்தது. அடிபட்ட இடத்தில் அக்காவின் சதை துடிப்பது தெரிந்தது. பூசாரியின் முதுகில் வியர்வை வழிந்தது. குடுமி அவிழ்ந்து கூத்தாடியது. அக்கா அப்படியே தரையோடு தரையாக விழுந்தாள். அவள் தலைமயிரைப் பற்றித் தூக்கி, உனக்கு என்னவேணும்? என்ன கிட்டினா எறங்குவே? மரியாதிய சொல்லிப் போடு என்றான். அக்கா தீனமாக விசும்பினாள். எனக்கு எக்க பொன்னு தம்புரான் வேணுமே. எனக்கு தம்புரான் வேணுமே" பூசாரி "ஆருட்டி கொண்ணது உனக்க தாம்புரானே" என்றான். "இந்தக் குடும்பத்துக்கு மூத்தருமாருவளும், ஊராய் மக்காரனுவளும்தேன்.", "எப்பம்?", "இப்பம்தேன்" உனக்க தம்புரானுக்க பேரு என்னவாக்கும்? பத்மநாபன் தம்பி, எனக்க தம்புரானே உன்னைக் காணாம எனக்கு மனசு ஆறலில்லியே. எனக்கு நெனைச்சுப்பாக்க பளுதில்லையே அறு கொலை பண்ணிப் போட்டினுமே பாவிய. எனக்கு தீயடங்கேல்லியே "பூசாரி அக்காவை உலுக்கினான். "உனக்க பேரு மலைச்சிங்கிய. நீ எப்பிடிட்டி தம்புரானுக்கு கெட்டினவ ஆனே?" அக்கா திடீரென்று மவுனமானாள். பிறகு மெதுவாக "பேச்சி மலையிலே என்னைக் கண்டு மோகிச்சு விளிச்சோண்டு வந்தாவ. கண்ணுக்கு மணி போல வச்சு சினேகிச்சாவ. எனக்க அம்மையில்லா, எனக்க தேவியில்லா எண்ணுல்லா எக்கதம்புரான் என்னை விளிப்பாரு. கொண்ணு போட்டினுமே. எனக்க தம்புரானைக் கொண்டு கெடத்திப் போட்டினுமே. அது எனக்க கண்ணில விட்டு மாறேல்லியே" அக்கா வெறி எழுந்து கதறியழுதாள். "இஞ்ச பாரு அபவாதம் செல்லப்பிடாது கேட்டியா? ஆரு கொண்ணா. என்னத்துக்கு கொண்ணா?" அக்கா மார்பை கையால் அழுத்தியபடி திக்கித்திக்கி சொன்னாள். "ஊராய் மக்காரனுவ வந்து எக்கதம்புரானை அடிச்சாவ. என்னைய விட்டுப் போடணும் எண்ணு சொன்னாவ. என்னைப் பெத்த அம்€யாக்கும் அவ எண்ணு செல்லிப் போட்டாரு. சாதிக்கு தீட்டு செல்லி தள்ளி வச்சாவ. புளியங்காட்டில் குடிலு கெட்டி கெடந்தோம். மண்ணும் மானமும் சாச்சியாட்டு கிளியும் கிளியும் மாதிரி கொஞ்சிட்டு கெடந்தோம். எக்கதம்புரானே உனக்க சிரிப்பு மறக்க ஒக்குதில்லியே. அறுகொலை பண்ணிப் போட்டினுமே படுபாவிய தீராப்பளி செய்து போட்டினுமே..." அப்பா முன் நகர்ந்து பூசாரியிடம் ஏதோ சொன்னார். பூசாரி "கொல மூப்பராக்கும் செல்லுயது. பரிகாரம் செய்து போடலாமிங்கியாரு. உனக்கு என்ன வேணும் சொல்லு" என்றான். "அவனுக்க கரளில் உள்ளசோர வேணும்பில" என்று அக்கா பாய்ந்து எழுந்தாள். பூசாரி அவளை உதைத்து தள்ளி அடித்தான். அக்கா தரையோடு தரையாக விழுந்தாள். பூசாரி "கொலத்துக்கு எளைய குருந்தை மறிமாயம் செய்து மயக்கி சோர குடிச்சு பலி எடுத்த மலைநீலியாக்கும் நீ. உனக்க கதையொக்க எனக்கும் அறியிலாம். அண்ணு மலைகேறின உனக்கு வரியம் முடங்காம பலி போட்டு கும்பிடுதாவ இவிய. இப்பம் நீ நரபலி கேக்க வந்தியா? கொறை கண்டவானக்கும் நான். உனக்கு என்னவேணுமோ செல்லி வாங்கிப் போட்டு விட்டு நீங்கு " என்றான். அக்கா கைகளை ஊன்றி தலையை மட்டும் தூக்கி தணிந்த குரலில் நான் இவ இல்லாம போவ மாட்டேன். கொண்டு தான் போவேன்" என்றாள். பிறகு அவள் தலை சரிந்தது. பூசாரி இரண்டு முறை உதைத்தான். அசைவு இல்லை. அப்பாவிடம் "பாதிச் சோலி மிச்சம் கெடக்கு. எறக்கிப் போடலாம்" என்றான். அப்பா பணிவாக "இனி என்ன செய்ய" என்றார். "எளநீ வாட்டு" என்றான். நாலைந்து இளநீரை குடித்து வீசிய பிறகு ஜபம் செய்ய உட்கார்ந்தான். "நான் இருக்கணுமா?" என்றார் அப்பா. "நிறுத்தப்பிடாது நிறுத்தினா பின்ன கையில் பெடாது. தொடங்கியாச்சு. எண்ணு சென்னா எறக்கிப் போட்டுதான் மறுசோலி பாக்கணும்." அப்பா பெருமூச்சுடன் விலகி நின்றார். நான் என் கால்கள் குளிர்ந்து, விரைத்திருப்பதை அப்போது தான் உணர்ந்தேன். தூபப்புகை மச்சில் நிரம்பியிருந்தது. மல்லாந்து படுத்தேன். என் கைகால்கள் குளிர்ந்து விலகிக் கிடந்தன. அக்காவின் சிரித்த முகமும் மூக்குத்தியும் அசைவும் ஞாபகம் வந்தது. உடனே ராஜப்பா சாரின் முகம். பிறகு மூன்றாம் கிளாஸ் பள்ளிக்கூடம். குழந்தைகளின் குரல். "சாலமன் கிரண்டி! பான் ஆண் சண்டே! கிரிஸ்டின்ட் ஆன் மண்டே" நானும் ஒரு குழந்தையாக பாடிக் கெண்டிருந்தேன். மச்சில் நிறைய கண்கள். மெலிதாக தங்களுக்குள் பேசியபடி அவை என்னைப் பார்த்தன. கண்களை மூடினாலும் அந்தப் பார்வைகள் அப்படியே இருந்தன. எல்லாமே கனவு என்று திடீரென்று அறிந்தேன். எவ்வளவு பயங்கரமான கனவு. விழித்துக் கொள்ளப் போகிறேன். வீட்டுப்பாடம் எழுத வேண்டும் கனவுதான். மச்சில் கீழ் விளிம்பு வாயாக உள்ளே வந்து நீண்டிருந்த மூன்று ஒளிச்சட்டங்களைப் பார்த்தபடி கண் விழித்தேன். மச்சே தவிட்டு நிறமாக வேறு மாதிரி இருந்தது. பதற்றத்துடன் பொன்னிற தூசிகள் சுழன்று பறந்து கொண்டிருந்தன. என் உடம்பு முழுக்க கரிய பசை போல வெளவால் எச்சம். எழுந்து தவழ்ந்து நடந்து படியிறங்கினேன். கண்கள் கூசின. தலை சுழன்றது. நிற்க முடியவில்லை. அப்படியே தொழுவத்துக் கல் மீது அமர்ந்து விட்டேன். பின்பு யாராவது பார்த்து விடுவார்கள் என்ற எண்ணம் வந்தது. குமட்டல் வந்தது. எழுந்து தோட்டத்தில் புகுந்து நீரோடையில் உடலைக் கழுவினேன். அது காலை நேரம் என்று அப்போது தெரிந்தது. இரவெல்லாம் மச்சிலேயே கிடந்திருக்கிறேன். சத்தமேதும் இல்லை. அக்காவிற்கு என்ன ஆயிற்று? மீண்டும் வீட்டுக்கு ஓடிவந்தேன். சமையலறையில் நீலம் மாமி காபி போட்டுக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் "எங்கேடா போயிருந்தாய் பாவி? உன் அம்மா நேற்று ராத்திரிபடாத பாடு இல்லை" என்றாள். கருப்பட்டிக் காபி மணம் குமட்டலை வரவழைத்தது. தெக்கேடகத்துக்குப் போனேன் என்றேன். அவ்வளவு தூரமா. எதுக்கு சொல்லாம கொள்ளாம?" என்றாள் மாமி. "அக்கா எங்கே?" மாமி ஏதும் பேசாமல் காப்பியைத் துணியால் ஜாக்கிரதையாகப் பற்றி இறக்கினாள். தீ எழுந்து படபடத்தது. அவள் முகம் சிவப்பாக கனன்றது. உள்ளே போனேன். அறையின் அரை இருட்டில் அக்கா குவியலாக கிடப்பது தெரிந்தது. முகம் வீங்கிக் கண்கள் இடுங்கி வேற எவரோ போல் இருந்தால். குறட்டைகேட்டது. கால்களும் கைகளும் கூட பொதபொதவென்று வீங்கியிருந்தன. மஞ்சளும் களபமும் உடலெங்கும் அப்பியிருந்தன. குமட்டல் தரும் ஒரு வாடை. ரத்த வாடையா சீழ்வாடையா என்று தெரியவில்லை. "அக்கா" என்றேன். அங்கு எவருமில்லை போலப் பட்டது. சிறிதுநேரம் நின்றுவிட்டு வெளியே வந்தேன். காளி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அருகே போனேன். என்னைக் கண்டதும் சிவப்பாக பற்கள் தெரிய சிரித்தாள். "கொக்சு எங்க போச்சுது ராத்திரி? அம்மைய அரை உயிரு ஆக்கிப் போட்டுதே" என்றாள். "காளி, அக்காவிற்கு பீடை இறங்கிவிட்டதா?" என்று கேட்டேன். "வெளுக்கும்பம்தான் ஒரு மாதிரி விட்டு மாறிச்சு. ஒக்கே அம்மிணி செய்த புண்ணியம்தேன். கொஞ்ச பாடா படுத்திப் போட்டுது பிள்ளைய? ஆனா அந்தப் பயலுக்க கெதிகேடு. அவனுக்கு விதி இருந்திருக்கு. இல்லெங்கிலும் இம்மாதிரி மூத்த பீடைய வந்தா பலியில்லாம விட்டு மாறாது" என்றாள். நான் சட்டென்று பீதி வசப்பட்டேன். காளி கூறப் போவதை தெளிவின்றி முன் கூட்டியே உணர்ந்து கொண்டிருந்தேனா? "ஆரு காளி?" காளி வெற்றிலையைத் துப்பினாள். "நம்ம ராசப்பன் பயதான். நல்லோரு பய. வல்ல காரியமும் உண்டுமா? புளியங்காவுக்கு இந்த சமயத்தில் வல்லவனும் போவினுமா? வெளுக்கும்பம் பனைகேறப் போன தங்கராசுப் பய கண்டிருக்கான். பொற மண்டையில் அடி விளுந்திருக்கு. கையும் காலையும் பரத்திக்கிட்டு கமிந்து கெடக்குதான். கண்ணெடுத்துக் காணப் பளுதில்லை. அங்க கூடியுள்ள ஆளு பெகளத்துக்கு கையும் காலையும் கணக்குமில்ல. கொச்சு இண்ணு பள்ளிக்கூடம் போவாண்டாம் கேட்டுதா? ஒளிவாக்கும். பய வாத்தியாருல்லா?" நான் என் புறக்கழுத்தில் எவரோ தொடுவது போன்ற பீதிக்கு ஆளானேன். வீட்டை நோக்கி கதறியபடி ஓடினேன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு சாலையில் மூன்று நண்பர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். மாலை வேளை. சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கிய சமயம். அருகிலிருந்த குன்றின் மேல் ஒரு துறவி நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் அந்த நண்பர்கள் கவனித்தனர். அந்தத் துறவிக்குக் குன்றின் உச்சியில் என்ன வேலை என்று அவர்களுக்கு வியப்பு. “அவர் தனது நண்பர்களுக்காகக் காத்திருக்க வேண்டும். மடாலயத்திலிருந்து நண்பர்களுடன் நடைப்பயிற்சி வந்தபோது, அவரது நண்பர்களை இவர் தவறவிட்டிருக்கலாம்” என்றார் ஒரு நண்பர். இன்னொரு நண்பரோ முதலாமவரின் கூற்றை மறுத்தார். “அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒருவர் இன்னொருவருக்காகக் காத்திருக்க வேண்டுமெனில், அவர் பின்னால் தான் போய்ப் பார்த்துக்கொண்டிருப்பார். அவரோ முன்னால் பார்த்து நிற்கிறார். அவர் தான் மேய்த்துவந்த பசுவைத் தொலைத்திருக்க வேண்டும். சூரியன் வேறு சீக்கிரத்தில் சாயப்போகிறது. இருண்டுவிடும். அதனால் அவர் அவசரத்தில் இருக்கிறார்.” மூன்றாவது நண்பரோ மற்ற இருவரின் கருத்தை மறுத்தார். துறவி அமைதியாகக் குன்றின் மேல் நிற்பதாகவும், அசையாமல் கண்களை மூடிப் பிரார்த்தனையில் இருப்பதாகவும் கூறினார். அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர இயலவில்லை. அவர்கள் அந்தத் துறவியிடமே காரணத்தைக் கேட்டுவிடலாமென்று முடிவுசெய்தனர். அவர்கள் குன்றின் மீதேறி, துறவியிடம் சென்று, “நண்பர்களுக்காகக் காத்திருக்கிறீர்களா?” என்று கேட்டனர். அவர் இல்லையென்று மறுத்தார். நான் காத்திருப்பதற்கென்று எனக்கு எதிரிகளோ நண்பர்களோ இல்லையென்றார். அவர் மீண்டும் கண்களை மூடி ஏகாந்தமாக இருந்தார். இன்னொரு நண்பர் தனது சந்தேகத்தைக் கேட்டார். “ உங்கள் பசுவைத் தவறவிட்டு விட்டீர்களா?” “நான் எதையும் தேடவில்லை. என்னைத் தவிர எதன் மீதும் எனக்கு நாட்டம் இல்லை.” தியானம் அல்லது பிரார்த்தனையைத்தான் துறவி செய்துகொண்டிருக்க வேண்டுமென்று மூன்றாவது நண்பர் முடிவுக்கே வந்துவிட்டார். அதை உறுதி செய்துகொள்ளத் துறவியிடம் வினவினார். துறவி்யோ தன் கண்களைத் திறந்து, “நான் எதையுமே செய்யவில்லை. நான் சும்மா இங்கே இருக்கிறேன். எதையும் செய்யாமல் சும்மா இங்கே இருக்கிறேன்” என்றார். இதுதான் தியானம் என்று பவுத்தர்கள் சொல்கிறார்கள். எதையாவது செய்துகொண்டிருந்தால், அது தியானம் அல்ல. அதிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்றுவிடுகிறீர்கள். நீங்கள் ஜெபிப்பதும் தியானம் அல்ல. அங்கே வாய் ஆடுகிறது. நீங்கள் ஒரு வார்த்தையை உச்சரித்தால், அது பிரார்த்தனையோ தியானமோ அல்ல. ஏனெனில் மனம் அங்கே நுழைந்துவிடுகிறது. அதைத்தான் அந்தத் துறவி சொன்னார். ‘நான் எதுவும் செய்யாமல், சும்மா இருக்கிறேன்.”
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மலை மீது நிற்கும் துறவி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மன்னன் மூவன், பெருந்தலைச் சாத்தனார், சேரன் கணைக்கால் இரும்பொறை, தூதுவன் தலைப்பு: நாவடக்கம் இல்லாத அரசன்
சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு. இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர். ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார். புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார். "அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.", "உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!", "ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?", "பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே… சிறியதாகத்தானே இருக்கிறது.", "மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!", "ஓ, அப்படியா செய்தி!", "நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!", "இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!", "அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.", "நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.", "இல்லை, நானே சென்றுவிடுகிறேன்." புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான். மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை. "என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!" எனத் துõதுவனை அனுப்பினான். மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, ""மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்," என்றான். "கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?", "மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.", "தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.", "எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.", "உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.", "உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.", "அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!" தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான். "தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்," என்று முடிவு கட்டினான் இரும்பொறை. "மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்." தளபதி வீரமுழுக்கமிட்டான். "அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!", "சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.", "தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, "யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!" என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.", "உத்தரவு மன்னா!" கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர். நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான். குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மாணவன், ஜென் குரு, யுத்தக் கலை, முயல், வேட்டைக்காரன் தலைப்பு: ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது
மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான். "இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது" என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஸொகன், டொகோனோமோ, ஓவியன், கோழி, சமுராய் வீரன் தலைப்பு: ஓவியனும் ஸென்னும்
ஒரு சமயம் ஜப்பானின் இராணுவத்தில் ஸொகன் என்ற உயரிய பதவி வகித்த ஒருவர் தன்னுடைய விருந்தினர் அறையில் இருந்த டொகோனோமோ எனப்படும் மாடத்தில் கோழியின் அழகான படம் ஒன்றினை மாட்டி வைக்க விரும்பினார். அந்த ஊரிலேயே இருந்த சிறந்த ஓவியன் ஒருவனை சந்தித்து, "உங்கள் திறமை எல்லாம் காட்டி எனக்கு ஒரு சிறந்த கோழியின் படத்தினை வரைந்து கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். ஓவியர் "ஓ, தாரளமாக, கண்டிப்பா வரைஞ்சு தருகிறேன்" என்றார். ஓவியர் உடனே ஃபூஜி மலையின் மேலிருந்த தனது சிறிய ஓவியம் வரையும் அறைக்கு சென்றார். பறவைகளின் உடற்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கூறும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். முன்பு பறவைகளைப் பற்றி புகழ்பெற்ற ஒவியர்கள் எழுதியதைப் பற்றி வாங்கிப் படித்தார். கோழிகளை ஒரு சிற்பியைப் போல கல்லில் வடிவமைத்தார். ஆயில் வண்ணங்களை உபயோகித்து கோழிகளை வரைந்தார். மரத்தினாலான அச்சுக்களை உபயோகித்து கோழியைப் போல வடிவமைத்தார். ஒரு அச்சிலிருந்து மற்றொரு அச்சு அதைவிட தத்ரூபமாக இருக்கும் படி மற்றொரு படியினையும் எடுத்தார். சமுராய் வீரர்களின் புஸிடோ எனப்படும் வீரம் தோய்ந்த கவசம் அணிந்த கோழியினை உருவாக்கினார். ஒரு சமுராய் வீரன் மற்றொருவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் போல் இரண்டு கோழிகளின் சண்டைகளை உருவகப் படுத்தினார். சாந்தமே உருவான சாதுக்களைப் போல் கோழிகளை அமைதி தோய்ந்த முகத்துடன் வரைந்தார். சுமி தூரிகையை உபயோகித்து கோழிக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினை மனதில் நினைத்து அதன் சேட்டைகளையும் அனத்தங்களையும் அனைத்துக் கோணங்களிலும் வரைந்துப் பார்த்தார். கோழியின் உருவங்களை இயற்கைகாட்சிகள் நிறைந்த சூழ் நிலையில் வரைந்துப் பார்த்தார். தானியங்களை தின்னும் நிலையிலும், கோழிச்சண்டை நடப்பதை மக்கள் இரசிக்கும் விதமாகவும் வரைந்தார். இப்படியாக பத்து வருடங்கள் ஒடியிருக்கும். ஒரு நாள் ஸொகன் அம்புகளை விட்டு பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடிரென ஓவியரிடம் தான் கோழியின் ஓவியம் வரையச் சொன்னது ஞாபகம் வந்தவராக, தன்னுடைய போர்க் குதிரையின் மேல் ஏறி அதனை பறக்க விட்டு கொண்டு ஓவியனுடைய இடத்தை வந்து அடைந்தார். கதவினை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. உள்ளே நுழைந்தவர் கோழியைப் பற்றி வரைந்த ஓவியங்களின் மாதிரிகள் அந்த அறையின் மேல் முகட்டு வரை தொட்டிருந்ததினைக் கண்டார். கோழிகளின் சிலைகளின் மாதிரிகள் அறை முழுவதும் அடைத்திருந்தது. கோழிகளின் எலும்புக் கூடுகள், ஆயில் வண்ணப் படங்கள் என எங்கும் கோழி, எதிலும் கோழியின் உருவமாக இருந்தது. நிற்பதற்கே இடம் இல்லாத போது உட்காருவதற்கு அங்கே ஏது இடம்? "எங்கே எனக்காக வரைந்த கோழியினுடைய படம்?" என்று உரிமையுடன் அதட்டிக் கேட்டார் ஸொகன். "ஓ!! சுத்தாமாக மறந்தே போய் விட்டேன், மன்னித்து விடுங்கள்", என்று கூறிய ஓவியர். துரிகையை எடுத்தார் ஒரு அரிசியால் செய்த தாளில் இலாவகமாக அப்படியும் இப்படியும் வேகமாக சுழற்றினார். "இந்தாருங்கள்" என்று அந்த தாளினை ஸொகனிடம் கொடுத்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ரவி, ரவியின் காதலி ஷிகா, கனகராஜன், துரைப்பண்டிசார், காய்கறி, சிகாமணி, மயில்சாமி தலைப்பு: எழுதி வைக்காதவை
கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை எங்கே கூப்பிட்டுக்கொண்டு போவேன் என்றும் அவளுக்குத் தெரியும். "வரும்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாமா" என்ற கேட்பாள். சட்டைப் பையைத் துளாவிக்கொண்டு பணம் இருக்கிறதா என்று பார்ப்பேன். "பர்ஸ் எடுத்துக்கிட்டேன்" என்று சிரிப்பாள். எத்தனை வருஷமாகச் சிகா இப்படியே சிரித்துக் கொண்டிருக்கிறாள். ஓரு கீரைத் தண்டைப் போலக் கணுக்கணுவாக முற்றி, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் அப்படியே இருப்பது இவளாகத்தான் இருக்கும். கனகராஜ் நல்ல குண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அம்பலவாணபுரத்திலிருந்து அம்பை ஆர்.எஸ் வரமிஞ்சிப் போனால், பஸ்ஸில் பதினைந்து நிமிஷம் ஆகும். அகஸ்தியர்பட்டி தாண்டி கோடரம்குளம்விலக்கு வருகிறவரை, ஒவ்வொரு தடவையும் எப்படிச் சொல்ல முடியாத ஒரு அமைதி வந்து நம்மிடம் சேர்கிறது என்று தெரியவில்லை. சிகாவும் இதை எத்தனையோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி எல்லாம் தோன்றச் செய்தது எது. தூரத்தில் தெரிகிற மலைகளா, எங்கோ ஓடிக்கொண்டிருக்கிற ஆறா. இரண்டு பக்கமும் திறப்பாகக் கிடக்கிற வெளியா. "அழக் கூடாது மணி, பச்சை பிள்ளையா நீ " என்று பின் சீட்டில் இருந்து சிகாமணியின் அம்மா சொல்லிக் கொண்டே வந்தார்கள். சிகாவின் தங்கை பொன்னுக்குட்டியும் அழுது கொண்டிருந்தாள். இத்தனையிக்கும் பஸ் ஏறுகிற வரை அத்தானைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தவள் தான் அவள். கனகராஜ் இது எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதுபோலக் கைக்குட்டையால், முகத்தைக் துடைத்துக்கொண்டு, "ரவி அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமல்லவா" என்று கேட்டார். ஆமாம் என்ற சூட்கேஸ்களை எல்லாம் நகர்த்திக் கொண்டே சிகாவைப் பார்த்தேன். முன் பக்கத்துக் கம்பியில் குப்புறச் சாய்ந்து ரிஸ்ட்வாட்ச் கட்டின இடதுகையில் முகத்தை அழுத்தி சிகா அழுதுகொண்டிருந்தாள். பிச்சிப்பூ ஒரு ஒருமாகச் சரிந்து கிடந்தது. கனகராஜ் வீட்டில் எடுத்திருந்த கல்யாணச் சேலையைத்தான் கட்டியிருந்தாள். எனக்கு அந்தக் கலர் என்னவோ பிடிக்கவில்லை. சிகாவுக்குப் பிடித்ததோ என்னவோ, ஒரு பேச்சுப் பேசாமல் கட்டிக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தாள். சந்தோஷமில்லாமலா நலுங்கில உருட்டின தேங்காயை கனகராஜ் பிடுங்க முடியாமல் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்படி ஒரு சிரிப்புச் சிரிக்க முடியும், ஈறு தெரியச் சிரித்தால், சிகா மனதாரச் சந்தோஷமாக இருக்கிறதாகத்தானே அர்த்தம். ஆலமரத்தடியில் இருந்து அம்பாசமுத்திரம் ஸ்டேஷன் வரை சொல்லிவைத்தது போல சருகுகளாக உதிர்ந்து கிடந்தது. கனகராஜ் பூட்ஸ் சரக்சரக்கென்று மிதித்து நடக்க, சிகா ஒரு ஒல்லிப் பாச்சா போலக் கூடவே போய்க்கொண்டிருந்தாள். சிவப்புக் கலர் வெல்வெட் செருப்பு பளிச்பளிச்சென்ற மாறிக் கொண்டிருந்தது. பொன்னுக்குட்டி சேலைகட்டி அக்காவையிடப் பெரிய மனுஷி மாதிரி இருந்தாள். "ஏ" இந்தப் பையை வாங்கு" என்று பொன்னுக்குட்டியை சிகாவின் அம்மா தன்பக்கம் கூப்பிட்டுக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்குள்ளேயே தனத்துச்சித்தி, "பேசாமல் பொன்னுக்குட்டியை கட்டி வச்சிருங்க. அவதான் பொருத்தமா இருக்கா வளர்த்தியும் சதையுமா" என்று, சொல்லிவிட்டாள். கைக்கு ஏழெட்டுத் தங்க வளையல் போட்டிருக்கிறவள். சொன்னால் எல்லோரும் சும்மா இருப்பார்களா? நிசந்தான் என்று சொன்னார்கள். சிகா கனகராஜைவிட ரொம்ப மெலிவுதான். ஆனால் சிகாவின் அழகு வேறுயாருக்கும் வராது. கீற்றுப்போல ஒரு தடவையும் ஈறு எல்லாம் தெரிகிறதுபோல இன்னொரு தடவையிம் சிரிக்கிறது. எல்லாவற்றையும் விட, சிகாவின் முகத்தில் இருக்கும் ஈரம் முக்கியமானது. அது லேசில் அமையாது. சிலேட்டைத் தொடுகிற மாதிரி ஒரு குளிர்ச்சி, சதா அவளுடைய பார்வையில் இருக்கும். ரயில் இதையெல்லாம் சொல்வது மாதிரி "கூ" என்று ஊதியது. தண்டவாளங்கள் தாண்டி பிரம்மதேசம் அம்மை முத்து முதலியார் ஜவுளிப் பொட்டலத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தார். கார்டு பச்சைக்கொடி அவருக்காகவே காத்திருந்தது. ரெயில்வே ரெஸ்டாரண்ட் நாயனா ஏதோ கிண்டலாகத் சொன்னார். சிகா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் புறப்படும்போது நானும் ஏறினேன். "என்ன ரவி" என்றுக் கேட்டுக் கொண்டே "வண்டி நகர்ந்துட்டுது, இறங்கு என்றாள். பொன்னுக்குட்டியைப் போல எனக்கு அழ முடியவில்லை. "ஜங்ஷன் வரைக்கும் வாரேன்" என்று சொன்ன என்னைப் பார்த்த கனகராஜ் "உட்காருங்க ரவி" என்றார். ஆற்றப் பாலத்தைத் தாண்டும் போது சிகாமணியைப் பார்த்தேன். சிகா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு சற்று உள் ஒடுங்கி பாறைகள் முளைக்க ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓட்டம் எங்கே நின்றது. நிற்கிற ஓட்டமா அது. அப்படி எல்லாம் இருந்தால், கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு சிகா இருக்கிற இடம் பார்க்க ஓடிவரத் தோன்றுமா? "ஏன் ரவி வேலையை விட்டே? மில்லூல பெர்மனண்ட் ஆச்சுண்ணா நல்ல சம்பளம்லா" சிகா ரொம்ப அக்கறையோடுதான் கேட்டாள். பாலிடெக்னிக் படித்துவிட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தபின், ஒர்க்கராகச் சேர்ந்து சைக்கிளும் தூக்குச்சட்டியுமாக வந்து கொண்டிருக்கும்போது, சிகா, சிகாவின் அம்மா, லீவுக்கு வந்திருந்த அக்கா பிள்ளைகள் எல்லாம் தாய்சீனிஸில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வருகிறார்கள். சிகாவிடம் என்ன மாயமிருந்தது. அக்காவுடைய இரண்டு பையன்களும் சிகாவின் கையைப் பிடித்து என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறார்கள். அவள் பக்கத்தில் போனாலே இப்படி ஆகிவிடும். இத்தனைக்கும் சில பேரைப் போல, கையைப் பிடித்துக் கொண்டோ, தோளைத் தொட்டுக் கொண்டோ எல்லாம் பேசுவதே இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பொன்னக்குட்டியைப் பார்த்து சிகா சத்தம் கூடப் போடுவாள். "அதென்ன பழக்கம். எப்ப பார்த்தாலும் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டு" என்று. பின் எப்படி சூரிய வெளிச்சம் மாதிரி ஒவ்வொருத்தரையும் அவளால் பளிச்சென்று ஆக்கிவிட முடிகிறது. "உன்னை மாதிரிக் கிறுக்கன் உண்டா, உள்ளூர்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு, மெட்ராஸ்லே வேலை கிடைக்குமென்று ஓடிவார புத்திசாலி நீதான்" - சிகா தட்டில் சாதத்தைப் போட்டுக்கொண்டே சொன்னாள். சிகாவின் கைகள் எந்த மாறுதலும் இன்றி அப்படியே மெலிவாக இருந்தன. இரண்டு வெள்ளைக் கல்லும் ஒரு நீலக்கல்லும் வைத்த மோதிரம் எண்ணெய் இறங்காமல் அதே மினுமினுப்புடன் இருந்தது. குனிந்து பரிமாறும்போது காரை எலும்பு இன்னும் தென்னிக்கொண்டுதான் இருந்தது. "ட்ரை பண்ணும்வோம் ரவி" என்று கனகராஜ் சொன்னார், ஒரு டர்க்கி டவலை உடம்பு முழுவதும் மறைக்கிற மாதிரி அவர் போட்டிருந்ததை எடுத்து, "துடைச்சுக்கோ" என்று, கைகழுவிவிட்டு வந்த எனக்குச் சிகா கொடுத்தாள். கையைத் துடைத்த பிறகு அந்தக் துண்டை இன்னும் முகர்ந்து பார்க்கத் தோன்றியது. ஒருவித கிளர்ச்சியுடன் அதைச் சிகா தோளில் போட்டேன். சிகாமணியின் தோளில் அந்தத் துண்டுக் கனம் இறங்கும்போது பளிச்சென்று ஒரு விநாடி பார்த்துவிட்டு, கனகராஜ் பிசைந்து கொண்டிருக்கிற தட்டில் மோர் ஊற்றினாள். அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து மறுபடி அவள்மேல் வீச வேண்டும்போல இருந்தது. சிகா அவ்வளவு அழகாக இருந்தாள். "நம்ம ஊர் துரைப்பாண்டி ஸார்வா இங்கேதான் இருக்காங்க" சிகா என்னிடம் சொன்னாள். "யாரு நம்ம கணக்கு ஸார்வாளா" - எனக்கு நம்ப முடியவில்லை. சிகா தலையை அசைத்தாள். "டிரில் வாத்தியாரா இருந்தானே அவரு பையன், அவரு கூட இருக்கிறதாக அல்லவா சொன்னாங்க", "ஆமா மயில்சாமி கூடத்தான். இங்கே தானே, இருக்கான் அவன்", "மயில்சாமி எனக்கு ஒரு வருஷம் சீனியர். நான் எட்டுப் படிக்கும் போது அவன் ஒன்பது படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல வருஷா வருஷம் ப்ரைஸ் வாங்குவான் அப்பவே", "தெரியும் தெரியும்" சிகா ஒரு மாதிரியாகச் சிரித்தாள். சிகாமணி போகிற இடமெல்லாம் மயில்சாமி கொஞ்சநாள் அலைந்து கொண்டு இருந்தான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போகிற நேரம் பார்த்துச் சரியாக மூணுலாம்பிற்கு நேர் எதிரே ஒரு லாலாக்கடை இருக்குமே அதற்குப் பக்கத்தில் நிற்பான். தினசரி விடியற்காலம் ஆறுமணிக்கு என்ன அல்வாவா சாப்பிடமுடியும். அது எல்லாம் காய்ச்சல் அடித்துக் குணமாகிற மாதிரி தன்னாற் போல சரியாகிவிட்டது. காரைக்குடிக்குப் போய் டிரில் வாத்தியார் வேலைக்குப் படித்து விட்டு வந்து சமயம் ஆளே மாறிப் போய்விட்டான். வெள்ளை அரைக்கால் சட்டையும் கான்வாஸ் காலணியுமாக சைக்கிளில் பந்து விளையாட போகும்போது சிகா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தால். வீட்டுச் சுவரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மயில்சாமி பேசுவான் என்றுதான் சிகாமணி நினைத்தாள். கிணிங் என்று அவள் பக்கத்தில் வரும்போது ஒரு பெல் கூட அடிக்கவில்லை. சிலபேர் எப்படி இப்படி மாறிவிடுகிறார்கள். பாபநாசம் ரோட்டு மருதமரம், அதில் ஒட்டப்படுகிற கலைக்கோவில் சினிமா போஸ்டரும் பொந்தில் இருக்கிற கிளிகளும் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன. இவ்வளவு தெரிந்தபிறகு துரைப்பாண்டி ஸாரை பார்க்காமல் இருக்கமுடியுமா. மயில்சாமி வீட்டை சிகாவும் நானும்தான் நடந்து போய்க் கண்டுபிடித்தோம். கொஞ்சம் தூரம்தான். போகவரவே அரைமணிநேரம் கிட்டதட்ட ஆகிவிடும். மயில்சாமி சம்சாரம் அருமையான மனுஷி. பேச ஆரம்பித்தால் மடியில் தூக்கிவைத்துக் கொள்கிறமாதிரித்தான் இருந்தது. முதல் தடவையாக மயில்சாமி வீட்டிற்குப் போயிருக்கும்போது மயில்சாமியும் இல்லை. துரைப்பாண்டி ஸாரும் இல்லை. "இவ்வோ இன்னும் வரலை. மாமா ட்யூஷன் எடுக்காஹ. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்காஹ. பொழுது போகணும்லா, எம்புட்டு நேரம் சும்மாவே ஈஸிசேரிலே பேப்பர் படிச்சுட்டுக் கெடக்கிறதுங்காஹ, இதை சொல்லும்போது ஒரு தட்டில் கொழுக்கட்டையும் தண்ணீரும் வந்தது. "நமக்கே குத்த வச்சு ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியலே. இதிலே அந்தக் காலத்து ஆட்கள் எப்படி இருப்பாஹ? - மயில்சாமி சம்சாரம் பேச்சை நிறுத்துகிறதாக இல்லை. ஆவுடையானூர்க்காரி என்பது சரியாகத்தான் இருந்தது. என்ன பிரியம். என்ன திருத்தம் ஒவ்வொண்ணிலும். என்றைக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றினாலும் எனக்கும் சிகாவுக்கும் துரைப்பாண்டி ஸார் வீட்டிற்குத்தான் போகத் தோன்றும். இப்போதாவது என்னென்னவோ பேச்சு வந்துவிட்டது. ரேஷன் கடையில் கூட நான் கனகராஜ் இல்லை என்று தெரிந்து கொண்டே, "கனகராஜ் ஸாருக்கு கோதுமைக்கு பில் போட்டாச்சா" என்று கேட்டபடி என்பையில் கோதுமையை அளந்து போட்டிருக்கிறார்கள். "மண்ணெண்ணெய் கேன் டீச்சர்கிட்டே இருக்கா ஸார் என்று தள்ளி நிற்கிற சிகாமணியை காட்டிக் கேட்டிருக்கிறார்கள். சிகா டீச்சர் இல்லை. வேலைக்கு போகவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்ததைத் தெரியாது போலப் பேசுகிற கெட்டிக்காரத்தனம்தானே இப்போது செல்லுபடி ஆகிறது இதற்கு எல்லாம் முந்தி நாங்கள் மூன்று பேருமே நடந்து, பெருமாள் கோவில் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் பக்கமாய்ப் போய், ஏரிக்கரையில் நடந்து, நடுவில் பட்டம் விடுகிறவர்களைச் சற்றுப் பார்த்து, சர்வ சாதாரணமாக நடக்கிற சாராய வியாபாரத்தைக் கண்டுகொள்ளாமல் விலகி, ஒரு நீண்ட விசில் சத்தத்தின் கேலி ஒலிக்க - ( இப்போது நான் சற்றுக் கோபமாக நின்று திரும்பிப் பார்க்க, "போவோம்" என்று கனகராஜ் தோளில் கைவைப்பார். சிகா மடங்கிக் கீழே குனிந்து ஒரு நத்தைக் கூட்டைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பாள்) வேலிக்காத்தான் செடிகளுக்கு அப்புறமாகப் போய் ஸார் வீட்டை அடைந்தபோது, அன்றைக்கு கணக்கு ஸார் வீட்டில் இருந்தார்கள். கணக்கு ஸார் எவ்வளவு அருமையான மனிதர். எங்கள் பள்ளிக் கூடத்தின் சொத்தே அவர் அல்லவா. உலகம் என்ன என்ன முடிச்சை எல்லாம் எங்கெங்கு போடுகிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் எஸ்டேட்டில் ஸ்டோர் கீப்பராக இருந்தார்களாம். ஏதோ ஒரு முக்கியமான சிறு உதவியை எங்கள் தாத்தா செய்திருப்பார் போல. " அவர் பொருத்திவச்ச விளக்கு அல்லவா எங்க வீட்டில் இன்றைக்கும் எரியுது" என்று என்னுடைய அப்பாவிடம் ஸார் சொலலிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா போனபிறகு அன்றைக்கு ஸார் எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள் பற்றியும் அட்டைக்கடி பற்றியும், பள்ளிக்கூடம் போகிற வழியில் வேல்கம்பால் குத்தித் தூக்கி மரத்தில் உயிரோடு இருப்பதுபோல் கட்டி வைத்திருந்த சிறுத்தைப் புலி பற்றியும் சொன்னார். அந்தப் பக்கத்தில் இருந்த சர்ச்சின் மணி சப்தம் எப்படி இருக்கும் என்று ஸா‘ சொல்லும்போது மனி சப்தம் கேட்டது. குளிர்ந்த ஓடைகளும் பெரணிச் செடிகளுமாக இருக்கிற அவருக்குப் பிடித்த ஒரு பாறையைப் பற்றிச் சொல்கையில், நான் அந்த ஓடையில் இருந்து கூழாங்கற்கள் பொறுக்கினதுண்டு. ஒரு சமயம் இங்கிலீஷ் பீரியட் ஸார்வா வராதபோது துரைப்பாண்டி ஸார் வந்து "இங்கிலீஷ் பொயட்ரி" எடுத்தார். ஒரு படுகை பூராவும் மலர்ந்திருக்கிற ஒரு மலரைப் பற்றிய அந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பது அவர் பேசின மற்றப் பேச்சிலிருந்தே எனக்குதெரிந்தது. எனக்கும் கூட சமபங்கு கணிதமும் வேண்டியிருந்தது. இதுபோல சொல்லிக் கொடுக்கப்படுகிற கவிதையும் வேண்டியிருந்தது. நான் பாலிடெக்னிக்கில் சேருவதற்குப் போதுமான கணக்கையும், சிகாமணியைக் கண்டடைவதற்கான மெல்லுணர்வையும் அவரிடமிருந்துதானே பெற்றுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் போன தினத்தில் சிகாவிடமும், என்னிடமும், ஊருக்குப் போனீர்களா, சமீபத்தில் மழை உண்டா, பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் எப்படி, மில்லில் ஆள் எடுக்கிறார்களா, எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஹைஸ்கூலில் போனவருஷம் எத்தனை சதம் தேறினார்கள். கணக்கில் சென்ட்டம் எத்தனைபேர், சொரி முத்தையன் கோவிலுக்கு இப்போது ஆடி அமாவாசைக்கு முன்னைப் போலக் கூட்டம் வருகிறதா. காணிக்குடியிருப்பில் ஸ்கூல் ஒண்ணு உண்டே. அது நல்ல பெருசா வளர்ந்துட்டுதா, இப்போ ஸ்ட்ரெங்த் எவ்வளவு இருக்கும் என்று எல்லாம் சற்று நேரம் கேட்டவர், ஒரு கேவலைப்போல நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, இதுவரை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கனகராஜைப் பார்த்து. "உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டேன்" என்று அவருடனான தன் முதல் உரையாடலைத் துவக்கினார். அவர்கள் பியானோ இசையைப் பற்றி அப்புறம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கனகராஜ் ஒரு கட்டத்தில் பியானோ வாசிப்பதையே போன்று தன் பத்து விரல்களையும் ஒரு இசைவுடன் அசைத்துக் கொண்டு, காற்றில் சில நிமிடங்கள் அந்தரத்தில் கைகளை நிறுத்திக் கண்களை, மூடிக்கொண்டபோது, துரைப்பாண்டி ஸார் தன் பக்கத்தில் இருந்த சிகாமணியின் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டார். சிகாவின் மெலிந்த கையின் மேல், வழுவழுப்பு நிறைந்த சேலை நினைத்து நினைத்துச் சரிந்து இறங்கியது. அப்புறம் நாங்கள் எத்தனையோ தடவை போயிருப்போம். ஒரு சில நெகிழ்வில் உள்ளங்கைக்குள் புரண்டு கொடுக்கிற கற்பனையான வைரக்கற்களைப் போல, மனிதர்களுக்குள்ளும் நிகழ்ந்து விடத்தானே செய்கின்றன. எல்லாம் காதுக்கு வந்த பிறகு மயில்சாமியின் மனைவி ஒரு சிறு வித்யாசம் கூடப் பாராட்டாதது எப்படி என்று இன்னும் புரியவில்லை. நானும் சிகாவும் போயிருக்கும் போது, இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு மயில்சாமி ஒரு தடவை சொன்னான். "உங்க ரெண்டு பேரையும் கண்டிச்சுக் சொல்லணும் போலவும் இருக்கு. சொல்லவும் முடியலை". இதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி அவனால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அவன் வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம். "சிகா, உனக்குக் கார்ட்டுன்ஸ் பிடிக்கும் என்று சொன்னாயே" என்று சொல்லி காஸெட்டைப் போடுகிறான். "ரவி மீன் சாப்பிடுவியா நீ" என்று அவன் மனைவி வந்து கேட்டுவிட்டுப் போன சிறிது நேரத்தில் அம்மி தட்டுகிற சத்தம் கேட்டது. "அம்மி தட்டுகிற சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு" சிகாமணி உட்பக்கம் எழுந்து போகிறாள். திரையில் பூனை எலியிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க மயில்சாமி அப்படிச் சிரிக்கிறான். சின்னப்பிள்ளை மாதிரி. சொல்ல முடியாத ஒரு கணத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டும் எங்கேயாவது போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது. "மயில் அப்ப நான் வர்ரேன்", "ச்சூ. இருந்து சாப்பிட்டுப் போகலாம் ரவி" இல்லை போறேன்" - எனக்கு என்னைத் தூக்கி யாராவது எறிந்து நொறுக்கிவிட மாட்டார்களா, சுக்கல் சுக்கலாகி, யார் காலிலும் குத்தாமல், மண்ணோடு மண்ணாகிவிட மாட்டேனா என்று இருக்கிறது. கனகராஜ் எதிரே வந்து விடக்கூடாது. துரைப்பாண்டி ஸார் வந்துவிடக்கூடாது. வெயிலின் கீற்றில் கரைந்து அரூபமாகி, ஏரிக்குள் பறக்க விடுகிற பட்டம் மாதிரி உச்சிக்கு எவ்வி எவ்வி உயிர் அறுந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும். "சிகா சாப்பிட்டுட்டு வரட்டும். நான் போறேன்" எழுந்திருந்தேன். "இந்த பாரும்மா. ரவி போறானாம்" - அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் வெளியே வந்தேன். ஹ"ண்டு பேப்பர் தரையில் சருகியது. நாய் கட்டிப் போட்டிருந்த இடத்தில் சூட்டு வாடை அடித்தது. தபால் பெட்டில் யாரோ டூத் பிரஷ் காலி டப்பாவைச் செருகியிருந்தார்கள். கருநீலமாகப் பூக்கள் அசைந்தன. மரக்கதவில் கனத்து விழுகிற இரும்புப்பட்டை நாதாங்கி. சிந்திக்கொண்டே போகிற தண்ணீர் லாரி. சைக்கிள் ரிக்ஷாவின் ஓரத்தில் இருந்த நீல பீக் ஷாப்பர் பையில் பசேல் என்று காராமணிக் கொத்து. "என்ன ஆச்சு ரவி" - சிகா வந்து கையைப் பிடித்தாள். மேலும் பிடித்தபடியே என்னுடனே நடக்க ஆரம்பித்தாள். மெலிந்த அவளுடைய கைகள் எனக்கு நிரம்பவும் வேண்டியிருந்தது. சேலையின் விசிறல் பக்கவாட்டில் நகர்ந்தபடி வந்தது. சிகாமணி சேலைத்தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நல்ல வெயில்" என்றாள். எதிரே துரைப்பாண்டி ஸார் வந்து கொண்டிருந்தார். முழுக்கைச் சட்டையுடன் ஒரு கை உயர்ந்து குடையைப் பிடித்திருந்தது. தோளில் சாய்ந்த குடையில் அவருக்குப் பின்னால் உள்ள பாதை மறைந்து மறைந்து விலகியது. முக்கியமாக, ஒரு வீட்டுக்குள்ளிருந்து தெருப்பக்கம் சரிந்திருந்த செவ்வரளிப் பூக்கள் பார்வையிலிருந்து விலகுவதும் தெரிவதுமாக இருந்தது. தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டார். துரைப்பாண்டி ஸாருக்கு எல்லாம் தெரியும். "என்ன இந்த வேனா வெயிலில?", "நம்ம வீட்டுக்குத்தான் ஸார்" - சிகா சொன்னாள் "சாப்பிட்டீங்களா" - மரத்தடிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவர் ஒரு மரத்தடிக்கு நகர்வது மூலம் எங்களையும் நிழலுக்கு உட்படுத்திக் கொண்டார். வெயிலை விட்டு எப்படி எல்லாம் நகர்த்திக் கொள்ள முடிகிறது. மணி ஒண்ணரைதானே ஆகுது", "ஒண்ணரை மணிக்குச் சாப்பிடக் கூடாதுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு?" -ஸார் எங்களைப் பார்த்தார். நாங்கள் நின்றிருந்த வேலிக்கருவை மரம் நிறையக் காய்த்திருந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூத்திருந்தது. ஊதினால் மகரந்தம் பறக்கும்போல. ஏற்கெனவே ஒடிந்த கிளை காய்ந்து முட்கள் துருத்திக் கொண்டு இருந்தன. நிழல் இருந்தது போதுமான அளவு. சிகாவும் நானும் பேசாமல் ஸாருடன் நின்றோம். ஸார் குடையை வலது தோளிலிருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டார். மறுபடியும் கேட்டார் - "எழுதியா வச்சிருக்கு" சிகா தலையை ஆட்டினாள் "எழுதி வைக்கலையில்லா?" - இப்போது என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையை ஆட்டினேன். "பின்னே?" - இதைச் சொல்லிவிட்டு துரைப்பாண்டி ஸார் முன்னால் நடந்தார். நாங்கள் பின்னால் வருவோம் என்று அவருக்குத் தெரியும்போல.