template_id
int64 1
2
| template_lang
stringclasses 1
value | inputs
stringlengths 132
27.8k
| targets
stringlengths 63
27.6k
|
---|---|---|---|
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள். சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் “நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?” என்று வியப்புடன் கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி “இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்” என்று பதில் சொன்னாள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தாய்மையின் சக்தி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மதியம் 12 மணி கத்தரி வெயிலு சுளீர்னு மண்டையப் பொளக்கறாப்ல அடிச்சுச்சு. மாயனுக்கு உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருந்துச்சு. இருந்தாலும் என்ன செய்வது வயித்துப் பொழப்பைப் பார்க்கணுமே. இந்த வெயிலுக்கு தர்பூசணியும், வெள்ளரிக்காயும் போட்டா நல்லா லாபம் கிடைக்கும்னு டவுன்ல சொன்னத வச்சு தனக்குன்னு இருந்த 5 காணி நிலத்துல மாயன் வெள்ளரியும், தர்பூசணியும் விதைச்சான். எல்லாக் கிணத்துலயும் தண்ணிவத்திப் போனாலும் மாயன் கிணத்துல மட்டும் இந்த வெயில் காலத்துலயும் சும்மா வெள்ளியை உருக்கி விட்ட மாதிரி சலசலனு இருக்கும். மாயன் தண்ணியத் தொறந்து விட்டுகிட்டே இந்தக் காய்களைக் கொண்டுபோயி உழவர் சந்தைனு ஒண்ணு வந்திருக்கு அதுல போட்டா லாபம் கிடைக்கும்னு விவசாய ஆபிசரு சொன்னாக. அதமுதலச் செய்யணும்! இந்த புரோக்கர் வெடுவானிப்பயக்கிட்ட காச அழுவணும்னு தேவையில்ல மீதியை ரோட்ல கூறு போட்டு வித்தாக்கூட கைல நாலு காசு கிடைக்கும்னு நினைச்சுகிட்டு வேலையைப் பார்த்தான் மாயன். நெல்லைத் தவிர ஒண்ணும் போட மாட்டான். எப்பவாவது தக்காளி போட்டா போடுவான். மாயன் மடையை அடைச்சுட்டு தோட்டத்தப் பார்த்தான் "பிஞ்சும், பூவுமா, புதுசா கல்யாணமான பொண்ணு கணக்கா சும்மா தளதளனு இருந்துச்சு. சரி இந்தத் தடவையாச்சும் ஆண்டவன் வழிகாட்டட்டும்"னு வேண்டினான். கொஞ்சம் காசு கிடைக்கும். இதவச்சு வர்ற தைக்குள்ள இரண்டாவது புள்ள கல்யாணத்த முடிச்சுடணும்னு கணக்குப்போட்டான். மாயனுக்கு 2 பொம்பளப்புள்ளைக ஒரு பையன் மாயனோட பொண்டாட்டி சின்னாத்தா. மூத்த பொம்பளப்புள்ள செல்லத்த போன வைகாசியில தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான் இங்கதான் பக்கத்துல இருக்குற பழையனூர்ல. ஏதோ அவனால முடிஞ்ச சீர் சினத்தி செஞ்சு அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு. 2 வது புள்ள முருகாயி அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டுல தான் இருக்கா. மாயனோட கடைசிப்பையன் குமார். 12வது வரைக்கும் படிச்சுப்புட்டு வேலை வெட்டிக்குப்போகாம மைனரு மாதிரி ஊர் சுத்திகிட்டு திரியறான். அவனுக்கு வீட்டப்பத்தியும் கவல இல்ல. எதைப்பத்தியும் கவல இல்ல. டிப்டாப்பா டிரஸ் பண்ணிகிட்டு கலெக்டரு உத்தியோகத்துக்கு போற மாதிரி கிளம்பிடுவான். எங்க போறான் என்ன செய்யறான்னு தெரியாது. போன மாசந்தான் ஏதோ கட்சியில இளைஞரணியில சேர்ந்தன்னு சொல்லிகிட்டு திரிஞ்சான். மாயனுக்கு வயிறு பசித்தது காலையில நீராரத்தண்ணியக் குடிச்சுப்புட்டு கருக்கல்ல கிளம்பினவன் தான். வந்ததுல இருந்து களை எடுக்கிறது. தண்ணி பாய்ச்சறது, மருந்து அடிக்கிறதுன்னு வேலை இருந்துக்கிட்டேயிருக்கு. தூரத்துல சின்னாத்தாவும் முருகாயியும் வருவது தெரிஞ்சுக்க சின்னாத்தாவோட கைப்பதம் யாருக்கும் வராது. ரெண்டு மொளகாயக்கிள்ளிப் போட்டு புளியக்கரைத்த ஊத்துனாக்கூட அவ்வளவு ருசியா இருக்கும். நினைக்கியிலேயே நாக்கில் எச்சி ஊறுச்சு. முருகாயிக்கு எப்பயும் வயல்ல சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால ஆத்தாவோட எப்பவும் வந்திருவா. மூணு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க. கிணத்துத்தண்ணியில கை கால், முகம் எல்லாம் கழுவிட்டு துண்டுனால துடைச்சுகிட்டே, என்ன சின்னாத்தா என்ன சாப்பாடு வாசன மூக்கத்துளைக்குதே; அட ஒண்ணுமில்லைங்க, மேல்வீட்டு பெரியாத்தா கொஞ்சம் அயிரைமீன் கொடுத்தாக. அதைக் குழம்புவச்சி, கஞ்சி கொண்டு வந்துருக்கேன். அப்ப சீக்கிரம் போடு, இப்பவே நாக்குல எச்சி ஊறுது. சின்னாத்தா கும்பாவுல கஞ்சிப்போட்டு பூசணி இலையில அயிரமீன் வச்சி மாயனுக்கு வெயிலுக்கு இதமா இருந்துச்சு. மூன்று பேரும் சேர்ந்து வயிறார சாப்புட்டாக சின்னாத்தாவும், முருகாயியும், பாத்திரத்தெல்லாம் கழுவிட்டு "அப்ப நாங்க போறோம் நீங்க சித்த நேரம் உறங்கிட்டு வாங்க"னு சொல்லிட்டுப் போனாக. மாயனுக்கும் அசதியாத்தான் இருந்துச்சு. அப்படியே வேப்பமரத்து நிழல்ல படுத்து உறங்கிட்டான் திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா வெயிலு கொஞ்சம் இறங்கியிருந்துச்சு மாயன் மம்பட்டி, மத்த சாமானெல்லாம் மோட்டார் ரூம்ல வச்சுப்புட்டு வீட்டுக்குப் போனான். வர்ற வழியில ஊரணிப்பக்கம் பெரிய தேவர் பாத்துப்புட்டாரு" என்ன மாயா! நம்ம குமாரு கட்சியில சேர்ந்துட்டாம்போல ஒரே வெள்ளையும் சொள்ளையுமா திரியறான் கேட்டா செயலாளர், அது இதுங்கறான்." அடப்போங்கப்பே அவக்கிடக்கான் வௌரங் கெட்ட நாயி, அப்பு, கட்சியல்லாம் சோறுபோடாது தினம் உழைச்சாத்தான் வயிறு நியைற சாப்பிட முடியும். நானும் வீட்ல உட்கார்ந்துர்ரேனு வச்சுக்கங்க, இவனக் கொண்டாந்து காசு கொடுக்கச் சொல்லுங்க பாப்பம். அப்படியே கொண்டாந்தாலும் அது அடுத்தவனக் கொன்னு தாலியறுத்தக் காசாத்தான் இருக்கும். அப்பு, உங்ககால அரசியல் வேற. இந்தக்கால அரசியல் வேற, ஒருத்தன் ஆட்சிக்கு வந்தா மொத்தமா அடிக்கிறான் இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கிறான். போங்கப்பே! அவன் கெட்டுச் சீரழியப்போறான் நான் வர்றப்பே. என் பொழப்பப் பார்க்கணும் பெரியதேவர் சிரிச்சிகிட்டுப் போனாரு. வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாயன். சின்னாத்தா ஏய் புள்ளே! உள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்க? குளிக்கத் தண்ணி எடுத்து வை. சின்னத்தா தொட்டியில தண்ணியக் கொண்டு வந்து ஊத்துனா. மாயன் குளிச்சுகிட்டிருக்கும் போது உள்ளாற ஏதோ சத்தம் கேட்டுச்சு. அவன் மகன் குமாரு தான். அவன் ஆத்தாகிட்ட சண்ட போட்டுகிட்டிருந்தான். "அம்மா காசு கொடுக்குறியா இல்லையா தலைவருக்கு பொறந்த நாளு சால்வை வாங்கணும் காசு கொடு". "போடா வக்கத்த நாயே. இங்க கோவணத்துணிக்கே வழியக் காணமா இவன் எடுபட்ட நாய்க்கு சால்வை வாங்கறானாம் சால்வை. அந்த மனுசன் வெயில்லகிடந்து மாடா உழைக்கிறாரு இவன் இப்பத்தான் வெள்ளையும், சொள்ளையுமா அலையிறான். ஒரு சல்லிக்காசு கிடையாது போடா வெளிய. மாயன் திரும்பிக் கூட பார்க்காம குளிக்சுகிட்டு இருந்தான் போன வாரமே இவுக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பேச்சுவார்த்தையில்லை. பன மட்டையில மழை பெஞ்ச மாதிரி தொறுதொறுனு முனங்கிக்கிட்டே குமாரு வெளியே போனான். அவன் போனவுடன் தான் மாயன் உள்ளுக்குள்ள வந்தான். மனைவி சின்னாத்தா அழுதுகிட்டிருந்தா "ஆம்பளபுள்ள பொறந்துட்டான் கஞ்சி ஊத்திக் காப்பாத்துவான்னு பாத்தா இவன் ஏதோ அட்ரஸ் இல்லாத நாய் வேட்டியல்ல புடிச்சிகிட்டு திரியறான் இவன் வம்புனா என்னாகுறது. ஹீம் - என்னைக்குத்தா இந்த மாரியாத்தா கண்ணத் தொறப்பாளோ! இந்தப் பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் பொழப்பு நாய்ப் பொழப்பாவுல்ல இருக்கு. மாயன், "சரி விடுறி! விறைச்சுகிட்டு எங்க போகப் போறாரு, சோத்துக்கு இங்க தான் வரணும். நாளைக்கு அவன் தலைவருனு சொல்லிகிட்டு திரியற நாயை செயில்ல தூக்கி போடப் போறாக. இவன் என்ன பண்ணப்போறானாம். அவன் பொண்டாட்டிபுள்ள குட்டிக எல்லாம் நல்லா இருக்குது. இவன் தான் சீப்பட்டுச் சீரழியப் போறான். போகட்டும் விடுடி சோத்தப்பாரு. ஒரு மாதம் சென்றிருக்கும். இப்பெல்லாம் குமாரு வீட்டுக்கே வர்றதில்ல டவுன்லயே இருக்கறதா செய்தி. இப்ப தர்பூசணியும், வெள்ளரியும் நல்ல அறுவடை செய்யும் பதத்தில இருந்துச்சு. நல்ல தளதளனு பார்க்க நல்லா இருந்துச்சு. சனிக்கிழம உழவர்சந்தைக்கும் கொண்டுபோனா கூட்டம் நிறையவரும். பெரிய பெரிய ஆபிசருக எல்லாம் வந்து வாங்கிட்டுப்போயிருவாக. வியாபாரத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தான் மாயன். மாயனுக்கு இடி இறங்குனாப்ல இருந்துச்சு. புள்ள பொறந்து பேர்வைக்கப் போகையில செத்துப் போன கணக்கா இருந்துச்சு மாயனுக்கு, பெரியதேவருக்குன்ன அவருபாட்டுக்கு சொல்லிபுட்டாரு. அவுரு நல்ல வசதிவாய்ப்பா இருக்காரு ஹீம் எம்பொழப்பு நாய் பொழப்பு கழுதப் பொழப்பாவுல்ல இருக்கு. நாம் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. மாயனுக்கு 2 நாளா ஒண்ணுமே புரியல பாடுபட்டு பக்கப்பட்டு விளையவச்சத நல்ல விலைக்கு வித்தாத்தானே கையப்பிடிக்காம இருக்கும். கடன, உடன வாங்குனத அடைக்க முடியும். எப்படியோ அறுவடை முடிஞ்சுருச்சு. மறுநாள் மாயன் மாட்டுவண்டியில தர்பூசணியும், வெள்ளரியையும், ஏத்திக்கிட்டு டவுனுக்குப் போனான் பஸ்சுல போனா லக்கேசுக்குன்னு தண்டம் அழுவணும் அதனால குறுக்கால போன சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சுகிட்டு வண்டிய விரசா விட்டான் கூட ஒத்தாசைக்கு சின்னாத்தா, முருகாயி ரெண்டு பேரும் வந்தாக கூட்டு ரோட்ட தாண்டி போகையிலேயே ஏதோசலசலனு சத்தம் போட்டுச்சு மாயனுக்கு கதக்குச்சு. தூரத்துல கட்சிக்கார பயலுக, சோடாப்பாட்டிலு கைச்செயினு அருவா கத்தினு வச்சுகிட்டு எல்லாரையும் வழிமறிச்சு அடிச்சிட்டிருந்தாணுக என்ன ஏதுனு ஓடிவந்தவன்கிட்ட மாயன் விசாரிச்சான் யாரோ அரசியல் தலைவர செயில்ல போட்டாங்களாம் அதுக்கு அந்த கட்சி ஆளுக மறியல் பண்றாக அங்கிட்டு போகாதிகன்னு சொல்லிட்டு அவுர்ற வேட்டிய கையில புடிச்சுகிட்டு ஓடினான். மாயன், "ஏய் பிள்ளைகளா அப்படியே படுத்துக்கிடுங்க. நான் வண்டிய அந்த நாய்க கண்ணுல படாம வரசா விட்டுறேன். ஒருத்தன் கருகருனு கருவாக்கட்டை மாதிரி இருந்தவன். "டேய் அங்கபார்றா ஒருத்தன் நமக்கு டிமிக்கி கொடுத்துட்டுப் போறான். புடிங்கடா டேய் அடிறா வண்டியச் சாயுடா ஒரே கூச்சலு. அழுரக 10 நிமிசத்துக்குள்ள அம்புட்டும் முடிச்சு போச்சு மாயன் பொம்ளப்பிள்ளைகளை அடிக்கவர்றாகளே தடுக்கப்போக அவனுக்கு நெஞ்சுல வெட்டு, புருஷனுக்கு ஏதாவது ஆயிரப் போவுதுனு சின்னாத்தா தடுக்கப்போக அவளுக்கும் வெட்டு முருகாயி மயக்கமாயிட்டா. 2 உசுரும் 1 நிமிசத்துல அடங்கிப்போச்சு கன்னஞ்செவந்தபுள்ள கட்டழகி பெத்தபுள்ள செய்யதறியாம திகைச்சுப் போயிநின்னா தர்பூசணியும், வெள்ளரியும் ரோடெல்லாம் கிடந்துச்சு. மாயன் ரத்தமும், தர்பூசணித் தண்ணியும் ஒண்ணாக் கலந்துச்சு. அப்பத்தான் சீராட்டிப் பாராட்டி சீரு செய்யப் போற ஆத்தாளப்பறிகொடுத்து வகை செய்யப்போற அப்பனப்பறிகொடுத்த முருகாயி அண்ணணப் பாத்துப்புட்டா அவன் அங்கிட்டு முக்குல எவனையோ புடிச்சு அடிச்சுகிட்டு இருந்தாய் டேய்! எங்க தலவர செயில்ல போட்டாங்க நீங்க கவலையில்லாம திரியறியா உன்ன உரிச்சுப் பொலி போடறேன்பாரு. முருகாயிக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அண்ணன நோக்கிப்போனா, "டேய்! இங்க பார்றா உங்க அப்பன் ஆத்தா செத்துச் சீரழிந்து கிடக்காக நீ இன்னொருத்தன அடிக்கிறயிடா. நீங்கள்ளாம் உருப்பட மாட்டியளா? நாசமாப்போவீக! அப்பன் ஆத்தாவுக்கு உதவவேணாம் இப்படி உயிரோ கொள்ளி வச்சுட்டியே பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ!....... முருகாயி ஒரு பாட்டம் பாடி முடிச்சா. காரியமெல்லாம் முடிஞ்சு 1 வாரமாச்சு குமாரு வீட்டுப்பக்கமே வரல துக்கத்துக்கு வந்த சனங்கள்லாம் காக்கா, குருவி கணக்கா பறந்து போயிருச்சுக. அவ அக்காவையும் புருசன்காரன் வந்து சாக்கு போக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டான். முருகாயி தனித்துப்போனா.... சொந்தமிருந்து சீண்டாதவளாயிட்டா அழகா இருந்தாலும் வாசமில்லா மலர யாரும் சீந்தமாட்டாக அப்படியாயிருச்சு முருகாயி நிலம இப்படி எத்தனையோ முருகாயிக தெருக்குத்தெரு, ஊருக்குஊரு இருக்காக. அடுத்தநாள் செய்தியில் - "தலைவரின் கரம் கறைபடியாத கரம் எனவே விடுதலை" என்று பெரிய எழுத்தில் வந்தது. அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை சுருட்டிக் கொண்டு, நடித்துக் கொண்டு அமோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் வெறிபிடித்த ஓநாய் கூட்டமாய் தொண்டர் இனம் திரிகிறது. இவை நிற்கும் வரையில் நம் நாட்டில் வாசமற்ற மலர்களே அதிகமாய்?.......
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாசமற்ற மலர்கள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: காகம், நரி, பாட்டி, வடை
தலைப்பு: நரியின் தந்திரம் பாட்டி வடை
| ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது. பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது. இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது. நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய். உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது. மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் :"கா", "கா", "கா" என்று கத்தியது. அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது. மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தன்
ஒருவன்
கால் தவறிக் கீழே விழுந்தான். அந்த நேரமாகப் பார்த்து அங்கே நடந்து சென்று கொண்டிருந்த முல்லாவின் மீது அந்த
மனிதன் வந்து விழுந்தான். விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான
அடிபட்டுப் படுகாயமடைந்தார். முல்லாவை அருகிலிருந்த மருத்தவமனைக்கு சிலர் எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு
செய்தார்கள். முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற செய்தியறிந்து
நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். " என்ன நடந்தது?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார். " எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய
அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான
தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை
ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது" என்று
சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பாவத்தின் பலன்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சூஃபி, ஞானி, குருமார்கள், தேக்கு மரக் கூட்டம், ஏரி, சாலை, பிச்சைக்காரன், விலங்கு, காடு, மரக்கூடாரம், புத்தர், சுழல், ஓசை, அறிவு
தலைப்பு: ஞானத்தின் பக்குவம்
| ஒரு நாள் இரவு நான் ஒரு சூஃபி கதையை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்தது. நான் அதை அனுபவித்தேன். நான் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது. அந்த சூஃபி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர். முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், "கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு." ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும் குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும். அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில் கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும், கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று அழைக்கின்றனர். இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும் அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும். வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. – ஆனால் அந்த சூஃபியின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை. இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை. ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள் என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர் தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை, அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு ஒட்டுண்ணியோ என நினைத்தார். பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார். ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும், இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான். காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால் பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது. அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில் மின்னியது. அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும், அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில் யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின் அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன். அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப் பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்…..ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை. – அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன் அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல - அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான். ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில் அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும் இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை முழுவதுமாக நனைத்து சென்றது. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான். பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது. பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன? லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல். செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான். வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன் சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான். எப்போதெல்லாம் நீ மிகவும் செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள் உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அப்பு, அம்மா, அசிரியர், பள்ளி, குளி, படி, தேர்வு
தலைப்பு: யானை பல் விளக்குமா?
| புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். "ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா. "நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். "ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார். "மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். "டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா. "குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். "தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர். அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். "சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான். "அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், மகேஷ்தாஸ், சாட்டை, பரிசு, வேலை, ஆசிரியர்
தலைப்பு: காவல்காரர்கள் பெற்ற பரிசு
| ஒருநாள், சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் அக்பரை பணிவுடன் வணங்கியபோது, அக்பர் அவனை நோக்கி, "நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?" என்று அக்பர் கேட்டார். "என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்" என்றான் மகேஷ். "எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!" என்றார் அக்பர். "பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான். "அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!" என்றார் அக்பர். "பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?" என்று மகேஷ் கேட்டான். "முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!" என்றார் அக்பர். "நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!" என்றான் மகேஷ். "அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?" என்றார் அக்பர். "முப்பது சவுக்கடி கொடுங்கள்!" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். "உனக்கென்ன பைத்தியமா?" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார். "அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் "அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!" என்றார். மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை "நீ அடிக்கத் தொடங்கு!" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் "நிறுத்து!" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, "பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!" என்றான். அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், "என்ன உளறுகிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார். அவர்களையே் கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, "தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்" என்றான். இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி, "இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், "நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்" என்றார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அகங்காரம், ஆச்சரியம், ஆழம், மாமன்னன், தூதுவன், குரு, அரசன், ரதம், குதிரை, துறவி, சக்தி
தலைப்பு: நீ யார் ?
| நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா? எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா? அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை " தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது. எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, "குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்." என்றான். நான்சென், "நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு." என்றார். தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான். நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, "குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!" என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். "நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை." என்றார். அரசன், "நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?" என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், "நான் வந்த ரதம் அதுதானே?", "ஆம், அதுவேதான். இதுதான்", "தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்" என்றார். அது செய்யப்பட்டது. குதிரைகளை காட்டி, "அது ரதமா?" என்று கேட்டார் நான்சென். அரசர், "குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?" என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. "அந்த நுகத்தடிதான் ரதமா?" என்று துறவி கேட்டார். "அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல." துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, "எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?" என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது. துறவி தொடர்ந்தார், "நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?. நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: இளைஞன், மரம், முதியவர்
தலைப்பு: வித்தியாசமான உதவி
| ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார் |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ''எத்தனை நேரம் இப்படியே காத்துகிட்டிருக்கிறது? இங்கே உட்கார்ந்திருக்கிற நேரம் பீச்சுக்குப் போயிருந்தேன்னா இத்தனை நேரம் பத்து கோட்டை கட்டியிருப்பேன். ரெண்டு மட்டும் அகழி வச்சது. ஸ்பெஷல். பாவம் இராஜராஜனும் தான் எத்தனை பேரை சமாளிப்பான்! பெரிய ராஜாதான், இருந்தாலும் எந்தப் புத்துல எந்தப் பாம்புன்னு தெரியாதில்லே...?'' - பெரியவரை மேலே பேச விடாமல் அவரது மகன் போலிருந்தவர் அதட்னார் - ''ஷ்... பேசக் கூடாதுன்னு போர்டு போட்டிருக்கில்லை? பேசாம இருங்க.'' கோயமுத்தூர்ல ஏது பீச்? மணிவாசகத்திற்குக் கவலையாய் இருந்தது. இங்கே வருகிறவர்கள் எல்லாம் இந்த டைப்தானா? ஐயோ நானுமா? இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தான். ''போய் விடலாமா? எனக்கென்ன வியாதி? ஒன்றுமில்லை, ஏதோ குழப்பமான கனவுகள்...'' குழப்பமான கனவுகளா? ச்சேச்சே... நல்ல தெளிவான கனவுகள்தான் வருகின்றன. அதனால் தூக்கம் போகிறது. அவ்வளவுதானே? சமாளித்துவிடலாம். இதற்காக யாராவது டாக்டரிடம் வருவார்களோ? பெரியவர் இப்போது மணிவாசகத்தை நெருங்கி அமர்ந்தார். ''ஏன் சொல்றேன்னா, பெரிய ராஜா பாருங்கோ. தனித்தனியா தப்பிக்க நேரம் இருக்காது. அதனாலதான் அரண்மனையிலிருந்து நேரா ஊருக்கு வெளியே ஒரு ரகசியப் பாதை, சுரங்கம்...'' மணிவாசகம் முடிவு செய்தான், ''டக்''கென்று எழுந்தான். ''போய்விடலாம்.'' ''நம்பர்12. யார் சார் நீங்களா? இப்படி வாங்க.'' வேறு வழியில்லாமல் மணிவாசகம் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று. அறையின் ஒரு கோடியில் விஸ்தாரமான மேஜைக்கு பின்னால் டாக்டர் ஜெயகிருஷ்ணன். தங்க ஃபிரேம் கண்ணாடி, உருளைக் கிழங்கு மாதிரி உடம்பு, பாறை மாதிரி சலனமில்லாத கண்கள். ''உட்காருங்க. உங்க பேர்?'' ''மணிவாசகம்.'' ஏற்கெனவே மணிவாசகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்த விவரத்தாளை ஒரு நோட்டம் விட்டார். வயசு - 24, அப்பா - இல்லை, அம்மா, ஒரு அக்கா, ஒரு தம்பி. உத்தியோகம் - சேல்ஸ்மேன், திருமணநிலை - இன்னும் இல்லை, முகவரி - 32, ராதாகிருஷ்ணா சாலை, கோவை-18, பிரச்சினை - கனவுகள். ''சொல்லுங்க, என்ன கனவு வருது உங்களுக்கு?'' தயங்கினான். ''வந்து...இதை எப்படி சொல்றதுன்னே தெரியலை. வெளியே சொன்னால் சிரிப்பாங்க. அதான்.'' ''பரவாயில்லை, எதுவா இருந்தாலும் சொல்லுங்க. டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. அதுவும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே ஒளிவுமறைவே கூடாது. என்ன, லேடீஸ் அதிகம் வராங்களா கனவில்?'' ''ஐயோ, அப்படியெல்லாம் இல்லை. லேடீஸ் ரொம்பக் குறைவு. ஆண்கள்தான் அதிகமா வராங்க.'' ''ஆண்கள்னா யாரு? உங்க கூடப் பிறந்தவங்க, இல்லை நண்பர்கள்... இப்படி?'' ''இல்லையில்லை. நான் நேர்ல சந்திச்ச யாருமே வரதில்லை.'' டாக்டர் கொஞ்சம் யோசித்தார். ''வேற யார்தான் வராங்க? யாரோ உங்களுக்கு அறிமுகமில்லாத, முகம் தெரியாதவங்களா? ''இல்லை டாக்டர். வர்றவங்களை எனக்குத் தெரியும். அவங்களுக்குத்தான் என்னைத் தெரியாது.'' ''எப்படிச் சொல்றீங்க?'' ''வர்றவங்க எல்லாம் ரொம்பப் பெரிய ஆளுங்க. ஜார்ஜ்புஷ், பில் கிளின்டன், ஜான் மேஜர், சதாம் உசேன் இப்படி...'' டாக்டரின் உதட்டோரமாக மெல்லிய, மிக மெல்லிய சிரிப்பு புறப்பட்டு மறைந்தது. ''சரி, இவங்க கனவில வந்து என்ன சொல்றாங்க?'' ''காப்பாத்து, காப்பாத்துன்னு கத்தறாங்க'' ''எதுக்கு'' ''பில் கிளின்டன், புஷ்ஷெல்லாம் சதாம் உசேன் கிட்டே மாட்டிக்கிறாங்க. ஈராக்கிலே ஒரு டஞ்ஜன் ஜெயில் ரூம்ல சதாம் உசேன் அவங்களைக் கொடுமைப்படுத்தப் போறார். அப்ப இவங்க கத்தறாங்க. உடனே நான் ஜன்னல் பக்கமிருந்தோ. கூரையைப் பிளந்து கிட்டோ உள்ளே குதிச்சு, சதாமோட சண்டை போட்டு, கட்டிப் போட்டுட்டு, இவங்களைக் காப்பாத்தி, காடு மலை எல்லாம் தாண்டி ஜீப்ல பிரயாணம் பண்ணி பத்திரமா அமெரிக்கா கொண்டு போய் சேர்க்கிறேன்.'' டாக்டர் இப்போது சிரிப்பை அடக்க முயற்சிக்கவில்லை. சிரித்தார். ''எப்பவுமே இதே கனவுதானா?'' ''கிட்டத்தட்ட, மாட்டிக்கிறவங்க எல்லாம் பெரிய பெரிய பொலிடிகல் தலைவர்கள். கொடுமைப்படுத்தறவங்க எல்லாம் சர்வாதிகாரிகள், தீவிரவாதிகள், இப்படி. ஆனா எப்பவும் நான்தான் காப்பாத்துவேன். ஹெலிகாப்டர் கூட ஓட்டியிருக்கேன்.'' ''எப்பவாவது மிலிட்டரியில் இருந்திருக்கீங்களா?'' ''இல்லை, சேரணும்னு ஆசைப்பட்டது கூடக் கிடையாது.'' ''லேடீஸ் வரதில்லையா கனவில? வெறும் ஆண்கள்தானா?'' ''அநேகமா ஆண்கள்தான். ஒரு தரம் மார்கரெட் தாட்சரை டெரரிஸ்ட் கும்பல் கடத்திகிட்டுப் போய் தரையில கண்ணாடி சில்லெல்லாம் போட்டு ஆடச் சொல்றாங்க. அந்த சமயம் நான் ''ஸ்டாப்இட்'' னு கத்திக்கிட்டே, ஷாண்டலியர் கம்பியிலே தொங்கிகிட்டே அவங்களை எடுத்துட்டு அந்தப் பக்க ஜன்னல் வழியா வெளியே போய்த் தப்பிச்சேன்.'' ''மணிவாசகம், சின்ன வயசில வீரதீர செயல்கள்ல ஈடுபட்டிருந்தீங்களா?'' ''எதுவும் கிடையாது டாக்டர். கணக்கு வாத்தியார் நாற்காலியில முள் வைச்சிட்டு ஆர்.கே.மணின்றவன் என்னை மாட்டிவிட்டுட்டான். நிஜத்தை சொல்ல பயந்துகிட்டு, நான்தான் அவர்கிட்ட அடி வாங்கினேன்.'' ''எத்தனை நாளா இப்படி இருக்கு?'' ''இரண்டு வருஷமா. முதல் வருஷம் அதிகமா இல்லை, இந்த வருஷந்தான் ரொம்ப. தூக்கம் போற அளவுக்கு, அநேகமா தினம் இதே மாதிரி கனவு. அன்னிதேதிக்கு யார் பிரபலமாயிருக்காங்களோ அவங்க. ராஜீவ் காந்தியைக்கூட குண்டு வெடிப்பில இருந்து காப்பாத்தி பூ மாதிரி தூக்கிக்கிட்டுப் போய் கெஸ்ட் ஹவுஸ்ல வைச்சேன். ரொம்பப் பாராட்டி, டெல்லியில வைச்சு விருது, பணமெல்லாம் கொடுத்தாங்க.'' ''தூக்கத்திலதான் இந்த மாதிரி கனவெல்லாம் வருதா?'' ''இல்லை டாக்டர். பிரச்சினை அதான், கொஞ்ச நாளாவே தூக்கமா, விழிப்பான்னே தெரியாம இந்தக் கனவுகள் வந்துகிட்டிருக்கு. அன்னிக்கு ஆபீஸ்ல கிளையண்ட்டோட ரெண்டு கைகளையும் இறுகப் பிடிச்சிட்டு விடமாட்டேன்னு சொல்லிட்டேன். என்கிட்ட இருந்து தப்பிச்சிடுவியான்னு சிரிச்சு வேற தொலைச்சிருக்கேன். மணிக்கட்டெல்லாம் சிவந்து போச்சு. அன்னிக்குப் போன மனுஷன்தான். தபால்லயே ஆர்டர் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இந்தப் பக்கமாவே வர்றதில்லை.'' ''ம்...