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விஷமுள்ள பாம்பு, ஊர் மக்கள், யோகி தலைப்பு: அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது. ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு. யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது. யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று. விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன். அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார். அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார். ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான். சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை. சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார். நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான். முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான். “ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான். சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர். இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார். அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார். அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார். அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான். நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும். “சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான். விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நல்ல பகைவன்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது. மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம் பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது, பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன. பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன. முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அனுப்பியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது. தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது அவர் வேண்டுமென்றே தம்மை இழிவுபடுத்தப் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி கடுங்கோபம் கொண்ட தத்துவஞானி ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து முல்லாவின் வீட்டுக் கதவில் முட்டாள் கழுதை என்று எழுதிவிட்டுச் சென்றார். சற்று நேரங்கழித்து வீடு திரும்பிய முல்லா தன் வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்து விட்டு அவர் மனைவியிடம் விசாரித்தார். நடந்த நிகழ்ச்சியை மனைவி அவரிடம் விளக்கிச் சொன்னார். உடனே முல்லா அந்தத் தத்துவ ஞானியின் வீட்டிற்குச் சென்றார். முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானிக்கு அச்சமாக இருந்தது. அவரைப் பற்றி முட்டாள் கழுதை என்று அவர் வீட்டுக் கதவில் எழுதியது கண்டு கோபம் கொண்டு முல்லா தம்மிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ என்று எண்ணினார். ஆனால் முல்லாவோ, ஞானியைப் பணிவுடன் வணங்கி " அறிஞர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு தாங்கள் வந்து சென்ற விஷயத்தை அறிந்து கொண்டேன். மன்னிக்க வேண்டும், எதிர்பாராத அலுவல் காரணமாக தாங்கள் வந்த சமயம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார். தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவுச் சாதுரியத்தைக் கண்டு தத்துவ ஞானி வாயடைத்துப் போய்விட்டார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள் யார்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பால், தில்லி, சீன மண், மூட்டை, பயணம் தலைப்பு: அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு
அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்."இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார். "சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்! ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார். பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார். "இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர். "இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில்… "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர். "எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால். அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால். "என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர். "மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக. "எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன். "தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால். அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்.. "மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!" அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார். பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து " அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் " என்றான். " தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் அவன். " நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார். " ஏன் சிரிக்கிறீர் " என அந்த இருவரும் கேட்டனர். " பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் " என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிரார்த்தனையும் மனிதனும்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பொன்னையா பிள்ளை, மாடசாமி, போலந்து நாட்டுக்காரர், தேரூர், மூத்தபிள்ளை மருமகன், எண்ணெய், தீவட்டி தலைப்பு: தீவட்டி
ஐந்தாம் திருவிழாவும் ஏழாம் திருவிழாவும் அங்கு விமரிசை. காளை வாகனத்தில் - கைலாச பர்வதத்தில் - சாமி பவனி வருவதும் விமரிசை. இதில் விசேடம் என்னவென்றால், அது பொருமாள் கோவில். ஆழ்வார்களால் பாடப்பெற்றது. தலைமையான ஆழ்வார் அங்கேதான் பிறந்தார் என்ற விசேடமும் உண்டு. இருந்தாலும் சிவன்தான் அங்கு கோலோச்சினார் - அந்தப் பிரதேசம் முழுவதிலும். மேலே சொன்ன இரண்டு உற்சவ நாள்களும் திருவிழாவில் முக்கிய தினங்களாகும். வாகனங்கள் நாலு தெருவையும் சுற்றி இறங்குவதற்குள் விடிந்து விடும். பிரபல வித்வான்கள் வரவழைக்கப்படுவர். குண்டலக் கம்பர், சுடலையாண்டிக் கம்பர் போன்றோரெல்லாம் அந்த வட்டார வாசிகளாதலால் வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை உண்டு. ராசரத்தினம் பிள்ளை வரும் அளவிற்கு இன்னும் பிரபலமாக வில்லையே என்ற குறையும் ஊர்வாசிகட்கு இருந்தது. முதல் மூன்று நாள் விழாவும் சாதாரணமாக நடந்த பின்னர் சிறு கடைகள் தோன்ற ஆரம்பிக்கும். ரிப்பன் - பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் வந்து போவார்கள். உள்ளூர்வாசிகள் இரண்டொரு பேர் "வை - ராசா - வை" போட்டியைத் துவக்குவார்கள். கம்பராமயணச் சொற்பொழிவு, திருவிழா முடிந்த பின்னருங்கூட கோவில் அருகே தொடர்ந்து நடக்கும் ஏழாம் திருவிழாவின் போது சர்க்கஸ். எட்டாம் நாள் நடராசர் தில்லையம்பல வாகனத்தில் வருகை. அன்று ஊர் முழுவதும் எலுமிச்ச பழமும் வெல்லமும் கலந்த பானகத்தில் மிதக்கும் அடுத்த நாள் தேரோட்டம். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த சமயமெல்லாம் "பெட்ரோ மாக்ஸ்" விளக்கு அந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் வாகனம் நாலு தெருக்களிலும் ஊர்வலம் வரும்போது பெரும் பாலும் தீவட்டிதான். இந்தத் தீவட்டி விஷயத்தில் ஒரு சிறு சங்கடம் உண்டு. வாகனம் தூக்குவதற்கு ஆட்கள் உள்ளூரிலேயே கிடைப்பார்கள். அதில் கஷ்டமில்லை. இந்தத் தீவட்டி அப்படியல்ல. நாலு தெருக்களிலும் சுற்றி வருகிற வாகனத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய தீவட்டிகளைத் தூக்கிப் பிடிக்க உள்ளூர் ஆட்கள் கிடைப்பதரிது. காரணம் வெளிப்படை. இரவெல்லாம் தீவட்டி தூக்கிவிட்டு, காலையில் பல் தேய்க்க குளத்திற்கு சென்றால் தெருவில் விளையாடும் குழந்தைகள் "ஏய் - தீவட்டி " என்று கூப்பிடும். ஒன்னும் சொல்லாவிட்டாலும் பெண்களும் சிரிப்பதுண்டு. எனவே உள்ளூர் பையன்கள் தீவட்டி உத்யோகத்திற்கு முழுக்குப் போட்டு விட பெரும்பாலும் வெளியூர் பையன்கள் அந்த வேலையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் அப்படித்தானிருந்தது. பொன்னையா பிள்ளை உள்ளூர்வாசி. கோவில் வேலை, வாகனங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு. திருவிழா காலத்தில் தீவட்டி. எண்ணெய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் யாவும் அவர் கையில் தான். தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். அத்துடன் வாகனம் புறப்பட்டு விட்டால் கூடவே சென்று அவற்றை எண்ணெயுடன் கண் காணிக்கவும் வேண்டும். தேவைப்படும் போதெல்லம் ஊற்றிக் கொண்டிருப்பது அவசியம். அவருக்கு வயிற்று வலி நிரந்தரமாக உண்டு. வைத்தியர் தருகிற லேகியத்தை எப்போதும் மடியிலேயே வைத்திருப்பார். மருத்துவத்திற்கு காசு செலவழிக்கிற அளவு சம்பளம் கிடையாது. பிள்ளைகள் ஆறு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டிச் சோறு கோவிலில் தருவார்கள். பெரும்பாலும் அதைச் சாப்பிட்டுத்தான் குடும்பம் நடந்தது. இந்த நிலையில் மருத்துவச் செலவுக்கு ஒரு வகையில் தீவட்டி உதவிற்று. அது விசேடமான கதை. கீழ்த் தெரு குளத்தங்கரைப் பக்கம். தெரு பரந்து கிடக்கும். ஐந்து, ஏழு திருவிழா வாகனங்கள் வந்து நின்றால், கிட்டதட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடும். நாதசுர வித்வான்களின் திறமை வெளிப்பட வேண்டிய இடம். ஊரின் இளைஞர் சிலர் நேரடியாகவே சொல்லி விடுவார்கள். "அண்ணன் வாசிப்பை இந்தத் தெருவில் தான் பாக்கணும்." அப்படின்னு. பொன்னையா பிள்ளையின் திறமையையும் அந்த நிமிடத்தில்தான் பார்க்க வேண்டும். கீழத் தெருவில் முடுக்குகள் அதிகம். பொன்னையா பிள்ளையின் வீடும், நடுமுடுக்கில் தான் இருக்கிறது. அங்குள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் சாமி தரிசனத்திற்காக கீழத்தெரு சந்திக்கும் இடத்தில் கூட நிற்பார்கள். அந்த இடத்தில் தீவட்டி அவசியம் என்று ஒருவனை எப்போதும் நிறுத்தி வைப்பர். புதிய ராக ஆலாபனை ஒன்றை நாதசுரக்காரர் ஆரம்பிக்க, வாகனம் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால், நிறைய தடவை தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டியது அவசியம். அப்படி ஊற்றும் போது, தீவட்டிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் பெண்மணிகளை "பேத்தி" என்றோ, "மருமகளே" என்றோ, "அக்கா" என்றோ அழைத்து அவர்கள் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தில், இரண்டு மூன்று கரண்டி "தேவஸ்தான எண்ணெயை ஊற்றுவார் அப்போதே அந்தப் பெண்களில் சிலர் சில்லறையை அவர் கையில் தந்து விடுவதுண்டு. இல்லை யென்றால் அடுத்த நாள் காலை முதல் வேலையாக அவர்கள் வீடு சென்று அதைப் பெற்று, ஒரு செம்பு கருப்பட்டிக் காபியையும் பருகி வருவார். இதை யெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ளும் மனோபவத்தில் ஊர் மக்கள் எல்லாரும் இருக்கவில்லை. அந்த ஆண்டு திருவிழாவிலும் கீழத் தெருவில் கைலாச பர்வத வாகனம் வந்து நிற்கிறது. நாதசுரக்காரர்கள் திறமையைக் காட்ட முனைகின்றனர். நடு முடுக்கின் பகுதிக்கு பெண்கள் வரத் தொடங்கவே, பிள்ளைவாள் அந்தப்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கிற தீவட்டி யாரெனப் பார்க்கிறார். அடையாளம் தெரியாத பையனாக அவன் இருந்தான். அருகில் சென்று பார்த்தால் புதுப்பையன். "யார்லே நீ?" எனக்கு வெள்ள மடம் அண்ணாச்சி - பேரு முத்துக் கறுப்பன். "எங்கலே அந்தப் பய வேலப்பன்", "சீக்கிரமா சோத்தைத் திண்ணுகிட்டு வந்துருதேன் அப்படின்னு போயிருக்கான் அண்ணாச்சி. வாகனம் இன்றைக்கு இறங்க நேரமாகும். தீவட்டியைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ வந்துருதேன் அப்படின்னு இப்பத்தான் போனான்" தெளிவாகப் பதில் சொன்னான் அந்த பையன். "அதுதானே பார்த்தேன். சரி, இறக்கிப் பிடி" என்று எண்ணெய் ஊற்றத் தயாரானார் பிள்ளை. "இல்லை அண்ணாச்சி - இப்பத்தான் அவரு வந்து எண்ணெய் ஊத்திப் போனாரு" பிள்ளைவாளின் உதவியாளன் ஏற்கெனவே ஒரு சுற்று வந்து எண்ணெய் ஊற்றி விட்டு போய் விட்டதைக் கூறினான் பையன். நாதசுர ராக ஆலாபனை ஒரு நிசப்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பையனுடன் சப்தமிட்டுப் பேசினால், அது நல்லதல்ல. அவர் பேசாது வேறொரு பக்கம் சென்றார். நடுமுடுக்கு வாசிகளும் அன்று நாதசுர இசையை மட்டுமே கேட்டுச் சென்றனர், காலிப்பாத்திரங்களோடு. பொன்னையா பிள்ளை ஓய்வு பெற்றபோது, கீழூருக்கு மின்சாரம் வந்து விட்டது. இப்போது எதிலும் ஓர் அசிரத்தை, வீட்டு விஷயங்கள் எப்படியெல்லாமோ ஆகி விட்டது. முத்தமகள் அறுத்துக் கொண்டு அப்பா வீட்டிற்கு வந்து விட்டாள். அடுத்த இரண்டு பெண்களும் உள்ளூரிலேயே கட்டிக் கொடுக்கப் பட்டாலும், கிட்டத்தட்ட அப்பா வீட்டிலேயே இருந்தனர். அதில் ஒருத்திக்கு புருஷன் முகமே மறந்து விட்டது. பையன்களில் ஒருவனுக்கு சுசியந்திரம் கோவிலில் வேலை. இன்னொருவன் உழவுக்குப் போய் வருகிறான். கடைசிப் பையன் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகிறேன் என்று சோறு கட்டிக் கொண்டு அதை ஆற்றங்கரையில் சாப்பிட்டு, மாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். விஷயம் வெளியாகி அப்பாவிடம் வாங்கிய அடியில் ஊரை விட்டுப் போனவன்தான். மனைவிக்கு இடைவிடாத இருமல்; சற்றேறக் குறைய எல்லா நோய்களும் உண்டு. மனிதர் மிகவும் நொந்து போயிருந்தார். "யத்தான்" என்று அழைத்தபடி வந்தார் மாடசாமி-எதிர் வீட்டுக்காரர். "யாரோ வெள்ளைக்கார தொரை அத்தான் - ஒங்களைப் பாக்கணுமாம்", "என்னைப் பாக்கணுமா! மாடசாமி கொஞ்சம் விவரமா சொல்லுடே எனக்கு ஒடம்பெல்லாம் படபடக்குது பாத்துக்கோ.", "கூட வந்திருக்கறது தேரூர் மூத்த பிள்ளை மகளைக் கட்டியிருக்கறவன். அவனும் வெளிநாட்டிலே வேலையிலே இருக்கிறானாம். திருவிழாப் பத்தி ஏதோ கேக்கணுமாம். பொன்னையா பிள்ளையின் மனைவி இருமலுடன் "ஏட்டி இந்தப் பிள்ளையைக் கொஞ்சம் உள்ளே எடுத்துக்கிட்டு போ மூக்கைச் சிந்து" என்று மகளைக் கூப்பிட்டாள். வந்தவரில் வெளிநாட்டுக்காரர் உயரமாக இருந்தார். போலந்து நாட்டுக்காரர். தெளிவான உச்சரிப்புடன் வணக்கம் சொன்னார். உடன் வந்த உள்நாட்டுக்காரர் அறிமுகம் செய்து வைத்தார். "அண்ணாச்சி, இருபத்தஞ்சு வருசம் முன்னே இங்கு வந்திருக்கேன். அடிக்கடி கோவிலுக்கும் வருவேன். "அப்படியா இருங்கோ. ஏட்டி, ஒரு பாய் எடுத்து இப்படி போடு." வெளிநாட்டுக்காரர் தூய தமிழில் பேச, உள்நாட்டு அதை நாஞ்சில் நாட்டு வழக்கில் மொழி பெயர்த்தது. "அண்ணாச்சி, இவாள் வந்து நம்ம தமிழ்நாட்டுத் திருவிழா பத்தி புத்தகம் எழுதறாரு. அதுக்கு சில விவரமெல்லாம் வேணும். நான் இப்ப இவாள் கூட அங்க காலேஜ்லேதான் வேலை பாக்கறேன். மாடசாமி மாமாகிட்டே கேட்டேன்; ஒங்களைப் பத்திச் சொன்னாரு திருவிழா சம்பந்தமா நிறைய விஷயம் கேட்டுத் தெரிஞ்சாச்சு. அதுலே இந்த தீவட்டி இருக்குது பாருங்க, அது சம்பந்தமா ஒங்ககிட்ட கேக்கணுமாம்." பொன்னையா பிள்ளை முதலில் வெலவலத்துப் போனார். அப்போது போலந்தின் குரல் ஒலித்தது. "ஐயா தாங்கள் தீவர்த்தியைப் பயன்படுத்தும் முன்னர், அவற்றிற்கு பூசனை செய்வதுண்டா? தீவர்த்தி திரிசூல அடையாளம், தீபம் சிவலிங்கம் அல்லவா?" பொன்னையாய் பிள்ளை சமாதானமடைந்தார். தீவட்டியில் இவ்வளவு விஷயம் உள்ளதா என்று ஒரு பெருமிதமும் கொண்டார். பிறகு தைரியமாகப் பேசினார். "ஆமாமா. கும்பிடு போட்டு விட்டுத்தான் வேலையை ஆரம்பிப்போம். ஒரு வாரத்துக்கு முன்னமேயே பழந்துணி எல்லாத்தையும் வாங்கி வைச்சுடுவோம். அது நாலு தெரு வீடுகள்லேயே கிடைக்கும். போதாதுன்னா காசு குடுத்து வாங்குவோம். மீதி வந்தா, அப்படியே கட்டி வைச்சுடுவோம். அடுத்த வருசம் உதவும் வீணாக்கப்படாது." மொழிபெயர்ப்பு எதுவும் தேவைப்படவில்லை. "எண்ணெய்" என்று ஆரம்பித்தார் போலந்து. "அது நிறைய வீணாகும் அல்லவா?" என்றும் கேட்டார். "சேச்சே பேசப்படாது. ஒரு சொட்டுக்கூட வீணாப் போகாது. தீவட்டிக்கு எண்ணெய் ஊத்தற சமயம் நீங்க பாருங்களேன். சட்டியைக் கீழே கவனமா வைச்சு ஊத்துவோம். தரையிலே ஒரு சொட்டுக் கூட சிந்தாம கவனிக்கணும். கோவில்லே எந்தப் பொருளும் வீணாகாது; வீணாக்கக் கூடாது.", "நன்றாகச் சொன்னீர்கள். "சிவன் சொத்து குல நாசம்" என்று பழமொழியே இருக்கிறதல்லவா.", "ஆமாம்" என்றார் பொன்னையா பிள்ளை. உள்நாட்டுக்காரரை ஏறிட்டுப் பார்த்தார். "தேரூர் மூத்தபிள்ளை மருமகனா நீ... நீங்க" என்று கேட்டார். "எந்த ஊரு" என்றும் விசாரித்தார். "எனக்கு வெள்ளமடம் அண்ணாச்சி. ஒரு தடவை இங்க தீவட்டிக் கூட பிடிச்சிருக்கேன்." போலந்துக்காரர் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். நன்றி - தீராநதி.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், மதுரை மன்னன், அரண்மனை, விருந்து, உப்பரிகை, சீடர்கள், திருடர்கள் தலைப்பு: பரமார்த்தரின் பக்தி
பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான். பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. "குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு. நல்லது! அப்படியே செய்வோம்" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர். தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன். அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர். உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான். நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர். "மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும் மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள். அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. "அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார். அப்போது மடையன் மட்டும் அலறினான் "என்ன? என்ன?" என்று பதறினார் குரு. "குளிர்கிறதே" என்றான் மடையன். "அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்" என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான். குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர். அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர். அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, "குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சு வாங்கக் கூறினான். "அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்ற பரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்" என்றபடி இறங்கினார். எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது. அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார். வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள். அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர். ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், "அதோ...அதோ.. பிடியுங்கள்" என்று கத்தினான். பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, "அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர். "எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்" என்று நடுங்கியபடி கூறினர். பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர். உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார். மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர். குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’ மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மை உயர்வு தரும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு தடவை முல்லா நண்பர்கள் பலருக்கு மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் கூட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த சிலரும் இருந்தார்கள் . நண்பர்களில் ஒருவர் எழுந்த வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை அறிமுகப்படுத்தினர். முல்லாவைப் பற்றி அளவுக்க அதிகமாகப் பாராட்டிப் பேசிய நண்பர் முல்லாவுக்குத் தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார். அதைக் கேட்டு பிரமிப்பு அடைந்த வெளியூர் நண்பர்களில் ஒருவர் " முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா?" என்று கேட்டார். முல்லாவுக்குக் குந்தீஷ் மொழி தெரியாது. அந்த மொழியில் இரண்டொரு சொற்கள் தான் தெரியும். ஆனால் தனது அறியாமைக் காண்பித்துக் கொள்ளக் கூடாதே என்று குந்தீஷ் மொழி தெரியும் என்றார். குந்தீஷ் மொழியில் எதாவது ஒரு சொற்களை கூறுங்கள், கேட்போம் என்றனர் வெளியூர் நண்பர்கள். குந்தீஷ் மொழியில் ஆஷ் என்றால் சூடான சூப் என்று பொருள் என்றார் முல்லா. ஆறின சூப் என்பதற்கு குந்தீஷ் மொழியில் என்ன சொல்வார்கள்? என்று ஒருவர் கேட்டார். தமது குட்டு வெளிப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று முல்லாவுக்கு தர்மசங்கடமாகி விட்டது. உடனே அவர் சுதாரித்துக் கொண்டார். நண்பரே குந்தீஷ் மொழியினர் எப்போதும் சூடான சூப்பைத்தான் சாப்பிடுவார்கள். ஆறின சூப்பே அவர்களுக்குப் பிடிக்காது. அதனால் அவர்கள் மொழியில் ஆறின சூப் என்பதற்கு எந்தச் சொல்லும் கிடையாது என்று கூறி சாமர்த்தியமாகச் சமாளித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூடான சூப்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார். “அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான். இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள். சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது. “அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கவலையும் பலமும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முருகேசன், முருகேசனின் நண்பர் பாண்டியன், முருகேசனின் மகன் ரமேஷ், டிராபிக் கான்ஸ்டபுள், பைக் தலைப்பு: புதிய சருகு
காவல் நிலையத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சிகள் முருகேசனின் உதட்டில் புன்னகையை நிரப்பியிருந்தன. உண்மையிலேயே, இத்தனை வருடங்கள் நேர்மையாகப் பணியாற்றியவர் இன்ஸ்பெக்டர் முருகேசன். இன்றோடு அவர் பணி முடிகிறது. பஜாஜ் பல்சரில் 60 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தார். முருகேசனுக்குப் பின்னால், மாலையுடன் முன்னாள் எஸ்.ஐ., பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். பாண்டியன் முருகேசனைவிட இரண்டு வயது மூத்தவர். முன்னரே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருவரும் நீண்டநாள் நண்பர்கள். "ஹூம்..." என்ற பெருமூச்சுடன் பாண்டியன் பேச ஆரம்பித்தார். "என்ன, முருகா... இனிமே காலைலயிருந்து சாயந்தரம் வரைக்கும் சும்மாவேதான் இருக்கணும். ஒன்னு பண்ணு! பேசாம நம்ம "யூனியன் கிளப்"புல வந்து சேர்ந்துடு. நம்மள மாதிரி ரிட்டயர்டு கேஸ•க ஒரு நாலஞ்சு அங்க இருக்கு. காலைல ஆறு மணிக்கு ஜாகிங்... ஏழு மணிக்கு பேட்மிட்டன்... எட்டு மணிக்கு வீட்டுல மருமக கையால சாப்பாடு, பத்து மணிக்கு திரும்ப "கிளப்"புக்கு வந்துடு. பகல் பூராம் கேரம் போடு... ரம்மி... நல்லா பொழுதுபோகும். என்ன சரியா?", "சான்ஸே இல்ல அண்ணாச்சி... சும்மா ஒக்காந்து அரட்டை அடிக்குறது, நேரத்தப் போக்குறதெல்லாம் எனக்குப் புடிக்காது, என் போலீஸ் வேலைக்குத்தான் ரிட்டயர்டு. வேற ஏதாவது வேல இருந்துக்கிட்டேதான் இருக்கும்... பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்..." என்றார் முருகேசன். பேசிக்கொண்டே வந்த முருகேசன், கடைசி நேரத்தில் டிராபிக்கின் சிவப்பு விளக்கைப் பார்க்க, தடுமாறி நின்றார் முன்னால் நின்று கொண்டிருந்த டூவீலரில் லேசாக மோதி நின்றது பைக்... "மன்னிச்சுக்கோ தம்பி" என்றார் முருகேசன். இடிபட்டவனது டூவீலர் புத்தம் புதிது போலும். மிகவும் கோபமாக கத்த ஆரம்பித்தான். "கண்ண எங்கய்ய" வச்சிருக்க... வயசாயிருச்சுன்னா கண்ணாடி போட வேண்டியதுதானே... ஒழுங்காப் போயா ரோட்டுல" என்றான். அங்கிருந்த டிராபிக் கான்ஸ்டபுள் வேகமாக வந்தான். முருகேசனுக்கு "சல்யூட்" அடித்துவிட்டு, இடிபட்டவனிடம் திரும்பினான். "டேய் வண்டில ஏதும் உடையலைல பேசாமாகப் போ" என்று அதட்டினான். பச்சை விளக்கு விழ இடிபட்டவன் பேசாமல் முறைத்துக் கொண்டே சென்று விட்டான். டிராபிக் காண்ஸ்டபுள், முருகேசன் ஓய்வு பெற்றதைப் பற்றி விசாரித்து, வழியனுப்பினான். "பாத்திங்களா அண்ணாச்சி... ரிட்டயர்டு ஆனாலும் அந்த மரியாத குறையுதான்னு... நான் எப்பவும் இப்படியேதான் இருப்பேன். நீங்க வேணாப் பாருங்க..." என்றார் முருகேசன். வீட்டிற்குள் முருகேசன் நுழைந்ததும், மீண்டும் மாலை... மீண்டும் வாழ்த்து... முருகேசனின் மகன் ரமேஷ் அருகில் வந்தான். "அப்பா... இங்க பாருங்க...இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது... (முருகேசன் மறுத்துப் பேச வர, அவரைப் பேசவிடாமல் நிறுத்தினான்.) ம்.... எதுவும் பேசக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... வீட்டு வேல எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். உங்க பைக்க மட்டும் எடுத்துக்கிறேன். ஓகேவா?" கடைசி வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தார் முருகேசன். கையிலிருந்த "பைக்" சாவியை வாங்கிக் கொண்டு ரமேஷ் கிளம்பினான். அவரால் எதையும் பேச முடியவில்லை. மறுநாள், காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, ஈஸிச் சேரில் அமர்ந்து கொண்டு செய்தித் தாளுக்காகக் காத்திருந்தார். காலை ஏழு மணிவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மற்ற எல்லோரும் வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவரால் அதற்கு மேல் பொறுமையாக அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஏதாவது வேலை இருக்கிறதா என்று அங்குமிங்கும் பார்த்தார். செடிகளுக்குத் தண்ணீர் இன்னும் ஊற்றப்படாமல் இருந்தது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு குடத்தில் தண்ணீர் தூக்கப் போனார். அவசரமாக கிளம்பும் நேரத்தில் ஏதாவது வாக்குவாதம் வருவது இயல்பு. அந்தக் கோபத்தில் ரமேஷ், வெறுப்பாக வந்து கொண்டிருந்தபோது, தண்ணீர் குடத்தோடு வந்த முருகேசன் அவன் மீது இடித்து விட்டார். "ஏம்ப்பா... பேசாம ஒக்கார வேண்டியதுதான? கண்ணுமண்ணு தெரியாம வந்து மோதுறீங்க" என்றான் ரமேஷ். முருகேசன் அதிர்ந்து போனார். டிராபிக் சிக்னலில் இடிபட்ட இளைஞன் திட்டியவார்த்தைகள் ஒருமுறை நினைவிற்கு வந்தது. தனக்கு, "எது நடக்கக் கூடாது" என நினைத்தாரோ அது நடக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. காலை பத்துமணி, இருப்பு கொள்ளாமல் முருகேசன் எழுந்து சாலையில் நடக்கத் தொடங்கினார். அந்த டிராபிக் சிக்னலின் கான்ஸ்டபுல் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு முன்னால் நடந்து சென்றார். கான்ஸ்டபுள் அவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு, மீண்டும் வேலையில் ஈடுபடத் தொடங்கினான். அந்தப் புன்னகையில் "நடிப்பு" இருப்பதுபோன்று அவருக்குத் தோன்றியது. பாண்டியனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது முருகேசனுக்கு. "யூனியன் கிளப்" புக்கு சென்றார். பாண்டியன் கேரம் போர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தார். முருகேசனைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவரை அழைத்துச் சென்று தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றவர்களாகவே இருந்தனர். முருகேசன் மெதுவாகக் கேட்டார், "ஆமா... இங்க மெம்பராவதற்கு எவ்வளவு கட்டணும்". எதார்த்தமாகக் கேட்பது போல நடித்தார். பாண்டியன் அவரைக் குத்திக்காட்ட விரும்பவில்லை. அவருக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று! அவரும் ஓய்வு பெற்றவர் தானே! காற்றடித்த போது, மரம் ஒன்றிலிருந்து புதிதாக ஒரு சருகு உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அங்கே ஏற்கனவே மண்ணோடு பதிந்த நிலையில் நிறைய சருகுகள்... புதிய சருகு விறைப்பாக நின்றது. காற்றுக்கு அங்குமிங்கும் ஓடியது. ஒரு காலடி வந்து அதை மிதித்தபோது அதுவும் மண்ணோடு பதிந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?” ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்” ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!! 1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம் 2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும். 3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது 4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள் !' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?’ என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். “பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்று கோபத்தில் எகிறிக் குதித்தனர். “ஏன் உங்களை நாய்கள் என்று சொல்லக்கூடாது?” என்று பீர்பல் கேட்டதும், “நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்!” என்றனர். “அதுதான் தெரிகிறதே!” என்றார் பீர்பல் ஏளனத்துடன்! “அப்படியெனில் ஏன் எங்களை நாய்கள் என்று சொல்கிறாய்?” என்று கேட்டனர். “தவறுதான்! ஏனெனில் நாய்களுக்கு வால் உண்டு. உங்களுக்கில்லை!” என்றார் பீர்பல். “நாக்கை அடக்கிப் பேசு!” என்று அவர்கள் சீறி விழ, “நான் என்ன பிரமாதமாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி கோபத்தில் குதிக்கிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், நீங்கள் கோழைகள் என்றும் கூறுகிறேன். அது தவறா?” என்றார் பீர்பல். “சரி, அதைவிடு! நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால் நீ எங்களை விட தைரியசாலியா?” என்று ஒருவன் பீர்பலிடம் கேட்டான். “ஆமாம், சந்தேகம் இல்லாமல்!” என்று மார்தட்டிய பீர்பல், “உங்களுக்கு என் தைரியத்தை நான் எந்த விதத்தில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள்!” என்றார். “முன்கூட்டியே சக்கரவர்த்தியிடம் அனுமதி பெறாமல் தர்பாருக்கு உன்னால் தாமதமாக வரமுடியுமா?” என்று ஒருவர் சவால் விட்டார். அக்பர் சபைக்கு வருமுன்னரே, மற்றவர்கள் வந்துவிட வேண்டும் என்பது அக்பரின் கட்டளை! அப்படி யாராவது குறித்த நேரத்தில் வர முடியவில்லையெனில், தாமதமாக வருவதற்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும். அந்த நியதியை மீறுபவர்களின் மீது சக்கரவர்த்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதுஉண்டு. இந்த விஷயம் பீர்பலுக்கும் தெரியும். ஆயினும், முன் வைத்த காலைப் பின் வைக்க மனமின்றி, “சரி! நாளைக்கு நான் முன் அனுமதிஇன்றி தாமதமாக சபைக்கு வந்துக் காட்டுகிறேன்!” என்று கூறினார். நாளைக்கு பீர்பலுக்கு சக்கரவர்த்தி கடுமையான தண்டனை விதிப்பார் என்று எண்ணியவாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மறுநாள் அக்பர் தர்பாரில் நுழைந்த போது, பீர்பலைத் தவிர மற்றவர் அனைவரும் ஏற்கெனவே வந்து இருந்தனர். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். அக்பரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சபையோரை ஒருமுறை பார்த்த அக்பர் அவர்களில் பீர்பல் மட்டும் இல்லாததை உணர்ந்தார். “பீர்பல் ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் அனுப்பியிருக்கிறாரா?” என்று அக்பர் சபையோரைக் கேட்டார். உடனே, சபையில் ஒருவர் எழுந்து, “இல்லை, பிரபு!” என்றார். “தர்பாருக்கும் வரவில்லை; தகவலும் அனுப்பவில்லை! அவரை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புங்கள்!” என்று அக்பர் உத்தரவிட்டார். பீர்பலை அழைத்து வரச் சென்ற ஆள் சிறிது நேரத்தில் திரும்பினான். “பிரபு! அவருடைய குழந்தை அழுது அடம் பிடிக்கிறதாம்! அதை சமாதானப்படுத்திய பிறகு வருவதாகக் கூறினார்!” என்றான் அவன். “என்ன திமிர் இருந்தால் பீர்பல் இப்படி ஒரு பதிலை அனுப்புவான்! மிகவும் கெட்டிக்காரனான பீர்பலுக்கு அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லையா? இது நம்புகிற மாதிரி இல்லையே!” என்றார் அக்பர். பிறகு கோபத்துடன், “பீர்பல் உடனே இங்கு ஆஜராக வேண்டும் என்று என் கட்டளையைத் தெரிவியுங்கள்! அப்படியும் ஏதாவது சமாதானம் கூறினால், அவரைக் கட்டியிழுத்து வாருங்கள்!” என்று என்று பணியாளரிடம் உத்தரவிட்டார். அவர் கோபத்துடன் கட்டளைப் பிறப்பிக்கும்போதே, பீர்பல் அவசர அவசரமாக சபைக்குள் நுழைந்தார். பீர்பலை தலையோடு கால்வரை உற்று அக்பர் உற்று நோக்கினார். “என்னை மன்னித்து விடுங்கள் பிரபு! என்னுடைய மூன்று வயதுக் குழந்தை காலையிலிருந்து தொடங்கி அடம் பிடித்து அழுது கொண்டேயிருக்கிறது. அதை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் என்னால் தர்பாருக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. என் குழந்தை இன்னமும் அழுது கொண்டேயிருக்கிறது!” என்றார் பீர்பல். “உன்னால் ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன்!” என்றார் அக்பர். “நான் நடந்ததைக் கூறுகிறேன், கேளுங்கள்! காலையில் எழுந்தவுடன் என் குழந்தை கரும்பு கேட்டது, நானும் வாங்கித் தந்தேன். அதைப் பிழிந்து சாறு தரும்படிக் கேட்டது. நானும் அவ்வாறே செய்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன். உடனே கோப்பையிலிருந்த கரும்புச் சாற்றைத் தரையில் கொட்டிவிட்டு, தரையில் ஓடும் சாற்றை மீண்டும் கோப்பையில் எடுத்துத்தரச் சொல்லிப் பிடிவாதம் செய்தது. அது என்னால் எப்படி முடியும்? அது முடியாத காரியம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அதனால்தான் எனக்கு தாமதமாகி விட்டது!” என்று பீர்பல் பரிதாபமாகக் கூறினார். “ஒரு குழந்தையை சமாதானப் படுத்த சாமர்த்தியமற்ற உன்னைப் போய் பிரதம ஆலோசகனாக நியமித்துக் கொண்டேனே!” என்று அக்பர் விமரிசனம் செய்தார். “பிரபு! உலகிலேயே மிகக் கடினமான காரியம் அது ஒன்று தான்! நீங்கள் எப்போதாவது அழும் குழந்தையை சமாதானம் செய்து இருக்கிறீர்களா?” என்று பீர்பல் கேட்டார். தொடர்ந்து, “எங்கே! சற்று முயற்சி செய்து பாருங்களேன்! நான் இப்போது ஒரு குழந்தை போல் நடிக்கிறேன். நீங்கள் என்னை சிரிக்க வையுங்கள்!” என்றார். அதற்கு அக்பரும் சம்மதித்தார். உடனே, பீர்பல் தரையில் படுத்துக் கொண்டு குழந்தையைப் போல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தார். அக்பரும் சிம்மாசனத்தில்இருந்து இறங்கி வந்து “அழாதே பாப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கெஞ்சினார். “ஹூ…ஹூ! எனக்கு தங்க மோதிரம் வேண்டும்!” என்று பீர்பல் குழந்தைக் குரலில் கேட்டார். உடனே, அக்பர் தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றி பீர்பலின் விரலில் அணிவித்தார். ஆனால், மறுபடியும் பீர்பல் குழந்தையின் குரலில் உரக்க அழுதார். “எனக்கு ஒரு யானை வேண்டும்!” என்று கத்த, அக்பர் உடனே ஒரு யானையை வரவழைக்கச் செய்தார். அதன்பிறகும், பீர்பல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதார். “இந்த மோதிரத்தினுள் யானை நுழைந்து வெளியே வரவேண்டும்! ஹூ…ஹூ!” என்று கத்தினார். தலையைப் பிடித்துக் கொண்ட அக்பர், “ஐயோ! உன்னை என்னால் சமாதானப் படுத்த முடியாது!” என்று கூவ, “இப்போதாவது புரிந்ததா பிரபு! அடம் பிடித்து அழும் குழந்தையை சமாதானம் செய்வது மிகவும் கடினம்!” என்றார் பீர்பல். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்பர், “பீர்பல்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!” என்றார். பீர்பலுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதிகாரிகளின் முகத்தில் அசடு வழிந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குழந்தையின் அழுகை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார்.ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார்.” நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?” என்று கேட்டார் அவர். ” கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் ” என்றார் முல்லா.அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். ” கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே” என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார்.ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார்.முல்லா விரைந்து சென்றார்.சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர்.” இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?” என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார்.” இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு - அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் ” என்றார் முல்லா.” நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் ” என்றார் முதலாளி.” நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே” என்று கேட்டார் முல்லா.” ஆமாம், அப்படித்தான் சொன்னேன் ” . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி.” ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனைஅழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்” என்றார் முல்லா.முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவின் புத்திசாலித்தனம்!' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்து கொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும், ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன. ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்களில் ஒருவனாக இருக்கும்படி கூறியது. எல்லாம் ஒன்றாகப் பல நாட்கள் இருந்தன. ஒரு நாள் சிங்கம் நோயுற்றிருந்ததால், தன் அமைச் சர்களாகிய புலி, நரி, காகம், ஒட்டகம் ஆகியவற் றைப் பார்த்து, என் பசியைத் தீர்க்க ஏதாவது இரை தேடிக் கொண்டு வாருங்கள்’ என்று கூறியது. அவை நான்கும் காடெல்லாம் சுற்றித் திரிந்து எங்கும் இரை கிடைக்காமல் திரும்பி வந்தன. ஒட்டகத்திற்குத் தெரியாமல், காகம் மற்ற இரண்டையும் அழைத்துக் கொண்டு சிங்க மன்னனிடம் சென்றது. ‘மன்னா, காடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் இரை கிடைக்கவில்லை” என்று காகம் கூறியது. “அப்படியானால் என் பசிக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?’ என்று சிங்கம் கேட்டது. மன்னா ஒட்டகம் இருக்கிறதே!’ என்று காகம் கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும் பாவம்’ என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது. “மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்’ என்று காகம் எடுத்துக் கூறியது. ‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரி யல்ல என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. ‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம் என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலி யையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன. ‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்’ என்று காகம் கூறியது. ‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?” என்று சிங்கம் பதில் கூறியது. உடனே நரி, என்னைத் தின்னுங்கள்’ என்றது. ‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே? என்று சிங்கம் கூறியது. புலி முன் வந்து, அரசே என்னைச் சாப்பிடுங்கள்!” என்று வேண்டியது, “நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல’ என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம் நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது’ என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது. அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது. சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத் தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது. கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒட்டகத்தைச் கொன்ற காகம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார். “பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார். “மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல். “பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிறந்த ஆயுதம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு ஓநாய் அதிக தாகத்துடனும் பசியாலும் தவித்துக் கொண்டு இருந்தது. அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. அப்போது சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதைக் கண்டது. உடனே அதற்குக் கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து " டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே " என்றது. ஆட்டுக்க்குட்டு மிகுந்த பயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் பக்கத்தில் தண்ணீர் குடிக்கிறேன் நீங்களோ மேல் பாகத்தில் குடிக்கிறீர்கள் .நான் இங்கே தண்ணீர் குடிப்பதால் அங்கு தண்ணீர் எப்படி கலங்கும் " என்றது. "ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். அதற்காக அவருடைய தோல் உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்" என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது . அதன் உடல் நடுங்க ஆரம்பித்தது. " ஐயா! நான் சொல்வதைக் கேளுங்கள் தயவு செய்து என் பேச்சை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை" என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு " என்ன கர்வம். எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இனி நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் " என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்தது. ஆட்டுக்குட்டி என்ன கத்தியும் விடாமல், அதனைக் கடித்துத் தின்றது ஓநாய். கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தற்பெருமை பேசுவார்களை கண்டால் முல்லாவுக்கு பிடிக்காது. அவர்களை எவ்விதமாவது மட்டந்தட்ட அவர் முயற்சி செய்வார். ஓரு தடவை ஒரு மதச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மதத் தலைவர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ அதிகம் பேசமால் தங்களுக்கு அதிசய சக்திகள் உண்டு என்றும் தாங்கள் விரும்பினால் நீரில் நடக்க முடியும், நெருப்பில் புகுந்து வெளிவர முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும் என்றும் அவர்கள் புராணத்தை தம்பட்டமடித்தே காலத்தை ஒட்டினர். கடைசியாக நன்றி கூறுவதற்காக வந்த முல்லா தனக்கும் சில கச்திகள் உண்டு என்றும் குறிப்பாக நல்ல இருளில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வழிநடக்க முடியும் என்றும் கூறினார். " விளக்கே இல்லாமல் அடர்ந்த காட்டில்கூட நல்ல இருளில் முல்லாவால் நடந்து செல்ல முடியுமா?" என்று மதத்தலைவர்கள் கேட்டனர். " முடியும் " என்று முல்லா கூறினார். அன்று இரவு உணவுக்குப் பிறகு, முல்லாவின் அந்த சிறப்பு ஆற்றலைப் பரிசோதனை செய்து பார்ப்பது என்று முடிவாயிற்று. மதத் தலைவர்களும் உள்ளுர் பிரமுகர்கள் சிலரும் காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கே நின்று முல்லாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அன்று உண்மையிலேயே இருள் மிகவும் அதிகமாக இருந்தது. மிகவும் அருகில் இருக்கும் பொருள் கூட கண்களில் படவில்லை. குறுக்கும் நெடுக்;குமாக நிற்கும் மரங்களை அடையாளம் கண்டு முல்லா எவ்வாறு இருளில் வருகிறார் என்று பார்க்க எல்லோரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சற்றநேரம் கழித்து முல்லா ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு நடந்து வந்தார். " இது என்ன? கைவிளக்கு வெளிச்சத்தில் நடந்து வருகிறீர், இருளில் அல்வா நடப்பதாக சவால் விட்டீர் " என்று மற்றவர்கள் கேட்டனர். " நண்பர்களே, எவ்வளவு பயங்கர இருளாக இருந்தாலும் எனக்குக் கண் நன்றாகத் தெரியும், ஆனால் நடந்து வருவது நான்தான் என்று உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டாமா? எனக்குப் பதிலாக வேறு ஆளை நடக்க விட்டு நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்ற அவப்பெயர் நாளை வரக்கூடாதல்லாவா? அதனால் என்னை நீங்கள் அடையாளம் கண்டுபிடிப்பதற்காகத்தான் கைவிளக்குடன் நடந்து வந்தேன் " என்றார் முல்லா. பிறகு முல்லா " அன்பார்ந்த மதத் தலைவர்களே உங்களிடமெல்லாம ஏதேதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் கூறினீர்களே அதற்கு என் சக்தி ஒன்றும் இளைத்ததல்ல" என்றார் முல்லா தங்களை மட்டம் தட்டவே இப்படி ஒரு நாடகத்தை முல்லா ஆடினார் என்பதை மதத் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவிடம் இருந்த சக்தி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: “குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள். “பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர். “தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன். “அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு. “பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான். “திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன். “ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி. “எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன் “அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். “தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு. “மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். “நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள். “என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். ‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! ‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர். ‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’ இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். ‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது. “பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஓலைச் சுவடி பத்திரிகை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, வெளியூர், அலுவல்கள், விடுதி, வேலைக்காரர்கள், தண்ணீர், நாவறட்சி, நெருப்பு, குவளை தலைப்பு: முல்லா அணைத்த நெருப்பு
ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார் வியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை. இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். முல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அவருக்கு யோசனையொன்று தோன்றியது. திடீரென அவர் " நெருப்பு! - நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது" எனக் கூக்குரல் போட்டார். வேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள். முல்லாவைப் பார்த்து " எங்கே தீப்பற்றிக் கொண்டது?" என்று பரபரப்புடன் கேட்டார்கள். முல்லா சாதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது. " நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே?" என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள். நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை. காலையில் எழும்போதே அந்த நினைவுதான். சொல்லப் போனால் நேற்றிரவு உறக்கம் வரும் வரை கூட அந்தச் சிந்தனையாகவே இருந்தது. எப்படி இருக்கப் போகிறதோ? என்ன ஆகுமோ? பதற்றமும் எதிர்பார்ப்பும் நேற்றை விட இன்று அதிகம் இருந்தன. கழிவறைக்கடன்கள் முடித்துக் குளித்துத் தயாரானபோது செய்தித்தாள் வந்திருந்தது. தலைப்புச் செய்திகளைக் கூடப் பார்க்காமல் அதைப் பற்றி என்ன செய்தி வந்திருக்கிறதென்றுதான் முதலில் பார்த்தான். நிருபருக்கும் நேற்று அவனுக்கிருந்த மனநிலைதான் இருந்திருக்கும் போல. எப்படி வேண்டுமானாலும் நடக்கும் என்பது போலத்தான் எழுதியிருந்தது. அது மதியம் பன்னிரண்டு பத்துக்குத்தான். சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழே முக்கால்தான் ஆகியிருந்தது. கணக்குப் போட்டு இன்னும் நான்கு மணி இருபத்தைந்து நிமிடம் இருப்பதை அறிந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினான். இந்த நாலுமணி இருபத்தைந்து நிமிடமும் ஒரு நொடியில் கடந்து விட்டால்... ருசித்துச் சாப்பிடாமல் அவசரம் அவசரமாகவே காலை உணவை முடித்தான். உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது. தொலைக்காட்சி செய்தியிலும் மனம் ஒன்றவில்லை. ஒவ்வொரு முறை அதை எதிர்கொள்ளும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. அதை மாற்ற அவனால் முடிவதில்லை. வாசலுக்குச் சென்று காம்பவுண்டு சுவரில் சாய்ந்தபடி தெருவை நோட்டமிட்டான். ஞாயிற்றுக்கிழமை தெரு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரேயொரு நாய் மட்டும் எலும்புத்துண்டு ஒன்றைக் கவ்வியபடி ஓடி வந்தது. அவனருகே வந்ததும் சற்று நேரம் பார்த்தது. அவன் அதட்டவோ, சத்தம் போடவோ முயலவில்லை. என்ன நினைத்ததோ சட்டென திரும்பி, வந்த வழியே ஓட ஆரம்பித்தது. அதற்கு மேல் அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தவன் செய்தித்தாளை எடுத்து அன்றைய தலைப்புச் செய்தியை வாசிக்க முயன்றான். முதல் நான்கு வரிகளை வாசித்தபின் மனம் செய்தியில் பதிய மறுத்தது. கண்கள் மட்டும் அனிச்சையாக எழுத்துகள் மீது ஊர்ந்தன. ''ச்சே'' என்றபடி செய்தித்தாளை மறுபடி மேசை மீது எறிந்தான். நாற்காலியில் அமர்ந்தபடியே கண்களை மூடி கைகளை பின்னோக்கி நீட்டிச் சோம்பல் முறித்தான். சற்று நேரம் படுத்தால் என்ன? மல்லாந்து கட்டிலில் படுத்துக் கண்களை மூடினான். உறக்கம் வருகிறாற்போலத் தெரியவில்லை. கண்முன் காட்சிகள் கற்பனையாக ஓடின. எல்லாம் அதைப்பற்றித்தான். சட்டென அவன் தன் வலது கையை நெஞ்சுக்கு மேல் வைத்துச் சோதித்தான். அது இயல்புக்கு அதிகமாகத் துடித்தது. சுவாசமும் அதிக வேகமாக நடப்பதாகத் தோன்றியது. அவனுக்கு தன் மீதே ஒரு வெறுப்பு உண்டாயிற்று. ''ஏன் இந்த விஷயத்துக்குப் போய் இப்படியெல்லாம் பதற்றப்பட வேண்டும்''. அவன் தன் அறிவைக் கொண்டு தறிகெட்டு ஓடும் சிந்தனையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நடப்பது எதுவானாலும் நடக்கத்தான் போகிறது. அதைப்பற்றி ஏன் இத்தனை பரபரப்புக் கொள்ள வேண்டும். இது மிகவும் முதிர்ச்சியில்லாத நடத்தை. வெட்கத்துக்குரிய விஷயம். அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். சற்று நேரத்தில் அவனுக்குள் மனச்சோர்வும் கழிவிரக்கமும் தோன்றின. அவன் தளர்ச்சியடைந்தான். சில நிமிடத்திற்கெல்லாம் மீண்டும் அவனுள் பதற்றம் ஏற்பட்டது. அதைப் பற்றிய எண்ணங்கள் மறுபடி நினைவோட்டத்துள் கலந்து ஓட ஆரம்பித்தன. வெடுக்கென அவன் கட்டிலை விட்டெழுந்து நாற்காலியைக் கொண்டுவந்து வாசலில் போட்டு அமர்ந்தான். அருகே நட்டிருந்த, அப்போதுதான் பச்சைக் குருத்துகளை வெளிவிட ஆரம்பித்திருந்த தென்னங்கன்றைப் பார்த்தான். அதிலேயே சிந்தனையைக் குவிக்க முனைந்தான். ஆனாலும் நீண்ட நேரத்துக்கு அது முடியவில்லை. தலையை வலுவாக இரண்டுமுறை உதறிக்கொண்டு மல்லாந்து பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இது ஒரு வியாதியோ, மன சம்பந்தமான நோயோ? ஒருவேளை ''ஆப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டரோ?'' அந்த நோய்க் குறியீடு பற்றி அவனுக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தது. ஆனால் ''அதை'' எதிர்பார்த்திருக்கும் நேரங்கள் தவிர்த்து இத்தகைய அவஸ்தை ஏற்படுவதில்லை. அதை எதிர்பார்த்துக் காத்திருக்கையில் மட்டும்தான் இப்படி ஆகிவிடுகிறது. ''அதன் மீது எனக்கு இருக்கும் அதீதப் பற்றுதல் மற்றும் என் வாழ்வில் நான் அதற்குத் தரும் முக்கியத்துவம் சார்ந்துதான் இந்தப் பதற்றம் ஏற்படுகிறதோ''? நாற்காலியை விட்டு எழுந்து வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான். இதை எப்படித் தவிர்ப்பது, இந்த மன இம்சை ஏற்படாமல் தடுப்பது எப்படி? நடந்து கொண்டிருந்தவன் எதையோ நினைத்துக்கொண்டது போல நின்றான். உள்ளே போய் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான். செருப்பை அணிந்துகொண்டு தெருவுக்கு வந்து நடக்க ஆரம்பித்தான். முக்கிய சாலைக்கு வந்ததும் நின்றான். சாலையில் கிழக்கே போனால் நாலைந்து தெருக்கள் தாண்டியதும் ஊர் முடிந்து வயல்கள் தொடங்கும். மேற்கே நடந்தால் முதலில் பேருந்து நிலையம். அதன் பின் மார்க்கெட் எனப்படும் சிறிய கடைவீதி. அதன்பின் தெருக்கள் விரிந்து ஊர் நீளும். அவன் மேற்குத் திசையிலேயே நடக்க ஆரம்பித்தான். அரசுப் பேருந்து ஒன்று சொற்ப பயணிகளுடன் அவனைக் கடந்து முன் சென்றது. பேருந்து நிலையத்தில் சில பயணிகள் பேருந்துக்காகவும் சில பிச்சைக்காரர்கள் தருமவான்களுக்காகவும் காத்திருந்தனர். சுவர் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தான். ''அதை'' நினைவூட்டும் விளம்பரம் ஏதேனும் கண்ணில் பட்டுவிடப்போகிறது என லேசாகக் கிலேசமுறவும் செய்தான். இப்படி யோசித்ததன் புகுத்தி விட்டமைக்காக தன்னைத்தானே கடிந்துகொண்டான். எதிரே தென்பட்ட காலி ஐஸ்க்ரீம் கப் ஒன்றைக் கோபத்துடன் எற்றினான். அது உருண்டு வழியோரம் போய் விழுந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்த அல்லது நடமாட்டம் அறவே இல்லாத தெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தான். அவன் மனம் சுயகோபம், கழிவிரக்கம் இன்னும் குறைந்துவிடாத பதற்றம் - இவற்றால் நிறைந்திருந்தது. அவன் கிட்டத்தட்ட ஊரைக் கடந்து எல்லையில் இருந்த மாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டிருந்தான். கோயில் யாருமில்லாத அமைதியில் இருந்தது. சிறிய கோயில் ஒற்றை வேப்பமர நிழலில் சாந்தமாக நின்றிருந்தது. வேப்ப மரத்தடியில் சிறுபாறையொன்று கிடந்தது. அவன் பாறைமீது அமர்ந்தான். வேப்பமர நிழலும் பாறைக் குளிர்ச்சியும் இதமாக இருந்தன. அவன் மெதுவாக ஆசுவேசம் கொள்ள ஆரம்பித்தான். அப்படியே கைகளை தலைக்குக் கொடுத்து பாறைமீது மல்லாந்தான். பாறையின் குளிர்ச்சி ஒருவித சிலிர்ப்புடன் அவன் உடலெங்கும் பரவத் தொடங்கியது. அவன் தன்னையறியாமலேயே கண்களை மூடினான். எவ்வளவு நேரம் அப்படியே படுத்துக்கிடந்தான் என்பதை அவன் அறியவில்லை. எதேச்சையாக கண்களைத் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று ஐம்பது. எழுந்து செருப்பை அணிந்துகொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருக்கின்றன. அதற்குள் வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டும். அவன் நடையில் வேகம் கூடியது. பழைய பதற்றமும் எதிர்பார்ப்பும் மேலிட அவன் நடையை எட்டிப் போட்டான். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். விறுவிறு என்ற நடைக்கு ஈடாக இதயத்துடிப்பும் சுவாசமும் அதிகரித்தன. மார்க்கெட்டைக் கடக்கும்போது பன்னிரண்டு பத்துக்கு ஏழு நிமிடங்களே இருந்தன. நேரத்துக்குள் போய்விடமுடியும் என அவன் நம்பிக்கை கொண்டான். பேருந்து நிலையத்தில் இன்னும் கூடுதலாகப் பயணிகள் காத்திருந்தனர். பிச்சைக்காரர்கள் குறைந்திருந்தார்கள். தன் தெருவுக்குள் நுழைகையில் அவனுக்குள் பதற்றமும் வெகுவாக அதிகரித்து விட்டிருந்தது. அவனையறியாமலேயே அவனது நடை ஓட்டமாக மாறிவிட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது மூச்சு ஏகமாக வாங்கியது. நெஞ்சு அடித்துக்கொள்வது அவனுக்கே கேட்கும் போல இருந்தது. உள்ளே வந்து நாற்காலியில் விழுந்தான். டி.வி. ''ஹே'' வென்ற கூச்சலின் பின்னணியில் ஓடிக்கொண்டிருந்தது. மணி பன்னிரண்டு பத்து. கிளென் மெக்ரா ஓடிவந்து முதல் ஓவரின் முதல் பந்தை சௌரவ் கங்கூலிக்கு வீசினான். அவன் மூச்சு சீராக வரத் தொடங்கியது. பதட்டம் ஏதும் இல்லாமல் கிரிக்கெட் மேட்சைப் பார்க்கத் துவங்கினான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆயத்தம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை. அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான். அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான். குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது. வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான். காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது. திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை. குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது. தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான். அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள். அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது. பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது. பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள். பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது. அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது. பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது. மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள். எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள். அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான். இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா? இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள். தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'செல்வந்தன் குதிரை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போகும் தினசரிக்காலண்டராய் இளைத்துப் போன தேகம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையை ஆசைத்தீரச் சேர்த்து கடைவாயில் அதப்பும் தாம்பூலம். வாய் அசைபோட அசைபோட தாம்பூல எச்சிலில் குளித்த கருஞ்சிவப்பு உதடுகள். மழைகாணாமல் விருவோடிக் கிடக்கும் கரிசல் நிலமாய் எண்ணெய் தடவாத பரட்டைத் தலையுடன் விறகு பொருக்கப் புறப்பட்டாள் வீராயி. மணி பதினொன்றிருக்கும். இரண்டு ஜென்மமாய் பூமியில் வாழ்ந்து தோசைத் தடிமனாய்த் தேய்ந்து போன இரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு வீராயி நடந்த நடையில் ஒரு வெறித்தனம் இருந்தது. வேகமான நடைக்கு ஒத்துவராததால் முழங்கால் தெரிய சேலையை தூக்கிச் சொருகிக் கொண்டாள். அரிவாளையும் கயிரையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு ஊரைத் தாண்டி, ஊத்தோடை தாண்டி, வேடியப்பன் கோயில் தாண்டி இருபது நிமிச நடைக்குப் பிறகு கொத்துக் கொத்து முள்ளோடு குலுங்கி நிற்கும் கருவேலங் காடு புகுந்து, திசையெல்லாம் தன் கண்ணொளியை வீசினாள். கண்ணில் பட்டு, கையில் கிடைத்த மஞ்சனத்தி, கருவேலஞ்சுள்ளிகளை கணிசம் பார்க்காமல் பொருக்கிக் குவித்தாள். கயிரை இரண்டு கொடியாக விரித்து, விறகுக் குச்சிகளை அற்புதமாய் ஒழுங்குபட அடுக்கி, நீளமான கட்டுக்கட்டி நிமிர்ந்த போது, இனம் புரியாத திருப்தி ஒன்று தன் நெஞ்சில் குடிபுகுந்ததாய் உணர்வு ஏற்பட்டது வீராயிக்கு. விறகுக் கட்டைத் தூக்கிவிட ஆள்தேடி சுற்றி பார்வையை வீசினாள். தூரத்தில் கூலியாட்கள் சிலர் களைபறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கூப்பிடவும் பயம். "ஒரு வேளை தோட்டக்காரன் பார்த்துவிட்டால் கண்டபடி திட்டுவானே" என்ன செய்வது?" என்று சிறியதொரு சிந்தனைப் போராட்டம் நடத்தினாள். எப்படியாவது தூக்குவதென்று முடிவு செய்தவளாய் காலை அகல விரித்து, ஒருக்களித்து நின்று, உயிரையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஒரு நரம்புக்குள் செலுத்துவதாய் தன் தேகத்திற்கு வலிமையேற்றினாள். பெருங்காற்றை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பிக் கொண்டாள். விறகுக் கட்டை செங்குத்தாய் நிறுத்தி கட்டின் பாதியில் குனிந்து தன் தலை பொருத்தி, இருகப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள். தலைக்கேறியது விறகுக் கட்டு. சுட்டெரிக்கும் நெருப்புக் கோடாரியை கையில் வைத்துக் கொண்டு மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது மத்தியான வெயில். வரண்ட தாகம் தொண்டையைச் சுரண்டிக் கொண்டிருந்தது. தலைமேல் இருந்த பாரம் பிடரித்தலையை நெரித்துக் கொண்டிருந்தது. விரைந்து வீடு செல்லும் வேட்கை கால்களுக்குச் சிறகு முளைக்க வைத்தது. ஓடுவதைப் போல நடந்தாள்; வீராயி எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டும் பூமியை புல்லரிக்கும்படி செய்து புழுதியைக் கிளப்பியது. எடுத்த காலைப் பதிக்கும் முன் இன்னொரு காலை எடுத்து வேகமாக நடைபோட்டாள். திடீரென செருப்பையும் மீறி குதிங்காலில் நறுக்கென்று இறங்கியது கொடூர முள்ளொன்று. கண்ணுக்கு மட்டும் இருட்டியதாய் ஒரு கருப்பு நிறம் தோன்றி மறைந்தது. உச்சியில் யாரோ ஓங்கி அடித்து விட்டது போன்ற பிரம்மை. தேகத்தில் மின்சாரம் தீண்டியதாய் மிரட்சி, காலில் குத்திய ஒரு முள் உடம்பெல்லாம் குத்தியதாய் சொல்லமுடியாத வலி. 'அய்...யய்யோ அம்மா' - என சக்தியை ஒன்ற கூட்டி ... குரல்வளை... திடப்படுத்தி... வீராயி கதறி அலறிய போது, அந்தக் காடெல்லாம் எதிரொலித்தது. 'என்ன இந்த வாழ்க்கை' என வீராயி சலிப்படைந்து முணுமுணுத்த வார்த்தைகள் அந்த எதிரொலியில் கரைந்துகொண்டிருந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'என்ன இந்த வாழ்க்கை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: "வாங்கம்மா... பூ வாங்கிட்டுட்டுப் போங்க முழம் 2 ரூபாய் தான் பூ... பூ... " " அம்மா... தாயே ... குழந்தை சாப்பிட்டு இரண்டு நாளாகுது ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா..." "ஆரஞ்சு ... பைனாப்பிள் ... கிரேப்... ஆரஞ்சு" இந்த வசனங்களெல்லாம் பத்மாவிற்குப் பழக்கப் பட்டவை தான் இருந்தாலும் அனைத்தையும் காதில் வாங்கிய படி அவர்களைக் கடந்து போனாள். எட்டு மணி இளம் வெய்யில் அவள் முகத்தையும் தேகத்தையும் செல்லமாய் வருடிப் பார்த்தது. வெள்ளிப் பிள்ளையார் கோவிலைக் கடந்த பொழுது கற்பூர ஆராதனை நடப்பது தெரிந்து விரக்தியாய் ஒரு முறுவல் கொண்டாள். ஆம் இதுவே பள்ளிக்குத் தனியாய் இச்சாலையில் நடக்க ஆரம்பித்த காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையில் எத்தனை முறை இக்கோவிலைக் கடந்து இருப்பாள் ஒவ்வொரு முறை கோவிலைக் கடக்கும் பொழுதும் இறைவனை தரிசித்து விட்டுதான் செல்வாள். இன்று... சிந்தித்துப்பார்க்கும் நேரமில்லை காரணம் இவள் செல்ல வேண்டிய பேருந்து சிறிது தொலைவில் அளவுக்கு சற்று அதிகமான கூட்டத்தை பெருக்கிக் கொண்டு வந்தது. ஓடிச் சென்று ஏறினாள். இயந்திரத் தனமாக மூன்று மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. " கல்யாணி... கல்யாணி... " பக்கத்தில் உள்ள தையல் மிஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த கல்யாணியை தோழி வசந்தா கூப்பிடும் சத்தம் கேட்டு பத்மாவும் இயல்பு நிலைக்குத் திரும்பி மணி பார்த்தாள் 11 அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. வசந்தாவைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகையை வீசினாள். வசந்தா பதிலுக்கு புன்னகைத்தாலும் முகத்தில் சிறு கவலை மண்டியிருந்தது தெரிந்தது. "என்ன வசந்தா... ஏன் இப்படி பேயரஞ்ச மாதிரி இருக்க?" கல்யாணி கேட்டாள். ' ம்... பேய்தான் ஆனால் என்னை அறையவில்லை உன்னை அறைய வந்திருக்கு" - வசந்தா. " என்னடி உளர்ற " " அங்க பார் உன் ஆத்து குடிமகன் உன்னை நாடி ஓடி வந்திருக்கார்" வசந்தா கிண்டலாக சொன்னாலும் தோழியின் நிலை பற்றி உண்மையான கவலை இருந்தது. இப்பொழுது கல்யாணியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. இந்நிகழ்ச்சிகள் பத்மாவிற்குப் புதிதல்ல கல்யாணியின் கணவர் வருகை அவளுக்கு இன்று 1 ம் தேதி என்பது ஞாபகத்திற்கு வந்தது. மாதம் முதல் தேதி அவள் கணவர் வருவதும் இவள் சம்பளத்தை ஜேப்படி செய்து குடிக்கச் செல்வதும், மறுத்தால் அனைவர் முன்னிலையில் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பதும், யாராவது தடுக்கச் சென்றால் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அதற்குப் பயந்து கல்யாணி அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவதும் மாதாந்திர நிகழ்ச்சிகள். பத்மா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய போது நீண்ட அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. அனைவரும் மேனேஜர் அறைக்கு சென்று தங்கள் ஊதியத்தைப் பெற்று வரும் போது வசந்தா பத்மாவிடம் கேட்டாள். "என்னடி மாமியார் வீட்டுக்கா.. வாயேன் சேர்ந்து போகலாம்". பதில் சொல்லாமல் தொடர்ந்தாள். பேருந்து பயணம் பத்து நிமிடத்தில் முடிந்தது. வசந்தா விடை பெற்றுச் சென்றால். அதோ - அந்த நான்காவது வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தான் பார்த்து இரசித்த வீடு. ஆசையாய் வளர்ந்த தோட்டங்கள் வரைந்த கோலங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு இவ்வீட்டில் மருமகளாக நுழைந்து இந்நந்தவனத்துச் சூழலே நம் உலகம் என்று முடிவு செய்து அவ்வாறே பல கலர்கனவுகளுடன் வளைய வந்ததெல்லாம் ஒரு வாரத்தில் வடிந்து போனது. காரணம்... ராஜா! பெயருக்கேற்ற குணமில்லை. கல்லூரியில் பெரிய படிப்பு முடித்தாலும் ஏற்பட்ட காதல் தோல்வியால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனுக்கு வடிகாலாக வந்தாள் பத்மா. பெண்களின் மேல் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பு இவள்மேல் வடிந்தது. அவளை சித்திரவதை செய்தான். ஆனாலும் அப்பாவிகளான அவன் பெற்றோருக்காகவும் அவர்களின் கண்ணீருக்காகவும் அவனை சமாளித்தால். அந்த நரக வாழ்க்கை கூட பத்மாவிற்கு வாழக் கொடுத்து வைக்காமல் அவன் ஒருநாள் வேறொரு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டான். இரண்டு மாதம் கழித்து அவன் சாலை விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது. சில நாட்கள் துக்கத்தில் கழித்தாலும் தேற்றிக் கொண்டாள். வீட்டில் இவள் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் இவளை தன்னுடன் அழைத்துக் கொண்டனர். இருந்தாலும், அந்த வயதான பெற்றோரை நிராதரவாக விட மனமில்லை. எனவே தையல் பயிற்சி மேற்கொண்டு ஆறு மாதத்தில் டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் பணியில் அமர்ந்து ஐந்தாயிரம் வருமானம் வருகிறது. மாமியார் அவளை வரவேற்றாள். சிறிதுநேர உபசரணங்களுக்குப் பின் அவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் தந்தாள். நடுங்கும் கைகளால் அதைப் பெற்றுக் கொண்டாள் மாமியார். அம்மாடி இதெல்லாம் உனக்கு திருப்தி அளிக்கலாம் ஆனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. உன் வாழ்க்கை தரைமட்டமாக காரணமான பாவிகள் நாங்கள். நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கக் கூடாது. அம்மா உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு தாய் தந்தையர் கிடைத்திருக்கிறீர்கள். என் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று பூத்து முடிந்த சோலை இன்று காய்த்து குலுங்கி கனிய ஆரம்பிக்கும் வேளையில் மரத்தை வெட்டி வேறிடத்தில் செடியாய் மறுபடியும் வளரச் சொன்னால் என்னால் முடியாதம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி விடைபெற்று தன் பெற்றோரை நோக்கிச் சென்றாள். இந்த உறவுப் பாலம் நிலைக்கும் என்றும் இடியக் கூடியதல்ல, என்று நினைந்து பொங்கி வர முயற்சிக்கும் கண்களை மகிழ்வுடன் துடைத்தாள். வழி தெளிவாகத் தெரிந்தது வாழ்க்கையும் தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உறவுப் பாலம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குமரநாதன், வனஜா, குழந்தைகள், மாமா, ரங்கநாதன், மணிவண்ணன், எம்.டி, நிலா தலைப்பு: சந்திரக் கற்கள்
குமரநாதன் சோம்பலாய் எழுந்து பாதிக் கண்களைத் திறந்தும் திறக்காமலும் தலையணைக் கடியில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்து நேரம் பார்த்த போது மணி ஆறு. ஆறாகி விட்டதா? விசுக்கென்று எழுந்தவர் அனிச்சையாக "வனஜா" என்றார். இரண்டு நிமிடம் பதில் வராததில் வனஜாவும் குழந்தைகளும் முந்தைய தினம் ஊருக்குப் புறப்பட்டப் போனது ஞாபகம் வந்தது. அட, வனஜா இல்லை, குழந்தைகளும் இல்லை, வீட்டில் நான் இப்போது தனி...! திடீரென்று உற்சாகமாக இருந்தது. வெளியே பார்த்தார். விடிந்தும் விடியாததுமாய் ஒரு இருட்டு! மழை பெய்து கொண்டிருந்தது. மழையைப் பார்த்ததும் மறுபடி ஒரு உற்சாகம் கிளம்பி வந்தது. போர்வையை உதறி எறிந்து விட்டு எழுந்தார். மூடப்பட்டிருந்த கீழ் இரு ஜன்னல்களையும் அகலத் திறந்து கொக்கிகளை மாட்டினார் தெருவைப் பார்த்தார். தூறல் என்றும் சொல்ல முடியாத, கொட்டும் மழை என்றும் சொல்ல முடியாத ஒரு நடுத்தர மழை! தரைமேல் விழுந்து குமிழ் குமிழாய்ப் பூத்து ஒரு நிமிடத்தில் உடைந்து போகும் மழை துளிகள் நூறு .... இருட்டிலே இடைவிடாத ஜரிகையாய்ப் பளபளத்த மழைக் கம்பிகள் நூறு... நூறு நூறாய் அற்புதங்கள்! மழையே ஒரு மாயப் பிசாசு. மனதை மயக்கி அப்படியே எங்கோ அழைத்துச் சென்று விடும் போல் சுயநினைவின்றி பார்த்துக் கொண்டேயிருந்தார். தூரத்தில் டார்ச் லைட்டும் குடையுமாய் நடந்த ரங்கநாதனை அடையாளம் தெரிந்தது. அலுவலகம் நினைவுக்கு வந்தது. காலை டிபன் முடித்து ஸ்கூட்டரைத் துடைத்தும் கிளம்பி, எட்டு கி.மீ. பயணம் செய்து அலுவலகம் அடைய வேண்டும். ஐந்து நிமிடத்தில் கம்ப்யூட்டர் அள்ளிக் கொடுத்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க வேண்டும். மெல்ட்டிங் பிட்டின் பின்விளைவுகளைப் பற்றி ஆறுபேராய் ஆராய்ந்து தந்த அறிக்கையின் நியாயங்களைத் தனியாளாய் முடிவு செய்ய வேண்டும். எட்டு மணி அலுவலகத்திற்குக் காலை ஆறு மணியிலிருந்தே திட்டமிட வேண்டும். எம்.டி.யின் தீர்மானத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் வெல்விஷர் நிறுவனத்தின் பரிந்துரை இணைக்கப்பட்டதா என்று அர்த்த ராத்திரி 12 மணிக்கு விழிப்பு வரும் போது யோசிக்க வேண்டும், யோசனை.. யோசிப்பதை நிறுத்த முடியாது, கூடாது. நிறுத்தினால் வகிக்கிற பதவிக்கு ஆபத்து. யோசிப்பதில் அலுப்பில்லாத வேறு ஒருவன் அந்த இடத்துக்கு வருவான். ப்ச்.... காலை ஆறு மணிக்கு வெல்விஷரையும் கம்ப்யூட்டர் பேனலையும் நினைக்க நேர்ந்தது கொடுமை! வெளியில் ஒரு உலகம் இருக்கிறது வானமென்றும் மழையென்றும்... இன்று அலுவலகம் போகாதிருந்தால் என்ன? இந்த நினைப்பு வந்ததுதான் தாமதம்... ஒரு நிமிடத்தில் தோன்றி, தீர்மானமாகி, தீர்மானம் உறுதியான போது சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள்.... முத்துப்போல் கிடைத்த இந்த ஒரு நாளை எனக்காகக் செலவழிக்கலாம். வானமும் மழையுமாய் இருக்கும் வெளியுலகத்தில் சராசரி மனிதனாய் சஞ்சரிக்கலாம். வெல்விஷரை நினைக்காமல், பிறந்த நாள் என்று தெரிந்து வாழ்த்துக் சொன்னால் கூட அடுத்த நிமிஷம் சாகப் போகிற மாதிரி முகத்தை வைத்துக் கொள்ளும் முசுட்டு மேலதிகாரியை நினைக்காமல்.... விடுமுறையின் சந்தோஷம் ஏராளமாகி வழிந்தது. மனசை அடக்க முடியவில்லை படுக்கையை உதறிப் போட்டார். போர்வையை மடித்தார். குளியலறையில் வெந்நீர் இல்லை. மீண்டும் வனஜா இல்லாதது நினைவுக்கு வந்தது. அவள் இல்லாதது பெரிய சுதந்திரமாய் உணர்த்தியது. அவளை வெறுக்கிறோமா? ச்சே... அது முடியாது. வனஜா இல்லையென்றால் இந்த வீடு இல்லை, நாசூக்காய்ப் பேசுகிற குழந்தைகள் இல்லை, இத்தனை வசதிகள் இல்லை.... அப்புறம் ஏன் இன்று இத்தனை சுதந்திர உணர்வு? பச்சைத் தண்ணீரில் நனைந்த உடம்பைத் துவட்டி, வெடவெடத்துக் கொண்டே வெளியில் வந்தார். மீண்டும் ஜன்னல் ஈர்த்தது. மழைதான் காரணமோ? துண்டால் நன்கு போர்த்திக் கொண்டு கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தார். மழை கொஞ்சம் குறைந்து சாரலாய் அடித்துக் கொண்டிருந்தது. வெளிச்சம் தூக்கலாய்த் தெரிந்தது. எதிர்ப்புறம் வானவில் ஒன்று, சற்றே வர்ணம் கலங்கலாய் உருவாகியிருந்தது. எப்படி சொல்லி வைத்த மாதிரி நிற அடுக்காய் ஒரு வில் அத்துவானத்தில் தோன்ற முடியும்? பௌதிகம் சொல்லித் தந்திருக்கிற நிறப்பிரிகை நினைவுக்கு வரவில்லை. வானம் கொஞ்சம் உறுதியாக இருந்திருந்தால் வில் உடைந்து போயிருக்கும். அதுமெத்து மெத்தென்று முதுகைக் காட்டிக் கொண்டு இருப்பதால் தான் இந்த வில் இப்படி வளைந்து சுவாதீனமாய் உட்கார்ந்திருக்கிறது. எத்தனை நேரம் இப்படியே இருக்கும்? படித்த படிப்புக்கும் பார்க்கிற தொழிலுக்கும் சம்பந்தமேயில்லாமல் வானவில் ஆராய்ச்சி வார்த்தை கோர்வையில் கொண்டு விட்டது. தன்னைப் போல, "வானவில் காத்திருக்கிறதே! எந்த ஜனகனது வில் இது? வானராமன் இதை உடைத்தால் மேக சீதை மழை மாலை இடுவாளோ....!" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். நினைத்து முடித்ததும் தான் அதை ஒரு கவிதையைப் போல உணந்தார். வாழ்நாளிலேயே கவிதைகளை ரசித்துப் படித்ததும் கிடையாது, கவிதை எழுத வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது. இது என்ன கவிதைதானா? இதை நானேதான் புனைந்தேனா, இல்லை எப்போதோ படித்தது இப்போது நினைவுக்கு வந்திருக்கிறதா? நினைக்க நினைக்க எல்லாமே புதிராய் இருந்தது. வானத்தையும் மழையையும் பார்த்து யாராவது அலுவலகத்திற்கு மட்டம் போடுவார்களா? மைனஸ் ஒன்று, மைன்ஸ் இரண்டு, மைனஸ் ஆறு... போதாது... சார்லி மானிட்டர் கிட்டயே நில்லு, ஸ்டீஃபன் கிட்டயிருந்து கேபிள் வந்திருக்கு, இதே வந்திடறேன் - ஐந்து நிமிடம் சாப்பிட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவனுக்கு வானவில்லைப் பார்த்தால் கவிதை தோன்றுமா? நான் நான்தானா, இல்லை இன்று ஏதாவது புது அவதாரம் எடுத்திருக்கிறேனா? எப்படி! தன்னையே நம்ப முடியாமல் எப்படி, எப்படிகளுடன் கீழே வந்து, வாசல் கதவு திறந்து ஹ"ந்து, பால் பாக்கெட் எடுத்து, பால் காய்ச்சி, காபி தயாரித்து, ஹாலில் வந்து ஹ"ந்துவைப் பிரித்து நிதானமாய்த் தலையங்கம் வாசிக்க ஆரம்பித்தார். என்றைக்காவது இத்தனை நிதானமாய் இருந்திருக்கிறேனா? வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டு, ஒட்டத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டு... இந்த நிதானம் சந்தோஷமாக இருந்தது. நிதானப்படுகிறோம் என்பதே பரபரப்பாக இருந்தது. காபியை மெதுவாக விழுங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எட்டேகால் வரை சோஃபாவை விட்டு அசையவில்லை. நிதானமாய் பேப்பர், அப்புறம் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து, வர இயலாமையைத் தெரிவித்தார். ரமணியை அழைத்து பி.ஸி.யில் பதிவு செய்த சொந்த சேகரிப்பை உபயோகப்படுத்திக் கொள்ள சொல்லாமா? ஃபிளாப்பி கண்டுபிடிப்பது எளிது. ஜி.கே.என் - பி.18. வேண்டாம், ஒரு நாள் குமரநாதன் இல்லாவிட்டால் தொழிற்சாலை இயங்காமல் நின்றுவிடாது. சமாளிப்பார்கள். உன் இந்த ஒரு நாளால் இத்தனை நஷ்டம் என்று நிர்வாகம் ஒன்றுக்குப் பின் எத்தனை பூஜ்யங்கள் நிரப்பினாலும் அது லாபம் தான். நஷ்டம் என்பது பொய். காகிதக் கணிப்பு. இன்றைக்குப் பூரா அலுவலகத்தை நினைக்கவே கூடாது. திஸ் இஸ் தி எண்ட்.... ரிசீவரை எடுத்துக் கீழே வைத்தார். ஊருக்குப் போய்ச் சேர்ந்த விவரம் சொல்ல வனஜா கூப்பிடுவாள். அலுவலகத்திற்கு வரவில்லை என்று தெரிந்ததும் இங்கே கூப்பிடுவாள். கூப்பிடட்டும், இன்று எனக்கு யாரும் தேவையில்லை. நான், இந்த வீடு, மறுபடி நான், அவ்வளவு தான். சமையலறைக்குப் போய் ஃபிரிட்ஜை ஆராய்ந்தார். மாவு எடுத்து தோசை வார்த்து ஹாட்பேக்கில் வைத்தார். மிக்ஸியில் தேங்காய்ச் சட்னி அரைத்தார். டைனிங் டேபிளில் வைத்து மிக நிதானமாயச் சாப்பிட்டார், சிரத்தையாய்ப் பாத்திரங்களைக் கழுவி வைத்தார். தெருக்கோடி வரை நடந்து விட்டு வரலாமா? வேண்டாம். தெரிந்தவர்கள் பார்த்தால் புருவத்தை உயர்த்துவார்கள். நாளைக்கு வனஜாவிடமும் சொல்லலாம் அனாவசியம். வெளியே மழை நின்றிருந்தது. ஆனாலும் மசமசப்பு தீரவில்லை. காலை பத்தரை மணி என்று நம்ப முடியாது. ஜன்னல்கள் திறந்திருந்தாலும் வீட்டுக்குள் இருட்டாகத்தான் இருந்தது. நிசப்தமாக இருந்தது. என்ன செய்யலாம்? டிக்ஷனரி பார்க்கலாம். டைஜஸ்ட் படிக்கலாம்..... இல்லை, அதெல்லாம் அப்புறம்.. இப்போது சுறுசுறுப்பாக ஏதாவது செய்யலாம். ஒட்டடை அடிக்கலாமா? உயரம் போதாத இடங்களில் டேபிள் சேர்கள் இழுக்கப்பட்டு, தரைவிரிப்பு ஆங்காங்கே மடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் அறை அமைப்பே மாறிப் போனது. நிதானமாயக் குப்பையைச் சேகரித்த போது, வாய் தன்னைப் போல "பொன்னரை நாணோடு மாணிக்கக் கிண்கிணி தன்னரையாட, தனிச் சுட்டி தாழ்ந்தாட..." என்று ராகம் பாடியது. வார்த்தைகள் ராகம் பெறப்பெற கம்பை அப்படியே போட்டு விட்டு சோஃபாவில் சாய்ந்தார். நான் யார்? செம்மண் புழுதியில் ஆடிக் கொண்டு, பாசுரங்கள் பாடிக் கொண்டு வளர்ந்த காலங்கள் முடிந்துதான் போயிற்றா? மனசுக்குள் பதிந்திருக்கும் பிரபந்தங்கள் அப்படியே மறைந்துதான் போய் விட்டனவா? மெஷின்களும் ஜெனரேட்டர்களும் என் நினைவுக்குத் திரை போட்டு விட்டனவா? வளர்ந்து வசதிகள் பெற்றால் பழசு இல்லையென்றாகி விடுமா? ஒருநாள் தனிமையே என்னைக் கிளறி விட்டுவிட்டதே! மாமா, எப்படி இந்த வயசில் யாருமில்லாமல் தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? யாருமில்லையா என்ன ஒரு பொய்! பெற்ற வளர்த்த மகன்கள், எடுத்து வளர்த்த தங்கை மகன், மகள்... எத்தனை பேர் இருக்கிறோம்? ஏன் யாருக்குமே இரக்கமில்லாமல் போய் விட்டது? ஓடுவதையே வாழ்க்கையாக்கிக் கொண்டோம், திரும்பிப் பார்த்தால் நீங்கள் இருப்பீர்களா? தலையை சோஃபாவில் சரித்துக் கொண்டார். கண்ணீர் பொங்கி கன்னங்களில் வழிந்தது. என்றுமில்லாமல் மாமாவின் நினைவு இன்று வதைத்தது. பிறந்த வளர்ந்த கிராமமும், உலகம் சொல்லித் தந்த மாமாவும் அந்நியமாய்ப் போய் விட்டார்கள். அடுத்த தெருவிலிருக்கும் மாமா வீடே கதியென்று கிடந்ததும், திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பாட்டாய், எண்ணெய் தீர்ந்த போன இருட்டில் ஒவ்வொருவராயச் சொல்லிக் காட்டியதும், உடல் சோர்ந்தாலும் மனம் சோர்ந்தாலும் மாமா வீட்டு வலப்பக்க அறையில் கொட்டி வைத்திருக்கும் நெல்மணியில் கரைத்துக் கொண்டது.... எல்லாமே, எல்லாமே... நினைவில் ரொம்பப் பின்னோக்கிப் போய் விட்டன. பெற்ற குழந்தைகள் தான் விட்டுவிட்டுப் பட்டணம் போய் விட்டார்கள் என்றால், எனக்கும் தான் அறிவில்லாமல் போய் விட்டதே! சொந்த மக்கள், தங்கை மக்கள் என்று நீங்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டியதில்லையே! பெற்ற மகன்களே சும்மாயிருக்கிறார்கள். உங்களுக்கு எதுக்கு இந்த வேலை என்று வனஜா கேட்ட போது எந்த மயக்கத்தில் பேசாதிருந்தேன்! கல்யாணம் என்பது ஒரு அளவிற்குப் பின் எல்லா மனிதருக்கும் விலங்காகித்தான் போகிறது. வேதனை உள்ளத்தை மூழ்கடித்தது. குற்ற உணர்வு பாம்பாய் மாறி மனசைப் பிணைத்துக் கொண்டது. கொத்தாமல் விட மாட்டேன் என்று பயமுறுத்தியது. மாமா, எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும். இப்போதே, இந்த நிமிஷமே..... மனசிலிருந்த உத்வேகம் உடனே உறுதியாயிற்று. பரபரப்பாய் எழுந்து ஹாலை ஒழுங்குபடுத்தினார். உடை மாற்றிக் கொண்டார். ஸ்கூட்டரில் போகலாம். ஆனால் அதில் அவரை அழைத்துவர முடியாது. வீட்டைப் பூட்டிக் கொண்டவர், நிர்வாகம் தந்த காரை வேண்டாம் என்று நிராகரித்ததற்கு முதன் முறையாக வருத்தப்பட்டார். டாக்ஸி பிடித்து மாதம்பட்டி போய்ச் சேர்ந்த போது மணி ஒன்றாகியிருந்தது. மாமா வாசலில், ஈசிசேரில் சாய்ந்திருந்தார். எண்பது வயதிருக்கலாம். பார்வை மங்கலாக இருந்தாலும் அடையாளம் கண்டு கொண்டு பளிச்சென்று சந்தோஷப்பட்டார். "அடடே, குமாரு, நான் கனவு ஒண்ணும் காங்கலியே?" என்றார். "எவ்வளவு நாளாச்சுப்பா உன்னைப் பார்த்து. சௌக்கியமா? ஏனோ நாலு நாளா உன்னையே நினைச்சுகிட்டிருந்தேன்" என்றார். இவர் நெகிழ்ந்து போய், குனிந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். "மாமா உங்களைப் பார்க்கணுமாட்ட இருந்தது. அதான் வந்தேன்.", "சாப்பிட்டயாப்பா? பாரு, இன்னிக்குப் பார்த்து கண்ணம்மா வரலை. துழாவி துழாவி நானே சமைக்கறதுக்குள் விடிஞ்சு போயிடும். பக்கத்து வீட்டு வாண்டுக யாராவது வந்தா கடைக்கு அனுப்பி எதுனா வாங்கியாரச் சொல்லலாம்னா ஒரு பய கண்ணில் படமாட்டேங்கறானே? மழையா இருக்கா.... யோசனை பண்ணிகிட்டே உட்கார்ந்திருக்கேன்...." என்ன கொடுமை! டாக்டரும் கலெக்டருமாய் அங்கே மகன்கள் பணத்தை வாரியிறைக்கிறார்கள். பெற்ற தகப்பனார் இங்கே அடுத்த வேளை சோற்றுக்கு யோசனை செய்கிறார். "அதிருக்கட்டும் மாமா. இப்ப கிளம்புங்க. நம்ம வீட்டுக்கப் போகலாம். இன்னிக்கு லீவு போட்டிருக்கேன்." ஏன், எதற்கு என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. என்ன திடீர் அன்பு என்று ஏளனம் செய்யவில்லை. உடனே கிளம்பி விட்டார். குமரநாதனே அவருக்குத் தேவையானவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து கொண்ட போது "அலமாரியில் இருக்கற பிரபந்தத்தையும் எடுத்துக்கோ குமாரு" என்றார். அதே டாக்சியில் ஏறி வீடு வந்த சேர்ந்தார்கள். வழியில் வாங்கி வந்த சாப்பாட்டுப் பொட்டலாங்களைப் பிரித்து டைனிங் டேபிளில் வைத்துப் பரிமாறினார் குமரநாதன். கிழவர் நடக்கத் தடுமாறினார். கைத்தாங்கலாய் அழைத்து வந்து உட்கார வைத்தார். மூன்று மணிக்கு மதியச் சாப்பாடு ரொம்பத் தாமதம்தான். இருந்தாலும் பேசிக் கொண்டே சாப்பிட்ட போது பசி தெரியவில்லை. அலுப்புத் தெரியவில்லை. நிலவில் நடப்பது போலிருந்தது. சாப்பிட்டானதும் தூங்க வேண்டும் என்றார். கீழேயே மாலினியின் அறையைத் தயார் செய்தார். கிழவர் படுத்த பின்பும் அறையை விட்டுப் போகாமல் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இருள் கவிழ்ந்திருந்த அறையில் உயர்ரக படுக்கை விரிப்பில் அவர் படுத்திருந்தது. கதைகளில் வரும் வர்ணனை போலிருந்தது. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல மனசுக்குள் கிளர்ந்து கொண்டேயிருந்தது. ஃபேனை நிறுத்தி விட்டு விசிறியால் வீசத் தொடங்கினார். கண் அசந்த கிழவர், திடீரென்று விழித்துப் பார்த்தார். "ஏம்ப்பா, கை நோகுமில்லை? காத்தில்லாட்டிப் போகுது, இப்ப என்ன?" என்றார். கொஞ்சம் பொறுத்து, "ரெண்டு பாட்டு வாசிக்சுக் காட்டுறியா? எவ்வளவு நாளாச்சு! பாட்டு வாசிடான்னா பசங்க ஒருத்தனும் வர மாட்டான். தமிழ் அவ்வளவு சரளம் அதுகளுக்கு. நமக்குக் கண்ணு ரொம்ப மங்கிட்டதால இப்ப ஒண்ணும் முடியறதில்லை" என்றார். குமரநாதன், "மண்ணும் மலையும் மறிகடலும் மருதமும் விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்" என்று ஆரம்பித்து மூன்று பாடல்கள் முடிப்பதற்கு முன் கிழவர் அசந்து தூங்கி விட்டார். அவர் உறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தார் குமரநாதன். மாமாதானா இது? இரண்டு மணி நேரம் முன்பு எங்கோ இருந்தவர் இப்போது என் வீட்டில், என் அருகில் உறங்குகிறார். நம்ப முடியவில்லையே! ஒரு வேளை மாதம்பட்டிக்குப் போனது, இவரை அழைத்து வந்தது எல்லாம் பிரமைதானோ? பைத்தியக்காரத்தனமாய் கிழவரின் கைகளைத் தொட்டுப் பார்த்தார், நிஜம்தான். மாலை ஐந்தரை மணிக்கு விழித்தது, சுக்குக் காபி போட்டுக் கொடுத்தது, கண் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று, கிழவரை அழைத்து சென்று கண் பரிசோதனை செய்தது, இரண்டே மணி நேரத்தில் புதிய கண்ணாடி வாங்கியது.... எல்லாமே பிரமையாகத்தான் இருந்தது. நடுவில் கூட ஒரு முறை தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். "உலகமே இப்ப பளிச்சின்னு இருக்கே! பெருமாளே, உன்னைப் பார்க்கணுமே" என்றார் கிழவர் ரொம்ப சந்தோஷமாய். அந்த சந்தோஷத்தைப் பார்க்கப் பார்க்க உடம்பெல்லாம் ஜில்லென்றாகியது குமரநாதனுக்கு. இரவு சாப்பிடும்போது, கிழவர் "சீரங்கம் பார்க்கணும்னு" ரொம்ப நாளா ஒரு ஆசை. முன்ன எப்பவோ போனது, ஞாபகமிருக்கா? அப்ப நீங்கல்லாம் பொடிசுகள். கோபுரம் கட்டினதுக்கப் புறம் போகவே முடியலை" என்றார். சாப்பிட்டனாதும் ஸ்கூட்டரை எடுத்துக் கிளம்பினார் குமரநாதன். "மழையாயிருக்கே! எங்கப்பா இந்த இருட்டிலே?" என்றவரிடம் "இப்ப வந்திடறேன் மாமா" என்றார். காந்திபுரம் வரை வந்து டாக்சி ஏற்பாடு செய்து விட்டுத் திரும்பினார். மாமாவிடம் "காலையில ஆறுமணிக்குக் கார் வந்துடும். கிளம்பிடுவீங்களா?" என்றார். "எங்கே போறதுக்கு?", "ஸ்ரீரங்கத்துக்கு. ஆறு மணிக்குப் புறப்பட்டாதான் பதினொரு மணிக்காவது போய்ச் சேர முடியும்.", "அடடே, உனக்கு ஆபீஸ் போக வேண்டாமா?", "வேண்டாம்.... நாளைக்கும் லீவு போடப் போறேன்." கிழவரால் காலை ஆறு மணிக்குப் புறப்பட முடியவில்லை. ஏழு மணியாகி விட்டது. திருச்சியை அடைந்து, ஹோட்டலில் அறை எடுத்து, சாப்பிட்டுத் தூங்கி, மாலை ஐந்து மணிக்கு ஸ்ரீரங்கம் போய்க் கடவுளை தரிசித்த போது கிழவர் புளகாங்கிதப்பட்டுப் போனார். "குமாரு, இது போதும்ப்பா, இது போதும்ப்பா," என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இரவு திரும்பி வரும் போது, அலுப்பு தாளாமல் குமரநாதனின் மடியில்தான் சாய்ந்திருந்தார். டாக்சி, மெதுவாகப் போனால் போதும் என்று சொல்லி விட்டதால் இரவு வீடு வந்து சேரும் போது மணி ஒன்று. குமரநாதன் யோசித்து யோசித்துப் பார்த்தார். இந்த இரண்டுநாள் அனுபவங்களை. நெஞ்சுக்குள் இனிப்பை வைத்துத் தைத்து விட்டது மாதிரி இருந்தது. எத்தனை சுகமான அனுபவம், நிலவுக்குப் போனவன் ஞாபகார்த்தமாய் கற்களை எடுத்து வந்தது போல! நினைத்தவுடனே மீண்டும் போக முடியுமா என்ன? மறு நாள் கிழவரை மாதம்பட்டியில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவலகத்திற்குத் தாமதமாய்ப் போன போது, வழக்கம் போல காகிதங்களும் மனிதர்களும் காத்திருந்தார்கள். மனசு அதில் ஒன்றவில்லை. யாரிடமாவது இந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும் போலவே இருந்தது. மணிவண்ணனிடம் மட்டும் சொல்லாம் என்று நினைத்தவர் அப்புறம் யோசனையை மாற்றி கொண்டார். நிலவுக்குப் போனேன், கல் சேகரித்து வந்தேன் என்றால் "அப்படியா?" என்பார்கள். கல்லாக இருந்தாலும் போய் எடுத்து வந்தவனுக்குத்தானே தெரியும் அதன் அருமை! கேட்பவருக்குத் தெரியுமா? மீட்டிங் முடிந்து வெளியில் வரும் போது, எம்.டி. "என் குமரநாதன், ரெண்டு நாளா காணோம், அவுட் ஆஃப் ஸ்டேஷனா?" என்றார். "ஆமாம சார், நிலா...." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். “வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான். “நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர். “பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். ‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார் “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர். “பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான். “பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான். உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார். “ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர். தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார். அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால். நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள். அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான். அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான். “ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன். ‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான். “உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள். “என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார். “இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது. “பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள். “பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள். அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கதைகள் காளை மாட்டின் பால்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கொடி, இளைய துறவி, மனம், மூத்த துறவி, உதடுகள் தலைப்பு: அசைகிறது
ஒரு மடத்தில் நான்கு துறவிகள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். திடிரென கம்பத்தின் மீது இருந்த மடத்தின் கொடி வேகமாக அசையத் தொடங்கியது. அவர்களில் இளைய துறவி தியானம் கலைந்து, "கொடி அசைகிறது" எனக் கூறினார். அவரை விட அனுபவம் வாய்ந்த துறவி "காற்று அசைகிறது" எனக் கூறினார். இருபது வருடங்களாக அந்த மடத்தில் இருக்கும் மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்து, "மனம் அசைகிறது" என்று கூறினார். இவர்களின் பேச்சினைக் கேட்டு பொருமையிழந்த நால்வரில் மூத்த துறவி கடுமையுடன், "உதடுகள் அசைகின்றன" என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது. " இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்?" என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார். " கீழே என்ன செய்கிறாய்?" என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார். " கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் " என்றார் முல்லா. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி " என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா?" என்று கோபத்தோடு கேட்டார். " மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை" என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார். பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். " நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்" என்றார் தளபதி. " நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான் " என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தளபதியின் சமரசம்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அழகேசன் என்ற இளைஞன், ஜம்பு என்ற ஜமீன்தார்,அழகேசநின் தாய், திருடன், புல்லாங்குழல் தலைப்பு: மந்திர புல்லாங்குழல்
ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார். அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான். பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான். அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி. "அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க", "தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக", "அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க" ‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்" அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார். "தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்", "அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்" உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார். அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்", "என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்", "நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?" அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து "மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்" என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார். அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, "அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்" என்றான். அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார். அங்கே ஜமிந்தார் "அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்" என்று புலம்பிக் கொண்டிருந்தார். அழகேசன் அவரை பார்த்து "அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க" என்றார். ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். அமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார். அரசகுரு, “பால் தான்!'' என்றார். சிலர், “சம்பா மலர்!'” என்றனர். வேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர். இன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்!” என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். “நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார். வெளியில் வந்து, “அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...” என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார். உடனே தெனாலிராமன், “அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன” என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார். சபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?” என்றார். “தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்” என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உலகிலேயே வெண்மையான பொருள் எது?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன் கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன் என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி இருந்தார். வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல் அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார். ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு கடுமையாகக் கேட்டார். முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன் பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின் வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன். கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார். "இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை எடுத்து முருகேசனிடம் காட்டினார். உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில் இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக் கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார். இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார். முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்? நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம் கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே" என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த வையாபுரி மரியாதை இராமனிடம் நடந்ததை முறையிட்டார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மரியாதை இராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார் "ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி. "நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன். அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார். மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது. மரியாதை இராமன் முருகேசனிடம், "நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது உண்மையா?" என்று கேட்டார். "இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சான் நீளமா? முழம் நீளமா?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, "அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!" என்று கூறினான். அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. "அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?" என்று கேட்டான். "நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!" என்றான் புளுகன். "அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?" எனக் கேட்டான், மடையன். "சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?" என்று விசாரித்தான் முட்டாள். "உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்" என்றான் புளுகன். "அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?" என்று கேட்டான் மண்டு. "ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!" என்றான் புளுகன். "பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்..... அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன். "ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?" என்று மட்டி கேட்டதும், "ஓ நாளைக்கே போனாலும் போவேன்!" என்றான் புளுகன். "அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்." "புளுகனோ மகிழ்ச்சியோடு "சரி" என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர். "போகும் வழியில் சாப்பிடுங்கள்" என்று புளி சாதம் தந்தான் மட்டி. எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான். வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். "குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்" என்று பெருமையோடு சொன்னான் மண்டு. உங்கள் "குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!" என்றான் மூடன். "சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!" என்று முட்டாள் சொன்னான். பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், "அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?" எனக் குதித்தார். "நாங்கள் நல்லது தானே செய்தோம்?" உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?" என்று மட்டி கேட்டான். "முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!" என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் 'திரு திரு' என்று விழித்தார்கள். "சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!" என்றார் பரமார்த்தர். அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள். "மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!" என்று புளுகினார். "ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?" என்று மட்டி கேட்டான். மடையனோ, "அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!" என்றான். "நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!" என்று புளுகினான் முட்டாள். "அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்" என்று தள்ளி விட்டான், மண்டு. "எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!" என்றார் பரமார்த்தர். அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது. "யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!" என்று கட்டளை இட்டான். "அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!" என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு. அரசனோ, "யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!" என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான். "ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!" என்று குருவும் சீடர்களும் அழுதனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சொர்க்கம் என்ற சோற்று மூட்டை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: செல்வந்தன், குதிரை, வழிப்பறித்திருடர்கள், பணியாட்கள், நகரப் பெரியவர்கள் தலைப்பு: செல்வந்தன் குதிரை
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை. அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான். அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான். குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது. வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான். காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது. திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை. குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது. தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான். அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள். அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது. பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது. பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள். பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது. அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது. பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது. மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள். எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள். அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான். இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா? இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள். தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, சந்தை, சந்தேகம், உண்மை தலைப்பு: உண்மை என்பது என்ன?
ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார். அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். " இங்கே என்ன நடக்கிறது?" என்று முல்லா விசாரித்தார். " நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். " உங்கள் சந்தேகம் என்ன?" என்று முல்லா கேட்டார். " உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார். முல்லா பெரிதாகச் சிரித்தார், " இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை" என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும். நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள் முல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா? இல்லையா? முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே ! பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள். கருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா?
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கோழியால் வந்த குழப்பம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கிரிசந்தமம் என்பது ஒரு பூவகையின் பெயர். இன்று ஏறக்குறைய 650 வகைகள் இந்தப் பூக்களில் உள்ளன. சைனாவில் தான் முதன் முதலில் இந்தப் பூக்கள் வளர்க்கப் பட்டது. இந்தப் பூவைப் பற்றி கி.மு 15'ந்தாம் நூற்றாட்டிலிருந்தே பணைத் தாள்களில் எழுதப் பட்டுள்ள சான்றுகள் உள்ளது. இந்தச் செடியின் வேர்களை போட்டு கொதிக்க வைத்து தலைவலிக்கு நிவாரணியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். பச்சையிலை தேனீர் போல கிரிசந்தமம் தேனீரும் பருகி இருக்கிறார்கள். விழாக் காலங்களில் மலர்ந்த கிரிசந்தமம் பூக்களின் இதழ்களை சாப்பிட்டும், பச்சடியாக மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்டு இருக்கிறார்கள். கிரிசந்தமம் பூவிற்கு "சூ " என்று சைனிஷ் மொழியில் கூறுவார்கள். ஒரு நகரத்தின் பெயரே "சூ-ஸைன் - கிரிசந்தமம் நகரம்" என்று பெயர் வைத்து கௌரப் படுத்தி இருந்தார்கள். கி.பி 8'ஆம் நூற்றாண்டில் ஜப்பானிற்கு கொண்டு செல்லப் பட்டது. கிரிசந்தமம் பூவானது வெகு விரைவிலேயே ஜப்பானில் மிகவும் புகழ் பெற்று விட்டது. ஜப்பான் அரசரின் முத்திரையில் கிரிசந்தமம் பூவை அடையாளமாக உபயோகப் படுத்தி கௌரப் படுத்தி இருக்கிறார்கள். புனிதத் தன்மை வாய்ந்த விழாக்களில் ஒன்றாக "தேசிய கிரிசந்தமம் நாள்" என்று ஒரு நாளை மகிழ்ச்சி திருநாளாக ஒவ்வொரு வருடமும் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை வைத்திருக்கிறார்கள். இன்று இந்தப் பூ உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பூவைப் பற்றி ஜப்பானில் பல கதைகளிலும், ஹைக்கு கவிதையிலும் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்கள். இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் கிரிசந்தமம் பூவின் மீது காதல்வெறி கொண்ட பரான் (பிரபு) (ஜப்பானின் உயர்குடி பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்) ஒருவனைப் பற்றிய கதையைப் பார்ப்போம். ஒரு சமயம் ஜப்பானில் வாழ்ந்த பிரபு ஒருவன் கிரிசந்தமம் பூக்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். தன்னுடைய மனைவி குழந்தைகளை விட அவனுக்கு பூக்களின் மீது மிகுந்த பற்றும், காதலும் வைத்திருந்ததான். தன்னுடைய பண்ணை வீட்டின் பின்புறம் முழுவதும் கிரிசந்தமம் பூக்களை வைத்து வளர்த்து வந்தான். ஆனால் அந்த அன்பு ஒரு எல்லைக்குள் நில்லாமல் அளவு கடந்து மற்றவர்களை இம்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. வேலை ஆட்களோ (அ) மற்றவர்களோ தெரியாமல் அந்தப் பூக்களை பறித்து விட்டாலோ, அல்லது செடியின் கிளைகளை உடைத்து விட்டாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் வேலையாள் ஒருவன் கவனம் இல்லாமல் மலர்ந்த செடியின் கிளையினை உடைத்து விட்டதை அறிந்த பிரபு அவனை சிறையிலிட உத்தரவிட்டான். அதனைக் கேள்வி பட்ட வேலைக்காரன் மனம் உடைந்து ஜப்பான் போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையான தன்னைத் தானே வாளை தலைக்கு மேலே வீசி தற்கொலை செய்து கொள்ளும் முறையில் உயிர் விட்டாலும் விடுவேனே தவிர சிறைக்கு செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தான். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட ஸென் ஆசிரியர் ஸென்காய், பிரபுவின் கிரிசந்தமம் பூவின் மேல் உள்ள வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டார். மழைப் பெய்ந்த ஒரு நாள், பூக்கள் நன்றாக மலர்ந்திருந்த தோட்டத்திற்கு சென்ற ஸென்காய் அரிவாளால் அனைத்து செடிகளையும் ஒன்று விடாமல் வெட்ட ஆரம்பித்தார். தோட்டத்தில் புதிய சத்தம் கேட்பதை அறிந்த பிரபு, யாரென எட்டிப் பார்க்க ஏதோ ஒரு உருவம் கையில் அரிவாளுடன் தெரியவே, தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் தன்னுடைய வாளை கவனமாக பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸென்காயைப் பார்த்து "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று பதில் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினான். ஸென் ஆசிரியர் அமைதியாக, "களையான இந்தச் செடியை இப்பொழுது களை எடுக்காவிட்டால் நாளடைவில் அதற்கும் அந்தஸ்தும் கௌரமும் கிடைத்து முதன்மை பெற்று விடும்" என்று இரண்டு அர்த்தத்தில் (செடிகளில் களையானது கிரிசந்தமம், மக்களில் களையானவன் பிரபு) அந்தப் பிரபுவைப் பார்த்து பதில் கூறினார். அப்பொழுதுதான் பிரபு தான் எந்த மாதிரியான தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்தான். கனவிலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தவனைப் போல் உணர்ந்தான். அது முதல் கிரிசந்தமம் பூக்களை வளர்ப்பதை விட்டு விட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிரிசந்தமம் காதல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது. கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது. உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது. எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யுக்தியால் தாகம் தீர்த்த காகம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விவசாயி, நண்பன், வீடு, ஆடை, மனம், காலம், பிரம்மச்சரிய விரதம், பட்டினி, சொந்தம், நினைவு, அறிமுகம், கடின வேலை, காமம், கற்பனை, சிரமம், தவறு தலைப்பு: அடக்கி வைத்தலின் விளைவு
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான். விவசாயி,"வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்." என்றான். அந்த நண்பன்,"இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்," என்றான். பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான். நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான். அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். "நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?" என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின. அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன. போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். "இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்." என்றவன் திடீரென,"ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை" என்றான். நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், "நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்" எனக் கேட்டான். விவசாயி,"மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்." என்றான். ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, "என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை" என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும். மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான். அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது. ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது. ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்." என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான். எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது. அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். "இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல" எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. "உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல." அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!" என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?" அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,"இனி நான் உன்னுடன் வரவில்லை" என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, "அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்." என்றான். ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன. அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது. இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்." ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,"இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!" இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது. வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர். கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான். ஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள். அவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி! என் பெயர் ஹிசிகா! நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள். எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?” என்றாள். “ஹிசிகா! தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை! அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான். முத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் வீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான். தன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே! நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள்! உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன். “ராஜா! நான் ஒரு கடற்கன்னி! நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும்? தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை!” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடல்கன்னி ஹிசிகா' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிங்கம், மனிதன், நரி, நன்றி, நியாயம் தலைப்பு: நன்றி மறந்த சிங்கம்
முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன். "மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்" என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது. மனிதனைப் பார்த்த சிங்கம், "மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்," என்றது. "நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?" என்றான் மனிதன். "மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்" என்று நைசாகப் பேசியது சிங்கம். சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட மனிதன், "சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி" என்றான். "என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?" என்றது சிங்கம். "கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல" என்றான் மனிதன். அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது. "இதனிடம் நியாயம் கேட்போம்" என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான். "எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே..." என்றது. அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து. "நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்" என்றது நரி. உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது. "நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...", "எந்தக் கூண்டிற்குள்?" என்றது நரி. "அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்" என்றது சிங்கம். "எப்படி அடைந்து கிடந்தீர்கள்?" என்றது நரி. சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது. "நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!" என்று கத்தியது சிங்கம். "நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்" என்றது நரி. நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது. ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், காபூல் அரசர், குடம், அதிசயம், தூதன், பூசணிக்காய் தலைப்பு: பீர்பாலின் புத்திசாலித்தனம்
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு. பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு. அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு. பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு. அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஸென் ஆசிரியர், சீடன், வழி தலைப்பு: சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா
சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். மடத்தின் மேற்பார்வையாளர், "மேன்மை பொருந்திய ஆசிரியரே, உங்கள் உடல் நிலை தற்பொழுது எப்படி இருக்கிறது?" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். ஆசிரியர் மா, "சூரியனைப் பார்க்கும் புத்தா, சந்திரனைப் பார்க்கும் புத்தா" என்று பதிலுரைத்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: நண்பர்கள், சாலை, மாலை, சூரியன், குன்று, துறவி, கருத்து, பசு, தியானம், பிரார்த்தனை தலைப்பு: மலை மீது நிற்கும் துறவி
ஒரு சாலையில் மூன்று நண்பர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். மாலை வேளை. சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கிய சமயம். அருகிலிருந்த குன்றின் மேல் ஒரு துறவி நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் அந்த நண்பர்கள் கவனித்தனர். அந்தத் துறவிக்குக் குன்றின் உச்சியில் என்ன வேலை என்று அவர்களுக்கு வியப்பு. "அவர் தனது நண்பர்களுக்காகக் காத்திருக்க வேண்டும். மடாலயத்திலிருந்து நண்பர்களுடன் நடைப்பயிற்சி வந்தபோது, அவரது நண்பர்களை இவர் தவறவிட்டிருக்கலாம்" என்றார் ஒரு நண்பர். இன்னொரு நண்பரோ முதலாமவரின் கூற்றை மறுத்தார். "அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒருவர் இன்னொருவருக்காகக் காத்திருக்க வேண்டுமெனில், அவர் பின்னால் தான் போய்ப் பார்த்துக்கொண்டிருப்பார். அவரோ முன்னால் பார்த்து நிற்கிறார். அவர் தான் மேய்த்துவந்த பசுவைத் தொலைத்திருக்க வேண்டும். சூரியன் வேறு சீக்கிரத்தில் சாயப்போகிறது. இருண்டுவிடும். அதனால் அவர் அவசரத்தில் இருக்கிறார்." மூன்றாவது நண்பரோ மற்ற இருவரின் கருத்தை மறுத்தார். துறவி அமைதியாகக் குன்றின் மேல் நிற்பதாகவும், அசையாமல் கண்களை மூடிப் பிரார்த்தனையில் இருப்பதாகவும் கூறினார். அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர இயலவில்லை. அவர்கள் அந்தத் துறவியிடமே காரணத்தைக் கேட்டுவிடலாமென்று முடிவுசெய்தனர். அவர்கள் குன்றின் மீதேறி, துறவியிடம் சென்று, "நண்பர்களுக்காகக் காத்திருக்கிறீர்களா?" என்று கேட்டனர். அவர் இல்லையென்று மறுத்தார். நான் காத்திருப்பதற்கென்று எனக்கு எதிரிகளோ நண்பர்களோ இல்லையென்றார். அவர் மீண்டும் கண்களை மூடி ஏகாந்தமாக இருந்தார். இன்னொரு நண்பர் தனது சந்தேகத்தைக் கேட்டார். "உங்கள் பசுவைத் தவறவிட்டு விட்டீர்களா?", "நான் எதையும் தேடவில்லை. என்னைத் தவிர எதன் மீதும் எனக்கு நாட்டம் இல்லை." தியானம் அல்லது பிரார்த்தனையைத்தான் துறவி செய்துகொண்டிருக்க வேண்டுமென்று மூன்றாவது நண்பர் முடிவுக்கே வந்துவிட்டார். அதை உறுதி செய்துகொள்ளத் துறவியிடம் வினவினார். துறவி்யோ தன் கண்களைத் திறந்து, "நான் எதையுமே செய்யவில்லை. நான் சும்மா இங்கே இருக்கிறேன். எதையும் செய்யாமல் சும்மா இங்கே இருக்கிறேன்" என்றார். இதுதான் தியானம் என்று பவுத்தர்கள் சொல்கிறார்கள். எதையாவது செய்துகொண்டிருந்தால், அது தியானம் அல்ல. அதிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்றுவிடுகிறீர்கள். நீங்கள் ஜெபிப்பதும் தியானம் அல்ல. அங்கே வாய் ஆடுகிறது. நீங்கள் ஒரு வார்த்தையை உச்சரித்தால், அது பிரார்த்தனையோ தியானமோ அல்ல. ஏனெனில் மனம் அங்கே நுழைந்துவிடுகிறது. அதைத்தான் அந்தத் துறவி சொன்னார். ‘நான் எதுவும் செய்யாமல், சும்மா இருக்கிறேன்."
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், ராஜகுரு, துணிமணி, காவலாட்கள், கொலை, அமாவாசை, துறவி தலைப்பு: ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்
ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான். குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான். தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான். ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார். அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான். தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர். இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று. உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள். இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர். மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார். ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள். தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர். இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான். காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான். காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார். தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார். மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார். அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது. இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார். இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார். அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு. மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார். இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான். சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இருக்க சைகை செய்தார். பிறகு, “அம்மா! உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, “பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள். அதற்கு அக்பர், “ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!” என்றார். “பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டேன். என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன். பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், “அம்மா! நீ மிகவும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!” என்று பாராட்டினார். “என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்தேன். நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்னுடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை. என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார். “மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது. “ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீர் வடித்தாள். பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ,அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பாலை நோக்க, பீர்பால் “பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்” என்றார். அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார். அடுத்து பீர்பால், “பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்று கூறி, அதைக் கிழவியிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பாலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அரசன், அமைச்சர், மாம்பழம், காவலர்கள், மலைவாசிகள், கோவில் பூசாரி தலைப்பு: எல்லாம் நன்மைக்கே
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், "அரசே! எல்லாம் நன்மைக்கே!" என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், "நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்" என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர். அப்போதும் அமைச்சர், "எல்லாம் நன்மைக்கே!" என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக மலைவாசிகள் கொண்டு வந்த அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, "காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம்" என்றான். விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந்தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், "சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில் அடைத்ததற்காக வருந்துகிறேன்" என்றான். அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன். "எல்லாம் நன்மைக்கே!" என்றார் அவர்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், மக்கள், தெனாலிராமன், பரிசுகள், பொட்டலம், புளியம்பழம் தலைப்பு: பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது. மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?" என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார். ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: துருக்கி, மன்னர், முல்லா, சமையல்காரர், சமையல், தலைவன், அரண்மனை, உப்பு, குதிரை, காசு, குடிமக்கள், தத்துவம் தலைப்பு: மலிவான பொருள்
ஓரு தடவை துருக்கி மன்னர் - காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். " என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச் சொன்னான். மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார். அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். " என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாமாகக் கேட்க வேண்டாம் என்றார் முல்லா. ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியந்தோன்றக் கேட்டார். மன்னர்பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால் மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனாமாகக் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள்மீது இருந்த மரியாதை போய்விடும் என்றார் முல்லா. " ஏன்?" என்று கேட்டார் மன்னர். என்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை வீட்டிலும் உப்புக்குப் பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள். பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள்? அதனால் நமக்குத் தேவையான உப்பின் விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவருக்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா. அவர் சொன்ன தத்துவம் சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம் கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரனுக்கு உத்தரவிட்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம். சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் "நீ, நான்" என்று ஒற்றைக் காலில் நின்றனர். சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார். புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார். சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். "அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்". இப்படி அறிவிக்கப்பட்டது. சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது. ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர். சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர். சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர். உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன். இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாதனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக. இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான். அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான். "புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்.." என்றார் மன்னர். "நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.." என்றான் இளைஞன். "நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்.." என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர். உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான். ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது. "நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்.." என்றாள் சின்னராணி. "ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்றுதானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்விதான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்" "அது எப்படி அழியாத செல்வம் ஆகும்" என்றாள் சின்னராணி. "நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்றுதான்" என்றான். "நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றாள் சின்னராணி. "அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்" என்றான் அவன். கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சின்ன ராணி சித்திரலேகா' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்" இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உடைந்த பானை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். "ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா. "நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். "ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார். "மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். "டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா. "குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். "தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர். அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். "சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு 'பளிச்' என்று வந்தான். "அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யானை பல் விளக்குமா?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர். " தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை" என்றார் மன்னர். இந்தச் செய்தியை முல்லா அறிந்தார். ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார். அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார். " முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?" என்று வினவினார். " மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் " என்றார் முல்லா. இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது. அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார். சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார். " என்ன முல்லா மீன் வலையைக் காணோம் " என்று மன்னர் கேட்டார். " மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு" என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மீன் பிடித்த முல்லா' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: புறாக்கள், வேடன், வயதான புறா தலைப்பு: பெரியவங்க சொன்னா கேட்கணும்
அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும். ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான். அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள். திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன. அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது. உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன. வயதான புறா "என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது. மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன. வயதான புறா "இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.", "அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க" அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான். அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின. பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ரஷத், நிர்மலா, காந்திமதி, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, தம்பி, வெங்கடேசன் தலைப்பு: பெயரில்லாத நாடகம்