அப்படியா?'' டாக்டர் யோசித்தார். ''சின்ன வயசில உங்க அப்பா ரொம்பக் கொடுமைப்படுத்துவாரோ? குடிச்சிட்டு வந்து அடிச்சு?'' ''சேச்சே. ரொம்ப தங்கமான மனுஷர் டாக்டர். அவருக்கிருந்த நல்ல பேர்னாலதான் எனக்கு இந்த வேலையே கிடைச்சிது.'' அதன் பிறகு டாக்டர் ஏதேதோ சோதனைகள் செய்தார். கைகளை அந்தரத்தில் நீட்டச் சொன்னார். விரித்து மடக்கச் செய்தார். ரப்பர் சுத்தியலால் முட்டி முட்டியாகத் தட்டிப் பார்த்தார். கண்களை ஆராய்ந்தார். முதுகில் படம் வரைந்தார். கடைசியாக சில மாத்திரை, மருந்துகளை எழுதி சாப்பிடச் சொன்னார். ஒரு வாரம் கழித்து மறுபடி வரவேண்டும். ஃபீஸ் நூறு ரூபாய். ''அடப்பாவி'' என்றது மனசு. கதவைத் திறந்து வெளியே வந்ததும் பெரியவரை உள்ளே அழைத்தார்கள். உள்ளே போகுமுன் இவன் பக்கமாகக் குனிந்து, ''நாளைக்கு ராத்திரி பீச்சுப் பக்கமா வந்திடுங்க. சுரங்க வழியா கூட்டிட்டுப் போறேன். தீவட்டியெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. குதிரைகூட தயாரா இருக்கும்'' என்றார். மணிவாசகத்துக்கு நெஞ்சுக்குள் படபடவென்று வந்தது. ''போச்சு...நானும் இந்த நட்டு கழண்ட கேஸ்ல ஒண்ணாயிட்டேன். கடவுளே, என்னைக் காப்பாத்...சட்! என்னை விட்டுறு.'' ரூமுக்கு வந்து சேர்ந்த போது கிட்டுவும் வில்லாவும் இருந்தார்கள். ''என்னடா ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்? உன்னைக் காப்பாத்தறேன்னாரா?'' ''ப்ச்... என்னடா மாத்தி சொல்றே? காப்பாத்தறது மணிக்கு வேண்டிவிட்ட தொழில். அதை அவன்தான் செய்வான் இல்லைம்மா?'' ''டேய், நேரங்காலம் தெரியாம விளையாடாதீங்கடா. அவனவன் நொந்து போய் வந்திருக்கான். சுத்தியை வைச்சு முட்டியில ரெண்டு தட்டு தட்டிட்டு நூறு ரூபா வாங்கிட்டாண்டா... வயித்தெரிச்சலா இருக்கு'' - மணிவாசகம் ஆயாசமாய்ச் சொன்னான். ''முதல்லயே என்கிட்ட வந்திருந்தியானால், அம்பது ரூபாய்க்கு நாலு தட்டு தட்டியிருப்பேனே.'' ''போங்கடா டேய்... தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்.'' மணிவாசகம் அலுத்துக் கொண்டான். ''என்ன ஆனாலும் சரி, இன்றைக்கு கனவை வர விடப் போவதில்லை.'' கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, ''சரி போகுது விடு. சாப்பிடப் போலாமா, இல்லை சுந்தரத்துக்கு வெயிட் பண்ணலாமா?'' என்றான். ''சுந்தரமும் வந்துரட்டுமே, அப்புறமா போகலாம்'' என்ற வில்லா, அடுத்த நாள் உடுத்திக் கொள்ள வேண்டிய உடையை இஸ்திரி செய்ய ஆரம்பித்தான். இரண்டு நிமிடத்தில் சுந்தரம் உள்ளே நுழைந்தான், ''ஐயோ, அம்மா'' என்று முனகிக் கொண்டே. ''என்னடா ஆச்சு?'' ''போடா. இதெற்கெல்லாம் ஒரு ஊரு...பழம் வாங்கலாம்னு போனேன். முதல்ல நல்ல பழமா காட்டிட்டு கட்டறப்ப மோசமானதைப் போட்டுட்டான். அதுக்கு சண்டை. ஒரு லோக்கல் ரவுடி வேற உள்ளே பூந்துட்டான். அப்பா, கை வலிக்குதே'' என்றவன் திரும்பி, ''டேய் மணி, உன் பேரைச் சொல்லித்தாண்டா கத்தினேன். கனவிலேயே மக்களைக் காப்பாத்தி கிட்டிருந்தால் எப்படி? எங்க இருந்தாவது என் முன்னால குதிச்சு ஒரு கை குடுப்பேன்னு நினைச்சேன். இப்படி ட்ரம்ஸ் வாங்க விட்டுட்டியே! நீயும் உன் கனவும் நாசமாப் போக...''என்றவாறே பொத்தென்று படுக்கையில் விழுந்தான். கிட்டுவும் வில்லாவும் அவன் காயங்களை ஆராய்ந்து சிகிச்சை செய்து கொண்டே, மறுபடியும் மணிவாசகத்தை வார ஆரம்பித்தார்கள். ''என்ன மனுஷன்டா நீ? ரூம் மேட் லோக்கல் ரவுடிகிட்ட அடிவாங்கிட்டு வந்து அனத்தறான். அவனை என்னண்ணு கேட்காதே. பாக்தாத்துக்குப் போயிடு சதாம் உசேனை ரூட் போட.'' ''போதாக் குறைக்கு ஒயிட் ஹவுஸ்ல கூப்பிட்டு இவனுக்கு பார்ட்டி வேற. டயானா கூட இருந்தாங்க போலிருக்கே.'' மணிவாசகம் வேகமாக எழுந்தான். ''என்ன ஜென்மங்களோ? நானே குழம்பிப் போய்க் கிடக்கிறேன். இவங்க எண்ணை ஊற்றி எரிச்சிகிட்டிருக்காங்க. எதை மறந்தால் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறேனோ அதையே ஞாபகப்படுத்திகிட்டு இருக்காங்க, ராஸ்கல்ஸ்.'' ''டேய் டேய், இருடா. போகாதே. எல்லாருமே போய் சாப்பிட்டுட்டு வந்திடலாம்,'' கிட்டு கூவ, அதற்குள் சுந்தரம், ''மணி உனக்கு லெட்டர் வந்திருக்கு. நான்தான் வாங்கி வைச்சேன். இந்தா'' என்று பான்ட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான். கடிதம் அம்மாவிடமிருந்து. தம்பிக்கு பள்ளி அட்மிஷன் அனுமதி கிடைத்து விட்டது. எட்டாம் தேதி வரச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் ஒரு முறை மணிவாசகம் ஊருக்கு வந்தால் வீட்டைக் காலி செய்து சாமான்களை எடுத்துவர வசதியாக இருக்கும். திடீர் என்று சந்தோஷமாக இருந்தது. இனிமேல் இந்த மேன்ஷனில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மூன்று வருஷமாக ஹோட்டலில் சாப்பிட்டு, நாக்கும் வயிறும் செத்து விட்டது. இனி அம்மா கையால் சுவையான சாப்பாடு, நல்ல தூக்கம்! தூக்கம் என்றதும் மறுபடி நினைவுக்கு வந்தது. இடம் மாறி சொந்த வீட்டில் தூங்கினால் ஒரு வேளை இந்த கனவுகள் நின்று போகலாம். அன்று இரவுகூட தூக்கம் மற்ற நாட்களை விட நன்றாகவே இருந்தது. இரவு ஒரு மணி வரை. அப்புறம் வந்த கனவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. எப்போதோ ஃபிடல் கேஸ்ட்ரோவிடமிருந்து ஜார்ஜ் புஷ்ஷைக் காப்பாற்றியதற்கு இப்போது பாராட்டு விழா நடந்தது. உலகமெங்கும் மணிவாசகத்தின் தெளிவான பேட்டி டி.வி.யில் ஒளிபரப்பானது. புஷ் ''உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்கிறார். சாகிற வரைக்கும் சாப்பாட்டு வசதியும் அம்மாவுக்கு மாடு வாங்க பாங்க் லோனும் கேட்கிறான். ''அதுக் கென்ன இப்பவே'' என்று உடனே ஏற்பாடு செய்கிறார். இரண்டு கைகளிலும் இரண்டு பசுக்களைப் பிடித்துக் கொண்டு. வீட்டுக் கதவைத் தட்ட, அம்மா கதவைத் திறந்து, ''என்னடாது?'' என்கிறாள். ஒரு பசு மிரண்டு போய் கட்டை உதறிக்கொண்டு, உள்ளே ஓட, சட்...! விழிப்பு வந்தது. தண்ணீர் குடித்து விட்டுப் படுத்த பின்பும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். இடையில் எதற்கோ கண்விழித்த வில்லா இவன் புரள்வதைப் பார்த்து விட்டு துணிக் கொடியிலிருந்து ஒரு ஹேங்கரைக் கழற்றி இவனிடம் கொடுத்து, ''எதுக்கும் இதை வைச்சுக்கோ. வெறும் கையில் ரிஸ்க் எடுக்காதே'' என்று சொல்லிவிட்டு, ''க்ளுக்கும்'' என்று ஒரு மாதிரி சிரித்து விட்டுப் போனான். காலையில் அலுவலகம் கிளம்புமுன் மறுபடி அம்மாவின் கடிதத்தைப் படித்தான். மாலை அக்காவைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அம்மா வருமுன், கொஞ்ச நாளாய் புறநகர்ப் பகுதியில் பூட்டிக் கிடக்கிற சொந்த வீட்டைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது இன்னொரு யோசனை தோன்றியது. பழையபடி அதை வாடகைக்கே விட்டுவிட்டு, நகருக்குள்ளேயே வேறு வீடு வாடகைக்கு பார்த்துக் கொண்டால், தம்பிக்கும் பள்ளிக்குப் போகவர வசதி, தான் அலுவலக வேலையாய் சுற்றிவிட்டு தாமதமாக வந்தாலும் கவலையில்லை. அம்மாவும் வீட்டில் தனியாக இருக்க பயப்பட வேண்டியதில்லை. மாலை அலுவலக வேலை முடிந்து நேராக அக்கா வீட்டிற்குப் போனான். வீட்டுக்கு முன்புறமாகவே குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே அக்கா சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். ''மணியா? வா, வா, நீ மட்டும் இன்னிக்கு வரலைன்னா நாளைக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்.'' ''என்னக்கா, என்ன விசேஷம்?'' ''இவருக்கு வீடு அலாட் ஆகியிருக்கு. எங்க தெரியுமா? நம்ப வீடு இருக்கிற ஏரியாவிலயே! நம்ப வீட்டு ரோட்டைத் தாண்டி, மெயின் ரோட்டுக்கு வந்தால் தண்ணி தொட்டி இருக்கில்லை? அதுக்கு எதிர்த்தாப்பில. ''சி'' பிளாக். நாங்க எல்லாம் போய் பார்த்திட்டு வந்திட்டோம். நாளைக்குப் பால் காய்ச்சப் போறோம். நீயும் வந்திடு'' என்றாள் முகமெல்லாம் சிரிப்பாக. ''ஹப்பா, என்ன கேயின்சிடன்ஸ்! அம்மா லெட்டர் போட்டிருக்காங்க. ஸ்ரீகாந்துக்கு சதாசிவம் மெமோரியல் ஸ்கூல்ல அட்மிஷன் ஒகே ஆயிட்டது. ஊருக்கு நான் ஒரு நடை போயிட்டு வந்தால், சாமானெல்லாம் காலி பண்ணி எடுத்திட்டு வந்திடலாம். இப்பத்தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். ஆமா, உன் மாமியார் எங்கே?'' இந்தக் கடைசி வாக்கியத்தை ஏறத்தாழ கிசுகிசுப்பாகக் கேட்டான். அக்கா அதைவிட கிசுகிசுப்பாக, கிட்டத்தட்ட கண் ஜாடையிலேயே ''உள்ளாற இருக்கு'' என்றாள். ''உள்ளா இக்கு'' என்றது குழந்தையும் மழலையில். ''உன் மாமியார் வெளியில் வர்றதுக்குள்ளே நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போயிடறேன். இன்னிக்குக் காலையிலதான் தோணிச்சு எதுக்கு ஊரைவிட்டு அவ்வளவு வெளியே தள்ளி குடியிருந்துகிட்டு? பழையபடி நம்ம சொந்த வீட்டை நல்ல டெனன்டா பார்த்து வாடகைக்கு விட்டுட்டு நாங்க டவுனுக்குள்ளேயே வேற வீடு பார்த்து இருந்துக்கறோமே, என்ன சொல்றே? எனக்கும் வசதி, ஸ்ரீகாந்துக்கும் ஸ்கூல் போகவர பிரச்சனையில்லை, அம்மாவும் அங்க இங்க போயிட்டுவர சௌகர்யமா இருக்கும்.'' மணிவாசகம் பேசி முடிக்க விடவில்லை கவிதா. ''ஐயோ என்னடா நீ? இப்பதான் சந்தோஷப்பட்டு முடிச்சேன். அதுக்குள்ளே சாக அடிக்கறயே! இப்பதான் எங்களுக்கும் வீடு அங்கயே கிடைச்சிருச்சே! இத்தனை வருஷம் கழிச்சு உள்ளூர்லயே மறுபடியும் எல்லாரும் பக்கம் பக்கமா இருக்கப் போறோம். இந்தக் கிழத்துகிட்ட மாட்டிகிட்டு நான் படற அவஸ்தைக்கு அம்மா பக்கத்திலேயே இருந்தால்தான் எனக்கு ஆறுதலா இருக்கும்.'' படபடக்க அக்காவை ஏறிட்டுப் பார்த்தான் மணிவாசகம். அவள் சொல்வதும் சரிதான். இந்த மாமியார்க் கிழவியிடம் மாட்டிக் கொண்டு அவள் படுகின்ற துன்பத்துக்கு இது கொஞ்சம் மாறுதலாக இருக்கும். சரி, கனவுப் பிரச்சினையை இவளிடம் சொல்லலாமா என்று நினைத்தவன் உடனே மாற்றிக் கொண்டான். ஒன்று கேலி செய்து சிரிப்பாள் அல்லது தம்பிக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதோ என்று கவலைப்பட ஆரம்பிப்பாள். ஏற்கெனவே அவள் கொஞ்சம் பயந்த சுபாவம். திருமணத்துக்கு முன் பாஸ்போர்ட் விவகாரமாக வீட்டிற்கு சம்பிரதாய முறையில் விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் எப்படி உளறிக் கொட்டினாள்! ''என்னடா நீயா சிரிச்சுக்கறே?'' என்றாள் கூர்மையாக. ''ஒண்ணுமில்லை. நீ அந்த போலீஸ் ஆபீசர்கிட்ட எப்படி உளறினேன்னு திடீர்னு ஞாபகம் வந்தது.'' அவளும் சிரித்தாள். ''அதெல்லாம் அப்ப.'' ''சரி, உன் இஷ்டப்படியே நம்ப வீட்டுக்கே வந்திடறோம், உங்க ஃபிளாட்டில பால் காய்ச்சற ஃபார்மாலிட்டிக்கெல்லாம் நான் வர வேண்டியதில்லை இல்லை? மறுபடி அம்மா இங்க வந்தப்புறம் வர்றேன், என்ன?'' என்று கிளம்பினான். ''மாமா டாடா'' என்றது குழந்தை. ''ஏண்டி கவிதா, சாயங்கால நேரத்தில குழந்தையை வாசல்ல வைச்சுக்கிட்டுப் பராக்குப் பார்க்காதேன்னு சொன்னா உனக்குப் புரியாதே! போற வர தடியனெல்லாம் கண்ணுப் போடணும்'' என்றபடியே உள்ளிருந்து வந்த மாமியர் அப்போதுதான் மணியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள். ''அடடே நீயா? எங்கே வந்தே? கொஞ்ச நாளா ஆளையே காணோம்? அக்காக்காரி சொல்லி விட்டாளாக்கும்?'' என்று வாயை ஒரு விதமாகக் கோணிக் கொண்டே பேசினாள். மணிக்கு கவிதா மாமியாரைக் கண்டாலே பிடிக்காது. மேடு விழந்த நெற்றியும், கண்களில் சதா ஒரு வில்லத்தனமும், கோணிக் கொண்டு பேசுவதும்... ''இல்லேம்மா, தம்பிக்கு இங்கேயே ஸ்கூல்ல சீட் கிடைச்சிடுச்சு. அம்மாவும் இங்கேயே வரப் போறாங்க. அதைச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்'' என்றான் ஜாக்கிரதையாக. மாமியார் அருகில் இருந்தால் வாயே திறக்க மாட்டாள் கவிதா. ''எதுக்கு வம்பு?'' என்பாள். ''இங்கேயே வர்றாங்களாக்கும்! பொண்ணையும் பேரனையும் வருஷம் ஆறு பண்டிகைக்கும் சீராட்டலாம் பாரு. வரட்டும், நல்லா வரட்டும்.'' ''அப்ப, நான் கிளம்பட்டுமா அம்மா? அக்கா, வர்றேன். அத்தான் வந்தால் சொல்லிடு. டேய் குட்டி, டாடா'' என்றபடியே வண்டியைக் கிளப்பி திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டான். அன்றிரவு மாத்திரையைப் போட்டுக் கொண்டதில் தூக்கம் அரை மணியில் கண்களைத் தள்ளியது. சுந்தரமும் கிட்டுவும் எதிரே இருந்தவர்கள்...ஃபிரேமுக்குள் வந்து வந்து போனார்கள். ''என்னடா இப்படி தூங்கி விழுகிறான்? டாக்டர் மருந்து நல்லாதான் வேலை செய்யுது போலிருக்கு'' என்ற குரல்கள் காதில் விழுவது போலிருந்த கட்டத்தில் அப்படியே கட்டிலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். வில்லியம்ஸ் தான் முந்தைய தினம் இரவு அவனுக்கு ''ஆயுத சப்ளை'' செய்த காரியத்தைச் சொல்லிச் சிரித்தான். ''பெரிய ஹீரோ ஆகணும்னு மனசுக்குள் நினைப்பு. முடியலை. அதான் கனவில் பார்த்து திருப்திப் பட்டுக்கறான்.'' விடிகாலையில் மீண்டும் கனவு வந்தது. இந்த முறை கோர்ப்பசேவ் எங்கேயோ அடைந்து கிடக்கிறார். அவர் எதிரே காவலுக்கு ஒரு ரோபோ-கத்தியில்லை, ரத்தமில்லை. மணிவாசகம் குழாய் பிடித்து ஏறி, உள்ளே இறங்கி, ரோபோவின் கண்களில் இருந்து வரும் கதிர்களைத் தடை செய்து, ''கோர்பி நான் வந்துட்டேன், இனி கவலையில்லை'' என்ற வசனத்துடன் கையைப் பற்றி ரஷ்யாவுக்கே அழைத்துச் செல்கிறான். கனவு கலைந்ததா, முடிந்ததா, விழிப்பு வந்ததா என்று சொல்ல முடியாத அளவுக்கு சாப்பிட்ட மாத்திரையின் வீரியம் இருந்தது. இதைத் திரும்ப நினைவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டே, அலுவலகத்தில் விற்பனை விவரங்களை டைரியில் எழுதிக் கொண்டிருந்தான். தூங்குகிறானா, விழிப்புதானா என்று தெரியாமல், திடீரென்று ''கோர்பி மறுபடி பதவிக்கு வா. நான் இருக்கிறேன்'' என்றான் ஆங்கிலத்தில். மிக அகஸ்மத்தாக எதிரே இருந்தவர் கோபிநாத். கிளையண்ட். ''சார்'' என்று வார்த்தைக்கு நூறு வார் போடுகிறவன் திடீரென்று பேர் சொல்லிப் பேசுகிறானே என்று குழம்பினார். ''என்ன மணி, என்ன சொன்னீங்க இப்ப?'' மணிவாசகம் சுயநினைவுக்கு வந்து சுமாராக சமாளித்தான். ''ஐயையோ தப்பா எடுத்துக்காதீங்க சார். கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து என் ஃபேமிலி இங்கே வர்றாங்க. அதையே நினைச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு உளறிட்டேன்.'' இருந்தாலும் கோபிநாத் போகும் போது இரண்டு மூன்று முறை திரும்பித் திரும்பி பார்த்து விட்டுத்தான் போனார். விஷயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. உடனே டாக்டரைப் பார்த்து தீவிர சிகிச்சைக்கு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த முறை ஜெயகிருஷ்ணனின் வரவேற்பறையில் பீச்சில் கோட்டை கட்டுகிற கிழவரைக் காணோம். ஒரு பதினாறு வயதுப் பெண், ''என் இரட்டை சடை நல்லா இருக்கில்லை? என்னைக் கல்யாணம் செய்துக்கறியா?'' என்றது. ஜெயகிருஷ்ணன் அதே பாறைப் பார்வை பார்த்துக்கொண்டு, மணிவாசகத்தின் தாளை ஃபைலில் தேடி, ''உங்களை அடுத்த வாரம்தானே வரச் சொல்லியிருந்தேன்'' என்றார் கொஞ்சம் கடுமையாக. ''விழிச்சிகிட்டு இருக்கறப்பவே ஏதாவது உளறிடறேன் டாக்டர். அதான் வந்தேன்.'' ''அதான் ஏற்கெனவே சொல்லிட்டீங்களே! டாக்டர் கிட்டேன்னு வந்திட்டால் அவர் சொல்றபடி செய்யனும். அப்பதான் பலன் இருக்கும்! மருந்தெல்லாம் சரியா சாப்பிட்டுட்டு அடுத்த வாரம் வாங்க.'' நல்ல வேளை, இதற்கு ஃபீஸ் எதுவும் வாங்கவில்லை. வெளியே வந்தவனை ஒரு பெண் குரல் அழைத்தது. வலது புறம் சின்ன டேபிள், நோட்டுப் புத்தகங்கள், தொலைபேசி சகிதம் அமர்ந்திருந்த பருமனான பெண்மணி, கொண்டை போட்டுக் கொண்டு, கண்ணாடி வழியாகப் பார்த்து, ''ஐம்பது ரூபாய்'' என்றாள். பணம் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கியிருக்கிறது'' என்றாள். ச்சே! கனவுகள் கூட இவ்வளவு காஸ்ட்லியா? சுதந்திர இந்தியாவில் ஒரு இளைஞன் கனவுகூடக் காணக்கூடாதா? அந்தப் பெண்மனி ஜெயகிருஷ்ணனின் மனைவியாம். ஃபீஸ் வாங்குவதுதான் அவளது முழுநேரத் தொழிலாம். என்றைக்காவது அவள் இல்லையென்றால் டாக்டர் பெற்றுக் கொள்வாராம். சந்தானகிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட போது சொன்னான், அந்தக் கிழவனிடம் மட்டும் போகாதே. அவன் ஒரு க்வேக்! இன்னொரு விஷயம் தெரியுமா? இவரிடம் முதலில் நுழைகிறவர்கள் உன்னை மாதிரி சாதாரண புகாரோடுதான் போகிறார்கள். திரும்பும்போது அந்தக் கோட்டை கட்டுகிற கிழவன் மாதிரி ஆகிவிடுவார்கள், ஜாக்கிரதை! அவன் நோயாளிகளை உருவாக்குகிறான்! விஷயம் தெரிந்து, மணிவாசகத்திற்கு விதவிதமான ஆலோசனைகள் இலவசமாகக் கிடைத்தன. ''தூங்கறதாலேதானே கனவு வருது. தூங்கவே தூங்காதே. தூங்கற மாதிரி நடி. அப்ப கனவு வராது. அப்படி அசதியில் உன்னையும் மீறி தூங்கிட்டாலும் கனவு வராது. ஏன்னா, நீ தூங்கறதுதான் உனக்கே தெரியாதே ஹ’ஹ்ஹ’...'' ''உனக்கு எப்படி உலகத்தில் நடக்கிற நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியுது? பேப்பர் படிக்கிறதால்தான். பேப்பரை நிறுத்திடு, டி.வி. பார்க்காதே.'' எப்படி முடியும்? பார்க்கிற உத்தியோகம் சேல்ஸ்மேன் உத்தியோகமாயிற்றே! பேப்பர் படிக்காமல் முடியுமா? பேசுவதுதான் முழுநேரத் தொழிலாக இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை ரசனைகள்! அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா? சைக்கியாட்ரிஸ்டுகள் நான்கைந்து பேரைப் போய்ப் பார்த்தான். எல்லோரும் கேள்வி கேட்டுக் கேட்டுக் மாய்ந்தார்கள், எண்பது சதவீத கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்தன. மீதி இருபது சதவீத கேள்விகள் அந்த சைக்கியாட்ரிஸ்டின் பாபுலாரிட்டி, வாங்குகிற கட்டணம், ரசனை இவற்றைப் பொறுத்து மாறுபட்டது. (''என் கனவுகளும் உன் கேள்விகளும்'' என்ற தலைப்பில் இவை ஒரு தொகுப்பாக வெளிவர இருக்கின்றன. வெளியிடுபவன் அன்பரசு. மணிவாசகத்தின் அச்சக நண்பன்.) தவறாமல் எல்லோரும் ரப்பர் சுத்தியால் மணிவாசகத்தை முட்டிக்கு முட்டி தட்டினார்கள். ரொம்பப் பொறுக்க முடியாமல் கடைசியாகப் பார்த்த டாக்டரிடம் இருந்து அந்தச் சுத்தியலைத்தள்ளிக் கொண்டு வந்து, வடகோவையில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மேம்பாலத்திற்கு ''அர்ப்பணம்'' என்று கூறி எறிந்து விட்டு வந்தான். ''சைக்கியாலஜிஸ்ட்''டைத்தான் பார்க்கணும் இதுக்கு. ''சைக்கியாட்ரிஸ்ட்'' இல்லை. இரண்டுத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. அவர்கள் மட்டும் என்ன? கேள்வியாகக் கேட்டுத்தான் சாக அடித்தார்கள். தவறாமல் ஒரு ''சிட்டிங்''கிற்கு இத்தனை என்று கட்டணம் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் கனவுகள் என்னவோ கனஜோராக வந்து போய்க் கொண்டிருந்தன. எல்லா மருத்துவர்களும் ஏதோ ஒரு வகையில் ''செடேடிவ்'' கொடுத்து தூங்க வைக்கத்தான் பார்த்தார்கள். கேட்ட கேள்விகளிலிருந்து, உருப்படியாக என்ன கண்டுபிடித்தார்கள், தெரியவில்லை. சொந்த வீட்டுத் தூக்கமும், வீட்டுச் சாப்பாடும் கூட பெரிய மாற்றத்தைத் தந்ததாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் கல்யாணத் தொணதொணப்பு வேறு. ஒரு கட்டத்தில் ''போங்கடா சைத்தான்களா'' என்று எல்லா மருத்துவத்தையும் உதறி விட்டான். கிராஸ்கட் ரோட் ஏழாம் நம்பர் எக்ஸ்டென்ஷனில் ''கனவுகளுக்குப் பலன்'' போர்டுக்குள் இருந்த ஜாக்கி ஜம்புலிங்கம் ''ஹோமம் ஒண்ணு பணணிடுங்க. பரிகாரம்தானே'' என்றார். ''எங்கேயாவது தர்ம அடி வாங்கினேயானால் சட்டுன்னு தெளிஞ்சிடுவே'' என்றார் இன்ஸ்பெக்டர் மாமா. ''கனவு கண்டு கிட்டிருக்கறப்ப ''சப்பு''ன்னு ஒரு அறை, கன்னத்தைப் பார்த்து விட்டால் அதோட லாஸ்ட். கனவே வராது. இதுதான் சரியான பரிகாரம்டா'' என்றான் சந்தான கிருஷ்ணன். கடைசி முயற்சியாக ஒன்றைத் தீர்மானித்து வைத்திருந்தான் மணிவாசகம். ரயில் கிளம்பக் காத்திருந்தான். நீலகிரி எக்ஸ்பிரஸ் இருபது நிமிட தாமதம். இந்த நேரத்தில இப்படியொரு அலுவலக ரீதியான சென்னைப் பிரயாணம் வாய்த்தது நல்லதுதான். அலுவலக வேலையை நாளை மாலைக்குள் முடித்துவிட்டு, ஹ’ப்னாடிஸ்ட் பீட்டர் பெர்னாண்டசிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இப்போதைக்கு அவர் ஒருவர்தான் ஒரே நம்பிக்கை. அவர் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார். மனசுக்குள் ஊடுருவி நோயாளிகளையே காரணத்தைச் சொல்ல வைத்து விடுவாரே! தூரத்தில் தனபால் ஓடிவருவது தெரிந்தது. வழியனுப்பவா? இருக்காதே! பழக்கமில்லையே! ''மணி சார், நல்ல வேளை ரயில் கிளம்பிடுமோன்னு ஓடி ஓடி வந்தேன். மானேஜர்தான் அனுப்பினார். ஹெட் ஆபீசிலிருந்து தந்தி வந்ததாம். நீங்க மெட்ராஸ் போக வேண்டியதில்லை; கேன்சல்'' - மூச்சு வாங்க, அட்டெண்டர் ஜன்னல் வழியாகப் பேசினான். ஏமாற்றமாக இருந்தது மணிக்கு. இனி எப்போது சென்னைப் பிரயாணம் வாய்க்குமோ? ''போச்சா? கொஞ்சம் முன்னாடி தெரிஞ்சிருந்தால் கிளம்பியிருக்கவே வேண்டாம். சரி, போகலாம் வா'' - மணிவாசகம் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு இறங்கி. கவுன்டருக்குப் போய் டிக்கெட்டை கேன்சல் செய்து. தனபாலுடைய மொபெட்டிலேயே ஏறிக் கொண்டான். மெயின் ரோட்டிலேயே இறங்கி நடந்தவன் அக்கா வீட்டிற்குள் நுழைந்தான். கவிதா தூங்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தவள் ஆச்சரியப்பட்டாள். கேலி செய்தாள். ''என்ன மணி, சூட்கேசோட இந்த நேரத்தில? அம்மாகிட்ட கோவிச்சுகிட்டு இங்க வந்திட்டாயாக்கும்?'' சிரித்தான். ''இரயில்வே ஸ்டேஷனிலிருந்து வர்றேன். ஆபீஸ் விஷயமா போக வேண்டியிருந்தது. கடைசி நிமிஷத்தில் கேன்சல் ஆயிட்டுது. ஆமா எங்கே அத்தான், உன் மாமியார் எல்லாம்? சத்தத்தையே காணோம்?'' ''மாமியாருக்கு கண் ஆபரேஷன். அத்தான் மதுரைக்குக் கூட்டிகிட்டுப் போயிருக்கார். என் நாத்தனார் வீட்டில் வைச்சுப் பார்க்கப் போறாங்க. ரொம்ப நல்லதுன்னு அனுப்பி வைச்சிட்டேன். வீட்டில் பிக்கல் பிடுங்கல் இல்லாம நல்லாயிருக்கு. இன்னும் இரண்டு நாளைக்கு நிம்மதிதான். காலையில கூட வீட்டுக்கு வந்திருந்தேன். நீதான் இல்லை.'' ''ஆமாக்கா, இப்ப என்ன தனியாவா இருக்கப்போறே? நான் வேணா வந்து படுத்துக்கட்டுமா? இல்லைன்னா, நீதான் குழந்தையைத் தூக்கிட்டு அங்க வந்திடேன்.'' ''என்ன பயம்? வேலைக்காரம்மா நைட்டு படுத்துக்க வர்றேன்னுச்சு. காணோம். அதனாலென்ன? குழந்தை வேற நல்லா தூங்கறான். நான் நாளைக்குக் காலையில அங்கே வர்றேன். ரெண்டு நாள் அங்கதான்.'' ஆனால் மணி கவலைப்பட்டான். ''என்னக்கா ஊரை விட்டு வெளியில கட்டி வைச்சிருக்கோம் வீட்டை. சரி நான் ஒண்ணு செய்யறேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு, அம்மாகிட்ட சொல்லிட்டு இங்க வந்திடறேன் தூங்கறதுக்கு. இல்லேன்னா ஸ்ரீகாந்தை அனுப்பறேன்.'' ஆனால் வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்ட கேள்விகளிலும், ''நேயர் விருப்பத்தி''லும் கவிதா வீட்டுக்குப் போக வேண்டியிருப்பதையே மறந்து, சாப்பிட்டுவிட்டு, ''பிள்ளையாரப்பா, என்னை இந்தக் கனவுத் தொல்லையிலிருந்து காப்பாற்றினால், உனக்கு 1008 தேங்காய் உடைக்கிறேன். உனக்கே தெரியும் தேங்காய் என்ன விலைன்னு'' என்றபடியே தூங்கிவிட்டான். அவன் விழித்த போது வீட்டிலிருந்த நிலை விசித்திரமாக இருந்தது. கனவா, விழிப்பா என்று புரியவில்லை. என்ன நிகழ்கிறது என்று உணரும் முன்பே அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. ஸ்ரீகாந்தும் அம்மாவும் கத்தி முனையில் நிறுத்தப்பட்டனர். கண்களை மட்டும் விட்டுவிட்டு முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியிருந்த திருடர்கள் இரண்டு பேர் வீட்டிலுள்ள பணம் நகைகளை ஒப்படைத்து விடும்படி மிரட்டினார்கள். அதில் ஒருவன், ''இவன் ஊருக்குப் போயிட்டான்னு சொன்னியே, இங்கே முழுசா நிற்கிறானே?'' என்றான் இன்னொருவன், ''ஆமாண்ணே, இவன் பெட்டியைத் தூக்கிட்டுப் போறதை நானே என் கண்ணால பார்த்தேன். இப்ப எப்படி திரும்பி வந்தான்னு தெரியலையே'' என்றான். மணிவாசகத்திற்குக் கைகால்கள் அவன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் இஷ்டத்திற்கு நடுங்கின. வாய்விட்டுக் கத்தக்கூட திராணியில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, மூவரையும் கட்டி, வாயில் துணியை அடைத்து விட்டு வெளியேறினார்கள் அந்த இரண்டு முகமூடித் திருடர்களும். யார் தங்களைக் கவனிக்கப் போகிறார்கள், எப்போது கட்டவிழ்க்கப்பட்டு காப்பாற்றப்படப்போகிறோம் என்றெல்லாம் குழம்பி, டென்ஷனின் உச்சக்கட்டத்திலிருந்த மணிவாசகத்துக்கு, ''ஐயோ கவிதா தனியாக இருக்கிறாளே'' என்று திடுமென நினைவு வந்தது. நினைவு வந்தது தப்பாகப் போயிற்று. ஓவர் டென்ஷனாகி சுயநினைவு இழந்தான். ''அண்ணா, அண்ணா எழுந்திரு'' என்று உலுக்கினது ஸ்ரீகாந்த். அவன் முகமெல்லாம் சிரிப்பு. அம்மாவிற்கும் ஆனந்தம் முகத்தில் கூத்தாடிக் கொண்டிருந்தது. ''என் கண்ணே, என் தங்கமே'' என்று கொண்டாடிக் கொண்டிருந்தாள். கூடவே கவிதா, அக்கம் பக்கத்து வீட்டினர், காலனிக்காரர்கள். இரண்டு போலீஸ்காரர்கள். சிறிது நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை மணிவாசகத்திற்கு. திருடர்கள் இதே போல் இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து விட்டு, வாய்திறக்க முடியாதபடி கட்டி வைத்துவிட்டு கவிதா வீட்டிற்கும் சென்றிருக்கின்றனர். ஆனால், பின்பக்க ஜன்னல் கதவைத் திறந்து அதன் வாழியாக கம்பை உள்ளே சமையலறை உள்தாளைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சப்தம் கேட்டு கவிதா விழித்திருக்கிறாள். ஒரு நொடியில் ''நன்றாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்'' என்று உணர்ந்தாலும், பதறாமல், ஹாலில் இருந்த பெரிய மர ரேக்கிற்குப் பின்னால், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையோடு மறைந்து கொண்டிருக்கிறாள். திருடர்கள் உள்ளே நுழைந்து, பெட்ரூமுக்குள் போகும் வரை பொறுமையாகக் காத்திருந்து, உள்ளே சென்றதும், சப்தமின்றி அந்தக் கதவைச் சாத்தி வெளியே தாழிட்டு விட்டிருக்கிறாள். எப்படியும் திருடர்கள் கதவை உடைக்க வேண்டுமென்றாலும் கூட பத்து நிமிஷம் தேவைப்படும். அதற்குள் வெளியே ஓடி, அக்கம் பக்கத்திலிருப்பவர்களை எழுப்பி, ஃபோன் மூலம் போலீசுக்குத் தகவல் போய்... திருடர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு செய்தித் தாள்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் கவிதா பெயர் அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருந்தது. பிடிபட்ட திருடர்கள் மூலம், 20 பேர் அடங்கிய, மதுரையைச் சேர்ந்த பெரும் முகமூடிக் கொள்ளைக் கூட்டமே பிடிபட்டது. ஐ.ஜி. இப்படியொரு வீரப் பெண்மணியைத் தன் சர்வீசிலேயே சந்தித்ததில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஜனாதிபதி விருது கவிதாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. கவிதா முகமெல்லாம் சிரிப்பாக, பனாரஸ் பட்டுப் புடவையில், தான் திருடர்களை சிக்க வைத்த சம்பவத்தை அதிகக் கொச்சையில்லாமல் கோவைத் தமிழில் விவரித்தது டி.வி.யில் குளோசப்பில் தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் ஒளிபரப்பானது. ''தைர்யமாக இருந்தேங்க. எப்படியும் இன்னும் ரெண்டு நிமிஷத்தில சமையல் ரூம் கதவைத் திறந்துகிட்டு உள்ளே வந்திடுவாங்கன்னு தெரிஞ்சு போச்சு. தூங்கிகிட்டு இருந்த குழந்தையை அள்ளிக்கிட்டு அப்படியே ஹாலில் மரப் பீரோவுக்குப் பின்னால ஒளிஞ்சுகிட்டேன். அவனுங்க ஸ்டீல் பீரோ இருக்கிற பெட்ரூமுக்குள்ளார போனதும் சப்தமில்லாம நகர்ந்து போய் கதவைப் பூட்டிட்டேங்க. அடுத்த அஞ்சு நிமிஷத்தில காலனிக்காரங்க பூரா கத்தி, கம்போட வந்துட்டாங்க. போலீசுக்கும் தகவல் போன உடனே வந்திட்டாங்க. இதிலே என்ன தமாஷன்னா, பக்கத்தில இருக்கிற எங்க அம்மா வீட்டில போய் அரை மணி நேரத்துக்கு முன்னாலதான், இவனுங்க என் அம்மா, ரெண்டு தம்பிகளைக் கட்டி வைச்சிட்டு வந்திருக்கானுங்க. இத்தனைக்கும் என் பெரிய தம்பி மணிவாசகம் நல்ல வாட்டசாட்டமா, சினிமாவில வர்ற ஹீரோ மாதிரி இருப்பான். மயக்கமே போட்டுட்டான்.'' அந்த தினத்திலிருந்து மணிவாசகத்திற்குக் கனவுகள் வருவது அடியோடு நின்று போனது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'என் கனவுக்கென்ன பதில்?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஹூய் நெங், ஷிய்டோ, சிங் யூவான், மாணவன்
தலைப்பு: எதுவும் புதிதில்லை
| முதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா"ன் ஆசிரியர் சிங் யூவான். "நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா? ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா?" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான். "ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ. ஆனால் விடாக்கண்டனான சா"ன் ஆசிரியர் சிங் யூவான், "ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்?" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார். "நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, "என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை" என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்றான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு
சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால்
அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை
இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக்
கொண்டார். முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண வீட்டுக்காரர்,
" முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது
? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?" என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார்.
" வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? " என திருமண வீட்டுக்காரன் வினவினான்.
செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார். அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர்
தத்தளித்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வேதாந்த நூல்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான். ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர். அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ!’ என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன். அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல். சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான். உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான். வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான். நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முனிவர் காட்டிய வழி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: எருமைப்பட்டி, சலவைத் தொழிலாளி, இரண்டு கழுதைகள், ஆடு
தலைப்பு: முட்டாள்களுக்கு வீண் உபதேசம்
| நல்வழிப்படுத்தவும். Saturday, April 08, 2006 கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம் எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. "நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?" என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. "கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…" என்று அவர்கள் வாயை கிளறியது. "ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!" என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. "கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…" என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே," என்று கோபமாக கூறின. "கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்," என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஹாக்கின் ஒரு ஜென் ஞானி. அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர். குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள். மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று கூறி விட்டாள். பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு கத்தினார்கள். அவர் அமைதியாக, ""அப்படியா,சேதி !'' என்று மட்டுமே கூறினார். குழந்தை பிறந்ததும் ஹாக்கின் அதனை எடுத்து வளர்த்து வந்தார். இதனால் அவருக்குக் கெட்டபெயர் உண்டாயிற்று. ஆனால், அவர் கவலைப்படவில்லை ! குழந்தைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்து பாதுகாத்து வந்தார். ஓராண்டு சென்றது. குழந்தையின் தாய், அந்தக் குழந்தையின் தகப்பன் உள்ளூர் மீன் அங்காடியில் வேலை செய்பவன்தான் என்ற உண்மையைத் தன் பெற்றோர்களிடம் கூறினாள். பெண்ணின் பெற்றோர் ஹாக்கினிடம் சென்று தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர் ""அப்படியா, சேதி !'' என்று கூறிவிட்டு, குழந்தையைத் திரும்பக் கொடுத்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அப்படியா,சேதி !' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குரங்குகள், கொக்கு, குரங்குகளின் ஒன்று
தலைப்பு: குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு
| ஒரு காட்டில் பல குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் இரவு குளிர் தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கிச் சென்றன. குரங்குகள் பேசிக் கொண்டதைக் கேட்டு, மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு குரங்குகளே அது தீயல்ல; மின்மினிப் பூச்சி" என்று கூறியது. இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனே அது மரத்தின்மேல் பாய்ந்து சென்று அந்தக் கொக்கைப் பிடித்து, "நீயா எனக்கு அறிவு புகட்டுகிறவன்?" என்று கேட்டு அப்படியே ஒரு பாறையில் அடித்துக் கொன்று விட்டது. தீயவர்களுக்கு நல்லது சொல்லக் கூடாது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன. சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார். உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார். வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு, பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை?” என்று கேட்டார். “அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார். கவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை… “ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான். உடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார். பின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு. குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான். குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். விடிந்தது. கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை. குருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை?” என்று கேள்விகளை வீசினான். புன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார். ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான். குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?”, என்றார். ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன். “ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான். “கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்திய அந்த குடிகாரன். “சரி… உன் விருப்பம்,” என்றார் குரு. இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று. அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான். ஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு. “இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான். பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு. “குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!,” என்றான் உறுதியான குரலில்…
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புழுதிச் சாலையில் ஒரு வைரம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள்
அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார். ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு
தத்துவத்தைக் கூறினார். இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமந்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி
மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய
நினைத்தார். உடனே அவர் எழுந்து " தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு
சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார். " இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து
பார்த்தீரா?" என்று தத்துவஞானி கேட்டார். " சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் " என்றார்
முல்லா. " என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் " தத்துவ ஞானி கேட்டார். " நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் "
என்றார். " அதன் விளைவு என்ன?" என்று தத்துவ ஞானி கேட்டார் " எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள்
" என்று சொன்னார். இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தத்துவஞானியிடம் வேடிக்கை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிங்கம், மிருகம், சிங்கராசா, முயலார்
தலைப்பு: முயலும் சிங்கமும்
| சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர். அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும். ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது, ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது. அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் "சுவாமி" நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு "ஆம் சுவாமி" வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது. அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, ஊர் சந்தை, குதிரை, கழுதை, விலை, செல்வந்தர், விற்பனை
தலைப்பு: முட்டாள் யார்?
| அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற
கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். முல்லா சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை
மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார். அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஒட்டிக் கொண்டு வருவான். விற்பனை
செய்துவிட்டுத் திரும்புவான். ஆனால் முல்லா அளவுக்கு அவ்வளவு மலிவாக கழுதைகளை விற்க முடிவதில்லை. ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் முல்லாவும் செல்வந்தரும் வீடு திரும்பிக்
கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர் முல்லாவை நோக்கி, " முல்லா! என் கழுதைகளை எனது
அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள்
சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில்
எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு
விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்?"
என்று கேட்டார். முல்லா புன்னகை செய்தபடியே, " அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர்
உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ
கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் "
என்றார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார். அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார். அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார். நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார். மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு. எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு. எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார். ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார். ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன். நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம். சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம். சீடனாக இருப்பது என்றால் – கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய். குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யார் குரு?' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மழை அரிசியை, விதி, அவன் வீட்டுக் குடிசைச் சல்லடையில் சலித்துக் கொண்டிருந்தது. மழை காலங்களில் அவன் வீடுமட்டுமல்ல, அவன் கண்களும் குளமாகித்தான் போகும். ஓட்டைக் குடிசையோடு சேகரும் சேர்ந்து அழுவான். ஏதோ கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார் ராஜலிங்கம் அவர் இறந்ததிலிருந்தே, அவரது குடும்பமும் நொடித்துப் போனது. குடும்பத்தை நடத்தும் பணி சேகர் கையில் ரொம்பவே சுமையாக கனக்கிறது. வீட்டில் பார்த்த பொருளையெல்லாம், தாயம்மாள் விற்றுத் தான் சேகரைப் படிக்க வைத்தாள். பாவம் அவள். படிக்க ஆர்வமாயிருக்கும் மகன், மனநிலை சரியில்லாத மகள், நிறைய வறுமை இந்தச் சொத்துக்களைத் தான் ராஜலிங்கம் தாயம்மாளுக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார். வறுமையில் படித்தாலும் நல்ல மதிப்பெண்களோடு தான் சேகர் பட்டம் பெற்றான். ஆனால் என்ன செய்வது, "தெரிந்த முகம் பார்த்துத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை விட மந்திரிகளின் எழுத்துக்களுக்குத் தான் மதிப்பு அதிகம்." சேகரும் விடுவதாய் இல்லை. அவன் கால்களுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால், அவன் நடந்து சென்ற இண்டர்வியூகளின் மரண வாக்கு மூலங்களைச் சொல்லும். ஒவ்வொரு இண்டர்வியூவிற்கு அவன் செல்லும் போதும் மனநிலை சரியில்லாத தன் தங்கையின் பஞ்சுமிட்டாய் சிரிப்புத் தான் அவனைப் பயமுறுத்தும். அன்றும் அப்படித்தான் வேலை காலி இல்லை என்ற வாசகங்களை மட்டும் பார்த்துப் பார்த்து விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருந்த அவன் கண்கள், அந்தக் கம்பெனியின் முகப்புப் பலகையை மேய்ந்தன. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது. "ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை" சேகர் ஊனமுற்றவன் அல்ல. விதி அவனுக்குப் பாதகமாவே இருந்தது. இதைப் படித்தும் அவன் அந்த இண்டர்வியூவை சந்தித்தான். அவன் கண்களில் ஏதோ நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தது. தனக்கு இந்த வேலை கிடைத்தால்... சராசரி மனிதனைப் போல் அவன் கற்பனைகளில் மூழ்கிப் போனான். வழக்கம் போலவே இதுவும் தோல்வியாகும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். ரொம்பவே உடைந்து போனான் சேகர். இந்த வேலையும் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கூட இல்லை. ஊனமுற்று இருக்கும் ஒருவருக்குத் தான் வேலை என்று கூறி இவன் சான்றிதழ்களை அந்தக் கம்பெனியின் M.D. தூக்கியெறிந்த பிறகு அவன் கண்கள், குளமானது. இதே விரக்தியோடு வீட்டுக்குக் கூடச் செல்லாமல் அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்துக்குச் சென்றான். அந்த அறிவிப்புப் பலகையும், M.D யின் வார்த்தைகளும் அவன் காதில் மங்கலாய் விழுந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் அது ஏதோ செய்வதாய் இருந்தது. உடனே அவன் சற்றும் யோசிக்காமல், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, வெறி பிடித்தவனைப் போல் தனது இடக்கையை வெட்டிக் கொண்டு கத்தினான். இனி நானும் ஊனமுற்றவன், இனி நானும் ஊனமுற்றவன். ஆறாய்ப் பெருக்கெடுத்த இரத்தத்தோடு மயங்கி விழுந்தான். அவன் வாழ்ந்தானா? செத்தானா? தெரியாது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வேலை வா(ஏ)ய்ப்பு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஓ-நமி, ஜப்பான், குத்துச் சண்டை, குருகுலம், ஜென் குரு, இந்திரியங்கள், அலை, புத்தர் சிலை, பூக்கள், மூழ்கு, அணு, ஹிரோஷிமா, நாகசாகி, விஞ்ஞானம், குரு, கடல், பாசாங்கு, கருவறை, பெண்மை, கிருஷ்ணமூர்த்தி, பொறுமை, அகங்காரம், தோல்வி
தலைப்பு: சரணாகதியின் கதை
| ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்த்தில்லை. இது நம்மை பற்றிய நமது கருத்து எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை. இதில் படிப்படியாக நாம் உள்ளே நுழையலாம். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜூஸஸூக்கும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன்………………… நாம் கடலின் அலைகள்தான். நாம் மறந்துவிட்டோம். ஆனால் கடல் நம்மை எப்போதும் மறப்பதில்லை. கடல் என்றால் என்ன என்று கேட்குமளவு நாம் அதை மறந்து விட்டோம். ஆனாலும் நாம் கடலில்தான் இருக்கிறோம். அலை தன்னை மறந்து கடலை மறந்து விடலாம். ஆயினும் அது கடலில்தான் இருக்கிறது. ஏனெனில் கடலில்லாவிட்டால் அலை இல்லை. அலையில்லாவிட்டாலும் கடல் இருக்கும். அலையில்லாமல் கடல் உண்டு. ஆனால் கடலில்லாவிட்டால் அலை கிடையாது. அலை கடலின் அலைதான். அது தனியானதல்ல. கடலின் நிகழ்வுதான். அது கடல் தன் இருப்பைக் கொண்டாருதல்தான். கடவுளின் கொண்டாட்டம் மக்கள். கடவுளின் கொண்டாட்டம் பிரபஞ்சம். இது கடலே கடலைத் தேடும் விளையாட்டுதான். அதற்கு அளவு கடந்த சக்தி இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்னசெய்வது. ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஆனால் ஒரு அலை, தான் ஒரு அளவற்ற கடலின் பாகம் என்று அறிந்துகொள்ளும்போதுதான் இந்த பலம் சாத்தியப்படும். அந்த அலை இதை மறந்துவிட்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது மறக்கும் திறன் அளவற்றது. நமது நினைவு கொள்ளும் திறன் சிறியது, மிகச் சிறியது. ஆனால் மறக்கும் திறன் அளவற்றது. நாம் மறந்துகொண்டே போகிறோம். அதுதான் மிகவும் எளிதானதாகத் தோன்றுகிறது. மிகவும் சுலபமாக மறந்துவிடுகிறோம். இது எப்போதும் நிகழ்கிறது, சுலபமாக மறக்கிறோம். நீ உனது சுவாசத்தை நினைவில் வைத்திருக்கிறாயா. அதில் ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் அது உன் நினைவுக்கு வருகிறது. சளி, பின் மூச்சுத்திணறல் என ஏதாவது வந்தால்தான், இல்லாவிடில் யார் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களுக்கு பிரச்சனை வரும்போதுதான் கடவுளை நினைவு கூறுகிறார்கள். இல்லாவிடில் யார் நினைவு வைத்திருக்கிறார்கள். மேலும் கடவுள் உன்னுடைய மூச்சை விட, உன்னை விட உனக்கு நெருக்கமானவர். அவர் உன்னிடத்தில் உன்னைவிட நெருக்கமாக இருக்கிறார். ஆகவே மறப்பது இயல்பே. நீ அதை கவனித்திருக்கிறாயா. உன்னிடம் எது இல்லையோ அதை நீ நினைவு வைத்திருப்பாய். உன்னிடம் உள்ளதை மறந்து விடுவாய். நீ அதை சாதகமாக எடுத்துக் கொள்வாய். ஏனெனில் கடவுளை இழக்க முடியாது. ஆகவே நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம். மிக அரிதான மக்கள் மட்டுமே கடவுளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். உன்னை எப்போதுமே விட்டு விலகாத ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமான செயல். கடலில் உள்ள மீன் கடலை மறந்துவிடும். அதைத் தூக்கி கரையில் சுடுமணலில் வீசினால் அப்போது அதற்கு தெரியும். அதன் நினைவுக்கு வரும். ஆனால் உன்னைக் கடவுளிலிருந்து பிரித்து வெளியே வீச வழியே இல்லை. அவருக்கு கரை.யே இல்லை. கடவுள் கரைகளற்ற கடல். நீ ஒரு மீன் போன்றவன் அல்ல. நீ ஒரு அலை போன்றவன். நீ கடவுளைப் போன்றவன். உனது இயல்பும் கடவுளின் இயல்பும் ஒன்றேதான். இந்தக் கதைக்கு இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான். குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். தனிப்பட்ட முறையில்…………ஏனெனில் தனியாய் இருக்கையில் அவன் தன் அகங்காரத்தை மறந்து விடுகிறான். இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்……………….. ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார். இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு பெயரைக் கொடுத்து அதன் மூலம் உனக்கு ஒரு வழிமுறையை உருவாக்கித் தருகிறேன். நீ உன் பெயர் மூலமாக உனது வழிமுறையை நினைவில் கொள்ளலாம். உனது யுக்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அது தொடர்ந்து உனக்கு நினைவில் இருக்கும். உனது பாதையை சுட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறி போல அது செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவனது பெயர் ஓ-நமி – மாபெரும் அலைகள் – எனக் கேள்விப்பட்ட குரு கூறினார். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது. கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய். கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக்கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்…….அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மைதன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ – இன் – என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய். பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய். அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய். ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன. அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு. எந்த இடையூறும் இல்லாமல், உன்னுடைய பங்கிலிருந்து எந்த செயலும் இல்லாமல் கவனித்துக் கொண்டிரு. – என்றார். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். முதலில் கவனி. பின் அந்த அலைகளுடன் இணைந்து விடு. நீ முழுக்க முழுக்க உள் வாங்குபவனாகவும் மௌனமாகவும் இருப்பதை உணரும் நேரத்தில் உன்னை அந்த அலைகளாக கற்பனை செய்து கொள். இது இரணடாவது படி. முதலில் ஆக்ரோஷமானவனாக இருக்காதே. ஏற்றக் கொள்பவனாக இரு. உள் வாங்குபவனாக மாறும் நேரத்தில் அந்த அலைகளுடன் ஒன்றி விடு. நீ தான் அந்த அலை என கற்பனை செய்துகொள். அவன் தன்னை, தன் ஆணவத்தை மறக்கக்கூடிய ஒரு யுக்தியை அவனுக்கு கொடுத்தார். முதல்படி ஏற்றுக்கொள்பவனாக இருத்தல். ஏனெனில் ஏற்றுக்கொள்ளும் போது ஆணவம் அங்கிருக்க முடியாது. பிரிவினை இருக்கும்போதுதான் ஆணவம் அங்கிருக்க முடியும். நீ உள் வாங்குபவனாக இருக்கும்போது உனது கற்பனைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்றுக்கொள்ளும் மக்கள், உணர்ச்சிகரமான மக்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். தஙகளது பாகத்திலிருந்து எந்த வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், ஒரு சிறிதளவு ஆக்கிரமிப்பு கூட இல்லாமல் மரத்தின் பசுமையை பார்க்கும் மக்கள். மரத்தின் பசுமையை பருகும் மக்கள். அந்த ஒரு நீருறிஞ்சி போல உறிஞ்சும் மக்கள் யாரோ அவர்கள் படைப்பவர்களாகின்றனர். மிகவும் கற்பனை செய்பவர்களாகின்றனர். அவர்கள்தான் கவிஞர்கள், ஓவியர்கள், நடன கலைஞர்கள், இசையை உருவாக்குபவர்கள். அவர்கள் இந்த பிரபஞ்சத்தை உல் வாங்குதலோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் எதை உள் வாங்கினார்களோ அதை அப்படியே தருகின்றனர். நீ கடவுளுக்கு அருகில் வர உதவக்கூடிய ஒரு சாதனம் கற்பனை. கடவுள் ஒரு சிறந்த கற்பனைவாதி – ம்ம் – அவருடைய உலகத்தை பார். சிந்தனை செய்து பார். இத்தனை மலர்களுடனும், இத்தனை பட்டாம்பூச்சிகளுடனும், இத்தனை மரங்களுடனும், இத்தனை நதிகளுடனும், இத்தனைவிதமான மக்களுடனும் உலகத்தை கற்பனை செய்துள்ளார். அவருடைய கற்பனைத்திறனை எண்ணிப்பார். இத்தனை நட்ஷத்திரஙகள், இத்தனை உலகங்கள், உலகத்திற்கப்பால் உலகம், முடிவில்லாதது…. அவர் ஒரு சிறந்த கனவு காண்பவராக இருக்க வேண்டும். கிழக்கில் இந்துக்கள் இந்த உலகம் கடவுளின் கனவு என்று கூறுவர். இந்த உலகம் அவரது கண்கட்டிவித்தை. அவரது கற்பனை. அவர் இப்படி கற்பனை செய்துள்ளார். நாம் அவரது கனவின் பாகம்தான். ஜென் குரு ஓ-நமியிடம் உன்னை அந்த அலைகள் போல கற்பனை செய்து கொள் – என்று கூறினார். மேலும் அவர் நீ உருவாக்க முடியும், முதலில் உள் வாங்குபவனாக இருந்தால் பின் உன்னால் உருவாக்கமுடியும். நீ உனது ஆணவத்தை விட்டு விட்டால் பின் நீ வளைந்துகொடுப்பவனாக மாறி விடுவாய். பின் நீ கற்பனை செய்வது நடக்கும். உனது கற்பனை நிஜமாகிவிடும். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலைகளை நினைக்க முயன்றான். முதலில் அது கடினமாகத்தான் இருக்கும். அவன் பல விஷயங்களை நினைத்தான். அது இயற்கைதான். – ஆனால் அவன் தங்கினான். அவன் மிகவும் பொறுமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பின் மெதுமெதுவாக அவன் அலைகளை மட்டுமே நினைக்க ஆரம்பித்தான். பின் அந்த கணம் வந்த்து………. நீ பொறுமையாக பின் தொடர்ந்தால், பிடிவாதமாக இருநாதால், இந்தக் கணம் வந்தே தீரும். பல பிறவிகளாக நீ ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த விஷயம் நடக்கும் – ஆனால் பொறுமை தேவை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. இப்போது இவை உண்மையான கடலின் அலைகள் பெரியதாகி வருவதல்ல. இப்போது இவனது கற்பனை அலைகளுக்கும் உண்மையான அலைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இப்போது அவனுக்கு எது எதுவென்று தெரியாது. எது உண்மை எது கற்பனை என்று தெரியாது. அவன் ஒரு சிறு குழந்தை போலாகிவிட்டான். குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்தத்திறன் இருக்கிறது. ஒரு குழந்தை தான் கனவில் கண்ட பொம்மை எங்கே என்று காலையில் எழுந்தவுடன் அழும் காட்சியை பார்க்கலாம். அது அந்த பொம்மை வேண்டுமென்று அழும். அது கண்டது கனவென்று சொன்னால் அதற்கு புரியாது. அது பொம்மை எங்கே என்றே அழும். அவனது கனவிற்கும் விழித்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பது அவனுக்கு தெரியாது. அவனுக்கு எல்லாமும் ஒன்றுதான். நீ உள் வாங்குபவனாக மாறும்போது நீ ஒரு குழந்தை போலாகிவிடுகிறாய். இப்போது இந்த அலைகள் முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அது அழகு. ஒரு புத்ததுறவிக்கு புத்தரே அடித்துச்செல்லப்பட்டு விட்டார் என்பது கஷ்டமானதாகத்தான் இருக்கும். அவர் தனது மதத்துடன் மிகவும் ஒன்றிவிட்டிருந்தால் இந்த இடத்தில் அவர் தனது கற்பனையிலிருந்து பிரிந்திருப்பார். அவர் – போதும், போதும். புத்தரின் சிலையே அடித்து செல்லப்பட்டு விட்டதா, நான் என்ன செய்வது, இல்லை, நான் அந்த அலை அல்ல. – என்று கூறியிருப்பார். அவர் புத்தர் சிலையின் காலடியில் நின்றிருப்பார். அவர் காலடியில் விழுந்திருப்பார். ஆனால் அதற்கு மேல் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனால் நினைவில் கொள். ஒரு நாள் இந்தப் பாதையில் நீ செல்ல உனக்கு உதவிய அந்த பாதங்களையும் விட்டாக வேண்டும். புத்தர்களும் அடித்து செல்லப்பட்டாக வேண்டும். ஏனெனில் நீ பிடித்துகொண்டிருந்தால் நீ செல்வதற்கு கதவுகளே தடையாக இருக்கும். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. அது நிஜமாக நிகழ்ந்தது அல்ல. அது ஓ-நமிக்கு நிகழ்ந்தது. நினைவில் கொள். நீ அந்த சமயத்தில் அந்த கோவிலில் இருந்திருந்தால் அந்த கோவிலை நீர் சூழ்ந்ததை உன்னால் பார்த்திருக்க முடியாது. அது ஓ-நமிக்கு மட்டுமே நிகழ்ந்தது. அது அவனது இருப்பின் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் நிகழ்ந்தது. கவிதை தளத்தில், கனவு தளத்தில், கற்பனை தளத்தில் நிகழ்ந்தது. வெகுளித்தனமான, குழந்தை போன்ற, பெண்மைதனமான, உள்ளுணர்வில்………………………… அவன் தனது கறபனை யுக்தியின் கதவுகளை திறந்து விட்டான். அலையோசையை கேட்டதன் மூலம், உள் வாங்கிகொள்பவனாய் இருத்தல் மூலம், அவன் கற்பனையியல் சேர்ந்தவனாகிவிட்டான். அவனது கற்பனை ஆயிரம் இதழ் தாமரையாய் மலர்ந்தது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அவன் புத்தனாகி விட்டான். புத்தருக்கு ஒருநாள் போதிமரத்தடியில் அமர்ந்திருந்தபோது வந்த அதே புன்னகை ஓ-நமிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவன் அங்கே இல்லை. அந்த புன்னகை, திரும்ப வீடு வந்து சேர்ந்துவிட்ட அந்த புன்னகை, வந்து சேர்ந்துவிட்டவரின் புன்னகை, இனி எங்கும் போக வேண்டியதில்லை என்ற புன்னகை, ஆதார மையத்தை வந்தடைந்த புன்னகை, ஒருவர் இறந்து மறுபடி பிறந்த புன்னகை. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை. ஏனெனில் அப்போது அது அவனது சக்தியல்ல. அவன் வெறும் ஓ-நமி மட்டுமல்ல, அவன் வெறும் அலையல்ல, அவன் இப்போது கடல். உன்னால் எப்படி கடலை தோற்கடிக்க முடியும். உன்னால் அலைகளை வேண்டுமானால் தோற்கடிக்க முடியும். நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய். எல்லா வாழ்வும் முழுமைதான். நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வந்து சேர ஒரே வழி சரணடைதல்தான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கூன் வண்ணான்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது. கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது! ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன். ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி. பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர். குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான். ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான். வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது. இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன். ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு. அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள். நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன். திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார். சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர். கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள். வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி. வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன். ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும். அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர். நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்! வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன். சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார். உம்... நம் தொழிலூ திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உதைக்கிற கழுதையே உழைக்கும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே கதைதான். இந்த நேரம் என்றில்லை, இன்ன பொழுது என்றில்லை. வந்துவிடுகிறான் தினகரன். யார் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்தார்கள் இவனை. ராஜூவுக்கு எரிச்சலான எரிச்சல். அவனுக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்கவில்லை. இவனை யார் வரச்சொன்னது. போன ஞாயிற்றுக்கிழமை. சித்திரைவெயிலுக்கு பயந்து, கதவை ஒருச்சாத்திவிட்டுப் படுத்திருந்தான் ராஜூ. வீடோ ரொம்ப சின்னது. மத்தியானம், இரண்டு, இரண்டரை மணி இருக்கும். கடுமையான வெக்கை. புழுக்கம். மேஜைக் காற்றாடியை மூன்றில் வைத்திருந்தான். அப்படியிருந்தும் தூங்க முடியவில்லை. பக்கத்தில் அலமேலு ஒருக்களித்துப் படுத்தபடி, அதிசயமாக 'குமுதம்' பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகன் ஐயப்பன்தான் வந்து சொன்னான், தினகரன் வந்திருப்பதை. இவர்கள் வளவில் மூன்று வீடுகள். எதிரே வடக்கு பார்த்த வீடு. தெற்கே பார்த்து இரண்டு வீடுகள். உள்ளபடியே, அது ஒரு வீடுதான். வாடகைக்காக இரண்டாக மறித்து, சுவர்வைத்துப் பிரித்திருந்தார்கள். இந்த வீடு ஒரு முடுக்கு மாதிரி. நீளமாய் இருக்கும். விசாலம் கிடையாது. முன்புறம் சின்ன தார்சா. நடுவில் சரியாக இரண்டு பேர் படுக்கிற மாதிரி பட்டாளை. பின்னால் அடுக்களை. பின்புழக்கம் உண்டு. மேல வீடுதான் உண்மையிலேயே வீடு. அதுவும் இவர்கள் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதாவது, இவன் மாமனார், மாமியார், மருமக்கள் - அலமேலுவின் அண்ணன் பிள்ளைகள். மூத்த தாரத்து மக்கள். பஞ்சபாண்டவர்கள் - மதினி, சகலர் எல்லோரும் இருக்கிறார்கள். பெரிய வீடு அது. யாராவது வந்தால் அங்கேதான் இருக்க வைப்பது. சொந்தக்காரர்கள், ரொம்ப வேண்டியவர்களை மட்டும் தாம் இந்த வீட்டில் கூப்பிட்டுவைத்துப் பேசுவது. இருக்கச் சொல்வது. இடவசதி - இல்லை, இட நெருக்கடிதான் காரணம். அந்த வீட்டுத் திண்மையில் தான் தினகரனை உட்காரச் சொல்லியிருந்தார்கள். அலமேலு போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அவள் வந்தவுடன் ராஜூ ஆத்திரமாய்க் கேட்டான். "இவனுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ஒரு வீட்டுக்கு வர. பொண்டாட்டி, பிள்ளை இருக்கற மனுஷன் மாதிரியே தெரியலியே இவனப் பாத்தா. இந்த வேனா வெயில்ல ஒரு உடை உடுத்தி நடை நடந்து வந்திருக்கானே முட்டாப்..." ராஜூவுக்கு கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகள்தாம் வரும், தன்னியல்பையும் மீறி. "இல்ல. நாளைக்கிதான் பணம்கட்ட கடைசி நாளாம். அதச் சொல்லத்தான் வந்தாராம்" என்றவள், இவன் முகத்தைப் பார்த்துவிட்டு மேலவீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள். அதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. காலையில் பத்து மணி இருக்கும். கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லையென்று, மேற்கே கொஞ்சம் தள்ளி ஊற்று இருக்கிற இடத்துக்குப் போய்க் குளித்து விட்டு வருகிறான். போக வர இரண்டு மைல் நடை. திரும்புகையில், எதிர்வெயில் வேறு. காலையிலே மனுஷன் குளிக்கிறதுக்கு இந்தப் பாடா. பசியும் எரிச்சலுமாய்த் தெரு வாசல்படி ஏறியவன் கண்ணில் முதலில் பட்டது தினகரனின் கட்டம்போட்ட சட்டைதான். பெரியவீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். எதிரே தார்சாவில் ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்த அலமேலு இவனைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து கொண்டாள். "இட்லி எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "குளிச்சிட்டு வர்றீங்களா" என்று கேட்டபடியே புறப்பட்டுப் போய் விட்டான் தினகரன். துணிகைக்கூடக் காயப்போடாமல், தலைகூட சீவாமல், சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராஜூ. இட்லி எடுத்துவைத்துக் கொண்டிருந்த அலமேலுவிடம் கோபமாய்க் கேட்டான். "எங்கடி வந்தானாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரப்பிடாது இவனுக்கெல்லம். புறப்பட்டு வந்துர்றான் புடுங்கி மாதிரி. போவேண்டியதுதானே கொழுந்தியா வீட்டுக்கு. அடுத்த தடவ வரட்டும், கேட்டுர்றேன்." "ஏன் இப்டி வாயில வந்ததல்லாம் பேசுறீங்க. புது ஏ.சி.டி.ஓ. வந்திருக்காராம். 