"நான் உங்கள மட்டும்தான் கூப்பிடறேன். வேறயாருட்டயும் சொல்லிட்டிருக்க வேண்டாம்". இன்னும் வியப்பு தணியாத விழிகளுடன் அவன் மற்றுமொரு முறையாகத் தலையசைத்தான். நிர்மலாவின் கூரிய பார்வையில் அவன் ஆணிவைத்து அறைந்ததுபோல் உறைந்திருந்தான். இவனின் எண்ண ஓட்டங்களை உணர்ந்தறியும் முயற்சியாக சற்று மௌனம் நிலவவிட்டாள். "நீங்க ஒன்பது மணிக்கெல்லாம் வந்துட்டீங்கன்னா ரொம்ப நல்லது. அதுக்கு முன்னாலேயே வந்துட்டாக்கூட நல்லதுதான்". ரஷ"த் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான். இந்தப் பத்து நிமிட நேரத்துக்குள் அவள் மூன்றாவது முறையாகவும் இதைச் சொன்னாள். ஆயினும் அவனுக்கு அது சலிப்பைத் தரவில்லை. ஆனால் ஒரு பெரிய நாடகத்தைக் கொஞ்சமும் ஒத்திகையின்றி உடனே கச்சிதமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்கிறதாக இருந்தது அவளின் பேச்சுத் தோரணை. இந்த மாதிரியான மூடுமந்திர வேலைகளுக்கு இவன் கொஞ்சமும் சரிப்பட்டு வராதவன். அதை அவள் உணர்ந்து கொள்ளவில்லையா? சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதும்கூட அதை உணர்ந்து கொண்டதால்தான் இருக்குமோ? யார் கண்டது? நிர்மலாவின் தங்கை காந்திமதி வயசுக்கு வந்திருந்தாள். அவளுக்கான நீராட்டு வைபவம் அடுத்த வாரம் ஞாயிறன்று இருந்தது. அதுவும் அவளின் சொந்த ஊரில். நிர்மலா அவளின் சித்தப்பா ஆதரவில் இங்கு வந்து கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தாளே தவிர, குடும்பம் சொந்த ஊரில்தான் இருந்தது. தென்காசியை ஒட்டியிருந்த எழிலார்ந்த சிற்றூர் அது. கம்ப்யூட்டர் பயிற்சியின் போதுதான் அவர்கள் ஒட்டுறவாகப் பழகிக் கொண்டது. கமலா, செல்லம்மாள், சுபா, ராகவன், மகாலிங்கம் ஆகியோருடன் ரஷ"தும் நிர்மலாவும் ஒருங்கிணைந்து ஒரு முழுவட்டமானார்கள். ஆனால் ரஷ"தைத் தவிர, மற்றவர்களையெல்லாம் அழைக்க முடியாதபடி நிர்மலாவுக்கு அப்படியென்ன நெருக்கடி இருக்கும் என் ரஷ"துக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு ரஷ"த் செய்யவேண்டியதெல்லாம் மனதை மூடிக்கொள்ளவேண்டும். அப்புறம் வாயும் தானாகவே மூடிக்கொள்ளலாம். இன்னும் பத்து நாள்கள் உள்ளன. அதற்குள் மற்ற நண்பர்களையும் அழைப்பது பற்றியோ அல்லது அழைக்காமல் விடுவதன் காரணம் பற்றியோ ஏதாவதொன்று தட்டுப்பட்டுவிடும். அதுவரை கவலை கொள்ளாதிருக்கப் பழகிக்கொள்ளணும். நிர்மலா ஊருக்குப் புறப்பட்ட நாள் அது. அவள் மீண்டும் அதையே சொன்னாள். "நான் மட்டும் எப்படி தனியா?" என்று கேட்டுவிட்டான். "நீங்க மட்டும்தான். எதப்பற்றியும் யோசிக்காம வாங்க. அதுக்காக மத்தவங்களையெல்லாம் ஒதுக்கிட்டேன்னு அனாவசியமா கவலைப்படாதீங்க". அவன் கவலைப்பட்டான் - சூட்சமக் கயிறு அவிழவில்லையே! அனால் அவனிடம் ஆர்வப் படபடப்பு தொற்றிக் கொண்டது. இன்னும் இரண்டு நாள்கள்தான் நண்பர்கள் எல்லோரும் கூடுயிருக்கும் ஞாயிறன்று, தலைமறைவாகி வெகுதூரம் போய்த்திரும்புவது ரொம்பத் "த்ரில்லிங்காக" இருக்கும். ஆனால் மாட்டிக்கொண்டால் மகா சீண்றம்! ஒரு பொய்யைக் கடைசிவரை காப்பாற்றிக் கொண்டு போவது பளிங்குத்தரையில் எண்ணெய்க் கிண்ணத்தைத் தூக்கிச் செல்வது மாதிரி! வாயை இறுகமூடி. முகத்தையும் கடுமையாக வைத்துக்கொண்டால், எந்தக் கொம்பனாலும் உண்மையைக் கறந்துவிட முடியாதுதான். ஆனால் அது நடக்குமா? நிர்மலா, எதிர்பார்த்திருக்க மாட்டாள்: சொல்லிவைத்த மாதிரி "டாண்" என்று சரியாக ஒன்பது மணிக்குத் தன் வீட்டுக்கு வந்து சேருவான் என்று. "ஒரு பேரலைபோல் அவளுக்குள்ளும் திகில் எழுந்து உயர்ந்து பின் சமமாய்ப் பரவியது. பயணத்தின் வழியெங்கும் குளிர்ந்தகாற்று வேகமாக விசிறியடித்ததில் அவன் முகத்தில் பனிப்பூச்சு அப்பியிருந்தது. மேலும் அவனுடைய சுருள்கேசம் இன்னும் இன்னும் அதிகமாய்ச் சுருண்டு அவன் நெற்றியில் இறங்கி சிறுசிறு அசைவுகளால் ஒரு எடுப்பான நளினத்தை உண்டாக்கியபடி இருந்தது. அவன் வருகையும் நிர்மலாவின் வரவேற்பும் ஓர் ஆவலை அங்கு கிளர்த்தியது. ஒருவிதமான பதற்றம் நிரம்பிய பார்வைகள்! மௌனம் அடர்த்தியாகக் கவிந்து அனைவரையும் நெட்டித் தள்ளியது. ரஷ"த் எதிர் பார்த்ததற்கும் மேலாகவே அந்த வீடு அவனை எதிர் கொண்டதால், அவனுக்கும் படபடப்பாக இருந்தது. இவன் வரப்போவதை - நிர்மலாவும் யாரிடமும் சொல்லவில்லை. அவனை உள்ளே வரச்சொல்லி அம்மாவிடம் அறிமுகம் செய்தாள். அம்மா முதலில் சிரிக்கச் துவங்கி. பின் அந்த துவக்கப்புள்ளியிலேயே முடித்துக் கொண்டாள். முகத்தில் ஒரு மருட்சி அலையடித்தது. அவளின் அப்பா மருதநாயகம் பிள்ளையும் அப்போதே அவர்களை நெருங்கி வந்திருந்தார். அப்பாவிடம் அவள் இன்னும் உரிமையோடு அறிமுகம் செய்தாள். சூழலை நெருடலாக உணர்ந்த அவன், அச்சத்தை அப்புறப்படுத்திவிட்டு கைகளைக் குவித்து சற்றே குணிந்து "வணக்கம் ஐயா" என்றான். அது அவரை உலுக்கியெடுத்தது. "வாங்க தம்பி" என்று தோளைத் தட்டினார். அவர் புன்னகையை வெளிப்படுத்தும்வரை, இறுக்கமாய் இருந்த நிர்மலாவின் அம்மா இப்போது தடையில்லாமல் கொஞ்சம் சிரித்தாள். காந்திமதியைப் பார்த்தபோத அவள் இன்னொரு நிர்மலாவாகவே இருந்தாள். அவனை ஏற்கனவே பார்த்து அறிமுகமாகி இருந்தவளைப்போலச் சொன்னாள். "நீங்க வருவீங்கன்னு அக்கா எங்கிட்ட சொன்னா. நீங்க எனக்கு வாழ்த்துக் கவிதையோட வருவீங்கன்னு எதிர்பார்த்து இருக்கோம்." அவன் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிவிட்டதாக ஆனான். அவள் சொன்னதை அவன் சிலிர்ப்பாக உணர்ந்தான். உண்மையில் அவனும் கவிதையோடுதான் வந்திருக்கிறான். தகவல் எட்டியதும் நிர்மலாவின் பாட்டி அவனருகில் வந்தாள். அவரின் பார்வை தணியாத கேள்விகளோடு அவனைச் சுற்றி வந்தது. அவன் அங்குமிங்கும் நகர முடியாமல் அங்கேயே நின்றான். பாட்டி வாயைத் திறக்கும்முன் நிர்மலா வாய்திறந்தாள். "பாட்டி இவங்க என்கூட கம்ப்யூட்டர் படிக்கிறாங்க. நல்லா கவிதை எழுதுவாங்க. " பாட்டிக்கு இதெல்லாம் அனாவசியமாகப்பட்டது. பாட்டியை அவிடமாய் நகர்த்திச்செல்ல நிர்மலா முயற்சி செய்தாள். பாட்டியிடமிருந்து முதல் கேள்வி வந்தது. "பையன் எந்த ஊரு?", "திருநெல்வேலி" பாட்டி தலையை ஆட்டியபடி கேட்டார். "உன்பேரு என்ன சுப்பிரமணியனா?" நிர்மலா பொய் பேசுகிற ஆளில்லை. "ஆமாம்" என்றாள் நிர்மலா. பாட்டி சமாதானமாக இன்னும் என்னென்னவெல்லாமோ? தேவைப்பட்டன. அவள் சுவாசத்தில் ஏதோ தடை விழுந்தது. நெஞ்சு விம்மி, பார்வை சுழன்றாடியது. களைத்துப்போன மனநிலையுடன் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்து, திரும்பிநின்று, மீண்டும் ஒருபார்வை பார்த்தாள். ரஷ"துக்கு சுவாரசியமற்ற நிலை தோன்றிக் கொண்டிருந்தது. மனதைச் சமனப்படுத்த அவன் காந்திமதியின் அழகை ரசிக்கத் துவங்கினான். நிர்மலாவின் வயதையொத்த இளம் பெண்கள் சிலர் அங்கு இருந்தார்கள். அவன் தங்களைப் பார்க்கும்போது அவனோடு பேசவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருந்தார்கள். பாட்டியை அனுப்பிவிட்டு நிர்மலா அவர்களிடமும் அறிமுகம் செய்தாள். "பேரு ரஷ"து. என்கூட படிக்கிறாங்க நல்லா கவிதை எழுதுவாங்க". "உன் பாட்டிகிட்டே ஏன் சுப்பிரமணியன்னு பொய் சொன்னே?", "நானா சொல்லலியே. அவங்களா கேட்டாங்க. ஆமான்னுட்டேன். எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள். அவனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். வீடு சற்றே விசாலமாக இருந்ததால் அவனுடன் பேசவிரும்பிய பெண்கள் சற்று ஒதுங்கி நின்று விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவன் நிறையக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டவன் போன்ற நினைப்போடயே பேசவும் சிரிக்கவுமாக இருந்தார்கள். நிர்மலா வேலைகளைப் பார்ப்பதும், இடையிலே விட்டுவிட்டு அவன் பக்கம் வந்து அவர்களோடு சேர்ந்து பேசுவதுமாக இருந்தாள். அவர்களைக் கடந்தபோகிற ஒவ்வொருவரும் விசித்திரமான புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகிறவர்களாக இருந்தார்கள். சிலர் அங்கே வெறுமனே நின்று அவர்கள் கூடிப்பேசுவதைப் பார்ப்பதும், எதுவும் புரியாமல் கையை விரித்தபடிச் செல்வதுமாக இருந்தார்கள். நிர்மலாவை அதிக நேரம் அந்தப் பக்கமாய் நிற்கவிடாமல் பாட்டி அடிக்கடி கூப்பிட்டுக் கையோடு அழைத்துச் செல்கிறவராய் இருந்தார். நிர்மலா மீண்டுவர இரண்டு நிமிடங்கள் கூட ஆவதில்லை. அவர்களோடு அவன் பேசிப் பேசி இலகுவாய் ஆகியிருந்தான். அவனுக்கு இப்போது எல்லாமும் பிடித்துப்போய்விட்டது. ஆனாலும் அவன் பார்வை அடிக்கடி வாசலுக்குச் சென்று மீண்டது. ரஷ"த் வெங்கடேசனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வந்தால் இவளுக்கும் சற்று ஆசுவாசமாக இருக்கும். அவன் எப்போது வருவான் என்பதை நிர்மலாவிடமே கேட்டுவிட நினைத்தாலும் கேட்க முடியாத சூழலே இருந்தது. மேலும் இந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கிற ரம்மியமான பொழுதுக்கு அவன் ஒரு தடைக்கல்லாகவும் ஆகிடுவானோ என்கிற அச்சமும் ஊடாடியது. கிராமத்தை மேலும் கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணி வெளியே வந்தான். எந்தப் பக்கமாய்ப் போவது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், அவனை எங்கும் வெளியே போக வேண்டாம் என்று நிர்மலா கேட்டுக் கொண்டாள். யாருமில்லை பக்கத்தில். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி "வெங்கடேசன் எப்ப வருவான்?" எனக் கேட்டான். அந்த வார்த்தைகளை அவள் கேட்டாளா என்று அறிந்து கொள்ள முடியாத வகையில் யாரோ ஒருவர் அவளை அழைத்துச் சென்றார். பாட்டி திடும்மென்று அவன் முன்னே ஆஜர் ஆனார். "தம்பி உன் பேரு என்னப்பா?" அவன் வாய்திறக்கவே அஞ்சியபோது நிர்மலா நடுவில் வந்து நின்றாள். "பாட்டி வள்ளி அத்தை உன்னைக் கூப்புடுறாங்க" என்றாள். அவ கிடக்கா ஒருத்தி. அவ கூப்புட்டா நான் உடனே போயிறணுமோ? இந்தப் பையன்பேரு என்ன சொன்ன?", "என்ன பேராயிருந்தா என்ன? பேரா முக்கியம், ஆளுதான் முக்கியம்.", "என்னவோ ரசீதுங்குறாங்க பேப்பர்ங்குறாங்க. நீயும் உங்க அம்மையும் சேர்ந்து என்கிட்டே பொய்யா பேசுறீங்க? ஊரு கூட திருநெல்வேலி இல்லியாம்!", "ஆமா! எல்லா ஊரும் நம்ம ஊருதான் பாட்டி. நீ பாட்டுக்குப் போ. எனக்கு இவங்க வேண்டப்பட்டவங்க. அவ்வளவுதான். மத்தது உனக்குத் தேவையில்லை." என்று பாட்டியைச் சிவந்த முகத்தோடு தள்ளிக்கொண்டு போனாள். ரஷ"துக்கு மனம் சுருண்டுவிட்டது. இவள் ஏன் அவனை மட்டும் இங்கே வரவழைத்தாள் என்பதே அவனுக்கு இன்னும் புரிந்த பாடில்லை. இப்போது நடக்கிற நாடகத்துக்கு என்ன பெயர் என்று கூடத் தெரியவில்லை. நேரம் ஆகஆகக் கூட்டம் சேர்ந்தாலும் அது நகரத்து இரைச்சலுக்கு உரிய கூட்டமாக இல்லை. எல்லாமே ஒரு கட்டுக்கோப்பாக இருந்தது. வைபவம் நடக்கும்போதுகூட வெங்கடேசன் தலை தட்டுப்படவில்லை. அவன் வராமல் இந்த வைபவம் நடப்பதை ரஷ"தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் இங்கு வர ஒரு வேளை சாத்தியப்படாமல் போய் விட்டதோ? பரீட்சை. இண்டர்வியூ என்று ஒரேயடியாக அலைந்து கொண்டிருப்பவன். இன்றும் எங்காவது போயிருப்பானோ? தன்பங்குக்கு ரஷ"து கவிதையும், அதனோடு 101/- ரூபாயையும் வைத்து ஓர் உறையில் போட்டுக் கொடுத்தான். "கவிஞர் கவிதையைப் பரிசாகக் கொடுக்கிறார்" என்று ஒரு தோழி நேர்முகவர்ணனை செய்தாள். உடனே சிரிப்பு எழுந்தது. "கவிதையைச் சும்மா கொடுத்தா எப்படி? அவரே வாசிக்கட்டும்" என்றாள் இன்னொரு தோழி. ஆமோதிப்புக் குரல்கள் பலமாய் எழுந்தன. நிர்மலாவின் சித்தி கவிதையை எடுத்துக் கையில் கொடுத்தார். அவன் வாசித்தான். எல்லோரும் அவனின் நாதமோங்கிய குரலில் கட்டுண்டனர். சின்னக் கவிதையாக எழுதாமல் பதினைந்து வரிகள் வரை எழுதியிருந்ததால் கூட்டத்தின் தேவையை அந்த வரிகள் நிறைவு செய்தன போல இருந்தது. காந்திமதி ரொம்பவும் வெட்கி மருகினாள். கவிதையை வாசிக்கும்போது எல்லோரையும் ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. ஆனால் ஓர் அதிரடியாய் எல்லோரையும் மடக்கிவிட எண்ணினான். வாசித்து முடிந்ததும் பெரியவர், சின்னவர், ஆண்கள்-பெண்கள் வித்தியாசமின்றி கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். ரஷ"துக்கு மெய் சிலிர்த்தது. கவிதையின் மதிப்பு என்னவென்பதை அவனே அப்போதுதான் உணர்ந்து கொள்கிறவனாய் ஆனான். நிர்மலாவின் அப்பா-அம்மா உள்ளிட்டு அனைவரும் அவன் கையைப் பற்றியும் தோளைத்தட்டியும் பாராட்டினார்கள். ஜிவ்வென்று வானத்தில் மிதந்தான். அந்த மிதப்பில் அவன் தெரிந்து கொண்டான்-பாட்டி அந்த இடத்திலும் இல்லை என்பதை! அவன் ஊர் புறப்பட்டபோது நிர்மலா சொன்னாள். "எங்கே நீங்க வராமப் போயிடுவீங்களான்னு பயம்மா இருந்தது. நல்லவேளையா வந்தீங்க. இப்போ எல்லாரையும் சந்தோசப் படுத்திட்டுப் போறீங்க." அவனை வழியனுப்பவே எல்லோரும் கூடிநின்றார்கள். நிர்மலாவின் தம்பி தன் சைக்கிளோடு அவனுக்காகக் காத்திருந்தான். அவன் "கேரியரில்" ஏறி உட்காரவும் எல்லோரின் கைகளும் கிளைகளாகி அசைந்தன. மீண்டும் பலமுறை இங்கே வரமுடியும் என்கிற நம்பிக்கையை அளித்தது. இன்று இவனைக் காணாமல் தவிக்கிற நண்பர்கள் மனதில் என்னென்னவெல்லாம் தூற்றிக் கொள்கிறார்களோ என்று எண்ணியவனாக வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான். வீட்டு வாசலின் முன்னே அம்மா நிற்பது தெரிந்தது. ஆனால் கூட நிற்பது வெங்கடேசனோ என்ற ஐயம் எழவும் அவன் மனசு படபடத்தது. தான் ஏன் சென்றோம். தன்னை மட்டும் நிர்மலா அழைத்தது ஏன் என்கிற விடையற்ற கேள்விகளையே அவன் எண்ணிக் குழம்பியவனாய் இருந்தான். ஒருவேளை நிர்மலா வெங்கடேசனையும் அழைத்திருந்தால் தான் எதைப் பேசுவது எப்படி பேசுவது என்கிற பயமும் சூழ்ந்தது. தான் ஏதாவதொன்றைச் சொல்லப்போய் வெங்கடேசன் அதை வேறுவிதமான சூழலில் புரிந்துகொண்டால் என்னென்ன விளைவுகள் உண்டாகுமோ என்கிற பீதி உச்சந்தலையில் ஏறியது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பேரரசன் நெப்போலியன், ஜெர்மனியைச் சேர்ந்த தளபதி, பாரிஸ்யைச் சேர்ந்த தளபதி, பொலனடைச் சேர்ந்த தளபதி, யூத தளபதி தலைப்பு: விருப்பப் பட்டியல்
பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான். முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன். அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான். மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான். கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான். அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான். மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள். யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்" இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான். அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், தானம், அமைச்சர்கள், மூக்குப் பொடி, கை தலைப்பு: கொடுக்கும் கை கீழே – வாங்கும் கை மேலே!
அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது. உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர். சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர். அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன். ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும். ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால். இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர். தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது. அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான். அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார். அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள். " காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் " சந்தேகப் பிராணி. முல்லா சிரித்துக் கொண்டே " நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் " என்றார். சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார். " ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. என் காலில் இருந்த துணியைக் காணோமே" என்று கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு " நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் " என்று சத்தம் போட்டான். அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர். நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார். சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர். பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சந்தேகப்பிராணி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நீதிபதி, மன்னர், மீன் வலை, தொழில் தலைப்பு: மீன் பிடித்த முல்லா
முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்." தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை" என்றார் மன்னர். இந்தச் செய்தியை முல்லா அறிந்தார். ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார். அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார்." முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?" என்று வினவினார்." மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார் முல்லா. இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது. அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார். சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார்." என்ன முல்லா மீன் வலையைக் காணோம்" என்று மன்னர் கேட்டார்." மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு" என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். மடத்தின் மேற்பார்வையாளர், "மேன்மை பொருந்திய ஆசிரியரே, உங்கள் உடல் நிலை தற்பொழுது எப்படி இருக்கிறது?" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். ஆசிரியர் மா, "சூரியனைப் பார்க்கும் புத்தா, சந்திரனைப் பார்க்கும் புத்தா" என்று பதிலுரைத்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…” இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது. “நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”. பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…” பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது. “உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிச்சைக்காரனும் தங்க நாணயமும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, மெழுகுவர்த்தி, நண்பர், இருட்டு தலைப்பு: இருட்டிலும் ஒலி கேட்கும்
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்." என்ன சமாச்சாரம்" என்று கேட்டார் முல்லா. " மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?" என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார்." இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?" என்றார். முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர். கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார். கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது. சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள். இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார். கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய். உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள். மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது. குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள். பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது. இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள். குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார். கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது. நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன். இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள். மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார். கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மனிதனுக்கு கிடைத்த ஆயுள்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான். மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!” என்றார். “மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான். “வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி! கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது” என்றார் மந்திரி. அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்!” என்றான் ஜலேந்திரன். “கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்” என்றார் மந்திரி. அதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான். இந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான். கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது. சிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, “அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறினான். மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. “மகாராஜா! உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்” என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், “நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்” என்று கூறி விடை கொடுத்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ’ ‘கீ’ என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, “என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார். “ஆம், பிரபு! நானும் எத்தனையோ கிளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களுடைய கிளியைப் போன்ற அழகான கிளியை இதுவரை நான் பார்த்ததில்லை” என்றார் தர்பாரில் இருந்த அக்பரின் அதிகாரிகளில் ஒருவரான ஃபயிஸ்கான்! உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பிய அக்பர்,“உனக்குக் கிளிகளைப் பற்றி தெரியுமா? எப்போதாவது கிளி வளர்த்தது உண்டா?” என்று கேட்டார். “இன்று வரை நான் பதினைந்திற்கு மேற்பட்ட கிளிகளை வீட்டில் வளர்த்து இருக்கிறேன். ஆனால் அவற்றை விட உங்களுடைய கிளி மிகவும் அழகாக இருக்கிறது” என்றான் ஃபயிஸ்கான். இவ்வாறு சொல்லி அக்பரின் மனத்தைக் குளிரச் செய்ய முயன்றான்! “மிகவும் நல்லதாகப் போயிற்று. உன்னை மாதிரி கிளி வளர்ப்பதில் அனுபவமுள்ள ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். இதை வளர்க்கும் பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். இதை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்! ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! இந்தக்கிளி இறந்துவிட்டதாக எவன் செய்தி சொல்கிறானோ, அவனுக்கு மரணதண்டனை விதிப்பேன்!” என்று சொல்லி கிளிக்கூண்டை அவன் கையில் தந்தார். அதைக்கேட்டு ஃபயிஸ்கானுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்திற்குள் தன்னைத் திட்டிக் கொண்டே “பிரபு! என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நான் மனமுவந்து ஏற்கிறேன்” என்று மிகவும் மகிழ்ச்சியுற்றவன் போல் அவரை வணங்கி எழுந்தான். பின்னர் அவன் கிளிக்கூண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். ஏற்கெனவே சிடுசிடுவென்றிருந்த அவன் மனைவி கிளிக்கூண்டைப் பார்த்து “இது ஏது? எதற்காக இதைப்போய் வீட்டுக்கு எடுத்து வந்தாய்?” என்றாள். “இதை நம் வீட்டில் வைத்து பாலூட்டி வளர்க்க வேண்டும்” என்றான் ஃபயிஸ்கான்.“சரிதான்! யார் இதை வளர்ப்பது?” என்று கேட்டதற்கு, “நீதான்!” என்று ஃபயிஸ்கான் கூறியதும், அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பின்னர் ஒரு கணம் நிதானித்து,“இதை சக்கரவர்த்தி உனக்குப் பரிசாக அளித்தாரா?” என்று கேட்டாள். அதற்கு ‘ஆமாம்’ என்று அவன் தலையாட்டினான். “வேறு யாரிடமாவது இதைக் கொடுத்துவிடு!” என்று அவள் அலட்சியமாகச் சொல்ல, “இதை வேறு யாரிடமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பொறுப்பை என்னிடம் சக்கரவர்த்தி கொடுத்து விட்டார். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், என் தலை உருளும்” என்று சொல்லிவிட்டு, தர்பாரில் நடந்ததை விளக்கினான். “எத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்?” என்று கூறிய அவன் மனைவி, வேறு வழியின்றி அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அன்று முதல், ஜாக்கிரதையாக அவள் அந்தக் கிளியைப் பராமரித்து வந்தாள். ஒருநாள் காலை, பயிஸ்கான் கூண்டினுள் நோக்கியபோது, கிளி மல்லாந்து விழுந்திருந்தது, அதைக் குரல் கொடுத்து அழைத்துப், தொட்டுப் பார்த்தும் அது எழுந்திருக்கவேயில்லை. உடனே அவன் தன் மனைவியைக் கூவி அழைத்தான். அவளும் ஓடிவந்து, கிளியை சோதித்துப் பார்த்தவள்,“ஐயோ! கிளி இறந்து விட்டதே!” என்று கூச்சலிட்டாள். – அதைக் கேட்டு ஃபயிஸ்கான், “ஐயோ! என் தலை உருளப்போகிறதே!” என்று தலையில் ‘படீர்’ ‘படீர்’ என்று அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனைவி அவனைத் தேற்றினாள். “நான் சொல்வதைக் கேளுங்கள். பீர்பாலிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லுங்கள். அவர் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார்” என்று யோசனை கூறினாள். டனே, ஃபயிஸ்கான் கூண்டைத் தூக்கிக்கொண்டு பீர்பால் வீட்டை நோக்கி ஓடினான். அவனைக்கண்ட பீர்பால், கூண்டைக் கையில் எடுத்து வந்திருக்கிறாயே! இந்தக் கிளியை வளர்ப்பதற்கு உன்னிடம் சக்கரவர்த்தி ஒப்படைத்திருந்தார் அல்லவா?” என்றார். “அதை நான் எப்படிச் சொல்வேன் பீர்பால்! ஜாக்கிரதையாக இதை வளர்த்தும், இன்று காலை இது திடீரென இறந்து விட்டது. இந்த செய்தியைக் கேட்டால், சக்கரவர்த்தி எனக்கு மரண தண்டனைதான் அளிப்பார்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கூறினான் ஃபயிஸ்கான். “கடவுளே! நீ நன்றாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாயே! சரி, எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது. நீ வா என்னுடன்! சக்கரவர்த்தியை சந்திப்போம்” என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல, பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான். அக்பர் தர்பாருக்கு வருமுன்னரே இருவரும் அங்கு வந்து விட்டனர். அக்பர் தர்பாரில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்ததும் அக்பர் அவரை நோக்கி “என்ன விஷயம்?” என்று கேட்டார். உடனே, கிளிக்கூண்டை எடுத்துக் கொண்டு அவரை அணுகிய பீர்பால், கிளியைச் சுட்டிக்காட்டி, “பிரபு! உங்களுடைய கிளி யோகாசனம் கற்றுக் கொண்டு இருக்கிறது. பாருங்களேன்!” என்றார். உற்றுப் பார்த்த அக்பர் கோபத்துடன் “என்ன உளறுகிறாய்? கிளி இறந்து விட்டது! எங்கே அந்த முட்டாள் ஃபயிஸ்கான்? அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!” என்றதும், பயந்து கொண்டே ஃபயிஸ்கான் முன்னே வந்தான். “தயவு செய்து நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்” என்ற பீர்பால் தொடர்ந்து, “பிரபு! அன்று ஒருநாள் இந்தக் கிளியை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை ஃபயிஸ்கானிடம் ஒப்படைத்தபோது நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா? “இந்தக் கிளி இறந்துவிட்டது என்ற தகவலைச் சொல்பவனுக்கு மரண தண்டனை” என்றீர்கள். அவ்வாறு சொன்னது நீங்கள்தானே!” என்றார். “ஆம்! அப்படித்தான் சொன்னேன்! இன்றும் அதையே சொல்கிறேன். என்னுடைய கிளி இறந்து விட்டது. அதனால்…” என்ற அக்பரை இடை மறித்தார் பீர்பால். “கிளி இறந்து விட்டது என்று சொன்னது நீங்கள்தான்! அதை ஃபயிஸ்கான் சொல்லவில்லை. அதனால் இப்போது யாருக்கு மரண தண்டனை தரவேண்டும்?” என்றார் பீர்பால். இதைக் கேட்டு அக்பர் உரக்கச் சிரித்தார். “பீர்பால்! நல்ல சமயத்தில் என் கண்களைத் திறந்து விட்டாய். ஒரு கிளிக்காக என் நல்ல அதிகாரிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது சரியல்ல!” என்றார். ஃபயிஸ்கானுக்குப் போன உயிர் திரும்பி வர, பீர்பாலுக்கு நன்றி கூறினான்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யாருக்கு மரண தண்டனை?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கழுதையின் தந்திரம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். முல்லா சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஒட்டிக் கொண்டு வருவான். விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் முல்லா அளவுக்கு அவ்வளவு மலிவாக கழுதைகளை விற்க முடிவதில்லை. ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் முல்லாவும் செல்வந்தரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் முல்லாவை நோக்கி, " முல்லா! என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்?" என்று கேட்டார். முல்லா புன்னகை செய்தபடியே, " அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் " என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள் யார்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிங்கம், கரடி, மான் குட்டி, குள்ள நரி, காடு, உணவு பஞ்சம், வேட்டை தலைப்பு: சிங்கமும், கரடியும், குள்ளநரியும்
அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது. அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் கரடியும் ஒரு ஒப்பந்தம் செய்தன. சிங்கம் கரடியிடம், "நாம் இருவரும் ஒன்றாக வேட்டையாடி இரையை சமமாக பிரித்துக் கொள்வோமா?" என்றது. கரடியும் சம்மதம் தெரிவித்தது. ஒருநாள் சிங்கமும் கரடியும் வேட்டைக்குச் செல்லும்போது, வழி தவறிய கால் உடைந்த மான் குட்டி ஒன்று வழியில் அமர்ந்திருபதைப் பார்த்தன. சிங்கத்திற்கும் கரடிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சிங்கமும் கரடியும் உணவு சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது. சிங்கமோ அந்த மானின் வயிற்றுப்பகுதி எனக்கு தான் என்றது. கரடியோ "இல்லை இல்லை அதன் வயிற்றுப்பகுதி எனக்கு தான்" என்றது. மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன. அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன. இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன. வீண் சண்டை என்றும் இரு தரப்பினருக்கும் தீமையாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது. குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன். குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார். குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு. ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன். ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள். ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி. பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர். அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார். ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி. பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான். நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன். அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள். கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு. பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார். குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன். ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள். இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர். குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன். எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார். மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான். திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான். தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு. ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன். தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள். இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன. உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது. இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது! சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள். தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வெள்ளை யானை பறக்கிறது' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை நிறத்தில் இந்த உச்சி வெயிலிலும் தண்மை உள்ளோடியிருந்தது. "பானு..." என்று வட்ட விளிம்பில் பெயர் பொறித்த வட்டிலில் பருப்புச் சாதமும், பட்டாணிப் பொரியலும் வைத்து என்னை மாடிக்கு ஏற்றிவிட்டிருந்தாள் அம்மா. ஆரம்பப்பள்ளி நாள்களில் ஸ்கூல் மெஸ்ஸ•க்குக் கொண்டு போகவென்று, அம்மா தினமும் காலையில் புதிது போல் துலக்கிய வட்டிலையும், டம்ளரையும் அவரவர் பையில் எடுத்து வைப்பாள். வரிசையாக எங்களைப் புகுந்த வீடு அனுப்பிய பிறகும் அந்த வட்டில்கள் எங்கள் பெயர்களோடு அம்மாவின் சமையலறையில் தங்கிவிட்டன. இந்த வெறிச்சென்ற வெயில், உலகத்தில் பறவைகளே இல்லை என்று எண்ண வைத்தது. ஆனால் அம்மா மிகுந்த நம்பிக்கையோடு கைசொல்லியிருந்தாள். அது வரும் - சரியாக மதியம் பன்னிரண்டே முக்கால் மணிக்கு. அடுப்பில் குக்கரின் விசில் அடங்கி இருக்காது. கொதிக்கும் குழம்பின் மேல் எண்ணெயின் ஏடு படியச் சற்றுக் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள், "அம்மா பசிக்குது, பசிக்குது'' என்று பானு தவித்துவிடுவாள். "என்ன அதிசயம் பாரு, தினமும் அதே பனிரெண்டே முக்காலுக்கே அந்தக் காக்காவும் வந்திடுது, என் கைச் சோற்றைச் சாப்பிட.'' அம்மா முகம் கலங்கி நிலைக்கச் சொன்ன போது எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கை வரவில்லை. "நீ தினமும் அதே நேரத்துக்கு மாடிக்குப் போவதால் அதுவும் வருது" என்று சொல்ல நினைத்தேன். இது இழந்துவிட்ட மகளின் இருப்பை எதிலோ காண அம்மா செய்யும் பலவீனமான முயற்சி. அதில் அவள் அடையும் மெல்லிய ஆறுதலை நான் எதற்காக அழிக்க வேண்டும்? மாடிச் சுவருக்குக் கீழாக வரிசையாகச் செந்நிறத் தொட்டிகளிருந்தன. சிறு பூச்செடிகளும், குரோட்டன்களும். அவற்றில் அந்தச் சாமந்தி பானு நட்டது. அது இன்னும் செழிப்பாக, பூத்துச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நீண்ட கம்பிக் கொடிகளில் நானும், அவளும் சேர்ந்து எத்தனையோ நாள்கள் துவைத்த துணிகளை உதறி உலரப் போட்டிருக்கிறோம்; துணிகளின் விளிம்புகளைச் சேர்த்துச் சேர்த்துச் சீராக்கி க்ளிப் மாட்டி நகரும் அவள் விரல்கள் இப்போதும் கம்பிக் கொடி மீது தத்திக் கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறேன். கோடைக்கால அதிகாலைகளில் அம்மா வடகத்திற்காக மாவரைத்து, கூழ் காய்ச்சி, வீட்டு வேலை பார்க்கும் தாயக்காவிடம் பானையைக் கொடுத்து மாடிக்கு அனுப்புவாள். நாங்களும் அடம் பிடித்து பின்னாலேயே ஓடுவோம். இந்த நீர்த்தொட்டியின் நிழலில் அம்மாவின் புடவையை விரித்து, நாற்புறமும் கற்கள் வைத்து, கிண்ணங்களில் அம்மா ஊற்றித் தந்த வடகக் கூழைச் சின்ன ஸ்பூனால் சீரான வட்டங்களாக ஊற்றி வைத்திருக்கிறோம் எவ்வளவோ முறை. "வெயில் வர்ரதுக்கு முன்னாடி மடமடன்னு ஊத்திட்டு இறங்குங்க.'' - அம்மா குரல் கொடுப்பாள் கீழேயிருந்து. தாயக்காவின் விரல்கள் வேகம் பிடிக்கும். நானும், தங்கைகளும் கீழே கொஞ்சம், மேலே கொஞ்சம், வாயில் கொஞ்சம், சேலை விரிப்பில் கொஞ்சம் என்று ஊற்றி விளையாடுவோம். இளவெயில் ஆரம்பித்திருக்கும். ஊற்ற, ஊற்ற வடகம் மெல்லிய கண்ணாடித் தாள் துண்டங்களாக உலர்ந்துகொண்டே வரும். அதன் மினுமினுப்பில் சீரகம் பதிந்து தெரியும். யார் கிண்ணம் முதலில் தீருமென்று போட்டி போட்டுக்கொண்டு ஊற்றுவோம். எல்லாப் போட்டிகளிலும் முதலில் ஜெயிப்பவள் பானுதான். இப்போதெல்லாம் இது போன்ற ஞாபகங்களை யாரோ எழுதிய பக்கங்களைப் போல வறண்ட விழிகளோடு வாசிக்க முடிவது ஆச்சர்யம்தான். தங்கைக்குப் பிடித்த நிற உடைகளை அணிகையிலும், தின்பண்டங்களை ருசிக்கும் போதும் ஏற்பட்ட கடுமையான குற்ற உணர்வு வரவர மங்கித் தேய்ந்து வருகிறது. "நான் அவளை மறந்து விடுவேனோ?" என்று நடுக்கத்தோடு நினைத்துக் கொள்கிறேன். "வந்ததா?'' படிக்கட்டிற்குக் கீழிருந்து கேட்ட அம்மாவிடம், "இன்னும் வரலைம்மா'' என்றேன் சலிப்போடு. "மணி இப்பதான் பனிரெண்டு நாற்பது'' என்றாள் அம்மா. சொல்லி வாய் மூடியிருக்கமாட்டாள். அவள் குரலின் கடைசி ஒலித்துணுக்கு என் காதுகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே வானில் ஒரு கதவு திறந்துகொள்ள அது உதித்தது. பூமியிலிருந்து வானத்துக்குப் போனதா அல்லது வானத்தில் வசித்துக்கொண்டு எப்போதாவது பூமிக்கு வருதா என்று அதிசயித்தேன். அதன் கரிய இறக்கைகள்; அசையாத கண்கள்; சுவர்த் திட்டில் உட்கார்ந்ததும் அது காட்டிய சவத் தன்மை என்னை அண்ட விடாமல் அச்சுறுத்தியது. கோயிலில் நவக்கிரகச் சந்நிதியை அம்மாவோடு சுற்றும் போது, "ஹை, கல் காக்கா'' என்றுவிட்டு, தலையில் குட்டு வாங்கி, "கன்னத்தில் போட்டுக்கோ. சனி பகவான் அது'' என்று அம்மா அறிவுரை சொல்வாள். பசிப் பரபரப்போ, இரையையடைந்த பரபரப்போ சற்றுமின்றி அது சாதத் தட்டை உற்றுப் பார்த்தது. இருள் தகடுகள் போன்ற இறக்கைகளை விரித்து இறங்கி, தனக்கான நிவேதனத்தை ஏற்கிற நிதானத்தோடு ஒரேயொரு பருக்கையை நாசூக்காகக் கொத்திக் கொண்டது. நான் அதை வெறித்தபடி இருந்தேன். சற்றுச் சாய்ந்த கழுத்து, உயிரற்றதோவென்று திகைக்க வைக்கும் கோலிக்குண்டுக் கண்கள். காகம் நளினமாகச் சுவர்த் திட்டில் நடை பயின்றது. ஒரு நீண்ட உரையாடலைத் துவக்கப் போவதுபோல் தொண்டையைச் செருமிக் கொண்டது. இறக்கைகளை விரித்துப் படபடவென்று அசைத்தது. அந்தச் செயல் தன்னைத் தழுவ வேண்டுமெனத் தரையிலிருந்து தாவும் பிள்ளையை நினைப்பூட்டியது. ஏதோ ஒரு உறவுக்கான ஏக்கம் அதன் அசைவுகளில் கசிந்து கொண்டிருக்கையிலேயே நான் சகிக்க முடியாத ஒரு நாடகத்திலிருந்து வெளியேறுபவளாக உணவுத் தட்டை அங்கேயே விட்டுவிட்டுப் படிகளுக்கு ஓடினேன். என் கண்கள் ஏனோ கசிந்தன. எரிபட்ட காகிதச் சுருளென அந்தக் காகத்தின் பறப்பு தாழ்வாரத்திலிருந்து மேலே பார்த்த போது தெரிந்தது. உடனடியாக இந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றிருந்தது எனக்கு. எந்த மூலையிலிருந்தாலும் பானுவின் பூஜையறைப் புகைப்படத்திலிருந்து நீண்டு வந்து தொடும் புன்னகை. உயிர் பொங்கும் வாசனை. தரையில் உலராமல் கண்ணீர்த் துளிகள் சிதறிக் கிடப்பதாகவே பிரமையேற்படுகிறது. அம்மா, "இருந்துவிட்டுப் போயேன் ஒரு இரண்டு நாளாவது'' ஏக்கமாய்ச் சொன்னாள். "இல்லைம்மா, கிளம்பறேன். இங்கிருந்தா என்னென்னவோ ஞாபகம் வருது.'' துணிகளைப் பெட்டிக்குள் திணித்துக் கொண்டே சொன்னேன். அவசரமாகக் காரிலேறிப் பயணம் துவங்கியதும் நிம்மதியாக உணர முடிந்தது. சாலையை அகலப்படுத்தவென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள். பிரேதங்களைப் பார்க்கும் போது ஏற்படும் துயரத்தை அவற்றின் பிளந்த சதையைக் காண்கையில் அநுபவித்தேன். எல்லாவற்றையும் கடந்து கார் வேகமாகப் போய்விட வேண்டும் என்று பதைபதைத்தேன். வேகமாக, இன்னும் வேகமாக, மிகமிக வேகமாக. உருவற்ற எதிலிருந்தோ ஓடித் தப்பி விடுகிறதாக இருந்தது என் பதற்றம். வயல்களின் பசுமை; மலைகளின் நீலம்; மலர்களின் மஞ்சள்; அந்தி வானின் ஆரஞ்சு. நல்லவேளை, உலகம் வர்ணக் கோலாகலங்களாலானது. கறுப்பின் துக்கம் மட்டுமே அதை ஆக்ரமித்திருக்கவில்லை. இருக்கையில் நிதானமாய்ச் சாய்ந்து, நீண்ட மூச்சுக்களை ஆழமாக இழுத்து விட்டேன். ஜன்னல் கண்ணாடி வழியாக, வருடக்கணக்காய்ப் பார்த்துப் பழகிய இந்தப் பாதையை இன்றுதான் புதிதாக - முதல் முறையாகப் பார்ப்பது போல் விழி விரிய ஆர்வத்துடன் கவனித்த போது அதைப் பார்த்தேன். அதுவேதான். வானின் துல்லியமான வெறுமை. கரிய அலையொன்று நடுவில் மடிக்கப்பட்டு நீண்டு உடலாகி, இருபுறமும் சிறகுகள் விரிய, தலையும் அலகும் முளைத்தாற்போல் அது ஒன்றுமின்மைக்குள்ளிருந்து தோன்றியது. உலகத்தின் அத்தனை துன்பங்களையும் மொத்தமாகத் தன் சிற்றுடல் மேல் சுமப்பது போல் கவிழ்ந்து காரின் ஓட்டத்திற்கு இணையாகப் பறந்து கொண்டிருந்தது. இல்லை, இது எப்படி அதே காகமாக இருக்க முடியும்? ஆனால் அதே சாய்ந்த பார்வை. கழுத்தடியில் அதே சிறு வெண்திட்டு. அதை அடையாளப்படுத்துவதாக. எனக்குள் அச்சம் பெருகியது. அதன் பார்வை என்னை நோக்கித் திரும்பியது. மூடிய ஜன்னல் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு உள் நுழைந்த அதன் மன்றாடல்கள் எனக்குள் எரிச்சலையே விளைவித்தன. இடைவிடாத அதன் தொடரலைக் கவனியாதது போல், கண்டுகொள்ளாதது போல், நிராகரிப்பது போல் பாவனை செய்வது வசதியாக இருந்தது. அது ஏன் என்னையே பின் தொடர வேண்டும்? சலிக்காமல். சிறகடிப்புகளில் உரத்து ஒலிக்கிற இறைஞ்சல்களுடன் பிடிவாதமாக. என்னவோ ஒரு செய்தியை ஏந்தி வருகிற தூதுவன் போல். என்னிடம் எதையோ சொல்லத் தவிப்பது போல. நான் விரும்பாவிட்டாலும் அந்தத் தகவல் என் மனதில் ஊன்றப்படப் போகிறது ஆழமாக. ஒரு சிறிய இடைவெளியில் அது விலகி, என் கண்ணில் படாமல் காணாமல் போனபோது பெரும் ஆசுவாசத்தையடைந்தேன். ஊர் நெருங்கிவிட்டது. இந்த ஊருக்குள் அது வராது என்று எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன் ஏனோ. விரிந்த கதவுகளோடிருந்த வீட்டின் அரவணைப்பை இதமாக உணர்ந்தேன். இரண்டு நாட்கள். நான் வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டேன். முற்றம், ஜன்னல், வாசல், தோட்டம் என்று காகங்களைச் சந்திக்கும் இடங்களைக் கவனமாகத் தவிர்த்தேன். கறுப்பு நிறப் புடவைகள், ஸ்டிக்கர் பொட்டுகள், கறுப்பு அட்டையுள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டால் மரணத்தின் நிச்சயத்தன்மையையும் தவிர்த்து விடலாமென நம்பினேன் அபத்தமாக. சீரான ஒழுங்கமைதியோடு ஓடுகிற தின வாழ்க்கை அலுப்பூட்டுவது, திருப்பங்களில்லாதது. ஆனால் அபாயங்களற்றது. நாட்களின் நகர்வில் அந்தக் காகத்தை நான் மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பானுவின் பிறந்த தேதியன்று சமைக்கும் போதும், துணிகளை மடித்து அடுக்குகையில், புத்தகத்தில் என்னைப் புதைக்க முற்படும்போதும் அவள் நினைவுகள் வேதனை தந்தன. அப்படியே அடுத்த பிறவியிருந்தாலும் பானு ஒரு காகமாகவா பிறப்பாள்? சே... இல்லவே இல்லை. அவள் ஒரு புறாவாகப் பிறந்திருக்கக் கூடும். அல்லது மயிலாக; இல்லை, ஒரு சிட்டுக்குருவியாகவாவது. பட்டாம்பூச்சியாகப் பூக்களுக்கிடையில் திரிந்து கொண்டிருப்பாள் என்று நினைக்கப் பிடித்திருந்தது. உடனே "மறுபிறவியாவது ஒன்றாவது" என என்னையே மறுத்துக்கொண்டேன். புழுங்கிக் குமைந்த பகலைக் கோடைமழை ஊடுருவியது. ஜன்னல் கண்ணாடியில் வழியும் மழைத் தாரைகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அது வரப்போகிறது என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தே இருந்தது. அது மழையில் நனைந்து சொட்டும் சிறகுகளோடு வந்து ஜன்னல் மரச் சட்டத்தின் வெளித்திட்டில் உட்காந்தது. அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது அது ஒருமுறையேனும் மற்ற காகங்களைப் போல் கரையவேயில்லை என்பது. அது சிறகுகளைச் சிலுப்பி நீரை உதறிக்கொண்டது. அந்த வரிகளை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேனா என்ன? "ஆத்மா என்ற நிலையில் அனைவரும் அழிவற்றவர்கள். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. அது நித்யமானது. எப்படி ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும், முதுமையும் வருகின்றனவோ அவ்வாறே வேறு உடலும் வந்து சேர்கிறது.'' தலையை உலுக்கிக் கொண்டேன். ஜன்னலை விட்டு நகர்ந்து படுக்கையில் விழுந்தேன். மனம் காகங்களை நான் வெறுப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது. உலர்ந்த துணிகளை எடுக்க மாடியேறினால் உச்சந்தலையில் அலகால் கொத்துவது. ஒரு நாள் ரத்தமே வந்துவிட்டது. பல வருடம் முன்பு இருந்த தாத்தாவின் குட்டி ஆக்ஸ்ஃபோர்டு டிஸ்னரியைப் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வைத்திருந்தேன். அதைப் பால்கனியில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் போய்த் திரும்புமுன் கீறிக் கிழித்துக் குதறியிருந்தது ஒரு காகம். இந்தக் காகங்கள் வழக்கமான மீனின் தலையையோ, கோழியின் எலும்பையோ கோலத்தின் மீது போட்டுவிட்டுப் போகும். யோசித்தபடியே தூங்கிவிட்டேன்; இருளின் ஆழத்திலிருந்து எழுந்த காகத்தின் பாதங்கள் என் மேல் நடக்கின்றன. அதன் இறக்கைகள் படபடக்கின்றன. அந்தக் கூர்மையான அலகு என் உடலைக் கிழிப்பதற்குள் விழித்துவிட்டேன். விடிந்ததும் வானில் சூரியனுக்குப் பதில் ஒரு காகம்தான் உட்கார்ந்திருக்கும் என்று வெறுப்போடு ஜன்னலைத் திறந்தேன். சூரியனின் ஒளி கண்ணைக் கூசச் செய்தது. நிறையக் காகங்கள்; எதற்காகவோ இப்போதே விழித்து, என்ன தேடியோ எங்கெங்கும் பறந்து "கா...கா..." வென்ற குரலால் உலகை நிறைத்து... நல்லவேளை இதில் எந்தக் காகத்திற்கும் கழுத்தில் வெண்திட்டு இல்லை. அது கண்ணில் தென்படாமலேயே சில நாட்கள் கடந்தன. அதன் வருகைக்காகக் காத்திருக்கத் துவங்கிவிட்டதாக உணர்ந்தேன். இல்லை; அது வரவேண்டும் என நான் விரும்பவில்லையென்றும் எனக்குள் சொல்லிக்கொண்டேன். "என்னவோ போகட்டும்; அது ஒரு சாதாரண ஜீவன். அடுத்த முறை வந்தால் அதற்கு ஒரு கவளச் சாதத்தை வைத்தால் போயிற்று" என் தீர்மானம் எனக்கு வியப்பாயிருந்தது. கனவென்றுதான் சொல்ல வேண்டும். இரவின் கருமை முழுவதும் ஒரே புள்ளியாகக் குவிந்தது. பிறகு அந்தச் சிறு புள்ளி என் நெற்றியில் தொற்றிப் பதிந்து, மூக்கு, உதடு, கழுத்து என்று நகர்ந்தது. அது மார்பில் நிலை கொண்டுவிடும் என்று நினைத்த போது நிதானமாகித் திரண்டு கருப்பைக்குள் புகுவதைக் கண்டேன். நொடியில் எண்ணற்ற பறவைக் குஞ்சுகள் பொரிந்து சிறகு பெற்று என் அடிவயிற்றில் நீந்தின. மிகவும் அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. காலையின் குளிர் என் சருமத்தில் ஊசி முனைகளாகப் பதிந்தது. வாசலின் முதல் படியை விட்டு இறங்கியபோது பாதத்தில் எதுவோ பட்டது. வெதுவெதுப்பான, மிருதுவான, விலுவிலுவென்ற என்னவோ. குனிந்து பார்த்தபோது முதலில் அது ஒரு கறுப்புத் துணியாகத்தான் தெரிந்தது. திறந்த விழிகளும், விறைத்த உடலுமாக அது உயிரற்றுக் கிடந்தது. பெருக்குமாற்றால் அந்தச் செத்த காகத்தைப் புரட்டினேன். என் கை நடுங்கியது. மெல்லிய ரோமங்கள் விலக, அதன் கழுத்திலிருந்த அந்த வெண்திட்டு வெளிப்பட்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அது' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன. எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர். நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்பட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள். இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கல்கள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர். ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான். அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆளுக்கு ஒரு கால்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: காட்டு நாய், சிறுத்தைப்புலி, குரங்கு தலைப்பு: சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
நாய், சிறுத்தை,குரங்கு ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது…. "இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்" என்றது. இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது. இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது. அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது. எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது. குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது. அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன். "இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு, ""குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்" என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது. இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை. அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது. "அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?" என்றது. காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது. நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மீன்கள், பாம்புகள், விலாங்கு மீன் தலைப்பு: வேஷங்கள் நிலைப்பதில்லை
ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும் இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும். மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும். இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு. வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன. ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது. அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின. "நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல" விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு "முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ" என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது. நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சுந்தரமூர்த்தி, ஜோசப், தெரஸா, முதியோர்களுக்கான இல்லம், ரிடயர்ட், மழை தலைப்பு: அவன்
வானம் நீலமாய் தெளிந்திருக்க, திருதிருவென கீழ் இறங்கிய சித்திரை மாத வெயில் பூமியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அகன்றதொரு அத்தி மரத்தின் நிழலில் அந்த "அன்னை தெரஸா" என்கிற முதியோர்களுக்கான இல்லம் சற்றே குளிர்ந்திருந்தது. மரத்தடியிலிருந்த நீண்ட சிமெண்ட் இருக்கையில் சுந்தரமூர்த்தி உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம். நிறைய நரைத்திருந்தார். குறுக்கும், நெடுக்குமாக கீறல்கள் விழுந்த மூக்கு கண்ணாடிக்குள் அவருடைய பார்வை அமைதியாய் விழித்திருந்தது. அருகாமையில் "தெரஸா" இல்லத்தின் மானேஜரான ஜோசப், கருணையோடு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். "என்னோட மனைவி இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். ஆச்சு... அவ செத்துப் போயி மூணு வருஷமாச்சு, ஆனா நான் துளிகூட நினைச்சே பார்க்கலே. எனக்கு இந்தகதி வரும்னு. அவ இறந்த அடுத்த வருஷமே என்னோட மூத்த பையன் சண்டை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். கடைசி காலத்தில் என்னோட அவன் இருப்பான்னு ரொம்பவே எதிர்பார்த்தேன். சுந்தரமூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது. "ஏதோ எனக்கு கிடைச்சிட்டிருந்த பென்ஷன் பணத்தை வெச்சுகிட்டு இரண்டாவது பையனோட இருந்திட்டுருந்தேன். காலேஜ்ல படிச்சிட்டிருந்தான். அவனும் இப்ப என்னோட இல்ல.", "ஏன் சார்!" ஆதங்கத்தோடு ஜோசப் கேட்டார். "அவன் இப்ப இருக்கிற இடமே தெரியல. போதை பொருளுக்கு அடிமையாகி, புத்தி பேதலிச்சுப் போச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்து பார்த்தேன். எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாங்க. திடீரென்று ஒரு நாள் அவன காணல. எங்க போனான்னு தெரியல. எல்லாமே திசை மாறிப்போச்சு. அதுக்கப்புறம், என்னால - தனியா..." சுந்தரமூர்த்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார். "சார், உங்களோட கவல எனக்கு புரியறது. கடவுள் உங்கள கை விடமாட்டார் சார். காட் இஸ் கிரேட்." ஜோசப் ஆறுதல் அளித்தார். சுந்தரமூர்த்தி கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன் பேச்சை தொடர்ந்தார். "ஆனா... ரொம்பப் பெரிய அதிசயம் என்னன்னா, நான் இங்க உள்ள நுழைஞ்ச உடனே கவனிச்சிட்டேன். என்னோட உயிர் நண்பன் பக்கத்தில இருக்கானேன்னு ரொம்ப சந்தோஷமா போச்சு. ஆச்சரியமாக் கூட இருந்துச்சி." ஜோசப்பிற்கு ஒன்றும் புரியவில்லை. "சார். நீங்க யாரை சொல்றீங்க?", "வாங்க காட்றேன்." சுந்தரமூர்த்தி இருக்கையை விட்டு எழுந்தார். கூடவே ஜோசப்பும் எழுந்தார். நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவர் ஒன்று இல்லத்தைச் சுற்றி வளைத்திருந்தது. சுந்தரமூர்த்தி மெல்ல நடந்து அந்த சுவரருகே சென்றார். மதிலின் மறுபக்கம் ரயில் தண்டவாளங்கள் இருந்தன. தெற்கே செல்லும் டீசல் ரயில் ஒன்று பெருத்த இரைச்சலோடு வேகமாக கடந்துபோனது. சற்று தொலைவில் உபயோகத்தில் இல்லாத நீராவி ரயில் இன்ஜின்கள் ஐந்தாறு ஓரங்கட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பழைய நீராவி ரயில் கூட்டத்தின் மீது சுந்தரமூர்த்தியின் பார்வை விழுந்தது. "அதோ நிக்கறானே அவன்தான்!" சுந்தரமூர்த்தி கைநீட்டி குறிப்பிட்ட இடத்தில் ரயில் இன்ஜின்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதையறிந்த ஜோசப், குழப்பத்தில், "யாருமே அங்க இல்லையே சார்" என்றார். "அதோ அங்கே நான்காவதா நிக்கறானே, அவன்தான், ரைட் சைட்ல பாருங்க" ஜோசப்பில் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது. "நான் சதர்ன் இரயில்வேயில் லோகோமோடிவ் டிரைவராயிருந்து ரிடயர்ட் ஆயிட்டேன். நாலு வருஷமாச்சு." சுந்தரமூர்த்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கூறியது ஜோசப்பின் நினைவுக்கு வந்தது. அவர் அங்கே நின்று கொண்டிருந்த ரயில் இன்ஜின்களில் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் புரிந்தது. "அந்த லோகோதானா சார் நீங்க ஓட்டிட்டிருந்தது!" மிகுந்த ஆச்சரியத்தோடு ஜோசப்பின் கேள்வி எழுந்தது. "ஆமாம். அவனேதான்". "நீங்க ஓட்டின லோகோ அதுதான்னு எப்படி உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது?" ஜோசப்பை மெல்ல ஏறிட்டு பார்த்தார் சுந்தரமூர்த்தி. "ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. முப்பத்தி நாலு வருஷம் அவனோட நான் பழகியிருக்கேன். அவன நீங்க ஒரு இயந்திரமா பாக்காதீங்க. அவனுக்கும் உணர்வுகள் இருக்கு. இன்ச் பை இன்ச் அவன எனக்கு தெரியும்" ஆத்மார்த்த நட்பின் புரிதலோடு சுந்தரமூர்த்தி தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். "அவனோட உழைப்பு ரொம்பப் பெரிசுங்க ஜோசப். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு. அவன் கடுமையா உழைச்சான். கூலியேயில்லாம!" ஒரு பழைய நீராவி ரயிலை... இத்துப்போன இரும்பு மிஷினை.... வெறும் இயந்திரமாக மட்டுமே பாராமல், உயிருள்ள மனிதனாகவே மனதிற்குள் பாவித்து நேசம் கொண்டிருக்கும் சுந்தரமூத்தியை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப். "நான் ரிடயர்ட் ஆன இரண்டு மாசத்துல, அவனையும் டிபார்ட்மெண்ட் வயசாயிடுச்சுன்னு சொல்லி ஓய்வு கொடுத்துடுச்சி, டீசல், எலக்டிரிக் ட்ரெய்னெல்லாம் வந்திடுச்சில்ல. அதான் அவன ஒதுக்கிட்டாங்க. முதல்ல யார்டுக்குத்தான் அனுப்பிச்சாங்க. நானும் அப்பப்ப போயி பார்த்துட்டு வருவேன். தனியா... ஒரு மூலையில அனாதையா நின்னுட்டிருந்தான்." சுந்தரமூத்தியின் குரல் கம்மியது. ஜோசப்பின் முகத்தில் இறுக்கம். "அப்புறம் என்னாச்சு சார்!" என்றார். "அவனையும் ஒரு நாள் அங்க காணல. இட நெருக்கடியால யார்ட்ல இருந்து வேற எங்கேயோ கொண்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நெஞ்சு பதறிப்போச்சு. எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு வேதனை. அவன தேடி அலைஞ்சேன். எங்கேயும் காணல. இரண்டரை வருஷமா அவன பார்க்கவே முடியாமப் போச்சு." சுந்தரமூர்த்தியின் தொண்டைக்குழி, விம்மி அடங்கியது. "அதுக்குப்பிறகு இப்பதான் அவன பார்க்கறேன். இங்க அவன சந்திப்பேன்னு நினைக்கவேயில்ல." எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிய அரியதொரு புதையல் கிடைத்துவிட்டது போல் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. மழை வருவதையுணர்ந்த மயில் குதூகுலத்தோடு தோகை விரித்தாடுவதைப்போல் அவர் நெஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. தரை தவழ்ந்து, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்ட குழந்தையின் தெம்பில் அவர் திளைத்திருந்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: படகு அக்கரையில் இருந்தது. படகுத் துறையில் கேசவனோடு மொத்தம் பத்துப் பேர் காத்திருந்தார்கள். எல்லோரும் ஆண்கள் கேசவனையும், கையிடுக்கில் கட்டை ஊன்றிய வயதானவன் ஒருவனையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மோட்டர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவற்றையும் படகில் ஏற்றியே அக்கரை போக வேண்டும். வண்டிகளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு பக்கத்துக் கடையில் எலுமிச்சை சர்பத் குடித்தபடியோ, அது முடிந்து புகை வலித்துக்கொண்டோ அல்லது சீட்டில் உட்கார்ந்தபடிக்கே நாலாக மடித்த பத்திரிகையை விரித்துப் படித்தபடிக்கோ இருந்த அவர்களில் யாருக்கும் அக்கரை போக அவசரம் உண்டென்று கேசவனுக்குத் தோன்றவில்லை. அவசரம் வேண்டாம். ஆனால் ஏன் எலுமிச்சை சர்பத்? கேசவன் உத்தியோகம் பார்க்கும் கம்பெனி விற்பனைக்கு இறக்கிய குளிர்பானத்தைக் குடிக்கலாம் தானே? சர்வதேச அளவில் எல்லா வயதினரும் விரும்பி வாங்கி வருடத்தின் பனிரெண்டு மாதமும், நாளின் இருபத்துநாலு மணி நேரமும் ஆஹா. கேசவன் மனதில் எழுந்த விளம்பர கீதத்தைக் கஷ்டப்பட்டு விழுங்கியபடி கிழவனைப் பார்த்தான். கிழவன் பக்கத்தில் வைத்திருந்த சிறிய சணல் மூட்டையை இன்னும் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான். ஐந்து நிமிடத்தில் கடந்துடலாம். படகு வந்தால் தானே? அவன் கேசவனிடம் முறையிடுவதுபோல் பேசினான். அவனுக்கும் அக்கரை போக அவசரம் உண்டு என்பது கேசவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஞாயித்துக்கிழமை என்பதாலோ என்னமோ மெத்தனமா இருக்காங்க எல்லோரும். கேசவன் அக்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகைச் சுட்டிக் காட்டியபடி ரகசியம் போல் கிழவனிடம் தெரிவித்தான். மற்றவர்கள் கேட்டுத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும் என்று ஏனோ அவனுக்கு ஒரு தயக்கம். படகு வர இன்னும் சற்று நேரமானால் அவர்களில் ஒருவராவது குளிர்பானம் குடிக்க முற்படலாம். கேசவன் வேலை பார்த்துச் சம்பளம் வாங்க அதுவும் ஏதோ விதத்தில் உதவியாக இருக்கும். அதற்கு அக்கறை போகணும். படகு வர வேணும். ''உத்தியோகத்திலே இருக்கறவங்களுக்கு வேலைக்கும் ஒழிவுக்கும் கிழமை உண்டு. மத்தவங்களுக்கு எல்லா நாளும் ஒண்ணு போலதானே?'' கிழவன் கேசவனிடம் சொன்னான். படகுத் துறை ஓரமாக நகர்ந்து தண்ணீரில் கால் நனைய உட்கார்ந்த படி, தாங்கு கட்டையைச் சத்தமெழத் தரையில் போட்டான். அந்தக் கட்டை அவனை வெகுவாக இம்சித்திருக்க வேண்டும். அதனோடு சதா இருக்க வேண்டிய கட்டாயம் அலுப்படையச் செய்திருக்கலாம் என்று கேசவன் நினைத்தான். அக்கரையில் ஸ்டீம் லாஞ்சின் இஞ்ஜின் அறையிலிருந்து தலையை எக்கிப் பார்த்து ஒருத்தன் ஏதோ உரக்கக் கூவினான். அவன் என்ன சொல்கிறான் என்பது இந்தப் பக்கத்தில் யாருக்கும் அர்த்தமாக வில்லை. ஒரு வினாடி அவனைக் கவனித்து விட்டு எலுமிச்சை ரசத்திலும் பத்திரிகையிலும் சிகரெட்டின் கடைசித் துண்டத்திலும் அவரவர்கள் மூழ்கியிருந்தார்கள். ''என்ன சொல்றார் அவர்?'' கேசவன் கிழவனைக் கேட்டபடி அவன் பக்கமாக உட்கார்ந்து சட்டைப் பையில் இருந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். கிழவன் அவசரமாகத் தன் தாங்குக் கட்டையைக் கொஞ்சம் எழும்பி வாரியெடுத்து, மடியில் குழந்தை போல் போட்டுக் கொண்டான். அதனிடம் இருந்த வெறுப்போ மற்ற எதுவோ வெகுவாகத் தணிந்து அது திரும்ப விருப்பமுடையதாக மாறி இருக்கும். சணல் மூட்டையும் இன்னும் அருகே நகர்த்தப்பட்டது. அது இன்னும் கொஞ்சம் நகர்ந்தாலும் ஆற்றில் விழுந்துவிடலாம். ''எஞ்ஜினிலே ஏதோ ரிப்பேர்னு சொல்றான் போல.'' கிழவன் கொஞ்சம் சத்தத்தைக் கூட்டிச் சொன்னான். அவன் கூறுவதை மற்றவர்களும் கவனிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். கேசவனைத் தவிர வேறு யாரும் இந்தப் பக்கம்கூடத் திரும்ப வில்லை. ''அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சத்தம் உங்களுக்கு என்னன்னு புரியுதா?'' கேசவன் நம்பியும் நம்பாமலும் கேட்டபடி சிகரெட் பெட்டியைக் கிழவனிடம் நீட்டினான். ''இல்லே, நான் பீடிதான் குடிக்கறது. வள்ளம் போனதோடு அதுவும் போச்சு. காசு வேணாமா பீடி வாங்க?' கிழவன் சிரித்தான். இவன் படகுக் காரனாக இருந்திருக்கிறான். காலும் கையும் திடமாக இருந்தபோது படகு வலித்துப் போயிருக்கிறான். ஒரு பரிசல் மாத்திரம் இருந்தால் இவன் இப்போதும் தன்னைக் கரை சேர்த்துத் தானும் போய்விட முடியும். கேசவன் கிழவனை ஒரு புதிய மரியாதையோடு பார்த்தான். இவனுக்கு நீந்தவும் தெரிந்திருக்கும். கேசவனுக்குக் கைவராத வித்தை அதுவும் கூட. ''எங்கே படகு ஓட்டிட்டு இருந்தீங்க?'' கேசவன் சிகரெட் துண்டைத் தண்ணீரில் எறிந்தபடி கேட்டான். இறுதி சுவாசம் போல் புகைவிட்டு அணைந்த அந்தத் துண்டைப் பார்த்தபடி இருந்தான் கிழவன். அதைத் தண்ணீரில் எறிந்தது அவனுக்குப் பிடிக்காத காரியமாகக் கேசவனுக்குப் படவே தண்ணீரில் கைவிட்டு அதைத் திரும்ப எடுக்க முற்பட்டான். அவன் கைக்குக் கிட்டாமல் அது விலகி மிதந்து போனது. ''விடுங்க. ரொம்பக் குனிஞ்சாத் தண்ணியிலே விழுந்துடப் போறீங்க. அப்புறம் உங்களை யாராவது வந்து தான் கரையேத்தணும்.'' தனக்கு நீந்தத் தெரியாததைக் கிழவன் எப்படி அறிந்து கொண்டான் என்று கேசவனுக்கு நிச்சயமாகத் தெரிய வில்லை. ஜாக்கிரதை யாகத் தண்ணீரில் கையை அளைந்ததை வைத்துப் புரிந்து கொண்டவனாக இருக்கும். அக்கரையிலிருந்து தொப்பென்று சத்தம் ஸ்டீமரிலிருந்து இடுப்பில் அண்டர்வேர் மட்டும் தரித்த ஒரு வாலிபன் தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்திருந்தான். ''ஆறு இந்தப் பக்கம் பல இடத்திலேயும் ஆழம் அதிகம். போதாக் குறைக்கு மணல் வேறே. உள்ளே மாட்டினா சிக்க வச்சிடும்.'' ''அப்ப இங்க ஒரு பாலம் கட்டலாமே? ஏன் இதுவரை அதை யாரும் யோசிக்கலே?'' கேசவன் கேட்டான். ''ஆரம்பிச்சாங்களே. அதோ அங்கே பாருங்க.'' கேசவன் அவன் காட்டிய திசையில் பார்க்க, காலே அரைக்கால் பகுதி பணி தீர்த்த ஒரு கருப்பு மேடை ஆற்றுக்குள் துருத்திக் கொண்டிருந்தது. ''சர்க்கார் மாறிப் போனதும் ஊழல் புகார். விசாரணை. பாலம் அப்படியே நின்னுடுச்சு.'' கிழவன் மறுபடி சிரித்தான். புகை வலித்து முடிந்த யாரோ திரும்பப் போக வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்த சத்தத்தில் அது அமுங்கி ஒலித்தது. ''பாலம் வராததும் ஒரு விதத்திலே நல்லதுதான். நானும் இன்னும் ரெண்டு பேரும் எப்பவும் போல இங்கே பரிசல் ஓட்டி ஜனங்களை இக்கரைக்கும், அக்கரைக்கும் கொண்டு விட்டுட்டு இருந்தோம். ஒரு அணாதான் வாங்கறது. மழைக்காலத்திலே கூட ஒரு அணா.'' அணாக் கணக்கில் பேசும் கிழவன். கட்ட ஆரம்பித்த பாலமும் அவனைப் போலவே எத்தனை வருடமாக இப்படிக் கிழடு தட்டி நிற்கிறதோ. ''பாலம் பாதியிலே நின்னதும் சர்க்கார் இலவச படகு சர்வீஸ் ஆரம்பிச்சது. அப்போ ஏதோ எலக்ஷன் கூட வந்தது. தெரியுமோ அதெல்லாம் உங்களுக்கு?'' கேசவனுக்கு அதொண்ணும் தெரியாது. அவன் பிறப்பதற்கு முன்பே நடந்த பலதில் அதுவும் ஒண்ணாக இருக்கலாம். ''அக்கரையில் பிரார்த்தனைக்குப் போறீங்களா?'' ''இல்லை'' என்றான் கேசவன். அந்தப் பதிலில் கிழவனுக்கு நிராசை என்று அவன் முகத்தில் தெரிந்தது. அவன் சணல் மூட்டையைச் சற்றே திறந்து கேசவனுக்குக் காட்டினான் உடைந்த கண்ணாடித் துண்டுகள் உள்ளே நிறைந்து கிடந்தன. கேசவனுக்கு வெகுவாகப் பழக்கமானவை அவை. ''அங்கே பிரார்த்தனை செய்தால், இதெல்லாம் திரும்ப முழு போத்தலாகிறது.'' கிழவன் கேசவனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தபடி சொன்னான். நம்ப முடியாது என்பதாகத் தன்னிச்சையாக மறுத்துத் தலையாட்டினான் கேசவன். தனக்கு விதிக்கப்பட்ட ஏதோ காரியத்தைச் சரியாக நிறைவேற்றாத குற்ற உணர்வோடு அவன் கண்கள் ஆற்று நீர் வீசியெறிந்து போகும் அலைகளில் நிலைத்திருந்தன. கிழவன் தோளில் தொங்கிய துணி சஞ்சியிலிருந்து எதையோ எடுத்தான். பழைய போத்தல். இங்கே சின்னச் சின்ன சோடா பானத் தயாரிப்பு நிறுவனங்கள் கறுப்பும்; சிவப்பும், ஆரஞ்சு வர்ணமுமாகத் திரவங்களை அடைத்து விற்கும் குடுவை. கேசவனுக்கு மிகவும் பழக்கமானது அந்த போத்தல். ''இதென்ன நாலைஞ்சு கம்பெனி பாட்டிலை ஒட்டிச் சேர்த்தமாதிரி இருக்கே?'' கேசவன் குரலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை மீறி ஒரு சிறிய நிம்மதி தென்பட்டது. ''ஆனா என்ன? இது விலை போகும். மண்ணெண்ணெயோ, பிரார்த்தனை முடிஞ்சு தர தைலமோ எடுத்துப்போக இதை ஐம்பது காசு கொடுத்து வாங்கறாங்க.'' அக்கரையில் சம்பளம் வாங்கியதும் கேசவனும் பிரார்த்திப்பான் நாளைக்கு மோட்டார் சைக்கிளில் இங்கே படகேற வருகிறவர்களுக்கு நேரத்தில் படகு கிடைக்கும். அவனுடைய கம்பெனியின் குளிர்பானம் குடிக்க அவர்களில் சிலருக்காவது விருப்பம் உண்டாகும். தற்காலம் ஆகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதும், சர்வதேச அளவில் எல்லா வயதினரும் விரும்பி வாங்கி வருடத்தின் பனிரெண்டு மாதமும், நாளின் இருபத்துநாலு மணி நேரமும் குடித்துச் சுகப்படுவதுமானது. ''படகு வந்தா இந்த மூட்டையிலிருந்து ஒரு அஞ்சு ரூபாயாவது சம்பாதிக்கலாம். அதுக்குள்ளே பிரார்த்தனை முடியாம இருக்கணும். கிழவன் பெருமூச்சு விட்டான். ''பிரார்த்தனை எங்கே நடக்கறது?'' கேசவன் கேட்டான். ''ஒரு பழைய கட்டிடத்திலே. முப்பது பேருக்கு மேலே உள்ளே இருக்க முடியாது. நான் போகிற போது வெளியே தான் நிக்க வேண்டி வருது. இப்ப நாலஞ்சு கூட்டிச் சேர்க்காமே ஒரே போத்தலோட துண்டுகள் மட்டும் ஒண்ணாச் சேரத்தான் போறது. சீக்கிரமே. ஒரு தடவை உள்ளே போய் பிரார்த்தனை செய்தாப் போதும். அந்தப் போத்தல் ஒரு ரூபாய்க்குப் போகும். கம்பெனிக்காரனே வாங்குவான்.'' அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு ஞாயிற்றுக் கிழமை விடிகாலையில் பிரார்த்தனைக்குப் போகும் போது அவன் திரும்ப நடக்கவும் தொடங்குவான். அப்புறம் இந்தத் தாங்கு கட்டை தேவையிருக்காது. இன்னொரு கோணிப்பையைச் சுமந்து போய் முழு போத்தல்களாக்க அவன் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குள் அக்கரையில் படகு சரியாகி இருக்க வேண்டும். கிழவன், தோளில் மாட்டியிருந்த துணிப்பையை மறுபடி திறந்தான். உலர்ந்த இரண்டு பன் துண்டங்கள் அழுக்கு கண்ணாடிக் கடுதாசில் பொதிந்து இருந்த சிறு பொட்டலத்தைப் பிரித்தான். ''அதோ அந்த உசந்த கட்டிடம் இருக்கே. அதுக்குப் பக்கத்திலே தான் நான் குடியிருந்தது. வெகு நாள் முன்னாடி.'' அவன் பன்னைப் பிய்த்துத் தின்றபடி அக்கறையை நோக்கிக் கைகாட்டினான். கேசவன் அந்தக் கட்டிடத்தைப் பார்த்தான். அவன் அங்கேதான் போக வேண்டும். சம்பளம் வாங்க வரச் சொல்லியிருக்கிறார்கள். படகு வராவிட்டால் அவர்கள் கதவு அடைத்துக் கொண்டு போய்விடலாம். ''அக்கரையிலே வீடு. வீடுன்னா செங்கல் வச்சுக் கட்டினது ஒண்ணும் இல்லை. ஓலைக் குடிசை தான். அங்கே போய்ப் பத்து நிமிசமாவது பார்த்துக்கிட்டே நிப்பேன். அப்புறமாத்தான் பிரார்த்தனைக்குப் போறது." ''இப்ப யாரு இருக்காங்க அங்கே?'' கேசவன் கிழவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்த படி இருந்தான். படகு வராததால் ஏற்படும் படபடப்பைக் குறைக்க யாரோடாவது ஏதாவது வார்த்தை சொல்லிக்கொண்டு நேரம் கடத்த வேண்டியிருக்கிறது.'' ''யாரும் இல்லே. எதுவும் இல்லை. அப்பப் பரிசல் வச்சிருந்தேன். வீட்டுக்காரி இருந்தா. கால்லேயும் கையிலேயும் வலு இருந்தது. ஒண்ணும் இல்லே இப்போ.'' இன்னும் சில அற்புதங்கள் நிகழட்டும். முழு போத்தலோடும் ஊனம் நிவர்த்தியான காலோடும் கூடவே அவனுக்குக் குடிசையும் படகும் திரும்பக் கிட்டலாம், வீட்டுக்காரி? ''ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் என்னோட தான் டவுண்லே குப்பை பொறுக்கினா. அரை வயிறும் கால் வயிறும் கிடைச்சதைத் தின்னா. அடைச்ச கடை வாசல்லே போலீஸ்காரன் விரட்டற வரைக்கும் படுத்துத் தூங்கிட்டுக் கிடந்தா. அப்படியே போய்ச் சேர்ந்தாச்சு.'' கேசவனுக்கு இப்போது என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானமாகப் புலப்படவில்லை. மௌனமாக இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அணைந்த தீக்குச்சியை ஜாக்கிரதையாகப் படிக்கல்லில் வைத்தான். ''குடிசை இருந்த இடத்துப் பக்கத்துலேதான் பழைய பூட்டு சாவி விக்கற கடை. அங்கே போத்தல் மூடியும், கார்க்கும் கூடக் கிடைக்கும். வாங்கித் துணி சஞ்சியிலே வஞ்சுக்கிட்டு பிரார்த்தனை. அப்புறம் போத்தல். போத்தலை மூடி அடைச்சுட்டு அங்கேயே வாசல்லே உக்காரணும். வித்து முடியச் சாயங்கால மாயிடும். படகிலே இக்கரை வந்து திரும்ப டௌண் தெரு முழுக்க குப்பையத் தேடணும். ஆமா, நீங்க என்ன தொழில் பண்றீங்க?'' கேசவன் சும்மா சிரித்தான். அப்புறம் குளிர்பான கம்பெனி பெயரைச் சொன்னான். ''ஆபீசரா?'' ''ஆமா.'' எக்சிக்யூடிவ் என்றால் ஆபீசரும்தான். கிராமம் கிராமமாகச் சுற்றி நடந்து அங்கங்கே தங்கி உள்ளூர் சரக்கான குளிர்பானங்களை மொத்தமாக வாங்க வேண்டிய வேலை ஆபீசர் வேலைதான். அந்தப் போத்தலை எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து எறிய வேண்டியதும் அதிகாரிப் பணிதான். உடைந்த போத்தலுக்கும் சேர்த்துக் காசு கொடுத்து அடுத்த கிராமத்தை, சிறு நகரத்தைத் தேடிப் போக வேண்டியதும் அதிகாரிப் பணியில் அடக்கம்தான். சின்னச் சின்ன உள்ளூர் கம்பெனி எல்லாம் சக்கரைத் தண்ணி உண்டாக்கி விக்கறதுக்கு ஆதாரமே இந்தப் போத்தல்தான். போத்தலை எல்லாம் உடைச்சு அழிச்சுக் குப்பையிலே வீசினா, அவங்க அடுத்து அடைச்சு விற்க ஏதுமில்லா ஆயிடும். அடைச்சுப் பூட்டிட வேண்டியதுதான். அப்புறம் நம்ம கோலாதான் எங்கேயும். கம்பெனியில் சேர்ந்த புதிதில் வகுப்பெடுத்தது நினைவுக்கு வந்தது கேசவனுக்கு. டையைக் கட்டிக் கொண்டு கிளம்புவது கிராமம் கிராமமாக பாட்டிலை வாங்கி உடைக்கத்தான் என்பது கொஞ்சம் அவமானமாக இருந்தாலும் கிடைக்கிற சம்பளத்துக்காக எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. படகு வந்தால், அக்கரைக்குப் போனால், கிழவனின் குடிசை இருந்த இடத்துக்கு அருகே உயர்ந்த கட்டிடத்தில் அலுவலகம் திறந்திருந்தால் அவன் செலவு கணக்கு சமர்ப்பிப்பான். சம்பளமும், படிப்பணமும் இதர செலவினமும் எல்லாம் கிரமமாகக் கிட்டும். போன வாரம் போத்தலை உடைத்த போது கையில் கண்ணாடிச் சில்லு கீறி ஏற்பட்ட சிறு காயத்துக்கு ஊசி குத்திவைத்ததற்கும் சேர்த்து. நீந்தி வந்த இளைஞன் கரையேறினான். ''இன்னிக்கு படகு சரியாகாது. நாளைக்கு விடிகாலை வாங்க.'' அவன் உரக்க அறிவித்துவிட்டுத் திரும்ப ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தான். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஒவ்வொரு வராகத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இங்கே எலுமிச்சை ரசம் குடித்து, புகை வலித்துப் போக மட்டுமே வந்ததாகவும் அது முடிந்தவுடனே தற்போது திரும்பிப் போவதாகவும் எது குறித்தும் ஏமாற்றமில்லை என்றும் தோன்ற, வண்டிகளில் ஹார்ன் உச்சத்தில் ஒலியெழுப்பியபடி போனார்கள். நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவன் மட்டும் இன்னும் திவிரமாகப் படிப்பதில் மூழ்கி இருந்தான். அவன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தைப் படித்து முடித்ததும் கிளம்புவான் என்று கேசவன் கிழவனிடம் சொன்னான். இந்த முறை அவன் சத்தத்தைக் குறைக்க பிரயத்தனப்படவில்லை. ''சரி, போகலாம். இனிமே அடுத்த வாரம்தான். இன்னும் அஞ்சாறு போத்தலுக்காவது கண்ணாடிச் சில்லு கிடைச்சுடும் அதுக்குள்ளெ.'' கிழவன் கிளம்பினான். கேசவனும் எழுந்து கொண்டான். கிழவன் தலையில் அந்தச் சாக்கு மூட்டை ஏற்ற உதவினான் அவன். ஊன்றுகோலை எடுத்துக் கையில் கொடுத்தான். ''உங்க கம்பெனியிலே உடைஞ்ச போத்தலை எல்லாம் என்ன பண்றீங்க?'' ''கட்டை ஊன்றி இன்னொரு கையால் தலையில் மூட்டையை அணைத்துப் பிடித்தபடி முன்னால் நடந்த கிழவன் திரும்பிப் பார்த்துக் கேசவனைக் கேட்டான். ''அதெல்லாம் உடையவே உடையாது.'' கேசவன் சொன்னபோது அவனுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. அக்கரையில் உயர்ந்து நின்ற கட்டிடத்தை இன்னொரு தடவை பார்த்தபடி அவன் மெல்ல நடந்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'போத்தல்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ரவி, கண்ணப்பன், மல்லிகா, அமுதா, செட்டியார், அப்பா, மட்டை தலைப்பு: அப்பா... அப்பா...