'அக்கவுண்டயெல்லாம் சீக்கிரமா முடிச்சிக் கொண்டுட்டு வாங்க'ன்னு சொல்லிட்டுப் போறாரு. அவ் வீட்டுக்காரிக்குத் திரும்பவும் உடம்பு சரியில்லியாம். சொல்லிக்கிட்டிருக்கையிலியே அழுதிட்டாரு. பாவம்" என்ற அலமேலு எச்சில்தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். இவனுக்குத்தான் மனசு சமாதானமாக வில்லை. போன மாசம். புனித வெள்ளி. அரசு விடுமுறை. சாயங்காலம், அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, அடித்துப்போட்ட மாதிரி, தூங்கிக் கொண்டிருந்தாள் அலமேலு. வாரத்தில் ஆறுநாள் மாடு மாதிரி வேலை பார்க்கிற அசதி. அலைகிற அலைச்சல். தினகரன் வந்திருப்பதை வந்து சொன்னான் - இரண்டாவது - மருமகன் - லட்சுமணன். யாராக இருந்தாலும் தூங்கும்போது எழுப்புவது எப்போதுமே இவனுக்கு சம்மதமில்லாத காரியம். "அத்த தூங்குறா, நாளக்கி வந்து பாருங்க'ன்னு சொல்லு" என்று லட்சுமணனிடம் சொல்லி அனுப்பிவைத்தான் ராஜூ. ராஜூவுக்குத் தினகரனைப் போய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை. "வாங்க" என்று மரியாதைக்குக் கேட்கக்கூடத் தோன்றவில்லை. "இருங்க" என்று சொல்ல இஷ்டமில்லை. 'சனியன், போய்த் தொலைந்தால் சரிதான்' என்றிருந்தான். ஆனால் தினகரன் போகவில்லை. இருந்து கொண்டிருந்தான். லட்சுமணனோடு பேசிக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் கழிந்திருக்கும். இவன், 'என்னப்பா' என்று கோபமாய்க் கேட்டான். லட்சுமணன் வந்து பைய, "அவரு இன்னும் போல. இருந்துட்டு இருக்காரு, அதான்" என்றதும், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்த" என்று கடுப்போடு இரைந்தவனின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் அலமேலு. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். பின்வாசல் பக்கம் போய் முகம் கழுவிக்கொண்டு நிற்கிறாள். அதற்குள் அவனே திண்ணையில் வந்து நின்றான். முகம் துடைத்துக் கொண்டிருந்த அலமேலுவை ராஜூ சுட்டெரித்து விடுவது போலப் பார்க்க, அவள் இவனை பாவம் போலப் பார்த்தபடி நின்றாள். "எப்ப வந்தீங்க, எப்டி இருக்கீங்க" என்று இவனை விசாரித்த தினகரனிடம் ஒப்புக்காகப் பேசும்படியாய்த் தொலைந்தது. "என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க" என்று அலமேலுவைக் கேட்டவன், 'சின்னத்தம்பி' படத்துக்கு டிக்கெட் கிடைக்க மாட்டேங்கு'ன்னு சொன்னீங்கல்ல. தியேட்டர் பக்கம் - ஆபீஸ்லர்ந்து போயிருந்தம். நாலு டிக்கெட் கேட்டு வாங்கிட்டு வந்தேன். அதக் கொடுத்திட்டுப் போலாமேன்னுதான்' என்று பர்ஸிலிருந்து சினிமா டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தான். லட்சுமணனைக் கூப்பிட்டு 'பூஸ்ட்' வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் அலமேலு. காபி குடிக்க மாட்டானாம், மயிராண்டி. நாலு நாளைக்கு முன்தான் சொன்னாள் அலமேலு. அலுவலகத்தில் இவள் பொறுப்பில் - ஐயாயிரம் ரூபாய் - சார்ட்டேஜாம். எங்கேயாவது வட்டிக்கு வாங்க முடியுமா என்று அலைந்து பார்த்தாள். யார் யாரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தாள். தினகரனிடமும் சொல்லியிருக்கிறாள். "சங்கிலிய வேணா தர்றேன். அடகுவச்சு எடுத்துக்குங்க" என்றானாம். மைனர் செயின். அஞ்சு பவுன். அலமேலு இவனிடமே வந்து கேட்டாள், என்ன செய்ய என்று. ராஜூ என்ன சொல்வான். "வேண்டாம், அப்டில்லாம் வாங்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டான். தனது கையாலாகத்தனம் நெருட, அன்றைக்கு ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை ராஜூவுக்கு. அலமேலு நல்ல பெண்தான். அவளை ஒன்றும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், சில பெண்களுக்குப் பிற ஆண்களிடம் சகஜமாகப் பேசும் குணம் உண்டு. அலமேலுவிடமும் இந்த அம்சம் இருக்கிறது. அதுதான் இப்படி. இந்த வினை. இவள் வேலையும் அதற்கேற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வணிக வரி அலுவலகத்திற்குப் போக வேண்டும். எப்படித்தான் நல்லபடியாகக் கணக்கு வைத்திருந்தாலும் கண்டமேனிக்கு வரி தீட்டி விடுவார்கள். விசாரணை, அபராதம் இதெல்லாம் இல்லாமல் தப்பித்துவர வேண்டும். இதற்கெல்லாம் அங்கேயே ஒரு தெரிந்த ஆள் இருந்தால் நல்லது. அலமேலு கணக்குப் புஸ்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். தினகரன் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வான். ராஜூவுக்கு நிலையான வேலையில்லை. நிலையான வேலையில்லாதவனுக்கு நிரந்தரமான வருமானம் எப்படி இருக்கும். வீட்டில் சும்மாதான் இருக்கிறான். இரண்டு பையன்கள் படிப்புச் செலவு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அலமேலுதான். இவள் வேலை பார்க்கப் போய்த்தான் குடும்பம் நடக்கிறது. உண்மையிலேயே, தினகரன் பாவம்தான். மனைவிக்குப் கர்ப்பப்பை ஆப்பரேஷன் ஆகிவிட்டது. அதுதான் இப்படி அலைகிறானோ, ஜொள்ளு கேஸ•. பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்கிற டைப்பு. சீச்சீ. இப்படியெல்லாம் தப்பாக நினைக்கக்கூடாது. அவனென்ன தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்காதவனா. பனிரண்டு வயதில் பையன் இருக்கிறான். அவனுடைய பழைய புஸ்தகங்கள்தாம் ஒவ்வொரு வருஷமும் இவன் பையனுக்கு. மெனக்கெட்டு எடுத்துக்கொண்ட வந்து கொடுத்துவிட்டுப் போவான் தினகரன். தெரிந்தவர்கள் என்று வருகிறான். இல்லையென்றால், வருவானா. ஆனாலும், ஒரு இங்கிதம் வேண்டாம். செத்த மூதி. கடன்காரன் மாதிரி வந்து விடுகிறான். புருஷன்காரன் என்ன நினைப்பான் என்று தோன்றாதா இவனுக்கு. இரண்டு மூன்று தடவை அலமேலுவிடம் எரிச்சல்பட்டே சொல்லிவிட்டான் ராஜூ. "இவன் இப்டி வீடு தேடி வர்றது எனக்குப் பிடிக்கல அலமேலு. இவன் ஏன் வர்றான். நீ சொல்லிரு. 'என் புருஷன் ஒரு முசுடு. எதாவது சொல்லிருவாரு'ன்னு சொல்லிரு அலமேலு". "இதயெல்லாம் எப்படிங்க சொல்லமுடியும். அவருக்கே தெரியணும்" என்று அலமேலு சொல்வதும் சரிதான். முந்தா நாள். சித்திரை விஷ•. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோமே, பிள்ளைகளோடு இவளோடு எதாவது சினிமாவுக்குப் போகலாமே என்று எல்லோருமாகப் போனார்கள். ஆறரை மணிக் காட்சி. படம் முடிந்து வெளியே வந்தார்கள். தியேட்டர் வாசலை விட்டு இறங்குகிறார்கள். கூட்டத்தை எதிர்த்து வந்து கொண்டிருக்கிறான் தினகரன். வீட்டுக்குப் போயிருந்தானாம். சொன்னார்களாம். வந்துவிட்டான். வழக்கமான நாகரிகம், மரியாதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுவிட்டான் ராஜூ. அவனைப் பார்க்காததுபோல, விறுவிறுவென்று சரவணனையும் கோபியையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு முன்னே நடந்து போய்க்கொண்டே இருந்தான். சம்பிரதாயத்திற்காக ஒரு நிமிஷம் நின்று விசாரித்துவிட்டு, வேக வேகமாக நடந்து வந்து இவனோடு சேர்ந்து கொண்ட அலமேலு கேட்டாள்; " என்னங்க, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறீங்க ". "என்னடி இது. தியேட்டருக்கே வந்துட்டான். பொண்டாட்டிய தேடிட்டு வர்ற மாதிரில்ல வர்றான். இவனையெல்லாம் என்னடி செய்றது" என்று வெடித்தான் ராஜூ. "சத்தம் போடாதீங்க. எல்லோரும் பாக்காங்க. வீட்ல வந்து பேசுங்க" என்று அமைதிப்படுத்தினாள் அவள். வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைலியை மாற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ராஜூ. பிள்ளைகள் இரண்டு பேரும் ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அலமேலு பழையதை எடுத்து வைத்து மோர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சாதத்தைப் பிசைந்தபடியே ஆங்காரமாகச் சொன்னான் இவன். "ஏய், இந்த பாருடி. அவன் இன்னொரு தடவ இங்க வந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவன்ட்ட சொல்லிரு. இல்ல, அசிங்கமா போயிடும்." "சரி, சரி. விடுங்க இழவு சனியனை. அவர்தான் மடையன்னா நாமளுமா" என்ற அலமேலு சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள். 'என்ன மனுஷங்க' என்ற நினைப்பே வேதனையாக இருந்தது. மாடக்குழியில் இருந்த 'அவில்' மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அப்போது அலமேலுவின் பாவமான முகமே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே கடைசி ஞாபகமாக இருந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மனசு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், புட்பதத்தன், புட்பதத்தனின் மனைவி தேவதத்தை, முனிவன், காளி தேவி
தலைப்பு: வேதாளத்தின் வரலாறு
| உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று. இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்… புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான். அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான். ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது. பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது நியாபகம் வந்தது. இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான். அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அது கைலாயத்தின் வாசலில் படுத்திருந்த புட்பதத்தன் காதுகளில் விழுந்துவிட்டது. மறுநாள் ஈசனிடம் சென்று தான் கொண்டுவந்த ஆடைகளை கொடுத்துவிட்டு ஆசிபெற்ற புட்பதத்தன், நேற்று இரவு தான் கைலாய வாசலில் படுத்திருந்ததையும், சிவன் கூறிய தேவ ரகசியத்தை கேட்டு விட்டதையும், அப்போதிருந்தே தன் மனம் படாதபாடு படுவதையும் கூறினான். தேவ ரகசியத்தை கேட்டு விட்டதால் கோபமுற்றார் சிவபெருமான், இருப்பினும் அவன் உண்மையை கூறியதால் அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கூறக்கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினார். சனி பகவானின் அருளைப் பெற சொல்ல வேண்டிய சனி மந்திரங்கள்! சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான். அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான். இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது. தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும், ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும், ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார். பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான்.அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி காளி கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களை பலிகொடுக்க தொடங்கினான். இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான். விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன் விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும், அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான். விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான். வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான். முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான். அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது. இசை வந்த திசைநோக்கி நடந்தான். அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள். அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் விக்கிரமாதித்தன். அந்த பெண் வேறு யாருமல்ல தேவ ரகசியத்தை கேட்ட புட்பதத்தனின் மனைவி தேவதத்தை. அவள் தன் கதையை விக்கிரமதித்தனிடம் கூற அவள் மேல் இரக்கம் கொண்டான் விக்கிரமாதித்தன். தங்களுடைய சாபம் தீர என்ன செய்ய வேண்டுமென்று தேவதத்தையிடம் விரும்பினான். அதற்கு தேவதத்தை நானும் வேதாளமாக தொங்கிகொண்டிக்ருக்கும் என் கணவரும் காட்டிற்குள் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டால் எங்கள் சாபம் நீங்கும். ஆனால் என் கணவரை அந்த முருங்கை மரத்தில் இருந்து இறக்கி காளி கோவிலுக்கு அழைத்து வருவது இயலாத ஒன்று என்றுகூறி அழுதாள். அது எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் நான் அதனை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றான் விக்கிரமாதித்தன். சுடுகாட்டிற்கு சென்ற விக்கிரமாதித்தன் அங்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை கட்டி முதுகில் போட்டுக்கொண்டான். அதுவரை அமைதியாக இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச தொடங்கியது." நாம் கோவிலுக்கு செல்லும் வரை நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது, அதேநேரம் நான் ஒரு கதை சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் நீ கூறவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறிவிடும்" என்று கூறியது. விக்கிரமாதித்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க அவர்களின் பயணம் தொடங்கியது. விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது. விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான். இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி கேட்டது. அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது. பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும். பதில் கூறவில்லை என்றால் தலை வெடித்து சிதறிவிடும், என்ன செய்யலாம் என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான். தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். இதேபோல 24 முறை கதை சொல்லி மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன். இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது. ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை. கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான். விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை. சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும், தேவதத்தையும் சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது. சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான். அப்போது அங்கு தோன்றிய காளி தேவி" விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள்" என்று கூறினார். அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அணைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார். காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு அவனையும், அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்” என்று கதை சொல்லலாயிற்று: மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். தன்னுடைய நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன. அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார். வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார். ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!” ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான். ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது. அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான். “இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை. உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார். பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர். வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர். அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள். “யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான். உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான். மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள். செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான். வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி! இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான். ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார். ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர். தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான். இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சுயநலத்தின் விளைவு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சவிதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அருகிலேயே வைத்திருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கரைக்கு இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது. தினம் எழுந்து கொள்ளும் நேரம். அதனால் சரியாக இந்த நேரத்துக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அலாரமே தேவையில்லை இப்போதெல்லாம். இருந்தாலும் எங்கே தூங்கிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தினம் தவறாமல் இரவு ப்ரேயர் முடிந்ததும் ஞாபகமாக அலாரத்தில் சாவி கொடுத்து விடுவாள். எதிர்ப்படுக்கையைப் பார்த்தாள். இவளுக்குப் படுக்கை இடது ஓரம். வலப்பக்கப் படுக்கையில் மெர்ஸி. நல்ல தூக்கம். அலாரம் எத்தனை அடித்தாலும் எழுந்திருக்க மாட்டாள். எப்போதாவது விழிப்பு வந்தாலும் ''சவி, ப்ளீஸ் தூங்கேன்...'' என்று முணுமுணுத்தபடியே திரும்பிப் படுத்துக் கொள்வாள். சாதாரண நாளில் மட்டுமில்லை, பரீட்சை நாட்களிலும் அப்படித்தான். எல்லா மாணவிகளும் கட்டாயம் எழுந்தாக வேண்டிய ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். சவிதா அறையிலிருந்தால், சோம்பல் முறித்தபடியே, தப்பாமல் ''இன்னிக்கு என்ன கிழமை?'' என்பாள். அவளுக்குக் கவலை எதுவும் கிடையாது. ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் தயாராகி, வார்டன் மிஸ் ரவுண்டு வருகிற சமயம் கையில் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொள்வாள். ஏழரை வரையிலான ''ஸ்டடி டைமி''ல் அரக்கப்பரக்க, சவிதா எழுதி வைத்திருக்கிற ''ஹோம் வொர்க்''கை அப்படியே தன் நோட்டுப் புத்தகத்தில் காப்பிடியப்பாள். ஏழரை மணி அடித்தவுடன் டைனிங் ரூமில் முதல் ஆஜர் அவள் தான். ஹார்லிக்சும் இரண்டு ஸ்லைஸ் ஜாம் பிரெட்டும் தின்று விட்டு ஏழே முக்கால் மணி ப்ரேயருக்காக சேப்பலுக்கு ஓடி விடுவாள். இவையெல்லாம் விடுதியின் கட்டாயங்கள். அநேகமாக எல்லா மாணவிகளுக்கும் இதே கடமைகள்தான். சவிதாவைப் போல் யாருக்கும் நாலரை மணிக்கு எழுந்தாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பு என்றாலும் மூட்டை மூட்டையாகக் கொடுக்கிற ''ஹோம் வொர்க்'' கை முந்தின இரவே முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் சவிதாவைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். பனிமூட்டத்தில் ஒன்றுமே தெரியவில்லை. இப்போது வெளியே காலை வைத்தால் குளிரில் உறைந்து சாக வேண்டியதுதான். அதற்காக? போகாதிருக்க முடியுமா? எல்லோரும் கண் விழிக்கும் நேரத்தில் இவள் குளித்துத் தயாராகி, யூனிபார்ம் போட்டு, அதற்கு மேல் ஸ்வெட்டர், தலைக்குக் குல்லாய், கைகளுக்கு உறை, காலுக்கு ஷ• எல்லாம் அணிந்து விடுதியை விட்டு முதல் ஆளாய் இறங்கி ஓடுவாள். எட்டு நிமிடத் தொலைவில் இருந்தது விஷ்ணுவின் விடுதி. இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பான். அங்கு விதிமுறைகள் இத்தனைக் கண்டிப்பாக இல்லை. குழந்தைகள் என்பதால் தூங்குவதற்கு ஆறரை வரைக்கும் அனுமதி உண்டு. அப்படியும் ஆயாக்கள் ஆறு மணிக்கே வந்து எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொன்றும் தூங்கி விழுந்து, எழுந்து, மீண்டும் விழுந்து தூங்கும். இவள் போய் எழுப்பினவுடனே விஷ்ணு, ''அக்கா...'' என்று முனகியபடியே கண் விழித்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்படியே மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவான். ''விஷ்ணு கண்ணா... எழுந்திரிடா, நேரமாச்சில்லை? அக்கா ஸ்கூலுக்குப் போகணுமில்லை'' என்று கொஞ்சி அவனை எழுப்பி, அப்படியே தோளில் தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டு, பல் துலக்கி, குளிக்க வைத்துக் கொண்டு வருவாள். மற்ற குழந்தைகளெல்லாம் ஆயாக்களின் இயந்திரத்தனமான மேற்பார்வையில் தயாராகிக் கொண்டிருக்கும் போது விஷ்ணு மட்டும் சவிதாவிடம். விஷ்ணுவின் ஹாஸ்டல் வார்டன் மிஸ் இதற்காக சிறப்பு அனுமதி கொடுத்திருந்தாள். சவிதா திரும்ப வரும் போது அநேகமாக டைனிங் ஹால் காலியாக இருக்கும். சில நாட்களில் ஹார்லிக்ஸ் குடிக்க நேரமில்லாமல் அப்படியே சர்ச்சுக்கு ஓடுவாள். இந்தக் கான்வென்ட்டில் சவிதாவுக்கு ஒரு சௌகர்யம் இருந்தது. விஷ்ணுவின் விடுதியும் இவளுடையதும் கான்வென்ட்டும் ஒரே மதிலுக்குள் அமைந்திருந்ததால் இடைவேளையில் கூட சில சமயம் விஷ்ணுவைப் போய்ப் பார்க்க முடிகிறது. ஐந்து வயசுக் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் நிறைந்து கிடக்கும் வகுப்பறையில் விஷ்ணு தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தால் சத்தமில்லாது திரும்பி வந்து விடுவாள். எப்போதாவது அம்மா ஞாபகம் வந்து குழந்தை அழுதால், மாலை ப்ரேயர் முடிந்ததும் விடுதி அலுவலகம் போய் எஸ்.டி.டி. போட்டுப் பேசுவாள். அந்தப் பக்கம் அம்மா எடுத்ததும், ''அம்மா, விஷ்ணு பேசறான்'' என்று அவன் கையில் கொடுத்துப் பேசச் சொல்வாள். குழந்தைக்கு ஒன்றும் பேசத் தெரியாது. அம்மா அந்தப் பக்கமிருந்து கேள்விகளாய்க் கேட்டுப் பேச வைக்க வேண்டும். ''அம்மா, நான் சாக்லேட் சாப்பிட்டேன்'' என்பான். சவிதா ரிசீவரைக் கையில் வாங்கினால், ''சவிக்கண்ணு, எப்ப வர்றே?'' என்பாள். இவள் வருகிற நாளைச் சொன்னால் பள்ளி முடிந்து இவள் விடுதிக்குத் திரும்பும் நேரம் கார் தயாராக இருக்கும். ஊட்டியிலிருந்து கோயமுத்தூரில் இவர்கள் வீட்டிற்கு கார் பிரயாணம் மூன்று மணி நேரம். டிரைவர் முத்துசாமி அதிகம் பேச மாட்டார். மேட்டுப்பாளையம் வந்ததும் ''கண்ணுங்களா, பிஸ்கட் எதுனா சாப்பிடறீங்களா?'' என்று கேட்பார். வீட்டுக்கு இவர்கள் போய்ச் சேருகிற நேரம் ஒன்பது ஒன்பதரையாக இருக்கும். அம்மா சில சமயம் அந்த நேரத்திலும் வீட்டில் இருக்க மாட்டாள். நகரத்தின் முன்னணி கைனகாலஜிஸ்ட். திடீர் திடீரென்று அழைப்பு வரும். பல சமயங்களில் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் மாதவனுடன் இரவு உணவு அருந்திவிட்டு அவருடைய காரிலேயே வந்து இறங்குவாள். சவிதா தூங்காதிருந்தால் ''வந்தாச்சா? அப்பாவுக்கு ஃபோன் பண்ணினயா?'' என்பாள். அப்பா இருப்பது இதே கோயமுத்தூரில் வேறு வீட்டில். தாவர இயல் விஞ்ஞானி. சதா செடிகளோடு ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். சின்னதாய் வட்டக் கண்ணாடி அணிந்து வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பார். சவிதா அங்கே தங்குகிற ஒரு நாளில் வாக்கிங் ஸ்டிக்கால் தோட்டத்தில் அடர்ந்திருக்கிற செடிகளைத் தட்டி ''இது என்ன சொல்லு'' என்பார். இவள் முழித்தால் ''போன தரமே சொன்னேனே... ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ்... ஓடு ஓடு... நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு வா... எழுதி வைச்சுக்கோ... அடுத்த தரம் சரியா சொல்லணும்'' என்பார். சவிதா அடுத்த தரமும் சரியாகச் சொல்லமாட்டாள். அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் குழந்தைகள் இருவரும் ஊட்டியில், பணக்காரக் கிறிஸ்துவக் கான்வென்ட்டில். இந்த ஒரு வருடமாகத்தான். அதற்கு முன்பு வீட்டில் இருந்த வரையிலும் கூட ஆயாக்கள் கவனிப்பில்தான் வளர்ந்தார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. என்னவென்று சரியாகத் தெரியவில்லை. வாய்த் தகராறு எல்லாம் பெரிதாகக் கிடையாது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். நீ பாட்டுக்கு நீ, நான் பாட்டுக்கு நான் என்று ஆளுக்கொரு பக்கமாய் இருப்பார்கள். விஷ்ணு வளர்ந்தது பூரா சவிதாவிடம். இந்த வருடம் அம்மாவும் அப்பாவும் தனித்தனியாக வாழ முடிவு செய்த போது, குழந்தைகளைப் பராமரிக்க முடியாது என்று இருவரையும் கொள்ளை நன்கொடை கொடுத்து, ஊட்டியில் இந்தக் கான்வென்ட்டில் சேர்த்து விட்டார்கள். விடுதியிலிருந்து இரண்டாவது சனி, ஞாயிறு வீடு போக அனுமதி உண்டு. அப்படி வருகிற சமயம் ஒரு நாள் அம்மாவோடும், ஒரு நாள் அப்பாவோடும் கழியும். சில சமயங்களில் அப்பா அந்த நாளில் தில்லிக்குப் போக வேண்டியிருந்தால் சவிதா போன் செய்கிற போது, ''அடுத்த வாட்டி, ரெண்டு நாளும் இங்க வந்துடுங்க'' என்பார். விடுதி வாழ்க்கைக்கு சவிதா அட்ஜஸ்ட் செய்து கொண்டாள். அவளுக்குப் பெரிய மாற்றம் எதுவுமில்லை. வீட்டிற்குப் பதில் விடுதி. ஆனால் குழந்தை விஷ்ணு விடுதியைக் கண்டு மிரண்டான். ஒரு வருடமாகியும் பழகவில்லை. அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்கிறான். அவன் அதிகமாக உணராதபடி சவிதாவின் அண்மை தேவையாக இருந்தது. அதனால்தான் இப்படி காலை தப்பாமல் நாலரைக்கு அலாரம். பனி மூட்டத்துக்கிடையில் வேகமாய் சரிவில் இறங்கிய போது ஜனவரி மாதத்துக் குளிர் தோலைத் தாண்டி எலும்பை முட்டியது. ஸ்வெட்டரும் கையுறையும் போதவில்லை. இரண்டு கைகளையும் முன்புறமாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு நடந்தாள். சேப்பலைத் தாண்டிய போது ஜூலியா மிஸ் நின்றிருப்பது தெரிந்தது. சர்ச்சில் காலை சர்வீசுக்கு ஆயத்தம் செய்வது எப்போதும் ஜூலியா மிஸ் தான். ஜூலியா மிஸ்சை சர்ச்சுக்குள் இருக்கும் போது சிஸ்டர் என்று கூப்பிட வேண்டும். வகுப்புக்கு வந்தால்தான் மிஸ். வேறு எந்த சிஸ்டருக்கும் பொருந்தாத அளவு இந்த மிஸ்சுக்கு மட்டும் இந்த சாம்பல் நிற அங்கியும் வெள்ளைத்தலை உறையும் பொருந்துகிறது. மிஸ் ஒரு பெரிய ரோஸ் நிற டேலியா பூப்போல் இருப்பார். பார்க்கிற யாருக்கும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும். வகுப்பில் மிஸ் பாடம் முடிந்து போன பிறகு, கீழே உடைந்து கிடக்கும் சாக்குக் கட்டிகளைப் பொறுக்குவதில் போட்டி. சவிதாவின் பென்சில் பெட்டியில்கூட நான்கைந்து கலர் சாக்குக் கட்டிகள் கிடக்கின்றன. முன்பெல்லாம் ஜூலியா மிஸ்தான் இவர்கள் விடுதிக்கு வார்டன். இப்போது மாற்றி விட்டார்கள். மிஸ் இப்போதெல்லாம் புனித அருளானந்தர் இல்லத்திற்கு வார்டன். அருளானந்தர் இல்லமும் இவர்கள் மிஷன் நடத்துவதுதான். ஆனால் அங்கே எல்லோரும் அனாதைக் குழந்தைகள். குழந்தைகள் படிப்புக்கும் விடுதி வசதிக்குமான செலவை ஆஸ்திரேலியாவிலிருந்து இவர்களுக்கு நிதி தரும் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக் கொள்கிறது. பெண்கள் விடுதியில் இவர்கள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியாமல்தான் அருளானந்தர் விடுதிக்கு மிஸ் போய் விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் காரணம் அதுவல்ல என்று மெர்சி சொன்னாள். ஜூலியா மிஸ்சும் அனாதைதானாம். ஆர்ச் பிஷப் தெருவோரத்தில் கண்டெடுத்தாராம். ஜூலியா என்று பெயர் வைத்து கிறிஸ்தவராக்கினாராம். அதனால்தான் மிஸ்சுக்கு அனாதைப் பிள்ளைகளின் விடுதி பிடித்திருக்கிறதாம். சவிதாவுக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும். உலகத்திலேயே அழகான பெயர் ''ஜூலியா மிஸ்'' என்று நினைப்பாள். மிஸ்சைப் பார்க்கும் போதெல்லாம் இந்த விடுதியை விட்டு விட்டு அருளானந்தர் விடுதிக்கு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். ஆனால் இவர்கள் அங்கே போக முடியாது. அனாதைக் குழந்தைகளானாலும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். விஷ்ணுவைக் குளிக்க வைத்துத் தயார்படுத்தும் போதெல்லாம், ஜூலியா மிஸ் சாம்பல் நிற அங்கியைக் களைந்து விட்டு, ரோஸ் நிறப் புடவையில் விஷ்ணுவைத் தோளில் போட்டுக் கொண்டு தூங்க வைப்பது போல நினைத்துக் கொள்வாள். ஆனால் அதுபோன்ற ஒன்று ஒருபோதும் நடவாத காரியம். ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரியாம். கல்யாணமே செய்து கொள்ள முடியாதாம். இவள் விடுதியை அடைந்த போது விஷ்ணு கண்விழித்திருந்தான். இவளைக் காணாமல் அழுவதற்குத் தயாராக இருந்தான். சில்வியா ஆயா அவனை சமாதானப்படுத்தி, ''இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு'' என்று சவிதாவிடம் ஒப்படைத்தாள். அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் சவிதா. ''விஷ்ணு குட்டி, இன்னிக்கு சாயந்தரம் வீட்டுக்குப் போகலாம். அக்கா வந்து உன்னை அப்படியே மூட்டை மாதிரி தூக்கிக் கார்ல போடுவேனாம்... ம்... என்ன?'' என்றதற்கு ''ஓ...'' என்றான் உற்சாகமாய். அனால் இந்த முறை அம்மா அதிர்ச்சி தரப் போகிறாள் என்று சவிதாவுக்குத் தெரியாது. மாலை ஃபாதர் டேனியலிடம் அவுட்பாஸில் கையெழுத்து வாங்கப் போன போது, ''என்ன சவிதா, இந்த தரம் ஒரு வாரம் வீட்டிலயா? என்ஜாய்'' என்று சொல்லி அனுப்பினார். இப்படியொரு செய்தி கேட்டால் எப்படி என்ஜாய் செய்ய முடியும்? இவர்கள் போன போது அம்மா வந்திருக்கவில்லை. கார்ட்டூன் படம் பார்த்தபடியே சவிதாவும் விஷ்ணுவும் ஹாலில் சோபாவிலேயே படுத்துத் தூங்கி விட்டார்கள். அம்மா வந்து இவளை எழுப்பி, படிப்பைப் பற்றி விசாரித்து விட்டு, திடீரென்று ''சவி உன்னோட கொஞ்சம் பேசணும்'' என்றாள். பதினொரு வயதுப் பெண்ணை மதித்து ''உன்னோட பேசணும்'' என்று அம்மா சொன்னது இதுவே முதல் முறை. என்ன பேசப் போகிறாய்? அம்மாவின் பேச்சும் நடையும் இன்றைக்கு மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே நின்றாள். அம்மாவுக்கு கலிபோர்னியாவில் மேல்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. இரண்டு வருடம். மருத்துவமனையே ஸ்பான்சர் செய்கிறதாம். அப்பாவும் வருடா வருடம் இந்திய அரசாங்கம் கொடுக்க முன்வந்த தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் பதவியை இந்த வருடம் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டாராம். வேலை தில்லியில். விவாகரத்து அநேகமாக ஏப்ரலில் கிடைத்து விடுமாம். குழந்தைகளில் சவிதா அப்பாவிடமும், விஷ்ணு அம்மாவிடமும் இருக்கட்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்? இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா? அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம், அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமலிருக்கலாம், இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாதிருக்கலாம். ஆனால் எனக்கு என் தம்பி வேண்டும். பெற்றது இவர்களாயிருக்கலாம். ஆனால் அவன் வளர்ந்தது பூரா என்னோடுதானே! என்னை விட்டு ஒரு கணம் பிரிந்திருக்க மாட்டானே... அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்? உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வேகமாக ஹாலுக்கு வந்து, சோபாவில் குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தம்பியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, மாடியில் தன்னறைக்கு ஓடினாள். பின்னாலேயே மாடியேறி வந்த அம்மா, ''சவி... ஒண்ணும் அவசரம் இல்லை. நிறைய டைம் இருக்கு. உன்னைத் தயார்படுத்தத்தான் இப்பவே சொன்னேன்'' என்று சமாதானப்படுத்தி விட்டுப் போனாள். அடுத்த நாள் அம்மா மருத்துவமனைக்குப் போன பிறகும் சவிதா கீழே இறங்கவில்லை. அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து விஷ்ணுவும் அழுதான். இந்தச் சின்னப் பையனை எப்படிப் பிரிய முடியும்? கலிபோர்னியா எங்கே என்று சவிதாவுக்குத் தெரியவில்லை. ரொம்பத் தொலைவு என்று மட்டும் தெரிந்தது. கண்டிப்பாக பஸ்சிலோ, ரயிலிலோ போக முடியாது என்று தெரிந்தது. அங்கே போய் மட்டும் அம்மாவா இவனை கவனிக்கப் போகிறாள்? அங்கேயும் ஆயாவிடம் தான் விடப் போகிறாள். ஆங்கில ஆயா. இவனுக்குப் பழக்கமில்லாத மொழியில் பேசி, பழக்கமில்லாத உணவுகளைக் கொடுத்து, பழக்கமில்லாத நடைமுறைகளைக் கற்றுத் தரப் போகிறாள். அம்மாதான் வீட்டில் இருக்க மாட்டாளே, அடித்தாலும் அடிப்பாள். குழந்தை ''அக்கா...'' என்று அழுதால் தில்லிக்குக் கேட்குமா? முடியாது. இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்... எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம். என் தம்பிதான் வேண்டும். அவசரமாய்க் குளித்து, தம்பியையும் தயாராக்கிக் கீழே வந்தாள். அம்மாவுடைய முன்பக்க கன்சல்டிங் அறை மேசையைக் குடைந்ததில் முன்னூறு ரூபாய் பணம் கிடைத்தது. சமையற்கார அம்மாவிடம், கடைசி வீட்டு லில்லி ஆன்ட்டியைப் பார்த்துட்டு வர்றேன் என்று சொல்லி விட்டு நடந்து வெளியே வந்தாள். மத்திய பஸ் நிலையம் செல்ல சவிதாவுக்கு வழி தெரியும். ஏழாம் நம்பர் பஸ். அங்கே போனால் நிறைய வெளியூர் பஸ் வரும் என்பதும் தெரியும். பாதி தூரத்துக்கு மேல் நடக்க மாட்டேன் என்று அடம்பிடித்த தம்பியைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்தாள் ஒரு வாரம் விடுமுறைக்காகப் போன ஆறாம் வகுப்பு சவிதா, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் மாலை வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் டேனியல். அந்தச் சிறு பெண்ணின் உருண்டை விழிகள் அழுது சிவந்து, இரட்டைச் சடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷ• இல்லை, ரப்பர் செருப்பு... விஷ்ணுவின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி... அதுவும் புரியாமல் அழுது கொண்டிருந்தது. ''என்னம்மா சவிதா, என்னாச்சு? ஊர்லயிருந்தா வர்றே?'' என்று படபடப்பாகக் கேட்டார். ''ஆமாம் ஃபாதர், எனக்கும் என் தம்பிக்கும் பெயரை மாத்துங்க...'' ''பெயரை மாத்தணுமா? எதுக்கு? என்னண்ணு?'' ''எனக்கு - ஜூலியா, தம்பிக்கு பீட்டரோ, ஸ்டீவனோ... ஏதாவது...'' ''எதுக்கு இப்ப திடீர்னு பேர் மாத்தணும்...?'' பாதிரியார் புரியாமல் கேட்டார். ''அப்பதான் எங்களுக்கு அங்க இடம் கிடைக்கும்?'' - சவிதா ஜன்னல் வழியாக கை சுட்டிய திசையில் இருந்தது ''புனித அருளானந்தர் இல்லம்.''
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சவிதா - வயது பதினொன்று' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், அப்பாஜி, ஆறு முட்டாள்கள், கழுதை, விறகு, மரக்கிளை
தலைப்பு: ஆறாவது முட்டாள்
| அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், ""அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்," என்று ஆணையிட்டார். ""முட்டாள்களின் முகவரி எதற்கு?" என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி. ""வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!" என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார். அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது? அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார். அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான். ""ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டார் அப்பாஜி. ""உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்," என்றான். அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி, ""ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க," என்றார். ""ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்," என்றான். ""சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…" என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார். ""பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, ""அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது," என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி. அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது. அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம், ""தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?" என்று விசாரித்தார். அவன், ""ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்," என்று கவலையுடன் கூறினான். ""ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?", ""ஆமாம், அடையாளத்தையும் காணோம்.", ""என்ன அடையாளம்?", ""வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்." அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார். மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார். கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், ""அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?" என்று கேட்டார். அப்பாஜி, ""அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்," என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார். பிறகு, ""அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?" என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார். ""அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!" என்று உருக்கமாகக் கூறினார். அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யானை பல் விளக்குமா?' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார். "குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?" என்று கேட்டான், மட்டி "மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!" என்றான் மடையன். "அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான், முட்டாள். "ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?" என்று கேட்டார், பரமார்த்தர். "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?" எனக் கேட்டான், மண்டு. "நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்" என்று விளக்கம் சொன்னான், மூடன். "இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்" என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர். அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. "சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, 'லபக்' என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார், பரமார்த்தர். சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர். அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது. அதைக் கண்ட பரமார்த்தர், "சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!" என்று கத்தினார். மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர். அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!" என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார். சீடர்களும், "ரங்கா, ரங்கா!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர். மடத்துக்கு வந்து சேர்ந்ததும், "நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி. "குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை ஏவி விட்டான் முட்டாள். அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன. வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது. அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான். "ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான், முட்டாள் பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு. பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், "நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு" என்றான். சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள். ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள். அடுத்த கணம், 'டமால், டுமீல்' என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது. வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக் கொண்டு உருண்டனர். நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார். "குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள். பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார். அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு.... அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு. பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர். "குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு. பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள். "இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி. மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர். "வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர். தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர். அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது. "குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குரங்கு விடு தூது!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன். “ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள். “ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர். “அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன். “ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர். “இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான். “வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன். “உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர். அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார். “பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர். “பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார். “நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார். “நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும், “நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார். அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது. “சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார். அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார். “பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால். “என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார். “அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால். அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார். உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார். “அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது “உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார். பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அறிவுப் பானை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.” என்ன சமாச்சாரம் ” என்று கேட்டார் முல்லா. ” மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?” என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார்.” இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?” என்றார். முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இருட்டிலும் ஒலி கேட்கும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: மொச்சை, பாத்திரம், கருப்புப் பகுதி, வெண்மை, வைக்கோல், நெருப்பு, அறிவு
தலைப்பு: மொச்சைக்குத் தையல்
| வெகு காலத்திற்கு முன் ஓர் ஊரில் ஏழைக் கிழவி ஒருத்தி இருந்தாள். சமைப்பதற்காக ஒரு பாத்திரம் நிறைய மொச்சை வாங்கினாள் அவள். அப்பொழுது மொச்சைக்குக் கருப்புப் பகுதி கிடையாது. முழுமையும் வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். மொச்சைகளை ஒரு பாத்திரத்தில் போட்டாள் அவள். அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்தாள். அடுப்பில் நெருப்பு மூட்டினாள். எரிப்பதற்காக வைக்கோலை அடுப்பிற்குள் நுழைத்தாள். பாத்திரம் சூடேறத் தொடங்கியது. தப்பிக்க நினைத்த ஒரு மொச்சை பாத்திரத்தில் இருந்து துள்ளிக் கீழே குதித்தது. தீயில் எரியாமல் ஒரு வைக்கோல் எப்படியோ வெளியே வந்தது. நெருப்புத் துண்டு ஒன்றும் தப்பித்து வெளியே வந்தது. மூன்றும் அருகருகே இருந்தன. "எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் கூட்டத்தோடு நானும் இறந்திருப்பேன்" என்றது மொச்சை. "என் நிலையும் உன்னைப் போலத்தான். கிழவியை ஏமாற்றி விட்டு வெளியே வந்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் எரிந்து இருப்பேன்" என்றது வைக்கோல். "என்னைப் போல இருபது பேரை அந்தக் கிழவி அடுப்பிற்குள் போட்டாள். எல்லோரும் இந்நேரம் புகையால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளை. நான் தப்பித்தேன்" என்றது நெருப்புத் துண்டு. "உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்று கேட்டது மொச்சை. "நாம் மூவரும் எப்படியோ சாவிலிருந்து தப்பித்தோம். இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். பல ஊர்களுக்குச் செல்வோம். இனிய அனுபவங்களைப் பெறுவோம்" என்றது வைக்கோல். நெருப்புத் துண்டும் மொச்சையும் இதை ஏற்றுக் கொண்டன. அருகருகே இருந்தபடி மூன்றும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தன. சிறிது தூரம் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. மூன்றும் அந்த ஆற்றின் கரையில் நின்றன. "இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?" என்று கேட்டது மொச்சை. "ஆற்றின் நீர் வேகமாக ஓடுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது" என்றது நெருப்புத் துண்டு. இதைக் கேட்ட வைக்கோல், "கவலைப்படாதீர்கள். நான் மிக நீளமாக இருக்கிறேன். இக்கரையில் இருந்து அக்கரை வரை ஆற்றின் மேல் நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மேல் நடந்து அக்கரையை அடைந்து விடுங்கள். பிறகு நானும் அக்கரை வந்து விடுகிறேன்" என்றது. இரண்டும் அதன் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. வைக்கோல் நீண்டது. இருகரைகளையும் பிடித்துக் கொண்டு ஆற்றின் மேல் பாலம் போல் நின்றது. நெருப்புத் துண்டு மெதுவாக வைக்கோலின் மேல் நடந்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்த அது கீழே பார்த்தது. தண்ணீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அஞ்சியது அது. பயத்தால் தயங்கியபடி சிறிது நேரம் அங்கேயே நின்றது. அவ்வளவுதான்! நெருப்புத் துண்டின் வெம்மை தாங்காமல் வைக்கோல் எரிந்து இரண்டு துண்டுகள் ஆயிற்று. நெருப்புத் துண்டு ஆற்று நீருக்குள் விழுந்தது. "உஸ்" என்ற சத்தத்துடன் புகை எழுப்பி நீருக்குள் மூழ்கியது அது. இரண்டு துண்டுகளான வைக்கோலும் ஆற்று நீருக்குள் விழுந்தது. ஆற்று நீர் அதை அடித்துக் கொண்டு சென்றது. கரையில் இருந்து இந்த வேடிக்கையைப் பார்த்து மொச்சையால் சிரிப்பை அடிக்க முடியவில்லை. "ஆ! ஆ!" என்று வயிறு குலுங்கச் சிரித்தது அது. உடனே அதன் வயிறு வெடித்து விட்டது. உள்ளிருந்த குடல் வெளியே தெரிந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையால் துடித்தது அது. அந்த வழியாக ஒரு தையல்காரன் வந்தான். மொச்சையின் மீது இரக்கப்பட்டான். தன் கையிலிருந்த ஊசி நூலால் அதன் வயிற்றைத் தைத்தான். கறுப்பு நூலால் அவன் தைத்ததால் இன்றும் மொச்சையிக் வயிற்றில் நீண்ட கறுப்புத் தையல் காணப்படுகிறது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, கடன், ஆயிரம் பொற்காசுகள், ஏழை, செல்வந்தர், பொய்
தலைப்பு: முல்லா வசூலிக்கும் கடன்
| முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக் கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து" அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். " வேறு யாருமில்லை, நான்தான்" என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;" யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்." ஆமாம்" என்று முல்லா பதில் சொன்னார்." அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார்." இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான்" என்றார் முல்லா." உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?" என்று செல்வந்தர் கேட்டார்." நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே" என்றார் முல்லா.பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்." நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?" என்று செல்வந்தர் கேட்டார்." ஆமாம்" என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்." என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார்." நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், சவரத் தொழிலாளி, அப்பாஜி, சோதனை, பொன்
தலைப்பு: தன்னைப் போல்தான் வாழ்வார் உலகிலுள்ளோர்களும்
| தினசரி அதிகாலையில் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் தொழிலாளி ஒருவன் அரண்மணைக்கு வருவது வழக்கம். தினசரி காலையில் முகத்தை மழித்து முடியைத் திருத்துபவராதலால் அந்தத் தொழிலாளியிடம் வேடிக்கையாக எதையாவது பேசுவது கிருஷ்ணதேவராயரின் வழக்கம். அவனும் மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலுரைப்பான். ஒருநாள் அவன் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது,"நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்றே. நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்குமே என்றார்." மேன்மை தாங்கிய மகாராஜா அவர்களே! தங்களுடைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர். மக்களின் ஒவ்வொருவர் இல்லத்தில் குறைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவலையில்லாமல் இருக்கின்றனர்" என்றார் சவரத்தொழிலாளி. சவரத் தொழிலாளி சென்ற பின்னர் எப்போதும் போன்று மன்னரைக் காண அப்பாஜி வந்தார் அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை மன்னர் கூறினார்."இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் சொன்னது போன்று எப்படி எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு பொன் என்பது சாதாரண மக்கள் வைத்திருக்க முடியாது! பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும். ஆகையினால் இதுபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்!" என்று வினவினார்."இதற்கு விரைவில் விடையைக் கூறுகிறேன்" என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் வழக்கம்போல் சவரத் தொழிலாளி அரண்மனைக்கு வந்து கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அப்பாஜி, காவலர்களை அழைத்து"சவரத் தொழிலாளியின் இல்லத்தை சோதனை செய்துவிட்டு விரைவில் வாருங்கள்" என்று கட்டளையிட்டார். காவலர்கள் சவரத் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு பொன் இருப்பதைக் கண்டு வந்து கூறினர்.அத னை மன்னரிடம் கொடுத்துவிட்டு, மன்னர் பெருமானே! அடுத்த நாள் சவரத் தொழிலாளி வந்ததும், முதலில் கேட்டது போன்று கேளுங்கள். அவனிடமிருந்து வேறு விதமான பதில் கிடைக்கும்" என்றார் அப்பாஜி. வழக்கம் போல் காலை கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிக்க சவரத் தொழிலாளி வந்தமர்ந்தான். வரும்போதே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது வேலையை ஆரம்பிக்கும் சமயம்,"இப்பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?" என்று வினவினார் மன்னர்."பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்களே! அதை ஏன் கேட்கின்றீர்கள்? எல்லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?" என்று சவரத் தொழிலாளி கண்களில் நீர் மல்க தொண்டை அடைக்கக் கூறினான். அச்சமயம் வந்த அப்பாஜி,"மன்னர் பெருமானே! இப்போது விடை தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நிலையை நிர்ணயிக்கின்றனர். தன்னைப் போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கின்றனர். தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநிலையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்" என்றார் அப்பாஜி. உடனே காவலனை அழைத்து,"கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு பொன்னைக் கொண்டு வந்து சவரத் தொழிலாளியிடம் கொடுங்கள்" என்று ஆணையிட்டார் மன்னர். கொண்டு கொடுத்த பொன்னுடன் சிறிது பொன்னும் பரிசாகச் சவரத் தொழிலாளிக்குக் கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் வாங்கிச் சென்றான். மனித இயல்பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திறமையைப் பாராட்டினார் கிருஷ்ணதேவராயர். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கதிரவன், கணேஷ், அம்மா, தாத்தா, மீனா, வேதாளம், ராஜா, பள்ளி, மலை, அரண்மனை, ஊர், பெண்கள், புத்தகம், மாடி, கத்தி, மரம்
தலைப்பு: தேவதை
| மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான். இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. "ஏய்...கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா" என்று அம்மா கூவ, ஓடிவந்தான். "போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி" கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். "கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்" என்றாள் அம்மா. சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. "தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா" என்றான். பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்: ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள். மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள். அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை. இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார். ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள். ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி "ஜலக் ஜலக்" -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா. உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள். அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது. வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, "தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்" என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது. நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள். "என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!" என்று தாத்தா கேட்க, "கொர்...கொர்" என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷ•ம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்: "என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?" என்று கேட்டான். தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, கழுதை, திருடர்கள், உடைவாள், அண்டை வீட்டுக்காரர்
தலைப்பு: முல்லாவின் உடைவாள்!
| முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார். அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா? என்று கேட்டார்." கள்வன் என்னை என்ன செய்வான்? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ?" என்றார் முல்லா." கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும்?" என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்." நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே?" எனக் கவலையுடன் கூறினார் முல்லா." கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள்" என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார். முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்." கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம்" என்று திருடர்கள் கேட்டனர்." என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை" என்றார் முல்லா." அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும்" என்ற கள்வர்கள் மிரட்டினர்." கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா?" என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா." ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார் முல்லா." என்ன யோசனை?" என்று கள்வர்கள் கேட்டனர்." என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா?" என்றார் முல்லா. கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர். பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று" பிராயணம் எவ்வாறு இருந்தது" என விசாரித்தார்." எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது" என்றார் முல்லா." வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா?" என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்." அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன்" என்றார் முல்லா." உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன்" என்றார் அண்டை வீட்டுக்காரர்." உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்." உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள்" என்றார் அண்டை வீட்டுக்காரர்." உடைவாள் என்னிடம் ஏது?" அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா." கள்வனிடம் கொடுத்து விட்டீரா? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்" என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர். காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக் எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள். நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள். அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள். அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான். நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான். திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார். இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான். நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார். திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான். அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார். திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான். நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார். திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார். திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான். நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார். திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான். நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார். திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான். நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார். பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார். அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான். நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தன்ணுணர்வின் கதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். "அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!" என்று குதித்தான் மட்டி. "ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!" என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்! "சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்" என்றார் பரமார்த்தர். "புதுத் துணிகளைக் கிழிப்பதா?" ஏன் குருவே?" என்று கேட்டான், முடூடாள். "புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!" என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்! உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்! "பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!" என்று வேண்டினார் பரமார்த்தர். "குருவே! நமக்கு எதற்குப் புடவை?" என்று கேட்டான் மண்டு. "அதானே?" நமக்கு வேட்டி அல்லவா தேவை!" என்றான் மூடன். "கார்மேகக் கண்ணா!" இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!" என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. "நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்" என்றார். "கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்" எனக் கெஞ்சினான், முட்டாள். "கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?" என்றார் குரு. "கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு" என்றான் மடையன். "பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்" என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். "பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்" என்று நகரத் தொடங்கினார் நடிகர். "என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்" என்றார் பரமார்த்தர். "வரமா?" அதென்ன?" "ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!" என்றான். "எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்" என்றான் முட்டாள். "வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!" என்றான் மடையன். "சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது!" என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். "ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை" என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். "ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்." "அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!" என்றார் பரமார்த்தர். "குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்‘ம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!" என்றான் மட்டி. "எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்" என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், "குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!" என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, "இந்தப் பல்லக்கு என்ன விலை?" என்று விசாரித்தான். "இது பல்லக்கு இல்லை" என்றான் பாடை கட்டியவன். "நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்" என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், "நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், "ஒரே தாகமாக இருக்கிறது" என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். "என்ன? யாரையுமே காணோம்?" என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. 'லொள், வள்' என்று குரைத்தது. அவ்வளவுதான்! பாடையைத் 'தொப்' என்று கீழே போட்ட சீடர்கள், "ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!" என அலறினார்கள். "அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!" என்றான் முட்டாள். "நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!" என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், "புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!" எனத் திட்டினார். "குருநாதா!" அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!" என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிருஷ்ணா! புடவை கொடு!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த
வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர்.
சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு
ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே.
இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள்
கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச்
சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர். உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர். உடலில்
தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர். அவர்கள்
முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர். உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர். பிறகு அவர் உடலில் வாசனை
திரவியங்களைப் பூசினர். அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார்
என்று எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார். வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து " இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம்
செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு?" என்று கேட்டனர். முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த
உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை
அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே
நடந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நீலப் புறாக்கள், வெள்ளைப் புறாக்கள், வேடன்
தலைப்பு: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
| ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது. அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன. தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான். நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன. சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன. இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…" என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்" என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது" என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி" என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நல்வழிப்படுத்தவும். Saturday, April 08, 2006 கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம் எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. “நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. “கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது. “ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. “கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,” என்று கோபமாக கூறின. “கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,” என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள்களுக்கு வீண் உபதேசம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார். “இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான். “முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன். சாப்பாட்டு நேரம்— முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார். திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான். நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி. “ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன். முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார். ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன. “இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார். “ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன். அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி. “என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கொக்குவுக்கு எத்தனை கால்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்துப் பதினாயிரம் வராகன்கள் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார். தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார். "நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார். சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விருப்பமானதை கொடு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: மணிவண்ணன், மதுரை, மாமா, பேனா, வகுப்பு, எம்.எல்.ஏ. மகன், ஆசிரியர்
தலைப்பு: ஆசை
| மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது. இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. "நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்" என்று கேட்டார் அவன் மாமா. "நான் படித்து கலெக்டராக வருவேன்" என்றான் மணிவண்ணன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா "தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்" என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது. "ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?" என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார். "ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா" என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். "இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்" என்றார். அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், "உன் சந்தேகத்தை அவரிடமே கேள்" என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான். "ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?", "நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை" என்று பளிச்சென்று கூறினார் கலக்டர். "நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்", "உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது" என்று பேசி முடித்தார் கலக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். "நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது" என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன. அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது. மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன. வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும். சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன. போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது. சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது. காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது. நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன. வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார். பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார். பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார். "என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....." என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார். அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார். தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி. "அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்" என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன. "என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. அடுத்து காகம் வந்தது...."பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்....வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம். மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா? மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?" என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார். அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின. கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின. நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது. "காட்டரசர் நாமம் வாழ்க" என்று பேச ஆரம்பித்தார் நரியார். "பன்றியார் சொன்னது போல்..... அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்.... பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்" நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன. "காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார். "சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?" என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார். யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார். "பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்" கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார். இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி. மீண்டும் நரியார் ஆரம்பித்தார். "காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்" என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார். இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன. ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மந்திரியான காக்கை அண்ணாச்சி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள். தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள். ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்டினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள். இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன். வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள். என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'செய்யும் செயலில் அவதானம் வேண்டும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது. அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது. அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது. ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சேவலும் இரத்தினக் கல்லும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், பொரி, தெருக்கூத்து, கிருஷ்ணர், புல்லாங்குழல், குசேலர், நடிகர், பல்லக்கு, பாடை, நாய்
தலைப்பு: கிருஷ்ணா! புடவை கொடு!
| பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். "அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!" என்று குதித்தான் மட்டி. "ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!" என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்! "சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்" என்றார் பரமார்த்தர். "புதுத் துணிகளைக் கிழிப்பதா?" ஏன் குருவே?" என்று கேட்டான், முடூடாள். "புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!" என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்! உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்! "பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!" என்று வேண்டினார் பரமார்த்தர். "குருவே! நமக்கு எதற்குப் புடவை?" என்று கேட்டான் மண்டு. "அதானே?" நமக்கு வேட்டி அல்லவா தேவை!" என்றான் மூடன். "கார்மேகக் கண்ணா!" இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!" என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. "நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்" என்றார். "கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்" எனக் கெஞ்சினான், முட்டாள். "கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?" என்றார் குரு. "கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு" என்றான் மடையன். "பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்" என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். "பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்" என்று நகரத் தொடங்கினார் நடிகர். "என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்" என்றார் பரமார்த்தர். "வரமா?" அதென்ன?", "ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!" என்றான். "எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்" என்றான் முட்டாள். "வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!" என்றான் மடையன். "சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது!" என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். "ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை" என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். "ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்.", "அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!" என்றார் பரமார்த்தர். "குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்‘ம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!" என்றான் மட்டி. "எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்" என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், "குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!" என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, "இந்தப் பல்லக்கு என்ன விலை?" என்று விசாரித்தான். "இது பல்லக்கு இல்லை" என்றான் பாடை கட்டியவன். "நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்" என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், "நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், "ஒரே தாகமாக இருக்கிறது" என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். "என்ன? யாரையுமே காணோம்?" என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. "லொள், வள்" என்று குரைத்தது. அவ்வளவுதான்! பாடையைத் "தொப்" என்று கீழே போட்ட சீடர்கள், "ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!" என அலறினார்கள். "அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!" என்றான் முட்டாள். "நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!" என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், "புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!" எனத் திட்டினார். "குருநாதா!" அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!" என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அம்மா சொல் கேள்!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது. ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான். கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது. எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன். இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன். ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா? உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை. மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது. முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது. பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல். நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை. கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல். நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன்? எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார். பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல். சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது. பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன. விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள். கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது. அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை. அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர். பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன். அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது. வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான். இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன். அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை. சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான். முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது. சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர். பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன. பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான். இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது. இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை. விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான். அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது. இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது. யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன். இளவரசிதான் மணமகள், என்றது அது. ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே செல்கிறாய்? அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல? உனக்கு என்ன குறை? ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன். நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது. நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது. சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது. அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை. நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள். பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன. அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது. வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான். நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை. அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன. பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன. ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை. முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள். வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான். தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின. விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன. உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா? என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை. அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன். கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை. விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர். வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது. உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது. மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள். வழியில் பாலம் ஒன்று வந்தது. பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை. அவனும் ஒளிந்து கொண்டான். ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது. இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது. அப்படியே செய்கிறேன், என்றான் அவன். அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை. அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான். அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது. இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன். வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன். விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர். இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள். இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது. சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான். எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை. அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை. சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது. எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது. இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர். பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது. அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது. அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான். எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள். மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான். வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை. அவர்களிடமும் சென்று அதையே சொன்னது. அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள். தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன். இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன். அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை. அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது. வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள். தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது. அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள். ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை. இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன். இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை. மகிழ்ச்சி அடைந்தான் அவன். இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒருவர் மட்டும் போதாது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கொக்கு, பால்நண்டு, மீன்கள், வலைகாரர்கள்
தலைப்பு: கொக்கைக் கொன்ற நண்டு
| நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால்நண்டு மிகக் கவலையோடு நின்று கொண் டிருந்தது. அந்த நண்டைப் பார்த்து, நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?" என்று கொக்குக் கேட்டது. என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார் கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பால்நண்டு பதில் கூறியது. நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழிகார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம் என்று கொக்கு கூறியது. எப்படி?" என்று நண்டு ஆவலோடு கேட்டது. ‘எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்" என்றது கொக்கு. கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்றிருந்த மீன்கள் இந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்டன. மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது. மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்னவென்று புரிந்து கொண்டது. மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லு முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்" என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது. பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார். ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது. கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, “டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?” என்று கத்தினார். நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். “ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,” என்றான். “முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,” என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு. குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது. அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான். கேசவனை பார்த்தக் கொல்லன், “உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,” என்றான். “என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?” என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு. “எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,” என்றான் அவன். வேறு வழியில்லாத ஜம்பு, “சரி” என்றார். சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான். “இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,” என்றான் அவன். நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார். வண்டி ஓடிக் கொண்டிருந்தது. “இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்’ என்று நினைத்தார் அவர். அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர். கொல்லனைப் பார்த்து, “இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,” என்று மிரட்டினார். அவருக்கு அஞ்சிய அவன், “இனி நான் இங்கு வரமாட்டேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றான். மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, “இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,” என்றார். “ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,” என்றான் அவன். “நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?” என்றார் அவர். “ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். “பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,” என்றான் அவன். அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார். “நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,” என்றார். பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது. உதவியாளைப் பார்த்து, “ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,” என்றார். உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார். களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். “ஐயா! என்னால் முடியவில்லை,” என்றான். உழவனைப் பார்த்து அவர், “இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,” என்றார். பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான். நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கிய அவர், “என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். “சரி கோடரியே செய்து தாருங்கள், ” என்றான் அவன். மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர். சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார். மிகவும் சிறியதாக இருந்தது அது. “இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். “ஏதாவது செய்யுங்கள்,” என்று கடுப்புடன் சொன்னான் உழவன். பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், “நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், “எதையாவது செய்து தாருங்கள்,” என்றான். அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், “இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,” என்று அதை உழவனிடம் தந்தார். “நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,” என்றார். “ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன். “இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,” என்றான் அவன். மகிழ்ச்சி அடைந்த அவர், “நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,” என்றார். உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான். வண்டியோட்டியைப் பார்த்து, “நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் “போதுமா’ என்று கேட்பான். நீ உடனே, “போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர். வலி பொறுக்க முடியாத அவர், “ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,” என்று அலறினார். வெளியே இருந்த வண்டியோட்டி, “போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,” என்று உரத்த குரலில் கத்தினான். “கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,” என்றான் உழவன். எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர். உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர். வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார். “அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?” “டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,” என்றுஅலறினார் செல்வந்தர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கஞ்ச மகா பிரபு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான். பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார். சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான். இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ… நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன். வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான். போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான். போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு “வாவா…ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?” என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு “என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்” என்றார். “இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்…உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும். பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், கொசுக்கள், கூச்சல், வேட்டை, காடு, ஆவி, கொள்ளிக்கட்டை, நெருப்பு
தலைப்பு: அன்புள்ள ஆவியே
| "ஙொய்ய்ய்…" என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார். "குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி. அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன. வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர். "குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன். அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார். உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள். "உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக் கூறினான், முட்டாள். "குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன். "அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு. "சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு. மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ…" என்று கதறினான் மண்டு. மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது. சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன. "குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான். "வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு. "இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள். முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர். இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன. "சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார். "குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. "மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்" என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி. "ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன். "குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன். "அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு. "செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன். "பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர். அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர். "திகு, திகு" என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள். சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள். அப்போதும் "சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்! |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது. பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் “அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா” என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார். பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான். பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து “நீ வேதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார். “அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான். “வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?” என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார். பின்னரும் சும்மாயிருக்காமல் “சரி உனக்கு கீதை தெரியுமா?” என்றார். பரிசல்காரன் விழித்தான். “என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்” என்று மறுபடியும் பரிகசித்தார். இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு “ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?” என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார். அவன் பொறுமையாக “சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!” என்று பதில் சொன்னான். “இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?” என்று அவனை இகழ்ந்தார். இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது. பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து “சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான். பண்டிதர் “தெரியாதே! ஏனப்பா?” என்று கேட்டார். பரிசல்காரன் “ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஞான பண்டிதர்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வெட்டுக்கிளி, எறும்பு, அரிசி, மழைகாலம்
தலைப்பு: எறும்பும் வெட்டுக்கிளியும்
| மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் "இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே" என்றது. அதற்கு எறும்பு "இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்" என்றது. வெட்டுக்கிளி எறும்பிடம் "மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்" என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு "எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்" என்ற எண்ணம் வந்தது. வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் "எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?" என்று கேட்டது. தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. "அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்" என்றது. கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது. கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர். பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது. பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார். அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள். வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர். புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார். அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார். பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார். பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார். அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள். புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார். பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர். கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே. ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார். பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும். கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார். பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை. கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார். கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர். கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார். புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்? நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர். இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும். மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார். கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார். புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார். தேரோட்டி அங்கு வந்தான். அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான். தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி. அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர். தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார். அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன. அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார். சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார். வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான். தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி. தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது. தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம். அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது. இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே! ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது. தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன். அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா? அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே! அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு. அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான். எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா? அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள். தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே. அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா? செலுத்து . தேர் மெல்ல நகர்கிறது. ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே. இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே. என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது? தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது. ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே! நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே. உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே. சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே. தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது. ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது. இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி. அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார். எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான். தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான். ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே. மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள். முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர். பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி. குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின. முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார். தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது. அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது. எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள். மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார். 1. பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே! (புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.) 2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.)