"அப்பா..." பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு வந்து வரவேற்கவில்லை. ரவிக்கு ஏமாற்றமாக இருந்தது. தெருத் திண்ணையில் ஏறி, வலப்பக்க அறைச்சன்னல் மேல் கால் வைத்து லேசாய்த் தள்ளியதில் அது திறந்தது. உள்ளே கைவிட்டு முக்கோண மாடத்திற்கு எம்பிய போது கால் நழுவியது. "அப்பா..." மீண்டும் கத்தியவாறு ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்தான்... விழாமல் தப்பித்தான். அதற்குள் உள்ளே சப்தம் கேட்டது. "ரவி...கண்ணு... இதோ வந்துட்டேன்..." என்று அப்பாவின் குரல்தான்... ரவிக்கு நிம்மதியாக இருந்தது. கதவு திறந்தவுடன் தோளில் இருந்த புத்தகப் பையை அப்படியே திண்ணையில் எறிந்து விட்டு உள்ளே ஓடினான். அப்பாவின் மடியில் தாவி ஏறினான். சக்கர நாற்காலியில் இருந்த கண்ணப்பன் சமாளிக்கத் தடுமாறினார். "பார்த்து பார்த்து... மெல்ல ரவி... அப்பாவுக்கு வலிக்குமில்லை?" நாற்காலி உருண்டு பின்னோக்கி நகர்ந்தது. முற்றத்துத் தூண் மேல் இடித்து நின்றது. "ரவி... பை எங்க?" கேட்ட குரலுக்கு ரவி வாசலைக் கை காட்டினான். "அப்பா... இன்னிக்கு எங்க ஸ்கூல் பின்னால இருக்கற வேப்ப மரத்தில ஏறினோம்... செந்தில் கீழ விழுந்துட்டான், மருந்தெல்லாம் போட்டாங்க" என்று கைகளை விரித்துச் சொன்ன போது கண்ணப்பனுக்குக் கவலையாக இருந்தது. முரட்டுப் பிள்ளையாக இருக்கிறானே! "ரவி... பாரு... புஸ்தகப் பையை இப்படி எல்லாம் வெளியிலேயே போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்லை... அம்மா பார்த்தா அவ்வளவுதான்... தொலைஞ்சோம்... போ... முதல்ல எடுத்துட்டு வந்து ஆணியில மாட்டி வைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா... ரெண்டு பேரும் காப்பி குடிக்கலாம்... சரியா?" என்று சொல்ல, ரவி கொஞ்ச நேரம் யோசித்தான். "அப்பா... சீக்கிரம் குடிச்சிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாடலாமாப்பா? அம்மா வர்றதுக்குள்ள?" குரல் கெஞ்சியது. கண்ணப்பன் மனம் நெகிழ்ந்தது... "விளையாடலாண்டா கண்ணா... ஆனா நான் சொன்னபடி கேட்கணும்... நல்ல பிள்ளையா இருந்தாதான் எல்லாம், என்ன?", "சரிப்பா" என்றபடி மடியிலிருந்து இறங்கி திண்ணைக்கு ஓடினான். விலுக்கென்று உதைத்து அவன் இறங்கியதில் கண்ணப்பனின் கட்டுப்போட்ட காலில் சுரீரென்று வலி... பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டார். வெயில் தாழத் தொடங்கியிருந்தது. நாலரை மணிக்கு வெயில் பளிச்சென்றிருந்தாலும் இன்னும் அரை நேரத்தில் சட்டென்று விழுந்து விடும். காலையிலிருந்து வீட்டில் கவிழ்ந்திருந்த நிசப்தம் இப்போது விடைபெற்றுக் கொண்டாலும் உள்ளறைச் சுவர்களில் இன்னும் அந்த மௌனம் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மல்லிகா பஸ் மாற்றி வீடு வந்து சேர இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஆறு மணியல்லாமல் வீடு வர அவளால் முடிவதில்லை. இதில் ஓவர்டைம் என்றால் இன்னும் நேரமாகும்... பஸ் நிறுத்தத்தில் வெளிச்சம் இருந்தாலும் நடந்து வருகிற பாதை இருட்டுதான். நேரமாகி வருகிற மனைவியைப் போய் அழைத்து வர இயலாத நிலை எத்தனைக் கொடுமை! அமுதா பள்ளி முடிந்ததும் தட்டச்சு வகுப்பிற்குப் போய்விடுவாள். பஸ் நிலையத்துக்கு அருகில்தான்... சில சமயம் அம்மாவும் மகளும் சேர்ந்து வருவார்கள். அவர்கள் வரும் வரை ரவியை சமாளிக்க வேண்டும். ரொம்ப முரடனாக இருக்கிறான். நீண்ட நாள் கழித்துப் பிறக்கிற குழந்தைகள் இப்படித்தான் துறு துறுவென்று இருக்கும் போல... மல்லிகா வரும் போதே அலுத்துக் களைத்து வருவாள். கோபமும் எரிச்சலும் சட்சட்டென்று தெறிக்கும். அவளைக் குறை சொல்வதில் நியாயமில்லை, இருந்திருந்தாற் போல் கணவன் உடல் நிலை சீர்கெட்டு, இதய அறுவை சிகிச்சை, சர்க்கரையில் அஜாக்கிரதையாக இருந்து ஒரு கால் துண்டாடப்பட்டு வீட்டோடு சக்கர நாற்காலியில் கிடப்பதில், வெளியே போய் அறியாதவள் மேல் திடீரென்று வீட்டுப் பொறுப்பு முழுவதும் விழுந்தால்... ஒற்றை ஆளாக அவள்தான் என்ன செய்வாள்? நடுத்தரக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை தாங்குமா? கண்ணப்பன் வேலை செய்த கம்பெனி ஆதரவு கொடுத்ததில் குடும்பம் அந்த மட்டுக்கும் இவ்வளவாவது நிற்கிறது. மல்லிகாவின் எப்போதோ படித்த எஸ்.எஸ்.எல்.சி.க்கு வந்த மவுசு... தூசி தட்டின சான்றிதழ் போதுமென்று கம்பெனி கொடுத்த குமாஸ்தா உத்யோகம் பெரும் வரம். தள்ளியிருக்கிற கோயமுத்தூர் ஜிஹெச்சில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய பிறகு ஆயிரத்தெட்டு எச்சரிக்கை. சர்க்கரை விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், எப்போதும் ஓய்வு, "சிரமப்படவே கூடாது, அடிபடக்கூடாது..." ஆனால் அது எப்படி முடியும்? ஓடியாடி வேலை செய்த கால்களால் சும்மாயிருக்க முடியுமா? கால்கள் இல்லை, கால்தான்... இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. மனைவி வெளியே போய் வேலை பார்க்கும்போது வீட்டு வேலையாவது செய்து வைத்தால் அவளுக்கு எத்தனை உபயோகமாக இருக்கும்! சக்கர நாற்காலியை உருட்டி உருட்டி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிப்பார். வீட்டை அரைகுறையாகக் கூட்டி, முற்றத்தில் காய்கிற துணிகளை உட்கார்ந்தபடியே கம்பி நீட்டி சேகரித்து, மடித்து அலமாரியில் வைத்து, காலையில் போட்டு வைத்து விட்டுப் போன பாத்திரங்களைத் துலக்கி அடுக்கி... சமையலறைக்குப் போவதில்தான் சிரமம். கொஞ்சம் உயரமான நிலைப்படியைத் தாண்டுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். மல்லிகா "நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம்... பேசாம ஓய்வு எடுங்க... எதையாவது செய்யப் போய் மறுபடியும் உங்களுக்கு ஒண்ணு ஆச்சுன்னா முதல்ல நான் இருக்க மாட்டேன்" என்பாள்... அச்சம்... நியாயமான அச்சம்... பெயரளவுக்காவது புருஷன் இருந்தால் போதும். நடமாடக்கூட வேண்டாம். உயிரும் சதையுமாய் அசைந்து கொண்டிருந்தால் போதும், எத்தனைக் கஷ்டமும் படத்தயார். ஆனால் மொத்தமாக கணவனே இல்லாது போனால் வரக் கூடிய இருட்டுக்கு அவள் தயாராயில்லை. அமுதா விவரம் தெரிந்தவள். வீடு வந்ததும் முதலில் அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுப் பிறகுதான் உடை மாற்றுதல் முதற்கொண்டு மற்றதெல்லாம். ஆனால் துறு துறுவென்றிருக்கிற ஆறு வயதுப் பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது? சதா விளையாட வேண்டும். மரமேற வேண்டும், திண்ணையில் ஏறி ஜன்னல் மேல் கால் வைத்து தொப்பென்று தெருவில் குதிக்க வேண்டும். மல்லிகாவின் முதல் அச்சம் ரவிதான். ஓய்வெடுக்க வேண்டிய கணவரைப் பாடாய்ப்படுத்துகிறானே என்று... சதா "அப்பா... திருடன் போலீஸ் விளையாடலாம்பா, அப்பா மாடிக்குப் போலாம்பா, அப்பா அத்திப் பழம் அடிக்கலாம்பா..." இவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? காலையில் கையோடு பள்ளிக்கு அழைத்துப் போய் விடலாம், மதியம் வீட்டுக்கு வர முடியாதபடி கையில் டிபன் பொட்டலம்... ஆனால் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வருகிற பிள்ளையை என்ன செய்ய முடியும்? அடக்கிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கிற அலை, போவது போல போக்குக் காட்டி விட்டு மீண்டும் பெரிதாகத் திரும்பி வருவது போல்... திட்டையும் அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்வான். "நாசமாப் போறவனே, கடங்காரா" என்று ஒரு நாளைக்கு நூறு முறை வசவு வாங்குவான். கண்ணப்பனிடம் கெஞ்சினாள். "நீங்களாவது ஜாக்கிரதையா இருங்களேன்... செல்லம் கொடுக்காதீங்க... பக்கத்தில் விடாதீங்க... ரெண்டு அதட்டல் போட்டு தூரத்தில் வையுங்க... உங்க கால்ல விழுகறேன்..." சொன்னதல்லாமல் அவர் காலில் விழுந்து அழுதாள். மகளும் அழுதாள். அம்மாவும் அக்காவும் அழுவதைப் பார்த்து ரவியும் அழுதான். "உன்னால்தாண்டா குட்டிப் பிசாசே இத்தனைக் கஷ்டமும்" என்று அக்கா புலம்புவது கேட்டாலும் ரவிக்கு புரியவில்லை. கண்ணப்பன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தையை நிஜமாக அதட்ட முடியவில்லை. மேலே வந்து விழுகிறவனை "தூரப்போ" என்று தள்ள முடியவில்லை. மற்ற நேரங்களில் கடுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மல்லிகா வீட்டில் இல்லாத அந்த மாலை நேரத்து இரண்டு மணி நேரமும் ரவிக்கு எந்த அணையும் போட முடியவில்லை. பழைய காலத்து வீடு. பெரிய வீடு. கண்ணப்பனின் அப்பா தந்து விட்டுப்போன ஒரே சொத்து. முற்றமும், நாலு பக்கம் தனித்தனி அறைகளும், இரண்டாவது கட்டும், கொல்லைப்புறமும், முற்றத்து உள்ளிலிருந்து மேலே வளைந்து வளைந்து போகும் மாடிப்படியும், சிறிய மாடியறையும் கொல்லென்று கிடக்கும். இப்படியொரு வீட்டில் ஓடிப் பிடித்து விளையாடக்கூடாது என்று அந்தச் சிறு பிள்ளைக்குக் கட்டளை போடுவது எத்தனைக் கொடுமை! திருடன் போலீஸ் விளையாடப் போய் சக்கர நாற்காலி திட்டில் முட்டிக் கீழே விழுந்து காலில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்து... மல்லிகா "ஜாக்கிரதை ஜாக்கிரதை" என்று எதற்கு அத்தனை அஞ்சினாளோ அது நடந்தே விட்டது. இரத்தம் உறையாமல் பெருகுகிற தன்மை... கீழே விழுந்து, அக்கம்பக்கம் யாரையும் கூப்பிட முடியாமல் அப்படியே கிடந்து, இரத்தம் ஏகத்திற்கு சேதம் ஆகி, அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மல்லிகா நிலைமையைக் கண்டு அலறி, அதிர்ச்சியில் நின்றதில் மறுபடியும் நேர விரயமாகி... அன்றைக்கு ஏதோ நல்ல காலம்... பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரர்கள் யாரோ காரில் வந்திருந்தார்கள். உடனே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் துடியலூரில் ஒரு நர்சிங் ஹேமில் முதலுதவி செய்து, ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டு... கண்ணப்பன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்... வீடு வந்த பிறகு கையில் கிடைத்த ஸ்கேலால் ரவியை விளாசித்தள்ளி விட்டாள் மல்லிகா. கண்ணப்பன் பல நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் இருக்கும் அறைப் பக்கம் கால் போனால் காலை ஒடித்து விறகாக அடுப்பில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வைத்தாள். அதற்கெல்லாம் அஞ்சி கொஞ்சம் அடங்கியிருந்த ரவி, அவர் உடல் கொஞ்சம் தேறியதும் பழையபடி உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்து விட்டான். மல்லிகா பட்ட சிரமங்களைப் பார்த்து வேதனைப் பட்டுப்பட்டு கண்ணப்பனுக்கு மனம் காய்த்துப் போய் விட்டது. ஏனோ அர்த்தமற்ற இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று தோன்றவும் தொடங்கி விட்டது. அதற்குள் ரவியைக் கட்டுப்படுத்துவானேன் என்று முன்னெப்போதுமில்லாத வாஞ்சை... போதாதா ரவிக்கு? கொஞ்ச நாட்களாக, பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு பழகிக் கொண்டு வந்து தினம் வீட்டில் அதை விளையாட வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கண்ணப்பன் மல்லிகாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டில் சொல்லி ஒரு பிளாஸ்டிக் மட்டையும் பந்தும் வாங்கி வரச் செய்திருந்தார். அதைக் காப்பாற்றத்தான் பெரிய யோசனையாக செய்ய வேண்டியிருந்தது. ரவியின் விளையாட்டு சாமான்கள் பூராவும் தூக்கி நிஜமாகவே அடுப்பில் போட்டுப் பொசுக்கி விட்டிருந்தாள் மல்லிகா. "எதையாவது விளையாடறேன்னு அப்பா மேல பட்டுதோ தொலைச்சுருவேன் கடங்காரா..." வீட்டில் மல்லிகா கண்ணுக்குப் படாமல் இந்த மட்டையையும் பந்தையும் எங்கே ஒளித்து வைப்பது? ரவிதான் அற்புதமான ஓரிடைத்தைக் கண்டு பிடித்தான். இருட்டான மாடிப்படி வளைவில் மேலறைக்குத் திரும்புமுன் இடது பக்கம் ஒரு சிறு மரப்பலகை பெயர்ந்திருந்தது. ஒரு பக்கம் நன்றாக சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் மறு பக்கம் திறந்து மூடும்படி அமைந்து விட்டது. திறந்தால் ஓரடி உயரத்திற்கு ஓர் இடம். இருட்டுக்குள் இருட்டாக ஒரு பெட்டி போல் இருந்தது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் அங்கே ஒளிந்தன. மாலை வந்ததும் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து ஆசை தீர விளையாடுவதும் அம்மா வருமுன்பு சர்வஜாக்கிரதையாக மாடி வளைவில் ஒளித்து வைப்பதுமாக இருந்தான். வைப்பதுமல்லாமல் அப்பாவிடம் வந்து கண்களை மட்டும் ரகசியமாக உருட்டி "ஒளிச்சு வைச்சிட்டேன்" என்று தலையை ஆட்டுவான். ஞாபகமாக "நாளைக்கு மறுபடியும் விளையாடலாம்பா... நீ இன்னிக்கு காஜி குடுக்கவேயில்லை" என்பான். இத்தனூண்டு பிள்ளைக்கு எத்தனை விவரம்! கண்ணப்பன் அமுதாவின் பரீட்சை அட்டையை ஒரு கையில் கேடயமாக வைத்துக் கொண்டு அடி ஏதும் மேலே படாமல் மட்டை பிடித்து சமாளித்து வந்தார். முதலில் மட்டை அவர் பிடித்தால், ஆட்டம் முடிகிற போது ரவி பிடிக்க வேண்டும். ரவி மட்டை பிடிக்கு முன்பு மல்லிகா வரும் சப்தம் கேட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் ரகசியமாக ராத்திரி தூங்கும் வரை, "அப்பா எனக்கு நீ காஜி குடுக்கவேயில்லை" என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கத்தில் கைகளைத் தூக்கி மட்டை வீசுவான். "காஜி, காஜி"" என்று முனகுவான். ரவி பள்ளியிலிருந்து கற்றுக் கொண்டு வந்த எண்ணற்ற சங்கேத வார்த்தைகளில் காஜியும் ஒன்று. கிரிக்கெட் மொழி. முதலில் மட்டை பிடிப்பவர், ஆட்டம் முடியும்போது பந்து வீசுபவராக இருக்க வேண்டும். நேரமில்லாமல் அல்லது அவுட்டாகாமல், முதலில் பந்து வீசியவருக்கு மட்டை சந்தர்ப்பத்தை மிச்சம் வைத்தால் அது "காஜி"". ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டத்துக்காகவே பள்ளி விட்டதும் தலை தெறிக்க ஓடி வருவான். மாடிக்கு ஓடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான். "அப்பாவ் வந்துட்டேன்..." கத்தியபடி வந்தவன் கை காலைத் துடைத்துக் கொண்டு, வேகவேகமாக காபி குடித்து விட்டு, மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். விளையாட்டு தொடங்கியது. அரை மணிக்குப் பிறகு கண்ணப்பனுக்கு முடியவில்லை. மூச்சு வாங்கியது. வேர்க்கத் தொடங்கிது. "விபரீதம்" என்று உள்ளம் எச்சரித்தது. மெதுவாக ஆட்டத்தை நிறுத்தினார். ரவி அடம்பிடிப்பான் என்று தெரிந்து, "அம்மா சீக்கிரம் வர்றா போலிருக்கு, சீக்கிரமா ஓடிப் போய் மட்டையை வைச்சிட்டு வந்திரு" என்று அவசரப்படுத்தவே, ரவி தலைதெறிக்கப் படியேறி ரகசிய இடத்தில் வைத்து விட்டு சாது போல் இறங்கி வந்து அப்பா அருகே நின்று கொண்டான். ஆனால் அம்மாவைக் காணோம். ஏமாற்றம்! "என்னப்பா அம்மா வரவேயில்லை? நீ அவுட்டானதும் நான்தான் பேட்டிங் பண்ணணும், அதுக்குள்ள ஏன் நிறுத்தின?", "கண்ணு, அம்மா வர்ற மாதிரி சத்தம் கேட்டதா அதனாலதான்... திடீர்னு வந்துட்டா என்ன பண்றது? அப்புறம் தெரியாம விளையாடறதும் நிண்ணு போயிடும்... மட்டையெல்லாம் அடுப்புக்குப் போயிடும். உனக்கு அடி விழும் இல்லை? அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும்ணு அப்படிச் சொன்னேன்." கண்ணப்பன் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் ஆறுதலடைந்தான். இருந்தாலும் அடுத்த நிமிஷமே "அப்பா ஐஸ் நம்பர் விளையாடலாம்பா" என்று ஆரம்பித்தான். போச்சுடா, மல்லிகா வரும் வரை இவனை எப்படி சமாளிப்பது? பேசிகீசித்தான் பிடித்து வைக்க வேண்டும். "வேண்டாம் கண்ணு... நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருக்கலாம். இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?", "கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்க கணக்கு டீச்சர் ரெஜிஸ்தர்ல இங்க்கை கொட்டினதுக்காக பெருமாளை அடிச்சாங்க. கடங்காரா, இனிமே இங்க் மேல கையை வைப்பியான்னு திட்டினாங்க... அப்பா, கடன்காரன்னா என்னப்ப?", "கடன்காரன்னா... நாம யார் கிட்டயாவது ஏதாவது வாங்கியிருந்தோம்னா உடனே திருப்பிக் கொடுத்திடணும். அப்படிக் கொடுக்கலேண்ணா அவங்க வந்து திருப்பிக் கேட்பாங்க. கொடுக்காம விட்டோம்னா நாம கடங்காரங்க ஆயிடுவோம்...", "அன்னிக்கு மீசை மாமா வந்து உங்ககிட்ட கடனைத் திருப்பித்தான்னு கேட்டாரே, அந்தக் கடனா?" எல்லாவற்றையும் இந்தப் பொடியன் கவனித்திருக்கிறான். வீட்டு மேல் வாங்கிய கடன். வட்டி ஒழங்காய்க் கொடுத்தும் அசலைத் திருப்பிக் கேட்கிறார் செட்டியார். "ஆமாப்பா... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர்கிட்டதான் கடன் வாங்கியிருக்கோம்? திருப்பிக் கொடுக்கணுமில்லை? அதைத்தான் கேட்கிறார்.", "ஏம்பா திருப்பிக் கொடுக்கலை?" ஆரம்பித்து விட்டது. குழந்தைகளின் கேள்விகள். எண்ணற்ற கேள்விகள். ஒன்று சொன்னால் அதிலிருந்து இன்னொரு புதுக் கேள்வி... நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேள்விகளெல்லாம் எப்படித்தான் இந்தப் பிஞ்சுத் தலைகளிலிருந்து உதயமாகிறதோ? "நம்ம கிட்ட இப்ப இல்ல... அதனால கொடுக்கல.", "கொடுக்காமயே போன்னு துரத்திலாமாப்பா?", "ஐயையோ... அப்படி எல்லாம் செய்யக் கூடாது. வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கிறவங்கதான் ரொம்ப நல்லவங்க. நம்மகிட்ட இருந்தால் நாமே திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடணும். கடனை அவங்க கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது.", "நீ நல்லவனாப்பா?" கண்ணப்பனுக்குக் கண்கள் பொங்கின. யார் நல்லவன் யார் கெட்டவன்? எல்லாம் நல்லபடியாக இருக்கிற போது நல்லவனாக இருக்க முடிகிறது. கொஞ்சம் தாழுகிற போது எல்லாமே மாறிப் போய் விடுகிறது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத வார்த்தைகள் எதிர்பாராதவர்களிடமிருந்து வருகிற போது... ஒரு வேளை கெட்டவனாகி விட்டோமோ? வாழ்க்கை கெட்டுப் போனவன் கெட்டவனா? "நா எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... கண்டிப்பா கடனை திருப்பிக் கொடுத்திருவோம். நீ கவலைப்படாதே, என்ன கண்ணு?", "இல்லப்பா... கெட்டவங்கன்னா சாமி வந்து ராத்திரி கண்ணைக் குத்துமா... எங்க டீச்சர் சொன்னாங்க. அப்பா, நான் நல்லவனாப்பா?" குழந்தையின் கேள்வியில் ஒரு கெஞ்சல் இருந்தது. உடனே பதில் தெரியாவிட்டால் கடவுள் எதிரே வேலை வைத்துக் கொண்டு கண்ணைக் குத்தக் தயாராக இருக்கிற பயத்தில் கண்கள் விரிந்திருந்தன. "இப்பதான சொன்னேன்? நாம எல்லாம் நல்லவங்க... நீ நல்லவன், அம்மா நல்லவ, அமுதா நல்லவ...", "அப்புறம் ஏம்ப்பா அம்மா சும்மா என்னை கடங்காரான்னு திட்டறாங்க? நான் கடன் ஏதும் அம்மா கிட்ட வாங்கவேயில்லப்பா." இதைச் சொல்லும் போது அழுகை. "அதுக்கில்லை கண்ணு... அம்மா சும்மா கோபத்தில சொல்றது அது...", "ஆனா நான் கடன் வாங்கவே இல்லைப்பா... நிஜமா...", "கடன்னா பணம்தானா? நாளைக்கு நீ பெரியவனாகி அம்மாவுக்கு வீடு, கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கணுமில்லை, அதுக்காகத்தான் இப்பவே சும்மா சொல்லி வச்சுக்கறா..." அடுத்த கேள்விக்கு அவன் வாயைத் திறப்பதற்குள் வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. ரவியின் வாயும் அடைபட்டது. கண்ணப்பன் அவனை மடியிலிந்து இறக்கிவிட்டு, வாய்மேல் கை வைத்து, "ஒழுங்கா இருக்கணும். என்கிட்ட வரக்கூடாது. போய் கதவைத் திறந்து விட்டுட்டு அம்மாவோட பையை வாங்கிட்டு வா..." என்று இரகசியம் போலச் சொன்னார். ரவி இறங்கி ஓடினான். வீடு அமைதியாக இருப்பதை ஒரு சந்தேகத்தோடு பார்த்தபடியே உள்ளே வந்தாள் மல்லிகா. நேரே கண்ணப்பனிடம் போனாள். "ரவி ஏதாவது படுத்தினானா? உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? நல்லா இருக்கீங்க இல்லை?" என்று கேள்விகளை அடுக்கினாள். "ம்... ஒண்ணுமில்லை... அசதியா இருக்கிற மாதிரி இருக்கு... நல்லாத்தான் இருந்தேன்... மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டேன்... ஆனா இப்ப லேசா சிரமமா இருக்கு" என்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியாமல் காலில் விண்விண்ணென்று வலி. பல்லைக் கடித்துக் கொண்டு புரண்டு படுத்தார். பக்கத்தில் ரவி தூக்கத்திலேயே "அப்பா காஜி கொடுப்பா..." என்று முனகினான். மல்லிகா எழுந்து வலி குறைக்க மாத்திரை தந்து விட்டு, ரவி முனகுவதைப் பார்த்து "என்ன, என்னவோ உளர்றானே" என்றாள். அதற்கு, "அவன் ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருக்கான். அதைத்தான் சொல்றான்" என்றார். அடுத்த மூன்று நாட்களும் அமுதா பள்ளிக்குப் போகவில்லை. அப்பாவுடனே இருந்தாள். மல்லிகா ஒரு நாள் விடுப்பு எடுத்து உடன் இருந்தாள். விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு ரவியால் அப்பாவின் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. ஒரு வாரத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் சேர்க்கும்படியாயிற்று. பத்தாம் நாள் கதை முடிந்தது. உடலை வீட்டுக்குக்கூட கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்தே தகனத்துக்குக் கொண்டு செல்லும்படியாயிற்று. வீடு முழுக்கக் கூட்டம், உறவுக்காரர்கள் மயம், அழுகை... ஏனென்று ரவிக்குப் புரியவில்லை. எல்லோரும் இவனையல்லவா இழுத்து வைத்துக் கொண்டு அழுதார்கள்! அப்பா ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவில்லை. எப்போது மருத்துவமனைக்குப் போனாலும் கொஞ்ச நாள் கழித்து கட்டுடனோ, சக்கர நாற்காலியுடனோ திரும்பி வந்துவிடுவார். இந்த முறை இன்னும் வரவில்லை. கேட்டால் "அப்பா செத்துப் போயிட்டார். இனிமே வர மாட்டார்" என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ரவியால் அதை நம்பமுடியவில்லை. அதெப்படி அப்பா வராமல் இருப்பார்? கண்டிப்பாக வருவார். எப்போதும் அடிக்கிற அம்மாவிடம் என்னை விட்டு விட்டுப் போகவே மாட்டார். வாங்கிய கடனெல்லாம் அடைக்க வேண்டி வீட்டை செட்டியாருக்கே விற்று விட்டு, வேறு சிறு வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ரவி வீட்டை விட்டு வெளியே வர முடியாதென்று அடம்பிடித்தான் "அப்பா இந்த வீட்டுக்குத்தான் திரும்பி வருவார்... அவருக்கு வேற வீடு தெரியாது" என்று கத்தியழுதான். கூட சேர்ந்து மற்றவர்கள் அழுதாலும் வேறு வீட்டிற்குக் கட்டாயமாகக் கொண்டுபோய் விடுவார்கள் என்று ரவிக்குத் தெரிந்தே இருந்தது. "தூங்கும் போது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்." அவனுடைய கவலையெல்லாம் அப்பா திரும்பி வந்தால் அந்த வேற வீடு எங்கேயிருக்கிறது என்று யார் காட்டுவார்கள்? நான்கு தெரு தள்ளி இவன் பள்ளிக்கு அருகே இருந்த சிறு வீட்டிற்கு சுத்தம் செய்ய அமுதா போன போது இவனும் கூடப் போனான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. இந்தப் புது வீட்டு அடையாளத்தை எழுதி அந்தப் பழைய வீட்டில் வைத்து விட்டால் என்ன? அப்பா வந்தால் பார்த்துத் தெரிந்து கொள்வார். பள்ளியில் இருந்த போது கணக்கு நோட்டிலிருந்து பேப்பர் கிழித்த புழுக்கைப் பென்சிலை சுவரில் தேய்த்து எழுத்துக் கூட்டி, "ஸ்கூல் கிட்ட பச்சை வீடு" என்று நினைத்துக் கொண்டு அடித்து அடித்து எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். வீட்டில் எங்கும் உடனே வைக்க முடியாதபடி வீட்டு சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. செட்டியாருக்குக் கைகூப்பி சாவியைக் கொடுத்து விட்டு, சாமான்கள் எல்லாம் ஏறிப் போன மாட்டு வண்டியில் கடைசி ட்ரிப்பில் ஏறிக்கொண்ட மல்லிகாவும் அமுதாவும் ரவியை ஏறச் சொன்னபோது பெரியதாக அழுது பார்த்தான்... "நான் வர மாட்டேன்... அப்பா வருவாரு...", "ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற ஏண்டா படுத்தற நாயே" என்று இரண்டு அறை முதுகில் வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டாள் மல்லிகா. வண்டி தெருத் திரும்பும் போது, யாரும் எதிர்பாராத சமயம், டக்கென்று கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினான் ரவி. செட்டியார் தெரு இறங்கிப் பக்கத்து வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். உள்ளே ஓடியவன் தலைதெறிக்க மாடிப்படி ஏறினான்... "அப்பா வந்தா இங்கதான் வருவார். அவருக்கு நல்லாத் தெரியும் இந்த இடம்... வேற யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க... வர மாட்டாராமே... அதெப்படி? அப்பா நல்லவர்னு சொன்னாரே... கடன் வாங்கினா நாமே திருப்பிக் கொடுத்திடணும்னு சொன்னாரே... எனக்க காஜி கடன் வச்சிட்டுப் போயிருக்காரு... திருப்பிக் கொடுக்க வருவாரு... நான் இந்த வீட்டில இல்லாவிட்டாலும் இங்க வந்து பார்த்துட்டு நேரா வேற வீட்டுக்கு வருவாரு..." என்று எண்ணங்கள் குதித்தோடி வந்தன. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசிய இடத்தில் ரகசிய விலாசக் கடிதம் ஒளித்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே பந்தும் மட்டையும் பின்னாலேயே ஓடி வந்த அமுதா இவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினாள். "எங்கடா போன? ஏண்டா என் உயிரை வாங்கற கடங்காரா? என்று மல்லிகா அழுது கொண்டே தப்தப்பென்று நான்கு அறை வைத்தாள் முதுகில். ஓவென்ற அழுகைக்கிடையே, "நான் கடங்காரனில்லை, அப்பாதான் கடங்காரன்" என்று பெரிதாக அவன் அலறியதற்குப் பிரதிபலனாக மேலும் இரண்டு மொத்து விழுந்தது.