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லைக்குத் தேர்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், "கொஞ்சம் பாடுவதை நிறுத்து" என்று கேட்டது. வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, "நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்" என்று திட்டியது. தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டுவந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து. "நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர் களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சங்கீதம் இனிமையானது. அதை அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை. ஆந்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது. அருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது. பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வெட்டுக்கிளியும் ஆந்தையும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஏழைத் தாய், பெலிக்ஸ், ஊர் அரசன், மகாவீரன் பெலிக்ஸ், பூதம், படை வீரர்கள், குழந்தைகள்
தலைப்பு: புத்திசாலி பெலிக்ஸ்
| ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான். அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன். எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு "மகாவீரன்" என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர். இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன். பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான். பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது. ஒரு நாள்— அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது. இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர். அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர். உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர். அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான். பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ். இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர். பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான். பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பூதம், பணக்கார பிரபு, அமுதன், யாசகன், படகுக்காரன், மீன்
தலைப்பு: பூதம் சொன்ன கதை
| முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே," எனக் கூறினான். "போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்," எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது. அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது. பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது. அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…" என எண்ணி மனம் புழுங்கினான். அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது. அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?" என எண்ணி ஆச்சரியப்பட்டான். அப்போது, "அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன். "அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…" என்று சொல்லி மறைந்தது. அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், கண்ணன், ரங்கன், புலி, மாடுகள், நாகம், நாகதேவன், ஜமீன்தார், ஜமீன்தாரின் பெண், விவசாயியின் பெண் இந்து, இளைஞன், சுக்ரானந்தர் என்ற முனிவர்
தலைப்பு: நாகரத்தினத்தை திருடியது நியாயமா?
| தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, "மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்" என்றது. கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். சிறிது நேரத்தில், காட்டில் இருள் சூழ்ந்தது. இனி, தொலைந்து போன மாட்டைத் தேடிப் பயனில்லை என்று கருதிய ரங்கன் வீடு திரும்ப எண்ணியபோது, அவன் அமர்ந்து இருந்த பெரிய மரத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த நாகத்தின் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒரு இரத்தினக் கல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. சரசரவென வெளியே வந்த நாகம் ரங்கனிருந்த மரத்தையணுகித் தன் தலையில் இருந்த இரத்தினத்தை எடுத்து, மரத்தின் அடியில் இருந்த ஒரு பொந்தினுள் வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப்போய் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்ததும் திடீரென ஒரு மனிதனாக மாறியது. நாகதேவனைப் போல் தோற்றமளித்த அந்த மனிதன் மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட ரங்கன் இனியும் அங்கு இருந்தால் ஆபத்து எனக் கருதி, சத்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி ஓடிப்போனான். மறுநாள் அதைப்பற்றித் தன் தோழன் கண்ணணிடம் சொல்ல, கண்ணனின் விழிகள் வியப்பினால் விரிந்தன. அவன் ரங்கனை நோக்கி, "அடப்பாவி! சரியான முட்டாளாக இருக்கிறாயே! நாகரத்தினம் மட்டும் நம் கையில் இருந்தால், பாம்பு தீண்டிய பிறகு இறக்கும் நிலையில் இருப்பவர்களை நாம் காப்பாற்றி விடலாமே! நாம் அதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால், நிறையப் பணம் சம்பாதித்துப் பணக்காரர்களாகி விடலாமே! சரி, சரி! இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று இரவு அந்த இடத்திற்கு நாமிருவரும் சேர்ந்து செல்வோம். இன்றும் நேற்று நடந்தது போல் நடந்தால் நாம் இரத்தினத்தைத் திருடிக் கொண்டு வந்து விடலாம்!" என்று கூறினான். ரங்கன் வர மறுத்ததால் கண்ணன் மட்டும் தனியாக காட்டுக்குச் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அன்று நாகம் வந்தது. நாகதேவன் தீவிர தவத்தில் ஆழ்ந்து விட்டான் என்று தெரிந்ததும், கண்ணன் சத்தமின்றி கீழே இறங்கி, இரத்தினத்தைத் திருடிக்கொண்டு, ஊரை நோக்கித் திரும்பினான். மறுநாள் காலையிலேயே, அவன் கடம்பவனம் கிராமத்தைவிட்டு வெகுதூரம் சென்று மற்றொரு பெரிய கிராமத்தை அடைந்தான். அந்த ஊரின் ஜமீன்தாரின் பெண்ணை ஒருநாள் நாகம் தீண்டிவிட, கண்ணன் தன்னிடம் உள்ள இரத்தினத்தைக் கொண்டு அவளை உயிர் பிழைக்கச் செய்தான். அதனால் மகிழ்வுற்ற ஜமீன்தார் அவனுக்கு அந்த கிராமத்திலேயே வீடு அமைத்துதர, அவன் அந்த ஊரிலேயே தங்கிவிட்டான். வயல்களும், காடுகளும் நிறைந்த அந்தப் பிரதேசத்தில் தினமும் பலர் பாம்பு தீண்டி விஷமேறி அவனைத்தேடி வர அவன் அவர்களை குணப்படுத்தி வந்தான். காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்குக் கொடுத்த பல வெகுமதிகளினால் அவனிடம் குவிந்த செல்வமும் ஏராளமாக ஆயிற்று. கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட நாகதேவன் மறுநாள் காலையில் தவங்கலைந்து எழுந்த பிறகு தன் இரத்தினத்தைத் தேட, அது காணவில்லை.சுதேந்திரன் என்ற அந்த நாகதேவன் தன் இரத்தினத்தை இழந்துத் துடித்துப் போனான். எதிர்காலத்தில் இந்து என்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பி அந்த நாகதேவன் கட்டிய மணக்கோட்டை இடிந்து போயிற்று. அவன் அந்தப்பெண்ணை சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி! ஒரு விவசாயியின் பெண்ணான இந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் குடிசை வாயிலில் நெல்லைக் காயவைத்துவிட்டு, அவற்றைப் பறவைகள் கொத்தாமல் விரட்டிக் கொண்டு இருக்கையில், திடீரென அந்தப்பக்கம் ஓர் இளைஞன் வந்தான். இந்துவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கிய அவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளை வேண்ட, அவள் மறுத்தாள். கோபங்கொண்ட அவன் அவளிடம் வம்பு செய்ய, அவள் கூச்சலிட்டாள். ஆனால், அவள் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் யாருமில்லை அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சுதேந்திரன் என்ற நாகதேவன் நிராதரவான இந்துவின் மீது மிகவும் பரிதாபப்பட்டு, அந்த இளைஞனின் மீது படமெடுத்து சீறிப்பாய, அவன் பயந்தோடிப் போனான். தனக்கு உதவி செய்த அந்த நாகத்தினை நன்றியுடன் இந்து நோக்க, திடீரென அந்த நாகம் மனிதனாக மாறியது. அவள்முன் வசீகரமான தோற்றத்துடன் நின்ற சுதேந்திரன், "பெண்ணே! என் பெயர் சுதேந்திரன்! நான் நாகலோகத்தைச் சேர்ந்த நாகதேவன்! என்னிடம் இரத்தினம் உள்ளது. அதன் சக்தியினால்தான் நான் இப்போது மனித உருவம் எடுத்து உன் முன் நிற்கிறேன். "என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. ஆனால் நிரந்தரமாக மனிதனாக மாற முயற்சி செய்வேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?" எனவும் இந்து சம்மதித்தாள். உடனே மட்டிலா மகிழ்ச்சியுற்ற சுதேந்திரன் சுக்ரானந்தர் என்ற முனிவரின் ஆசிரமத்தையடைந்து தன்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். சற்று நேரம் யோசித்த முனிவர், "சுதேந்திரா! கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் தந்து இருக்கிறார். நீ நாகலோகத்தைச் சேர்ந்தவன்! அதனால் நீ நாகத்தின் உருவத்தில் இருப்பதுதான் நியாயம் ஆனது. ஆகையால் உன் ஆசையை விட்டுவிடு!" என்றார். சுதேந்திரன் இந்துவின் மீது தான் கொண்டுள்ள அன்பைப் பற்றிக் கூறினான். ஆகையால் முனிவர், "அவள் மீதுள்ள உன்னுடைய அன்பு மிக ஆழமானது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, நான் உன் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்ற முயல்கிறேன். என்னுடைய தவ வலிமையினால் நீ இரவு முழுவதும் மனித உருவில் இருப்பாய், இரவு நேரங்களில் நீ பரம்பொருளை தியானித்துத் தவம் செய்து வா! உன் மூலம் பல ஜீவராசிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் நடந்து கொள். சில நாள்களிலேயே, நீ நிரந்தரமாக மனிதனாக மாறுவாய்!" என்றார். அவ்வாறு தவம் புரிந்துவந்த இரவுகளில் ஓரிரவில் அவனுடைய இரத்தினம் திருட்டுப் போயிற்று. அதனால் அவனுடைய சக்திகளை இழந்து அவன் ஒரு சாதாரண நாகம் ஆனான். மிகவும் சக்தி வாய்ந்த அந்த இரத்தினத்தைத் தன்னிடம் இருந்து திருடியவனைப் பழி வாங்குவதற்குத் துடித்தான். அந்த நேரம், வேறோரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த கண்ணன். தன் பழைய நண்பன் ரங்கனைப் பார்க்க விரும்பி கடம்பவனம் வந்தான். ரங்கனை சந்தித்த அவன், நடந்த அனைத்ததையும் கூறிவிட்டு, "இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த நன்றியை நான் மறக்கவில்லை, என்னுடைய செல்வத்தில் பாதியை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்து விடு!" என்றான். அதற்கு ரங்கன், "நன்றி கண்ணா! ஆனால், நியாயமாக உழைத்துக் கிடைக்கும் கூலியையே நான் விரும்புகிறேன். ஆகவே, நீ சென்று வா!" என்றான். அதன்பிறகு கண்ணன் தன் ஊர் திரும்பினான். அப்போது வழியில் சுதேந்திரன் கண்களில் கண்ணன் தென்பட்டான். கண்ணனிடம் உள்ள இரத்தினத்தின் சக்தி சுதேந்திரனை ஈர்க்க, உடனே அது தன்னுடையதுதான் என்றும், அதை எடுத்துச் செல்பவனே திருடிச் சென்றவன் என்றும் உணர்ந்த நாகம் மிகுந்த கோபத்துடன் கண்ணனின் மீது சீறிப்பாய்ந்து அவனைக் கொத்தியது. என்ன ஆச்சரியம்? சுதேந்திரன் தானாகவே மனித உருவம் பெற்று நின்றான். அதே சமயம் கண்ணணுக்கும் நாகம் தீண்டியதால் விஷம் ஏறவில்லை. இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா? சுயநலவாதியான கண்ணன் நாகம் தீண்டியும் எவ்வாறு விஷம் ஏறாமல் உயிரோடு இருந்தான்? அதைவிட வியப்பானது என்னவெனில், சுதேந்திரன் எவ்வாறு கண்ணனைத் தீண்டியதும் மனித உருவம் பெற்றான்? ரங்கன் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்வதே தருமம் என எண்ணி அதன் வழியே நடந்தான். ஆனால் அவன் முன்னேறவே இல்லை. தருமத்தின் வழியில் நடப்பவர்களுக்கு இந்த கதிதான ஏற்படுமா? என்னுடைய கேள்விக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அது அதன் பலனின் அடிப்படையினால் மட்டுமன்றி, அந்த வேலையைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் சூழ்நிலை மற்றும் வேலை செய்பவர்களின் பாவம் புண்ணியங்களின் அடிப்படையினாலும் அமையும். ரங்கன் மிகவும் கடுமையாக உழைத்து வாழும் வழ்கையை தேர்ந்தெடுத்தான். அதனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ முடிந்தது. இரத்தினத்தை திருடினாலும், அதை வைத்து, பாம்பு தீண்டிய பலரின் உயிரைக் காப்பாற்றும் புண்ணியச் செயலைத்தான் அவன் செய்து இருக்கிறான். தவிர, செல்வம் சேர்ந்தவுடன் அதைத் தன் நண்பனுடன் பகிர்ந்தளிக்க அவனைத் தேடி வந்த நல்ல உள்ளம் படைத்தவன் கண்ணன். ஆகையால் சுதேந்திரன் என்ற நாகம் தீண்டியதும் அவன் இறக்கவில்லை. சுதேந்திரன் முனிவர் கூறியபடி தானே நேரடியாக எந்த ஜீவராசிக்கும் உதவி புரிய வில்லை எனினும், அவனுடைய இரத்தினத்தின் மூலமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆகவே அவன் நிரந்தர மனித உருவத்தைப் பெற்றான்." என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது. அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது. வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது. வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது. தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது. கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது. கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எறும்பும் வெட்டுக்கிளியும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதை தன் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா, உன்னைப் போல் சிலர் வாழ்க்கையில் லட்சியவாதியாகத் திகழ்பவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைய அரும் முயற்சி செய்வார்கள். ஆனால் சிலர் வாழ்க்கையில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் ஞானிபோல் திரிபவர்கள் திடீரென தடம்மாறி பயங்கர முயற்சி செய்து பல ஆண்டுகளாய் அடைய நினைத்ததை சில நாள்களிலேயே பெற்றுவிடுவர். அப்படிப்பட்ட குணசேகரனின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்றது. விராக நாட்டை ஆண்டு வந்த சந்திரவர்மன் என்ற சிற்றரசருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். பெரியவன் குலசேகரன் இளையவன் குணசேகரனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தான். சிறு வயது முதல் தான் மன்னனாவது பற்றி குலசேகரன் கற்பனை செய்வதுண்டு. தனக்கு சமமான அந்தஸ்து படைத்தவர்களுடன் மட்டுமே பழகுவான். ஆனால் குணசேரகன் ஆசாபாசங்கள் அற்றவன். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஆட்சிபுரியும் ஆசை சிறிதுமில்லை. இருவருடைய பிறந்தநாளையும் சந்திரவர்மர் மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அவ்வாறு அவர்களின் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவர்கள்இருவருக்கும் ஒரு கருடனின் பொம்மை பரிசாகக் கிடைத்தது. அதை அனுப்பியவர் சந்திரவர்மரின் குலகுரு சம்புநாதர்! அந்த பொம்மை பெரிதாக இருந்தது. அது மட்டும்இன்றி, அதன் காதருகில் பொருத்தப் பட்டிருந்த சாவியைத் திருகினால் அது சற்று நேரம் வானில் பறந்து சென்று திரும்பியது. அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்த முடியும். தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பொம்மையை எடுத்துக் கொண்டு இருவரும் நந்தவனத்திற்குச் சென்றனர். முதலில் குலசேகரன் அதன் மீதேறி அமர்ந்து சாவியை முடுக்க, அது பறந்தது. சற்று நேரம் பறவையில் பறந்து களித்தபின், தன் தம்பிக்கு அதை அளித்தான். அப்போது அரண்மனை வேலைக்காரி ஒருத்தியின் மகனான சாரதி அந்தப் பறவையில் தானும் அமர்ந்துப் பறப்பதற்கு விரும்பினான். அவனுக்கு அது தகுதியற்ற ஆசை என்று அவன் தாய் உணர்த்தினாள். அதைத் தற்செயலாக கவனித்த குணசேகரன் அவளிடம் “உன் மகன் சாரதி எனக்கு சமமான வயதுடையவன். இந்த வயதில் இத்தகைய ஆசை தோன்றுவது நியாயமே! ஆகவே, பொம்மை மீது அமர்ந்து பறக்க அவனுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் பறவை மீது ஏறாமல் சாரதியை ஏறச் சொன்னான். அதைக்கண்ட குலசேகரன் ஓடி வந்து அவனைத் தடுத்தான். அவன் செய்கையை அனைவரும் ஆதரித்தது குணசேகரனுக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. “சாரதி குதிரையில் உட்காரக்கூடாது என்றால் நானும் அதில் உட்கார மாட்டேன்” என்ற குணசேகரன் “நான் குலகுரு சம்புநாதரிடம் சிஷ்யனாகச் சேர்ந்து, இதேபோல் ஒரு பொம்மையைப் படைத்து அதில் சாரதியை உட்காரச் செய்வேன்” என்றான். அப்போது, சந்திரவர்மருக்கும் அதே யோசனை தோன்றியது. தன் புதல்வர்கள் இருவரையும் தன் குருகுல சம்புநாதரிடம் சீடர்களாக அமர்த்தி ராஜநீதி, பொறியியல், பொருளாதாரம் போன்ற அறிவியல் பாடங்களைக் கற்கட்டும் என்று எண்ணி, சம்புநாதரின் குருகுலத்தில் சேர்த்தார். சேர்ந்த நாள் முதல், குலசேகரன் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள, குணசேகரன் பொறியியலில் மிக்க ஆர்வம் காட்டினான். சில நாள்களில் குணசேகரன் தான் கூறியது போல் ஒரு கருட பறவையைத் தயாரித்து அதில் சாரதியை ஏறச் சொன்னான். அவனுடைய சமத்துவ மனப்பான்மையைக் கண்டு வியந்து பாராட்டிய சம்புநாதர், “நீ சாதாரண மனிதன்னல்ல, நீ ஒரு மகான்!” என்று விமரிசனம் செய்தார்.குருகுல சம்புநாதரிடம் கல்வி பயின்று முடித்தபின் இருவரும் அரண்மனை திரும்பினர். ஆனால் இருவரின் போக்கும் முற்றிலும் வேறுபட்டிருந்ததைக் கண்டு கவலையுற்ற சந்திரவர்மர் சம்புநாதரிடம், “குலசேகரன் தங்களிடம்இருந்து அரசியலை நன்குக் கற்றுக் கொண்டு விட்டான் ஆனால் குணசேகரன் அரசியலைப் பற்றிக் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லையே!” என்றார் மன்னர்.“அவனுக்கு ஆட்சி புரிவதில் ஆர்வமில்லை. அதனால்தான் அவன் அரசியலை ஆர்வத்துடன் கற்கவில்லை” என்றார் சம்புநாதர். “குருநாதரே! என் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவனை மன்னன் ஆக்க விரும்புகிறேன்” என்றார் சந்திரவர்மர். ஆனால் சந்திரவர்மருடைய யோசனை அவருடைய தந்தைக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் சரியாகத் தோன்றவில்லை.ஆகையால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் சந்திரவர்மர் அயல் ராஜ்யத்தின் மீது படையெடுத்து, வெற்றி கண்டு, அதை குணசேகரனுக்கு உரிமையாக்கி விடலாம் என்று கருதினார்.அப்போது, விசால ராஜ்யத்து இளவரசி சந்திரகலாவின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டு, அதற்கு பல நாட்டு இளவரசர்கள் அழைக்கப்பட்டுஇருந்தனர். உடனே, மன்னர் மூத்தவன் குலசேகரனுக்கு பதிலாக குணசேகரனையே சுயம்வரத்திற்கு அனுப்ப எண்ணினார். சந்திரகலா விசாலராஜாவிற்கு ஒரே பெண்! அதனால், அவளை மணம் புரிந்தால், குணசேரன் எதிர்காலத்தில் விசாலராஜ மன்னன் ஆகிவிடுவான் என்ற நப்பாசைதான் காரணம்! அதைப்பற்றி மன்னர் சந்திரவர்மர் குணசேகரனிடம் கூறியபோது, அவனும் முதலில் சுயம்வரத்திற்குச் செல்லவே விரும்பினான். ஆனால் குலசேகரன் சந்திரகலாவை விரும்புவதையறிந்த அவன், உடனே தன் விருப்பத்தை கைவிட்டு விட்டாள். அதனால் குலசேகரன் மட்டும் சுயம்வரத்திற்குச் சென்றான்.பல ராஜ்யங்களில் இருந்து மன்னர்களும், இளவரசர்களும் சந்திரகலாவின் கரம் பற்ற விரும்பி சுயம்வரத்தில் கூடியிருந்தனர். சந்திரகலா தன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்த போது, திடீரென ஒருவன் முன்னே வந்து அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு, “என் பெயர் மித்ரபிந்தன்! நான் சந்திரகலாவை மிகவும் நேசிக்கிறேன். அவள் எனக்குத்தான் உரியவள்! அதனால் நான் இவளை என்னுடைய மகாபர்வத ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு வீரம் இருந்தால், போரில் என்னைத் தோற்கடித்தப் பிறகு, சந்திரகலாவை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சவால் விட்டுவிட்டு, அங்கு தயாராக இருந்த தன் குதிரைமீது அவளை பலவந்தமாக ஏற்றிக் கொண்டு, விரைந்து வெளிஏறினான்.சந்திரகலாவின் தந்தை வீரகுப்தர், தன் மகளை கயவன் மித்ரபிந்தனிடம்இருந்து மீட்டு வரும் இளவரசனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதுடன், தன் ராஜ்யத்தையும் அளிப்பதாக அறிவித்தார். உடனே சில நாள்களிலேயே, பல மன்னர்கள் மகாபர்வதத்தின் மீது படையெடுத்து, சந்திரகலாவை மீட்க முயன்றனர்.ஆனால், மலைப்பிரதேசமான மகாபர்வத ராஜ்யத்தோடு போரிடுவது மிகக் கடினமாக இருந்தது. படைஎடுத்துச் சென்ற மன்னர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அவ்வாறு, போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களில் குலசேகரனும் ஒருவன்! தன் சகோரதன் கொல்லப்பட்டதையறிந்த குணசேகரன் மித்ரபிந்தன் மீது தானே போர்தொடுக்க முடிவு செய்தான். ஆனால், மற்றவர்களைப் போல் உடனே படையெடுத்துச் செல்லாமல், முதலில் மித்ரபிந்தனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முற்பட்டான்.மித்ரபிந்தன் மகாபர்வதக் கோயிலின் அம்மன் ருத்ரபைரவியை சிறு வயது முதல் ஆராதனை செய்து, அம்மனிடமிருந்து பல விசேஷ சக்திகளைப் பெற்றிருந்ததாகத் தெரிந்து கொண்டான். ஒருமுறை ருத்ரபைரவி அவனுடைய கனவில் தோன்றி தனக்கு இரத்த தாகம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறு மன்னர்களை அவளுக்குப் பலியிட்டால், அவன் மகா பலம் பொருந்தியவனாகத் திகழ வரம் தருவதாகவும் கூறினாளாம்! ருத்ரபைரவியின் சூலாயுதத்தைக் கொண்டு மித்ரபிந்தனை யாராவது தாக்கினால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் கூறினாள்.மேற்கூறிய தகவல்களை அறிந்த பிறகு, குணசேகரன் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டபின், அவன் தனியாக மாறுவேடத்தில் மகாபர்வதம் சென்றான். ஒருநாள் நள்ளிரவில், மித்ரபிந்தன் சந்திரகலாவுடன் ருத்ரபைரவியின் கோயிலுக்குச் சென்றபோது, அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். அம்மனின் சன்னிதிக்கு மித்ரபிந்தன் சென்றதும் குணசேகரன், விரைந்து கருவறைக்குள் புகுந்தான். அம்மனின் கையிலிருந்த சூலத்தை எடுத்து, அவள் முன்னிலையில் மித்ரபிந்தன் மார்பில் சூலத்தைப் பாய்ச்சி, அவனைக் கொன்றான். உடனே குணசேகரன் முன் தோன்றிய அம்மன், “இத்துடன் நூறு இளவரசர்கள் பலியாகி விட்டனர். இறுதியாக நூறாவது இளவரசனை பலிகொடுத்த உனக்கு நான் வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ, கேள்!” என்று சொல்ல, மித்ரபிந்தனைத் தவிர அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என வரம் கேட்க, அம்மனும் அவ்வாறே வரம் தந்தாள்.உயிர் பெற்று எழுந்த மற்ற மன்னர்களையும் இளவரசர்களையும் நோக்கி “உங்களுக்கு உயிர் கொடுத்த குணசேகரனை உங்கள் சக்கரவர்த்தியாகக் கருதுங்கள்!” என்று கூறி மறைந்தாள்.கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! குணசேகரனின் செயலைப் பார்த்தால் வியப்பாக இல்லையா? அரசாள்வதில் ஆசையே இல்லை என்று ஆரம்ப முதல் சொல்லி வந்தவன் இறுதியில் எப்படி மாறி விட்டான் பார்த்தாயா? தவிர, மித்ரபிந்தனை சாதாரண மனிதர்களினால் கொல்ல முடியாது என்று அம்மன் கூறியிருக்க, அவனை குணசேகரனால் எவ்வாறு கொல்ல முடிந்தது? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.அதற்கு விக்கிரமன், “ராஜ்யம் ஆளும் ஆசையினால் குணசேகரன் மித்ரபிந்தனைக் கொல்லவில்லை. தன் சகோதரனைக் கொன்றவனைப் பழி தீர்க்க எண்ணியே அவன் மித்ரபிந்தனைக் கொன்றான். தன் சகோதரன் மட்டுமன்றி, மற்றும் பல மன்னர்களை அநியாயமாகக் கொன்று பலியிட்ட மித்ரபிந்தனை பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். சாதாரண மனிதர்களினால் மித்ரபிந்தனைக் கொல்ல முடியாது என்று ருத்ரபைரவி கூறியிருந்தது உண்மையே! ஆனால் குணசேகரன் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன் அல்ல! நற்குணங்கள் பொருந்திய உத்தம புருஷன்! ஆகவே, சராசரி மனிதர்களிலிருந்து அப்பாற்பட்ட குணசேகரனால் மித்ரபிந்தனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை!” என்றான்.விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குணசேகரின் கதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து ” பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்” என்றார். “அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?” என்றார் பீர்பால். “யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்” என்றார் அக்பர். அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து ” அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றான். அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து “இன்று இரவு போட்டிக்கு தயாராகு” என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார். யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான். பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள். அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. “இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் “அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்” என்றான். “இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது” என்றார். பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார். சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார். பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார். “பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” அக்பர். “அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்” பீர்பால். “உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?” என்றார் அக்பர் கோபத்துடன். “அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?’ என்றார் பீர்பால். மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து… முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குளிரில் நின்றால் பரிசு' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், வித்யாசாகர், கட்டை, எள், விறகு, திலகாஷ்ட மகிஷபந்தனம்
தலைப்பு: புலவரை வென்ற தெனாலிராமன்
| புலவரை வென்ற தெனாலிராமன் ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான். வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன?" என்று கேட்டார்.இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட மடையன், "குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்" என்றான். "ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!" என்றான், மண்டு "ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மூடன் "என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!" என்றான், முட்டாள். கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார். சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் தயார் செய்தனர். இரவு வந்தது. குருவும் சீடர்களும் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கப் புறப்பட்டார்கள். கடற்கரை ஓரத்தில் படகு ஒன்று இருந்தது. அதில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் கண்டப துடுப்புப் போட்டனர். மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது. அதைக் கண்ட சீடர்கள், "இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே!" என்று கேட்டனர். அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் "இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும்" என்று விளக்கம் கூறினார். "அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்!" என்றான் மட்டி அதற்குப் பிறகு, மண்டு போட்ட தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது. "குருநாதா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படகுக்கு வெளியே நிறைய மீன்கள் இருந்தாலும் கொஞ்சம் தான் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்!" என்றான் முட்டாள். "சபாஷ்! சரியான யோசனை!" என்று முட்டாளைப் பாராட்டினார், பரமார்த்தர். அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர். அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபுகுபு என்று படகுக்குள் பாய்ந்து வந்தது. அதைக் கண்ட சீடர்கள் "ஐயோ" என்று கத்திக் கொண்டு எகிறிக் குதித்தனர். அதனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் கண்டது படகு அதற்குள் படகு முழுவதும் நீர் நிரம்பி விடவே, படகு கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர். அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த சில மீனவர்கள் நீந்திச் சென்று அனைவரையும் காப்பாற்றினர். மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், "நம் படகு எப்படிக் கவிழ்ந்தது?" என்று கேட்டனர். "கடலும், மீன்களும் சேர்ந்து சதித் திட்டம் செய்து தான் நம் படகைக் கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர். "அப்படியானால், எப்படியாவது கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும அடக்க வேண்டும்" என்றான் மட்டி குருவே! முடிந்தவரை மீன்களைப் பிடித்துக் கொன்று விடுவோம்" என்றான் மடையன். "ஆமாம்! சும்மா விடக்கூடாது. மறுபடியும் மீன் பிடிப்போம், வாருங்கள்" என்றான் முட்டாள். மறுநாளும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர். கடலுக்குள் சென்றதும், "குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். அதனால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம்" என்றான் மட்டி. "உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்" என்றான் மடையன். குரு சற்று நேரம் யோசித்தார். "நீங்கள் சொல்வதும் சரியே" என்றார். உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூழ்கியதும் மூச்சுவிட முடியாமல் துடித்தார். நீரின் மேல் பரப்பில் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், "அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார் போலிருக்கிறது" என்றனர். பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன. எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர். ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார். "மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்!" என்றான் மட்டி. கண் விழித்த பரமார்த்தர், "சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ இந்தத் தடவை தப்பித்துக் கொண்டோம். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்!" என்றார். கடைசியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கால் முளைத்த மீன்கள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, கடன், டம்பன், பொற்காசுகள், துரோகம்
தலைப்பு: நம்பிக்கை மோசம்
| ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப்
பேர்வழி. முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன்
தீர்மானித்தான். நிச்சயம் முல்லாவை ஏமாற்றி பெரும் பொருளைக் கடனாகக வாங்கி வருவதாக பலரிடம் சபதம்
போட்டு மார்தட்டிக் கொண்டான். அந்த டம்பன் சாமர்த்தியமாக செயல்பட திட்;டமிட்டான். முல்லா தன்னை நம்பிப் பெருந் தொகை கொடுக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும்,
அதனால் தன் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட ஒரு நாடகம் நடித்த எண்ணினான். ஓரு நாள்
அவன் முல்லாவிடம் சென்றான். " முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?" என்று கேட்டான். " நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன்
கொடுக்கத் தயங்க மாட்டேன். நீ ஒரு காசுதானே கேட்கிறாய். இதிலே நீ நம்பிக்கை மோசம்
செய்யாமல் இருந்தால் பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்" என்று கூறி
டம்பனுக்கு ஒரு காசு கடனாகக் கொடுத்தான். டம்பன் நாலைந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசு எடுத்துக் கொண்டு அவரிடம்
வந்தான். " முல்லா அவர்களே தாங்கள் கடனாகக் கொடுத்தத அற்பப் பொருள்தான் என்றாலும் மிகுந்த
நாணயத்தடன் பொறுப்புடன் திரும்பிக் கொடுத்து விடுவது என்று வந்திருக்கிறேன்.
பணவிஷயத்திலே நான் மிகவும் நேர்மையானவன் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்"
என்று கூறிவாறு டம்பன் ஒரு காசை முல்லாவிடம் திரும்பிக் கொடுத்தான். முகத்திலே
மலர்ச்சியில்லாமல், ஏதோ உபாதைப் படுபவர் போல ஒரு காசை வாங்கிக் கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்ட அகலாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். " என்ன சமாச்சாரம்?" என்று முல்லா கேட்டார். " ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தரவேண்டும். நாணயமாக ஒரு காசைப் திருப்பிக் கொடுத்தது
போல ஐயாயிரம் பொற்காசுகளையும் திரும்பித் தந்த விடுவேன் " என்றான் டம்பன். " உனக்கு இனி நான் ஒரு காசு கூடக் கடனாகக் கொடுக்க முடியாது" என்று முல்லா கோபமாகச்
சொன்னார். " முதலில் நான் வாங்கிய ஒரு காசைத்தான் திரும்பத் தந்தவிட்டேனே" என்று ஒன்றும்
விளங்காமல் கேட்டான் டம்பன். " நீ ஒரு காசு கடன் வாங்கிய விஷத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் " என்றார்
முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான். " முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையை திரும்பிக் கொடுத்திருக்கும் போது நம்பிக்கை
துரோகம் செய்ததாக எவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று திகைப்போடு கேட்டான் " நம்பிக்கை மோசந்தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒரு காசை நீ திரும்பி
கொடுக்காமல் ஏமாற்றி விடுவாய் என்று நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்து விட்டாய்.
அதவாது நான் என்ன நம்பினேனோ அதற்கு மாறாக நடந்த விட்டாய் ஆகவே இதுவும் நம்பிக்கை
மோசந்தான். அதனால் ஒரு காசு கூட உனக்குக் கடன் தரமாட்டேன் " என்று கூறியவாறே முல்லா வீட்டுக்குள் எழுந்து சென்று விட்டார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வாத்தியார், மாணவர்கள், ஞானிகள்
தலைப்பு: தூங்குமூஞ்சி வாத்தியார்
| ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார். இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது. மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான். இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர். இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர். சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர். உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள். ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன். முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன். அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன். அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன். இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன். குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன். அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன். சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான். மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன். அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான். உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான். அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன். அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான். உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன். அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன். வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பெரிய சோம்பேறி யார் ?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: புத்த மடாலயத் தலைவர், குரு, புத்த பிக்ஷுக்கள்
தலைப்பு: கொடுத்துப் பெறுதல்
| ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார். இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஆடு, ஆறு, மக்கள், முதலை, முரட்டு ஆடு, மலையடிவாரம்
தலைப்பு: முரட்டு ஆடு
| அது ஒரு மலையடிவாரம். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. மலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். ஒரு நாள் - ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. அதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, "நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்" என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, "அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்" என்று அமைதியாக சொன்னது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது. மலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது. தானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார். கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது. என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது. ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், “ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்”. என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!. இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்? இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, “நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்.” என்று செய்தி அனுப்பினார். ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். “கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்.” என்றார். அவரது சீடர்கள், “இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை”. என்றனர். ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், “நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்.” என்று கூறினார். கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார் என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. “நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்”. என்றார் ராமகிருஷ்ணர். கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், “முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்”. என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார். கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார். நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் “இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்” என்று கூறினார். கேசவ் சந்திரா, “நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்” என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். “கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம். எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார். கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், “அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்” என்று பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை. சீடர்கள், “நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்” என கூறிக் கொண்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, “இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்” என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன. கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்” என்றார். ராமகிருஷ்ணர், “என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை” என்றார். கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடவுளுக்கான சான்று' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நான் கேள்விப்பட்ட அழகிய புராதனமான கதை ஒன்றை உங்களிடம் பகிர்கிறேன். ஒரு கிராமத்தில் வெகுகாலமாக மழையே பெய்யாமல் இருந்தது. கிணறுகள், குளங்கள் எதிலும் துளி நீர் இல்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கடைசியாக மழையை வருவிப்பவனை தங்கள் கிராமத்துக்கு அழைத்து வரலாம் என்று முடிவுசெய்தனர். மழையை வருவிக்கும் சக்தி கொண்டவன் தூரத்து நகரமொன்றில் வசித்துவந்தான். அவனுக்குத் தூது அனுப்பி செய்தி சொல்லப்பட்டது. மழையின்றி நிலங்கள் எல்லாம் தரிசாகக் கிடக்கிறதென்றும், முடிந்தவரை சீக்கிரம் வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மழையை வருவிப்பவரும் உடனடியாக கிராமத்திற்கு வர ஒப்புக்கொண்டார். அவரோ பழுத்த முதியவராக இருந்தார். அந்தக் கிராமத்தில் தனக்கென்று தன்னந்தனியாக ஒரு குடிசை வேண்டுமெனவும், மூன்று நாட்கள் தன்னை அங்கே யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென்பதுமே அவர் இட்ட நிபந்தனை. உணவு, தண்ணீர் எதுவுமே தேவையில்லை என்றும் அவர் கூறிவிட்டார். அவரது நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மூன்றாம் நாள் மாலையில் அந்தக் கிராமத்தின் மீது மேகங்கள் கருத்துத் திரண்டன. சடசடவென்று மழைபெய்யத் தொடங்கியது. அடிஅடியென்று துவைத்த மழையில் கிராமமே மகிழ்ச்சியில் திளைத்தது. மழையை வருவித்த முதியவர் தங்கியிருந்த குடிசை முன்பாக நன்றியுடன் அந்தக் கிராமத்து மக்கள் கூடினர். “இந்த அற்புதத்தை எப்படி சாதித்தீர்கள்? எங்களிடம் சொல்லுங்கள்” என்றனர். அது மிகவும் எளிமையானது என்று மழையை வருவித்த முதியவர் கூறத்தொடங்கினார். “கடந்த மூன்று நாட்களாக நான் என்னை ஒழுங்கில் வைத்திருந்தேன். நான் ஒழுங்கிற்குள் வந்தால், இந்த உலகம் ஒழுங்கிற்குள் வரும் என்றெனக்குத் தெரியும். வறட்சி போய் மழை வரும் என்றெனக்குத் தெரியும்” என்றார். நீங்கள் ஒழுங்குக்குள் இருக்கும்போது, முழு உலகமும் உங்களுக்காக ஒழுங்குக்கு வரும். நீங்கள் இசைவுடன் திகழும்போது, உங்களைச் சுற்றியுள்ள முழு இருப்பும் உங்களுக்காக இசைந்து வரும். உங்கள் ஒழுங்கு குலையும்போது, முழு உலகின் ஒழுங்கும் குலையும் என்று தாந்தரீகம் சொல்கிறது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மழையை அழைத்து வருபவன்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, செல்வந்தர், சொத்து, மகிழ்ச்சி, பணப்பை, பெட்டி
தலைப்பு: மகிழ்ச்சியின் எல்லை
| முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான
பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால்
அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், " என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க
முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது.
நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக்
கூடாதா?" என்று பரிதாபமாகக் கேட்டார். செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக்
கட்டிப் போட்டு வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப்
பார்த்துப் பார்த்து வைப்பான். முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக்
கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார். அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப்
பார்த்து
விட்டு வைத்துக் கொண்டிருந்தார். " என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் " என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை
நோக்கி நடந்தார் முல்லா. முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப்
பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான். அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு
அருகாமையில் விழுந்து விட்டது. செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார். உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார். " ஐயோ என் பணப்பை போய் விட்டதே" என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக்
கொண்டு செல்வந்தன் ஓடினான். முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஓடினார். செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான். முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஓடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப்
பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார். செல்வந்தன் ஓடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான். பிறகு " முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினீர். இந்தப் பணம்
கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் " என்றார். " இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?" என்று முல்லா கேட்டார். " மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம்
திரும்பக் கிடைத்து விட்டதே! என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?" என்று
கூறினான் செல்வந்தன். " எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினேன் என்று கேட்டீரல்லவா? உமக்கு கொஞ்ச
நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினேன்
உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா ? அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக்
கொண்டு ஓடினேன் " என்றார் முல்லா. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தாய் ஒட்டகம், குட்டி ஒட்டகம்
தலைப்பு: இதெல்லாம் எதுக்கம்மா?
| தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். "அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?" தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். "நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு" குட்டி திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்" தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. "பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு" குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?", "அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்". பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம். "பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?". இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?" இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?" |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன. தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன. கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான். இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன. செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது. மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது. அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு. என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு. இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன. சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன. அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு. இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன. அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன. ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள். நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு. அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின. நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய். இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு. செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது. செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது. ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு. அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது. அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு. இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின. இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன. ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது. பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது. செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு. இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன. ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய். நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய். மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன. ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பெரியதை எடு!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், யானை, இளைஞன், அப்பாஜி, உப்பு
தலைப்பு: கவலையும் பலமும்
| கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் "இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?" என்றார். "அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்" என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான். இளைஞனின் அம்மாவிடம் "அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்" என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்." என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள். சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது. "அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?" என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது" என்றார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சண்முகனின் முகத்திற்கு நேரே வந்து விழுந்தது நிலவின் ஒளி. அழகாய், நின்று நிதானித்து சிரிக்கும் வெள்ளை தேவதையாய் தெரிந்தது நிலவு அவனுக்கு. நிலவுக்கு மேலே உள்ள மேகக் கூட்டங்கள் தலையில் விறகுக் கட்டுகள் சுமந்து செல்லும் லட்சுமியை நினைவுபடுத்தின. வழக்கம் போலவே நிலவுக்கும் அவளுக்குமான ஒப்பிடுதலை ஆரம்பித்தான். பலத்த காற்றின் காரணமாக வீட்டு மேற்கூரையின் துளை பெரிதானதில் இப்போது நிலவு முழுவதுமாய் தெரிந்தது. அந்த நிலவின் கிரணத்தை கண்களில் வாங்கிக் கொண்டே மெல்லமாய் உறங்கிப்போனான். "சண்முகா, சண்முகா" எந்திரிடா! குவாரிக்கு போகணுமில்ல. நேரமாச்சு எந்திரி! அம்மாவின் குரல் கேட்டு விறைத்தன காது மடல்கள். இன்று கொண்டு வரும் கூலியில்தான் அம்மாவை வைத்தியரிடம் கூட்டிப் போகணும் என்ற நினைப்புடனே காலைக் கடன்களை முடித்துவிட்டு குவாரிக்கு கிளம்பினான். வழியெங்கும் லட்சுமியின் நினைவுகள். இன்றும் அவள் விறகொடிக்க வருவாளா? நான் கல்லுடைக்கும் குவாரிக்கு அருகிலேயே அவள் விறகொடிக்கும் கருவேலங்காடு. நான் உடைக்கும் கற்களின் சப்தத்திலும் அவள் தூக்கிச் செல்லும் விறகின் அசைவிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பரிமாறப்பட்டது எங்கள் காதல். கற்களின் சப்தமே தேசிய கீதமாகவும் விறகின் அசைவே ஏகாந்த நடனமாகவும் மாற்றம் செய்யப்பட்டது எங்கள் காதல் சாம்ராஜ்யத்தில். "அன்று கொடுத்த நாற்பது ரூபாய் கூலியுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றேன். "எப்பா சண்முகா! ஒங்கம்மாவுக்கு வந்திருக்கிறது ராச நோய்". பொத்துனாப்ல வச்சிருந்து வைத்தியம் பார்க்கணும்." குளிர் காத்து அண்டப்படாது" என்று சொல்லியனுப்பினார் வைத்தியர். இருந்த பணமும் வைத்தியருக்கு போய்விட, வைத்தியச் செலவுக்கு இனி என்ன செய்ய? தலைக்குமேல் ஆகாயம் சுழல்வது போலிருந்தது. வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான். அம்மாவின் தம்பியும் அவர் மகளும் வந்திருந்தனர். அம்மாவின் வைத்தியச் செலவை அவர் ஏற்பதாகச் சொன்னார். வீட்டு மேற்கூரையும் அடைப்பதாக உடன்பாடாயிற்று, நான் அவர் வீட்டு மாப்பிள்ளையாக உடன் பட்டால் மட்டுமே! மறுநாள் குளிர்காற்று நுழையாமலிருக்க புதிதாய் வேயப்பட்டது மேற்கூரை. கூரையினுள் நுழைந்த நிலவின் ஒளி என்னுள் நுழைந்த லட்சுமியின் நினைவுகள் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கப்பட்டது. இனி குவாரியில் அமைதியாய் அழுது கொண்டிருக்கும் காதலுக்கு சாட்சியாய் நான் உடைத்தெறிந்த கற்கள். வழக்கம்போலவே விவரம் புரியாமல் உலாவரும் லட்சுமியின் விறகுக் கட்டுகள் சுமந்து நடைபோடும் பாதங்கள்!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நிலவின் ஒளி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தீவு, பிராத்தனை, ரஷ்யா, ஆர்ச் பிஷப், கிறிஸ்துவம், புனிதர், சர்ச், படகு , பாமர மக்கள், கருணை
தலைப்பு: இணைப்புணர்வின் கதை
| இந்த குறிப்பிட்ட வகையான சூழ்நிலைகள்தான் முக்தி நிலையை அடைய உதவும் என்று எதுவும் கிடையாது. உன்னுடைய தேடல், உனது ஆழ்ந்த ஏக்கம், அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் உனது நிலை – இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உன்னைச் சுற்றி உருவாக்கும் ஒரு சக்தி நிலைதான் அது நிகழக்கூடிய சாத்தியக்கூறை உருவாக்கும். அதை நீ உருவாக்க முடியாது. ஒவ்வொரு சாதகனும் ஆரம்ப நிலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இதில் மற்றவரை பார்த்து நீ எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அப்படித்தான் எல்லா மதங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிராத்தனை, ஒரு குறிப்பிட்ட விதமாக உட்காருவது, ஒரு குறிப்பிட்ட செயல், ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பது என. ஆனால் எதுவும் உதவப் போவதில்லை. ஒரு கதை இது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்…. ஒரு தீவில் உள்ள மூன்று பேர் மிகவும் சிறந்த புனிதர்கள் என மக்களிடம் பிரபலமடைந்து வந்தனர். இதை அறிந்த ரஷ்யாவின் ஆர்ச் பிஷப் மிகவும் ஆத்திரமடைந்தார். இது கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானது. மதங்களிலேயே கிறிஸ்துவ மதம்தான் மிகவும் முட்டாள்தனமானது. புனிதர் என்பது ஏதோ ஒரு பட்டம் போல, ஒரு படிப்பு தகுதி போல, அது சர்ச் அமைப்பினால் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பர். சர்ச் அங்கீகரிக்கும்போதுதான் ஒருவர் புனிதர் ஆகிறார். தன்னிடம் அங்கீகாரம் பெறாமலேயே இந்த மூன்று பேரும் புனிதர்கள் என்று பெயர் பெறுவதை ஆர்ச் பிஷப்பால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் கோபமடைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களிடம் ஆசி பெறவும் காலை தொட்டு வணங்கவும் செல்வது அவருக்கு மிகவும் கோபமூட்டியது. ஒருநாள் அவர்கள் என்ன வகையான புனிதர்கள் என்று பார்ப்பதற்காக நேரில் போய் பார்ப்பது என முடிவு செய்தார். அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். அது ஒரு மிகச் சிறிய தீவு. இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்கள் படிப்பறிவற்ற, நாகரீகமற்ற, சாதாரண மனிதர்கள் போல தோன்றினர். ஆர்ச் பிஷப் வரும் வழியில் ஆயிரக்கணக்கான மக்களை தன்பால் ஈர்த்த மூன்று பேரை எப்படி சந்திப்பது என்ற பதட்டத்தோடுதான் வந்தார். இப்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார் – இவர்கள் முட்டாள்கள். அவர் அவர்களிடம் சென்றவுடன் அவர்கள் இவர் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் திருப்தியடைந்தார். நீங்கள் புனிதர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா என அவர்களிடம் கேட்டார். அவர்கள், – நாங்கள் படிக்காத, பாமர மக்கள். எங்களால் எப்படி அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப்பார்க்க முடியும் – நாங்கள் அப்படி அல்ல. ஆனால் நாங்கள் என்ன செய்வது, மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தோம், உங்களிடம்தான் போக வேண்டும் எனக் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்பதே இல்லை – என்றனர் ஆர்ச் ஆணித்தரமான குரலில், உங்களது பிரார்த்தனை என்ன எனக் கேட்டார். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவரையொருவர் மறுத்துக் கொண்டனர். ஒருவர் நீ சொல் என்றார். மற்றவர் நீ சொல் என்றார். ஆர்ச் பிஷப், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சொல்லுங்கள் என்றார். அவர்கள் – உண்மையில் இது ஒரு பிரார்த்தனையே அல்ல. நாங்கள் அதை உருவாக்கிக் கொண்டோம். எங்களுக்கு அதைச் சொல்ல மிகவும் வெட்கமாக இருக்கிறது என்றனர். ஆர்ச்பிஷப் உண்மையிலேயே மிகவும் ஆத்திரமடைந்தார். நீங்களே பிரார்த்தனையை உருவாக்கிக் கொண்டீர்களா அது என்ன பிரார்த்தனை – என்றார். ஒருவர், நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் நாங்கள் சொல்லித்தான் தீர வேண்டும். ஆனால் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில் எங்களது பிரார்த்தனை மிகவும் எளியது, சிறப்பானது அல்ல. "நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள்" என்பதே எங்களது பிரார்த்தனை. என்றார். ஆர்ச்பிஷப் கோபத்தில்கூட சிரித்துவிட்டார். இதுதான் உங்களது பிரார்த்தனையா, மிகவும் நன்றாக இருக்கிறது. என்றார். அந்த பாமர மக்கள் மூவரும், நாங்கள் கற்க தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனையை, வழிபடும் முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் அது பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்து விடுவோம் அல்லது தவறு செய்து விடுவோம் அல்லது குழம்பி போய் விடுவோம். எங்களது பிரார்த்தனை மிகவும் சிறியதாக இருப்பதால் நாங்கள் அதை மறப்பதில்லை, அதில் தவறு எதுவும் செய்வதில்லை. என்றனர். ஆர்ச்பிஷப், ரஷ்யாவின் மிகப் பழமையான சர்ச்சின் சம்பிரதாயமான பிரார்த்தனை முழுவதையும் படித்தார். அது மிகப் பெரியது. இந்த பாமர மக்கள் மூவரும், இது மிக நீளமானதாக இருக்கிறது. தயவுசெய்து மறுபடியும் சொல்லுங்கள் என்றனர். மூன்று தடவை சொன்ன பின்னும் அவர்கள் தயவுசெய்து மறுபடியும் ஒருமுறை மட்டும் சொல்லுங்கள், அப்போது எங்களால் நினைவு கொள்ள முடியும் என்றனர். ஆர்ச் பிஷப் இவ்ரகள் முட்டாள்கள் என எண்ணி மிகவும் மகிழ்ந்தார். இவர்களுக்கு ஒன்றும் தெரியாது, சர்ச்சின் பிரார்த்தனையை கூட முழுதாக சொல்ல இவர்களால் முடியவில்லை என்பதை எடுத்துக் கூறி மக்களை என்னால் எளிதாக ஏற்றுக் கொள்ள செய்து திசை திருப்பி விட முடியும். அதில் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார். அவர்கள் ஆர்ச்பிஷப்பின் காலைத் தொட்டு வணங்கி நன்றி கூறினர். அவர் இனிமேல் வர வேண்டிய தேவையே இல்லை என்றும், அவர் கூறி அனுப்பினால் போதும், தாங்கள் வந்து அவரை சந்திப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர் எதற்கு சிரமப்பட வேண்டும், எப்போது அவர் சந்திக்க விரும்பினாலும் செய்தி சொல்லி அனுப்பினால் போதும், நாங்கள் சர்ச்சுக்கு வந்து சேருகிறோம் என்று கூறினர். சந்தோஷத்தோடும், திருப்தியோடும் ஆர்ச்பிஷப் விடை பெற்றார். அவர் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது மூன்றுபேரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம். மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டனர். ஆர்ச் பிஷப் அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், அவர்கள் பேசும்போது தண்ணீரின் மேல் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அவருக்கு சிறிதளவாவது புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும். அவர், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடைய பிரார்த்தனைதான் சரியானது. நீங்கள் உங்களது பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள். உங்களது பிரார்த்தனை சென்றடைந்து விட்டது. எனது பிரார்த்தனை அடைய வில்லை. நீங்கள்தான் உண்மையான புனிதர்கள். உங்களை சர்ச் புனிதர்களாக அங்கீகரித்துள்ளதா இல்லையா என்பது இங்கு ஒரு விஷயமே அல்ல. யார் உண்மையிலேயே புனிதர்கள் இல்லையோ அவர்களுக்குத்தான் அங்கீகாரம் தேவைப்படும். உங்களது இருப்பே அதை உறுதி செய்கிறது. உங்களது வாழ்வில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றார். இது லியோ டால்ஸ்டாயின் கதை. இது சாத்தியம்தான். இருதயசுத்தியோடு மனத் தெளிவோடு அமைதியாக செய்யும்போது நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள் என்று கூறுவதுகூட பிரார்த்தனையாக மாறும். அந்த மிகச் சிறந்த எதிர்பாராதது நிகழும். ஆனால் நீ அதை காப்பியடிக்க முடியாது. அதைப் போலவே செய்து பார்க்க முடியாது. அதுதான் பிரச்னை. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை. அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள். அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும். அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார். அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான். குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார். அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை. இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார். அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது – நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அறிவுரைக்கான தகுதி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், உபதேசம், நூறு வெள்ளிக் காசு, சிற்றரசன், குதிரை, படைத்தலைவன், அந்தப்புரம், பணிப்பெண், காவல் அதிகாரி, மது, ஆடை, தலை
தலைப்பு: ஆண்டவன் அளித்த தண்டனை
| அக்பரும் – பீர்பாலும நாட்டின் நிலைப்பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது வாக்கு வாதம் நீடித்து, மறுநாளும் தொடர்ந்தது.பீர்பால் மறுநாள் அரச சபைக்குச் சென்றால் மாறுபட்ட கருத்தை கூறும்போது மன்னருக்குக் கோபம் வந்து நாடு கடத்தினாலும் கடத்துவார் என நினைத்து, அவசர வேலையாக வெளியூர் செல்வதினால் வர இரண்டு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவித்துவிட்டு டில்லிக்குக் கிழக்கே உள்ள இருநூறு மைல் தொலைவில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று தற்காலிகமாக வசிக்கலானார். ஒருநாள் – அந்நாட்டின் அங்காடிக்குப் பக்கம் சென்றுக் கொண்டிருந்தார் பீர்பால்.அங்கே ஒருவன் "ஒரு உபதேசம் நூறு வெள்ளி காசுகள்" என்று கூவிர் கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று உபதேசம் பற்றி விவரம் கேட்டார் பீர்பால்.அவன் "தன்னிடம் அருமையான நான்கு உபதேச மொழிகள் வைத்திருக்கிறேன். இந்த நான்குக்கும் நானூறு வெள்ளிக் காசுகள்" என்றான்.அது என்ன உபயோகமான உபதேச மொழிகள் – கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்து அவனிடம் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து எனக்கு ஒரு உபதேச மொழியை உபதேசியுங்கள் என்றார் பீர்பால். "ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனைச் சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!" என்றான். மீண்டும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து. "இரண்டாவது உபதேச மொழியை உபதேசியுங்கள்" என்றார் பீர்பால் "எவரிடமாவுத் தாங்கள் குறை, குற்றம் கண்டால் அதனை மற்றவர்க்கு வெளிபடுத்தக் கூடாது!" என்றான்.இரண்டு உபதேசமும் பயனுள்ளதாக இருக்கிறதே. சரி மூன்றாவது உபதேசத்தைக் கேட்கலாம் என்று அவனிடம் மூன்றாவதாக மேலும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார். அவன், "தங்களை யாராவது விருந்திக்கு அழைத்தால் மறுப்பேதும் கூறாது கையில் எந்த வேலையிருந்தாலும் பின்பு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று உடனே விருந்துக்குச் சென்றுவிட வேண்டும்" என்றான்.இன்னும் இருப்பது ஒரு உபதேச மொழிதான் என்று மறுபடியும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்காவது உபதேச மொழி என்ன? என்றார் பீர்பால். "யாரிடமும் அடிமையாக வேலைச் செய்யாதே!" என்றான். நாநூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சென்ரு கொண்டிருக்கும்போது. களைப்பு மேலிட ஒரு மரத்திந் நிழலில் உறங்கினார்.அவ்வழியாகக் குதிரையில் அந்நாட்டின் சிற்றரசன் வந்துக் கொண்டிருந்தான். மரத்தின் நிழலில் பீர்பால் உறங்குவதைக் கண்டு குதிரையிலிருந்து கீழே இறங்கி அவரிடம் சென்றான்.மதிப்பிற்குரிய பீர்பால் அவர்களே என்னைத் தெரிகிறதா என்று வினவினான்.ஏற்கெனவே அக்பரிடம் படைத் தலைவனாக இருந்து இந்நாட்டு மன்னாக ஆக்கப்பட்டவர் என்பது தெரிந்துள்ளமையால், தாங்கள் இந்நாட்டின் மன்னர் அல்லவா என்றார் பீர்பால். பீர்பாலின் மதிநுட்பமானப் பதிலைக் கண்டு தன்னுடைய அரசவையில் முக்கியப் பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவரும் அந்தப் பதவியை ஒப்புக் கொண்டார்.ஒருநாள் – பீர்பால், அரசாங்க அலுவல் காரணமாக அந்தப்புரத்திற்குச் செல்ல நேரிட்டது.அச்சமயம் காவல் அதிகாரியும், அந்தப்புரத்துப் பணிப்பெண் ஒருவளும் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு நிலைத்தடுமாறி ஆடை இன்றி அருவெறுப்புடன் படுத்திருந்தனர். இவர்களின் அவல நிலையைக் கண்ட பீர்பால் தன்னுடைய மேல் சால்வையை அவர்களின் மீது போர்த்தி விட்டு சென்றார். மயக்கம் தெளிந்து பார்த்த அவர்கள், தங்கள் மீது பீர்பாலின் விலையுயர்ந்த சால்வை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு பீதியடைந்தனர்.இந்த விஷயம் மன்னருக்கு பீர்பால் தெரிவித்து விட்டால் மயங்கிய நிலையில் இருந்த இருவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற யோசனையுடன் பொய்யான புகார் ஒன்றைக் கூற அந்தப் பெண் மன்னரிடம் சென்றாள். மன்னர் அவர்களே அந்தப்புரத்தில் பணிப்புரிந்து கொண்டிருக்கும் போது பீர்பால் அவர்கள் பலவந்தப் படுத்தி என்னைக் கெடுத்து விட்டார். இதோ பாருங்கள் அவரது சால்வை என்று கூறினாள்.சால்வையுடன் பணிப்பெண் கூறிய குற்றச்சாட்டு உண்மையென்று எண்ணி சற்றும் யோசனை செய்யாமல் ஒரு கடிதம் எழுதி பீர்பாலிடமே கொடுத்து, இந்த ரகசிய கடித்த்தை சேனாதிபதியிடம் சேர்த்து விடுங்கள் என்றான் மன்னன்.மன்னன் கொடுத்த அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சேனாதிபதியின் இருப்பிடத்திற்குச் சென்றார். செல்லும் வழியில் ஒரு நண்பர் பீர்பாலைப் பார்த்து மேன்மை மிக்கவரே தாங்கள் தயவு செய்து எனது வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஐயா எனக்கு முக்கியமான அரசாங்க வேலையுள்ளது. இந்தக் கடிதத்தை உடனடியாக சேனாதிபதியிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றார் பீர்பால்.அச்சமயம் அந்தப்புரத்தில் அலங்கோலமாக பெண்ணுடன் மதியிழந்து படுத்திருந்த காவல் அதிகாரி அங்கு வந்திருந்தார். பீர்பால் அவர்களே அந்த அவசரக் கடித்தை இப்படிக் கொடுங்கள் அதோ வருகிறாரே காவல் அதிகாரி தனக்கு வேண்டியவர். அவரிடம் கொடுத்தால் உடனே சேனாதிபதியிடம் சேர்த்து விடுவார் என்று கூறி பீர்பாலிடம் இருந்த கடிதத்தை வாங்கி காவல் அதிகாரியிடம் கொடுத்தார் அந்த நண்பர்.காவல் அதிகாரியும், கடிதத்தை சேனாதிபதியிடம் உடன் சேர்த்து விடுகிறேன் என்று கூறி கடிதத்தைக் கொண்டு சென்றான்.பீர்பால் அவர்கள் நண்பரின் விருந்தில் தட்டாது கலந்து கொண்டார். விருந்தும் சிறப்பாக நடந்தது.கடிதத்தை வாங்கிச் சென்று சேனாதிபதியிடம் கொடுத்த காவல் அதிகாரியின் தலை வெட்டப்பட்டு தட்டில் வைத்து விருந்தில் இருந்த பீர்பாலிடம் கொடுத்தார் சேனாதிபதி. பீர்பால் அவர்களே மன்னரின் கடிதப்படி இந்தக் கடிதத்தைக் கொண்டு வருபவரின் தலையைத் துண்டிக்கும்படி குறிப்பிட்டுள்ளமையால்த் துண்டித்துக் கொடுத்துள்ளேன் என்று தட்டுடன் துண்டித்த தலையைப் பீர்பாலிடம் சேனாதிபதி கொடுத்தான்.சேனாதிபதியிடம் தட்டைப் பெற்றுக் கொண்ட பீர்பால் நேராக மன்னரின் காலடியில் வைத்தார்.பீர்பாலை உயிருடன் கண்ட மன்னர் ஆச்சர்யமடைந்தார்.உங்களுடைய தலையை அல்லவா வெட்டும்படி கடிதம் எழுதி இருந்தேன். காவல் அதிகாரியின் தலை வெட்டுண்டது எப்படி? என வினவினார் மன்னர். அரசன் தவறு செய்யலாம் – ஆண்டவன் எப்போதும் தவறு செய்வதில்லை. பணிப்பெண்ணைக் கெடுத்தவன் இந்த காவல் அதிகாரிதான். உண்மையான குற்றவாளிக்கு ஆண்டவன் தந்த தண்டனையாகும் இது என்றார் பீர்பால்.முன்பின் யோசனை செய்யாமல் நடந்து கொண்டதற்கு மன்னன். பீர்பாலிடம் மன்னிக்கக் கோரி எப்போதும் போன்று தன்னிடம் இருக்க கோரினான்.இனி நான் இங்கே இருக்க முடியாதுய சக்ரவர்த்தியை விட்டு பிரிந்து வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆகையினால் நான் டில்லி செல்ல வேண்டும் என்று கூறி பீர்பால் புறப்பட்டார்.காசு கொடுத்து உபதேசம் பெற்றதுதான் இன்று தன் உயிரைக் காத்தது – இனி எவரிடமும் வேலை செய்யக் கூடாது என்று மனவுறுதியுடன் அக்பரின் அரசவையைச் சென்றடைந்தார் பீர்பால்.இரண்டு மாதம் கழித்து வந்த நண்பர் பீர்பாலைக் கண்டதும் அக்பர் பெருமகிழ்ச்சி கொண்டார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு. பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு. அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு. பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு. அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பீர்பாலின் புத்திசாலித்தனம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அறிஞர்கள், சபை, பட்டிமன்றம், வெளிச்சம், நையாண்டி
தலைப்பு: சூரியனா-சந்திரனா
| அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப்
பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று
முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து " அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது
கருத்தைக் கூறலாமா?" என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம்.
முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக்
கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று
நான் கருதுகிறேன் என்றார் முல்லா. அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத்
தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான
ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது
என்றார் முல்லா. முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து
மகிழ்ந்தார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது. ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம். ‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார். அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு. “மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர். நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார். ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது. புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர். மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள். மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர். “அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர். ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை. விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்: “மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார். அமைச்சர் மவுனம் காத்தார். “மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார். அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூன்று தலைகள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: காளை, ஆசிரியர், வேய்ஷான், யாங் ஷான், சீடன்
தலைப்பு: முரட்டுக்காளை
| ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா"ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் "வேய்ஷான்" என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை "வேய்ஷான்" என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் "வேய்ஷான்" என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார். எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, அறிஞர்கள், கழுதை, உரோமங்கள், நட்சத்திரங்கள், உலகின் மையம், நெறிகள்
தலைப்பு: முல்லாவும் மூன்று அறிஞர்களும்
| நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும். ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள். அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை, உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள். அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான். மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார். அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை. முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்? முதல் அறிஞர் முல்லாவிடம், "இந்த உலகின் மைய இடம் எது?" என்று கேட்டார். அதற்கு முல்லா, ""என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்," என்றார். அந்த அறிஞர், "அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்," என்றார். உடனே முல்லா, "அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்," என்றார். முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார். அடுத்து இரண்டாம் அறிஞர், "ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்," என்றார். இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார். மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், "மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?" என்றார். அதற்கு முல்லா, "அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர். "இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்," என்றார். இவ்வாறு முல்லா கூறியதும், "வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்" என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள். போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே "அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்" என்றார். அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தந்தை, மகன், கழுதை, வழிப்போக்கர்கள்
தலைப்பு: எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!
| ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர். இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர். இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான். வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார். கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான். இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர். அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு? |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நரி, கொக்கு, சூப், தட்டு, குவளை
தலைப்பு: நரியும் கொக்கும்
| அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது. கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது . கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது. செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது. நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது. கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை. குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது. அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது. அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வணிகன், மாடு, சிங்கம், நரி
தலைப்பு: எருதும் சிங்கமும்
| தென்னாட்டில் மகிழாருப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்கு களைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப் பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்து விட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகி விட்டது. இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான். ‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்!" என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான். ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது. அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணிர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரிதாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லை யாகையால், நடுங்கிப் போய்விட்டது. இதேது புதிதாக இருக்கிறதே!" என்று பயந்து அது தண்ணிர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது. சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண்டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, "நம் அரசன் ஏன் நடுங்கி நின்று விட்டான்?" என்று கேட்டது. ‘அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடுகிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப் பட வேண்டியது தான்" என்றது இன்னொரு நரி. "அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமையானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண்டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கெளவிக்கடித்துத் தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லாமல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத் தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத் துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமை யுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை" என்றது முதல் நரி, சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?" என்று மறுத்தது இரண்டாவது நரி. ‘எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய்தால் உயர்வை யடையலாம். யோசனையில்லா விட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல்களைச் செய்து நன்மையடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது. ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோடும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமை யுண்டாகும்" என்று கூறியது முதல்நரி. ‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டது இரண்டாவது நரி. "நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்" என்றது முதல் நரி, "மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மை யுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்? என்று இரண்டாவது நரி கூறியது. ‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமையாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறுவேன்" என்று உறுதியாகக் கூறியது முதல் நரி. ‘நன்று, நீ வெற்றியடைக!" என்று இரண்டாவது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது. முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது. இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?" என்று கேட்டது சிங்கம். ‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்டதால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெருமையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர்களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையுடன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமையான இசையும் இன்பந்தரும் யாழும், பரந்த உலகமும், அழகிய பெண்களும், அறிவு நிறைந்த பெரி யோரும், பயன் மிக்க நூல்களும் ஆகிய இவையெல்லாம், வைத்துக் காப்பாற்றுகின்றவர்களின் தன்மை யாலேதான் சிறப்படையும். அதுபோல் அரசு சிறக்க அறிஞர் துணை தேவை" என்றது நரி. ‘நரியே, நீ அமைச்சருடைய மகன் அல்லவா? அதனால்தான் உயர்ந்த ஆலோசனைகளைக் கூறுகின்றாய். நீ என்னிடமே இருந்து, உண்மையாக வேலை செய்து வா!" என்று சிங்கம் கூறியது. உடனே நரி துணிச்சலுடன் அரசே, தங்கள் மனத்தில் ஏதோ பயம் ஏற்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறதே! என்று கேட்டது. "ஆம், இதுவரை இந்தக் காட்டில் நான் கேட்டறியாத ஒரு பெரு முழக்கத்தைக் கேட்டேன். அதனால் என் மனம் கலங்கியிருக்கின்றது. முழக்கம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாய் அந்த முழக்கம் செய்த மிருகமும் இருக்க வேண்டும் அல்லவா? அந்த மிருகம் என்னைக் காட்டிலும் பெரியதாய் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். வழுக்கி விழ இருந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல் சரியான சமயத்தில் நீ வந்தாய் என் கவலை நீங்க ஒரு வழி கூறு" என்று மனம் விட்டுப் பேசியது சிங்கம். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன. இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது. ‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை. ‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை. ‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை. ‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை. ‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை. கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை. எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது. முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாளும் புத்திசாலியும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு புகழ்வாய்ந்த ஸென் கோயிலில் புதிதாக ஒரு குருக்கள் நியமிக்கப் பட்டார். இந்த குருக்கள் மரங்கள், செடி கொடிகள், பூக்களை மிகவும் விரும்பி இரசிக்கக் கூடியவராக இருந்ததால் தான் அந்த உயரிய பதவி அவருக்கு கொடுக்கப் பட்டது. அந்த புகழ் வாய்ந்த கோயிலின் அருகிலேயே மற்றொரு சிறிய ஸென் கோயில் அமைந்திருந்தது. அந்த சிறிய ஸென் கோயிலில் மிகவும் வயதான ஸென் ஆசிரியர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் புகழ் வாய்ந்த அந்த கோயிலிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதாக இருந்தது. ஸென் குருக்கள் சாதரண நாட்களிலேயே கோயிலை மிகவும் தூய்மையாகவும் சிறப்பான பூக்கள் அலங்காரத்துடன் வைத்திருப்பார். வருவது மிகவும் முக்கியமான பிரமுகர்களானதால், விடியற் காலையிலேயே எழுந்து சுற்றி இருந்த செடிகளுக்கு செல்லும் பாத்தியை நேர்த்தியாக வெட்டி விட்டு, தேவையான பூக்களை பரித்து புத்த விக்கிரத்தினை அலங்கரித்து வைத்தார். ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த செடிகளை கத்தரிக் கோலால் வெட்டியும், பெரிய மரங்களின் கிளைகளை நேர்படுத்தியும், சுற்றி வளர்ந்திருந்த புதர்ச் செடிகளை நெறிப் படுத்தியும் அந்த இடத்தினை மிகவும் அழகான பூங்காவாக மாற்றி அமைத்தார். இலையூதிர்க் காலமாக இருந்ததால், மரங்களில் இருந்து விழுந்த கிளைகளின் சருகுகளை பொருக்கி ஒரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்தார். சுற்றி விழுந்திருந்த இலைகளின் சருகுகளை அழகாக கூட்டி எடுத்து ஒரிடத்தில் அழகுபட முறைப் படுத்தி வைத்தார். இப்படியாக எல்லா வேலைகளையும் முடித்த ஸென் குருக்கள் தான் அழுகுபடுத்திய பூங்காவினை தானே பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மேலும் ஏதேனும் செய்து இன்னும் ஒழுங்கு படுத்த முடியுமா, அல்லது தன்னுடைய அலங்கரிப்பில் ஏதேனும் குறையிருக்குமோ என்று எண்ணி ஒரு முறைக்கு பல முறை எல்லாவற்றையும் சரியாக அதனதன் இடத்தில் இருக்குமாறு அமைத்தார். குருக்கள் காலையில் எழுந்ததிலிருந்து செய்த வேலைகள் அனைத்தையும் பக்கத்திலிருந்த முதிய ஸென் குருக்கள் கவனித்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்து தனக்குள் திருப்தி அடைந்த ஸென் குருக்கள், அடுத்த பக்கத்து சுவரிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் முதியவரைப் பார்த்தார். "ஆகா, என்ன அழகாக தோட்டமாக இன்றைக்கு இருக்கிறது, நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று முதியவரான ஸென் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். முதியவர், "ஆமாம், எல்லாம் அழகான நேர்த்தியுடன் உள்ளது, ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது, என்னை இந்த சுவரின் மேலே தூக்கி அடுத்தப் பக்கத்தில் விடு, அதனை நான் சரி செய்கிறேன்" என்றார். முதலில் தயங்கிய ஸென் குருக்கள் பின்பு ஸென் ஆசிரியரை கவனமாக அடுத்த பக்கத்து சுவற்றிலிருந்து இந்தப் பக்கம் இறங்கி வருவதற்கு உதவி செய்தார். மிகவும் மேதுவாக நடந்து சென்ற முதிய ஸென் ஆசிரியர் அந்த பூங்காவின் நடு மத்தியில் நின்றிருந்த ஒரு மரத்திற்கு சென்று அதனை வேகமாக பலங்கொண்ட மட்டும் ஆட்டி விட்டார். இலையூதிர்க் காலமானதால், இலைச் சருகுகள் அந்த மரத்திலிருந்து எங்கும் விழுந்து பரவி முன்போல விழுந்தது. பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இப்பொழுது காய்ந்த இலைகளின் சருகுகள் காற்றில் பறந்து ஆக்கிரமித்தன. "ஆ!! அங்கே பார்" என்று திருப்தி பட்டுக் கொண்ட ஸென் ஆசிரியர், ஸென் குருக்களை நோக்கி "என்னை இப்பொழுது அடுத்த பக்கதிற்கு செல்வதற்கு சுவரில் ஏற்றி விடு" என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இயற்கையின் அழகு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: "நான் பாஸ் பண்ண.. நீதான் உதவி செய்யணும்..." என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் பாபு. சாமி சிலை முன்னால் 108 தோப்புக்கரணம் போட்டான். கோவில் பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வந்தான். பாபு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். இப்படி பரிட்சை ஏதாவது வந்தால் அன்றைக்கு கண்டிப்பாய் கோவிலில் 108 தோப்புக் கரணம் போடுவான். அன்று தான் முதல் பரிட்சை. ஆசிரியர் கேள்வித்தாளை கொடுத்தார். பாபு சாமியை வேண்டியபடி கேள்வித்தாளை பிரித்தான். ஆச்சரியமாக இருந்தது. ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. "நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.. ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்?.." என்று மனசுக்குள்ளாக சாமியைக் கேட்டான். இரண்டாவது பரிட்சைக்குப் போனான். இரண்டாவது முதல் பரிட்சையை விட மோசமாக இருந்தது. அவனுக்கு மனது சரியில்லை. மீண்டும் கோவிலுக்குப் போய் சாமியிடம் வேண்டிக் கொண்டான். "உன்னை நம்பியவர்களை கைவிட மாட்டாய். என்று சொல்லுகிறார்களே.. என்னையும் கைவிட்டுவிடாதே.." என்று வேண்டியபடி பரிட்சை அத்தனையும் எழுதி முடித்தான். எந்தப் பரிட்சையும் அவனுக்குத் திருப்தியாக அமையவில்லை. ஆனால் எப்படியும் கடவுள் கைவிடமாட்டார் என்று மட்டும் பாபு நம்பிக்கையாய் இருந்தான். அன்று தான் பரிட்சை முடிவு தெரியும் நாள். நேராக பள்ளிக்கூடத்திற்கு ஓடினான். அங்கு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒட்டியிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக கோவிலுக்கு ஓடி வந்தான். "அந்தி சந்தி எந்த நேரத்திலும் உன்னையே நினைத்திருக்கும் ... எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?" என்று கேட்டான் சாமியிடம் சாமி எப்போதும் போல சிலையாக நின்றிருந்தது. பாபு அழுது புலம்பினான். அன்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் தூங்கினான் பாபு. "உன்னுடைய சந்நதியில் எத்தனை தோப்புக்கரணம் போட்டிருப்பேன். என்னை கைவிட்டுவிட்டாயே..." என்று தூக்கத்தில் அவன் உதடுகள் முணுமுணுத்தன. அடுத்த வினாடி வானம் இடிந்து விழுவது போன்ற ஒரு சத்தம். பாபு கண்விழித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்? கோவிலில் அவன் கும்பிட்ட அதே சாமி. உயிரோடு சிரித்தபடி நின்று கொண்டிருந்தது. "நான் பரிட்சையில் தோல்வியடைந்து அழுது கொண்டிருக்கிறேன்... உனக்கு சிரிப்பாய் இருக்கிறதா?.." என்று அழுதபடி கேட்டான் பாபு. கடவுள் அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்துவிட்டார். "நீ என்னை நம்பியதை விட உன்னை நம்பியிருந்தால், நீ பரிட்சையில் ஜெயித்திருப்பாய்" என்றார் கடவுள். "சாமி, என்ன சொல்கிறாய்..." "ஆமாம் பாபு. என்னைச் சுற்றி வந்த நேரத்தில் நீ எனக்கு தோப்புக்கரணம் போட்ட நேரத்தில் முறையாகப் படித்திருந்தால் நீ வெற்றி பெற்றிருப்பாய்" பாபு மௌனமாக இருந்தான். "கடமையைச் செய்பவன்... கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை பாபு" என்றார் கடவுள். பாபு ஆச்சரியமாகக் கடவுளைப் பார்த்தான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தோப்புக்கரணம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப்
பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று
முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து " அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது
கருத்தைக் கூறலாமா?" என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம்.
முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக்
கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று
நான் கருதுகிறேன் என்றார் முல்லா. அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத்
தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான
ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது
என்றார் முல்லா. முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து
மகிழ்ந்தார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூரியனா-சந்திரனா' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சீமான் முதலாளி வீட்டு வேலைக்காரன் வந்து சொன்னதும், தலையில் இரும்புத்தடி விழுந்தது மாதிரி இருந்தது, அம்மாசிக்கிழவனுக்கு. விஷயத்தைத் தெரிந்ததுமே விழுந்தடித்து ஓடக் கூடியவன் தான்; ஆனால் முடியவில்லை. வாழ்க்கையில் முக்காலேயே மும்மாகாணிக் காலத்தை ஓட்டி விட்ட அந்தப் பழுத்த பழத்துக்கு இப்போ மேலுக்கு நல்ல சுகமில்லை. முகம் சுரைக்குடுக்கை மாதிரி வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள தோல் எல்லாம் காய்ந்த வாழை மட்டையாகத் தொங்குகின்றன. மார்பு எலும்புகள் கூடுபாய்ந்து மூங்கில் கூடை மாதிரி வரிவரியாகத் தெரிகின்றன. அடிவயிறு முட்டிக் கலயம் போல உருண்டு மினுமினுப்பாயிருக்கிறது. அன்னம், தண்ணி, ஆகாரம் என்று உள்ளேயிறக்கிப் பத்து நாட்களுக்கு மேலாச்சு. வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள பிரத்தியேகமாக யாரும் கிடையாது. அவன் தனிக் கட்டையாகி ரொம்பக் காலமாச்சு. பக்கத்துக் குடிசைகளிலிருக்கும் அண்ணன் மக்கள், தம்பி மக்கள் தான் தற்போது அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள். முன்பு அவன் கெதியும் மதியுமாய் இருந்தபோது, ஊருக்குள்ளே போய் முதலாளிமார்கள் வீடுகளில் ஏதாவது அத்தம் தொத்தம், எடுபிடி வேலைகள் செய்து கஞ்சி வாங்கி வந்து குடிப்பான். இப்போ அதிகமாக அந்தப் பக்கம் நடமாட்டமில்லாததால் சீமான் முதலாளி வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது. ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தக் குடியிருப்புக்கு மெனக்கிட்டு யார் வந்து சொல்லப் போகிறார்கள்? சீமான் முதலாளி செத்துப் போனாராம்! அம்மாசிக்கிழவனின் ஆட்கள் உடனடியாக அங்கு போய் நிற்கணுமாம்! - பழைய கிராம முன்சீப் ஐயா தாக்கல் சொல்லிவிட்டிருக்கிறார். பெரிய வீட்டுத் துட்டி. எள் மூட்டை வந்ததும் எண்ணெய் டின்களாகப் போய் நிற்க முடியவில்லையே என்று கிழவனுக்கு ஒரே மன உளைச்சல், விசாரம். காலை நேரம், பொழுது கிளம்பி மேலே ஒரு பாகம் உயரம் வந்திருக்கும். சரி. கிழவனால்தான் போக முடியவில்லை. மற்றவர்களையாவது அவன் உடனே அங்கு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் சாமிமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும். பொம்பளைகள் ஊர், ஊருக்குத் துட்டி சொல்லிப் போகணும்; ஆம்பிளைகள் கொட்டடிக்கணும்; தேர்க் கட்டக் கம்பு வெட்டி வரணும்; சுடுகாட்டுக்குப் பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு சேர்க்கணும். மூடை, மூடையாக எருவும், தென்னங் கூந்தலங்களும் வேறு போய்ச் சேர வேண்டியதிருந்தன. இது போக அல்லறை சில்லறை வேலைகளும் அவர்களுக்காகவே இருக்கும். ராத்திரி சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிப்பது ஒரு முக்கியமான சோலி. அம்மாசிக் கிழவனின் அண்ணன் மகன் சடையனோடு சேர்ந்து அந்த ஆறு வீட்டு ஆணும், பொண்ணும் ராத்திரி செங்கல்லோடு வேலைக்குப் போய்விட்டு அப்போதுதான் அங்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் நின்ற அம்மாசி, விஷயத்தைச் சொல்லி அப்படியே துட்டி வீட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் சங்கடம்தான். ராத்திரிப் பூராவும் தூங்காமல் வேலை செய்த அசதி. இருந்தாலும் பெரிய ஆள் சொல்வதை அவர்களால் தட்ட முடியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில், ஆம்பிளைகள் அவரவர்கள் வைத்திருக்கும் கொட்டுகள் சகிதமாக வந்து விட்டார்கள். மூணு பெரிய கொட்டு, ஒரு பம்பைக் கொட்டு, ஒரு கிடுகட்டி, ஒரு ஜதை சிங்கி. பொம்பளைகள் அள்ளி முடிந்த கொண்டைகளோடு புறப்படலானார்கள். எப்போதும் அம்மாசிக் கிழவன் தான் சூழல் வாசிப்பது. அவன் தான் நடக்கக் கூட ஜீவனில்லாமல் கிடக்கிறானே! வெறும் கொட்டுகள் மட்டுமே போயின. துட்டி வீட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கிடந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலுமாக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சீமான் முதலாளியின் மக்கள் மார்கள், வீட்டுக்கு முன்னாலுள்ள பெரிய ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து வந்தவர்களுக்குத் துட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பந்தல் போடும் வேலைகள் முடிந்திருந்தன. கொட்டுக்காரன் - சடையனின் கூட்டம், துட்டி வீட்டுக்கு முன்னால் போய்ப் பவ்யமாக நின்று அங்கிருந்த எல்லாரையும் பார்த்து கும்பிட்டுக் கொண்டார்கள். சாவு ஓலைகள் தயாராக எழுதப் பட்டிருந்தன. பழைய கிராம முன்சீப் ஐயா, அவற்றைச் சடையன் ஏந்தி நின்ற துண்டில் எட்டயிருந்து போட்டு, 'இன்னின்ன ஊர்க்கெல்லாம் போகணும்டா' என்றார். சடையன் அதைப் பொம்பளைகள் கையில் கொடுத்து, 'இன்னின்னார் இன்னின்ன திசைக்குப் போங்க' என்றான். கொஞ் நேரம் யாரும் எதுவும் பேசவில்லை... பொம்பளைகள் சற்று தயங்கியபடி நின்றார்கள். அதைப் புரிந்து கொண்ட சடையன், கி.மு.ஐயாவிடம், ' இந்தப் பொம்பளைகளுக்குப் பஸ் சார்ஜ்க்கும், ஒரு நேரம் பசியாறுகிறதுக்கும் ஏதாவது குடுத்து அனுப்புங்க சாமி' என்றான். 'என்னடா சடையா? இது புதுசா இருக்கு? என்னைக்கு மில்லாத வழக்கமா?' - ஊர் மணியக்காரர் கேட்டார். 'அதெல்லாம் இங்கு ஒன்னும் நடக்காது; நீங்க ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க!' என்றார், அதே கி.மு.ஐயா. சிறிது நேரம் வளர்த்த நாய் முகத்தைப் பார்த்தது போல துட்டி வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொம்பளைகள் போகலானார்கள். சடையனோடு சேர்ந்த கொட்டுக்காரர்கள், ஒரே கலரில் அமைந்த உடைகளை எடுத்து மாட்டினார்கள். காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டார்கள். கொட்டுக்களை எடுத்து இடுப்பில் வரிந்து கொண்டார்கள். கொட்டைத் தொட்டு கும்பிட்டு விட்டுச் 'சட், சட்' என்று தட்டிச் சுதி பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில், 'கும்...கும்...கும்...கும்...' என்று வழக்கமாக அடிக்கும் அடியில் ஆரம்பித்துக் போகப் போக அடியை மாற்றிச் சாவு வீட்டிற்கே உரிய வர்ணத்தில், 'சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங். 'சட்..சட்... சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங்...' என்று முழங்கினார்கள். கூட்டம் அவர்கள் அடிக்கும் அடியைப் பார்த்தும், அவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்த்தும் ரசித்துக் கொண்டிருந்தது. சீமான் முதலாளியின் மூத்த மகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சல்லிச் செல்லையா, திடீரென்று அந்தப் பெரிய திண்ணை யிலிருந்து குதித்து வந்து, கொட்டுக் காரர்களுக்கு அருகில் போய் நின்று, இடது கையை மேலே தூக்கிப் பிடித்து, 'நிறுத்துங்கடா கொட்ட!' என்றார். மறுநிமிசம் கொட்டுச் சத்தம் நின்றது. 'என்னடா! சூழல் இல்லாமக் கொட்டடிச்சு ஒப்பேத்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கீளா? எங்கடா அந்த வாசிப்புக்காரன் அம்மாசிக் கிழவன்?' என்று பேயாக இரைந்தார், அந்த இடமே அதிரும்படியாக. 'பெரிசுக்கு ஒடம்புக்குச் சொகமில்ல மொதலாளி' சடையன் சொன்னான். 'அவனுக்கு என்ன பேதியா எடுத்துருக்கு?' 'சாப்பாடு, தண்ணி செல்லாமக் கெடக்காரு மொதலாளி' 'என்னடா! இதுக்கு முன்னால என்னயச் சாமி, சாமியின்னு சொல்லுவ! இப்போ என்னல புதுசா மொதலாளிப் பட்டம் குடுக்கிற!... அஞ்சு ஏர்க்காட்டையும் அழிச்சுக் குடிச்சுட்டு, இப்ப, கையகல நெலமில்லாம இருக்கிற என்னய நக்கலா பண்ற? செருப்புப் பிஞ்சு போகும்!' என்று ஆவேசமாக எச்சரித்தார் அவர். 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சாமி' 'கெழவன் என்ன சாகவா கெடக்கிறான்? அவனால முடியலையின்னா ஒங்கள்ல ஒருவன் எடுத்துக் குழல் ஊத வேண்டியதுதானடா!' கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். 'அதுக்குக் கொஞ்சமாவது ராகம் தெரியணுமே சாமி!... மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி இருக்கும்' 'வேற ஊருலயிருந்து ஒருவன கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானடா!' - இது இன்னொருவர். 'அவங்க, முன்னூறு, நானூறுன்னு சம்பளம் கேக்குறாங்களே!' 'குடுத்துக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?... குழல் இல்லாத கொட்டு, தலையில்லாத முண்டம் மாதிரியில்ல இருக்கு? சோறு போட்டா வெஞ்சனத்தோட போடணும்' கீழவீட்டுப் பண்ணை சொன்னார். 'துட்டி வீட்டுச்சாமிமார்க செலவ ஏத்துக்கிட்டாகன்னா, அஞ்சு நொடியில ஆளக்கொண்டுக்கிட்டு வந்துருவேன்' 'நாங்க ஏண்டா அத ஏத்துக்கிறணும்? அது ஒங்களப் பொறுத்த விசயம் தானே?' சீமான் முதலாளியின் ரெண்டாவது மகன் கேட்டான். 'சாமி, நாங்க அன்றாடம் கூலி வேலைக்குப் போய்த்தான் கஞ்சி குடிக்கிறோம். இந்த நிலையில் முன்னூறு, நானூறுக்கு எங்க போவோம்?' 'இப்டியே விட்டா கொட்டிக்கிறதுக்கும் கூலி கேப்பாங்க போலிருக்க' கி.மு.வின் மூணாவது மகன் அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான். 'டேய், ஊருக்குத் தொண்டூழியம் செய்யறதுக்குத் தானடா அந்தக் காலத்துல ஒங்களுக்கு மானியக்காடுக விட்டிருக்காக!' என்றார் பழைய கிராம முன்சீப் ஐயா. 'ஒங்களுக்குத் தெரியாத விசயமில்ல சாமி. அது மூணு தலைமுறைக்கு முன்னாலயே எங்கள விட்டுப் போயிருச்சே!' 'என்னல நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; பேச்சுக்குப் பேச்சுப் பேசி அடைச்சுக்கிட்டேயிருக்க!' - கோபாவேசத்தில் வந்த சல்லிச் செல்லையா, சடையனின் கன்னத்தில் ஒரு போடு போட்டார், காதோடு சேர்த்து. 'என்ன சாமி, அண்ணனப் போட்டு இப்டி அடிக்கிறியே?' கிடுகட்டிக்காரன் கேட்டான். 'நீ ஞாயம் கேக்குறயாடா, சிரிக்கிபுள்ள!' - அவனுக்கும் ஒரு பூசை விழுந்தது. ரெண்டு பேரும் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டு அங்கேயே நின்றார்கள். 'சரி, அது போகட்டும். அம்மாசிக் கிழவன் இன்னைக்கு வரல. வழக்கமாக அவன்தான் பிரேதங்கள் சுட்டுச் சாம்பலாக்கிக் குடுப்பான். இன்னைக்கு அவன் வேலய யார் பார்க்கப் போறா? அந்தச் சோலி ஒங்களுக்குத் தெரியுமா?' கி.மு. ஐயாதான் இதையும் கேட்டார். 'என்னமோ தெரிஞ்ச மட்டும் பாக்குறோம்... ஒங்க திருப்திக்கு வேணும்ன்னா நீங்களும் கூட மாடாயிருந்து கோளாறு சொல்லுங்க' என்றான் சடையன். 'என்னடா சொன்ன? அந்த ஈனத் தொழில நாங்களும் சேந்து செய்யணுங்கிறயாடா! நீங்க எதுக்குடா இருக்கியே!' சொல்லிக் கொண்டே வந்த ஒரு மீசைக்காரர், வந்த வெறியில் சடையனைக் கொட்டோடு சேர்த்துக் கீழே தள்ளி, 'நளுக்கு, நளுக்' கென்று நாலு மிதித்தார். 'சிரிக்கி புள்ளயக் கொல்லாம விடக்கூடாது' - சல்லிச் செல்லையாவுக்கு வந்த கோபம் இன்ன மட்டுமென்றில்லை. இடையில் நின்ற ஒருவர் அவரைத் தடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார். 'என்ன சாமிமார்களா? இந்த ஏழக்குடிகள இந்தப் பாடுபடுத்துறீயே' - கேட்ட சிங்கிக்காரனுக்கு விழுந்த பூசையும் காணும். கீழே விழுந்து கிடந்த சடையன், மெதுவாக எழுந்து, இடுப்பைப் பிடித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து, 'வாங்கடா, போகலாம்' என்றான். காலில் கட்டிய சதங்கைகளை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாருமாக வீட்டைப் பார்த்து நடக்கலானார்கள். துட்டி வீட்டில் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் எத்தனையோ இருந்தன. 'எங்கடா போறியே?' சல்லிச் செல்லையா கேட்டார். அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தார்கள். 'ஒங்களையெல்லாம் வீட்டோட வச்சுக் கொளுத்தணும்டா!... போங்க! முக்குரோடு சிங்கம் மச்சான் கடைக்குப் போயிட்டு நேரே அங்கவாறேன்' என்றாரவர். வீட்டுக்குப் போன அவர்கள், அம்மாசிக் கிழவனுக்கு முன்னால் போய் நின்றார்கள். அவன் திடுக்கிட்டுப் போனான். கடையன் துட்டி வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னான். கிழவனுக்கு இவர்கள் மேல்தான் கோபம். 'என்னடா வேல பண்ணிட்டு வந்திருக்கியே! சாமிமார்கள எதிர்த்துப் பேசலாமா? அவுக அடிக்க, அடிக்க நாம கையேந்துகிறவங்கதான்... முட்டாத்தனமா நடந்திருக்கேளேடா.' பேசுவதற்கு ஜீவன் இல்லாவிட்டாலும் ஒரு வெறியில் ஓங்கிச் சத்தம் போட்டான் கிழவன். கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்த சடையன், அப்புறம் கேட்டான்; ' இப்போ நாங்க என்ன செய்யணும் சின்னையா?' 'எல்லோரும் அங்க போகணும்; நாம செய்யக் கூடிய சாவுச் சடங்குள எல்லாம சாமிமார்க மனங்குளிரச் செய்யணும்' சடையனோடு சேர்ந்து அங்கு நின்ற எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திடீரென்று கிழவனுக்கு எங்கிருந்துதான் அந்தத் தெம்பு வந்ததோ, 'விருட்'டென்று வீட்டுக்குள் போய் ஒரு போணி தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு அவன் ஊதுகின்ற குழலோடு வெளியே வந்தான். அப்போது சடையன் கிழவனைப் பார்த்து சொன்னான்: "சின்னையா, இது ஒங்க காலத்தோடு சரி.. நாங்க இந்த ஊர்ல இருந்தாலும் சரி; அடியோடு போக்கழிஞ்சு போனாலும் சரி...' "..................' அந்த ஆறு வீட்டுக்காரன்களின் குழந்தை குட்டிகள் எல்லாம், வெள்ளங்காட்டி (காலை)க் கஞ்சி கூடக் குடிக்காமல் பரட்டைத் தலையோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தன. நாலா ஊர் ஜனங்களும் வந்து, செய்ய வேண்டிய சாஸ்திரங்கள் யாவும் செய்து முடித்தபின், கொட்டு முழக்கோடும், குழல் சத்தத்தோடும் சீமான் முதலாளி தேர் ஏறிப் போக, ராத்திரி ஊர் ஒடுங்கும் நேரத்திற்கு மேலாகிவிட்டது. இனி, சுடுகாட்டில் வைத்து நடத்தக் கூடிய காரியங்கள் மட்டுமே பாக்கி. - முதலாளியைக் கொண்டு கட்டையில் வைத்தார்கள். மக்க(ள்)மார்கள் மொட்டையடித்துக் கொண்டார்கள். வாய்க்கரிசி போடப்பட்டன. பிரேதத்தின் மேல் எருவையும், தென்னங்கூந்தல்களையும் அழகாக அடுக்கினான் அம்மாசிக் கிழவன். மூத்தமகன் கொள்ளி வைத்து முடித்ததும், கூட்டம் கலையலாயிற்று. அடுத்து நடக்க இருப்பது அம்மாசிக்கிழவன் வேலைதான். யாரையுமே உதவிக்கு அங்கு நிற்கும்படி கிழவன் கேட்டுக் கொள்ளவில்லை, வழக்கம் போல. காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த சடையன், சின்னையாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு, ஊருக்குத் தெற்கே வெகுதூரத்திலிருக்கும் மயானத்திற்குப் போனான். சுடலையில் சீமான் முதலாளி 'தகதக' வென்று எரிந்து கொண்டிருந்தார். அம்மாசிக் கிழவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான் சடையன், பரபரப்புடன். ... முதலாளியின் கால்மாட்டிற்கு நாலுபாகம் வடக்கே தள்ளி ஒரு பள்ளத்தில் கிழவன் விழுந்து கிடப்பது, அந்தச் சுடலை வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடைசி மனுசன்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஏழை, அரசர், லாவோட்சு, கிராமம், குதிரை, நகரம்
தலைப்பு: மனிதனின் முடிவுகள்
| நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், "இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை." என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, "நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்" என்றனர். அந்த கிழவன், "அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?" என்றான். மக்கள், "எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை." என்றனர். அந்த கிழவன், "லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?" என்றான். மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது. பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,"அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றனர். அந்த கிழவன், "மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்." என்றார். இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், "நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்." என்றனர். அந்த வயதானவன், "நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்." என்றான். இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது. அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, "நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்." என்றனர். அந்த வயதானவன், "உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்." என்றார். நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு பட்டணத்தில் இரண்டு செட்டிமார்கள் இருந்தார்கள். இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன், அயல் நாடு போக வேண்டியிருந்ததால், தன்னிடம் உள்ள ஆயிரம் துலாம் இரும்பையும், தன் நண்பனிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டான். வெளிநாடு சென்றவன் திரும்பி வந்து கேட்ட போது, இரும்பை யெல்லாம் எலி தின்று விட்டது” என்று நண்பன் கூறி விட்டான். சரி, போனால் போகிறது!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான். பிறகு ஒரு முறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளி நாடு சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டான். நண்ப னுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட் டான். பிறகு அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான். குளித்த பின், அந்தப் பிள்ளையைத் தகுந்த ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான். வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் என் பிள்ளை எங்கே?’ என்று கேட்டான். :உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது!” என்றான் வணிகன். உடனே மற்ற வணிகனுக்குக் கோபம் வந்து விட்டது. எங்கேயாவது பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுமா?’ என்று சண்டைக்கு வந்து விட்டான். வாய்ச்சண்டை முற்றிக் கைச் சண்டையாகி விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் ஊர் வழக்காளர் முன்னே அழைத்துச் சென்றார்கள். வழக்காளர் அந்த வணிகனைப் பார்த்து ஏனையா இது என்ன வேடிக்கை! எங்கேயாவது பிள்ளையைப் பருந்து துக்கிக் கொண்டு போகுமா?” என்று கேட்டார். ‘ஐயா, ஆயிரம் துலாம் இரும்பில் ஓர் அணுவும் மீதி வையாமல், எலி கடித்துத் தின்றிருக்கும் போது, பிள்ளையைப் பருந்து தூக்கிப் போவது என்ன அதிசயம்?’ என்று கேட்டான். ‘இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது!’ என்று வழக்காளர் விசாரித்தார். உடனே அவன் முன் நடந்தவைகளைக் கூறினான். அப்படியானால், நீ செய்தது சரிதான்!” என்று சொல்லி விட்டு, வழக்காளர் அந்த வணிகனுடைய நண்பனைப் பார்த்து, ஆயிரம் துலாம் இரும்பையும் நீ திருப்பிக் கொடுத்தால், அவன் உன் பிள்ளை யைத் திருப்பிக் கொடுப்பான்’ என்று தீர்ப்பளித்தார். சரி யென்று ஒப்புக்கொண்டு இருவரும் திரும்பி னார்கள். - அந்த நண்பன் முன் இரும்பைத் திருடி விற்ற போது விலை குறைத்திருந்தது. இப்போது விலை கூடிவிட்டபடியால் அவன் பெரு நஷ்டப்பட்டு வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று ஆயிரம் துலாம் இரும்பையும் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவன் ஏழையாகி விட்டான். வஞ்சகம் செய்பவர்கள் வாழ மாட்டார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எலி இரும்பைத் தின்றது' என்பதாகும். |