text
stringlengths 23
10.7k
|
---|
உலகமெல்லாம் - இவ்வுலகம் முழுவதும், உரல் போதாது என்று - உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி, பெரியர் - பெரியவர் பலர், உலக்கை பல ஓச்சுவார் - பல உலக்கைகளைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள், உலகங்கள் போதாது என்று - உலகங்கள் பலவும் இடம் போத மாட்டா என்னும்படி, அடியார் - அடியவர், கலக்க - ஒன்று கூடி, காணவந்து நின்றார் - பார்ப்பதற்கு வந்து நின்றனர், நலக்க - நாம் நன்மையடைய, அடியோமை ஆண்டுகொண்டு - அடியார்களாகிய நம்மை ஆட்கொண்டருளி, நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, பாதங்கள் - திருவடிகளை, சூடத்தந்த - நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த, மலைக்கு மருகனை - மலையரசனுக்கு மருகனாகிய இறைவனை, பாடிப்பாடி - பலகாற்பாடி, மகிழ்ந்து - களித்து, பொற்சுண்ணம் - பொன்போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .பொற்சுண்ணம் இடித்தலில் அடியார்க்குரிய ஆர்வத்தைக் காட்டுவார், ‘உலக்கை பல ஓச்சுவார் பெரியர்’ என்றும், ‘நலக்க அடியவர் வந்து நின்றார்’ என்றும் கூறினார். ‘நலக்க’ என்பது ‘நலம்’ என்பது வினைச்சொல்லாக வந்ததாம்..இதனால், பொற்சுண்ணம் இடித்தலில் அடியார்க்குள்ள ஆர்வம் கூறப்பட்டது..சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்.தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப |
நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்பப்.நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்பப்.பாடகம் மெல்லடி ஆர்க்கும்மங்கை.பங்கினன் எங்கள் பராபரனுக்.காடக மாமலை அன்னகோவுக்.காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. |
பதப்பொருள் : .சூடகம் தோள்வளை - கை வளையும் தோள் வளையும், ஆர்ப்ப ஆர்ப்ப - பலகாலும் ஒலிக்க, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப - அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, பாடகம் - கால் அணி, மெல் அடி - மென்மையான பாதங்களில், ஆர்க்கும் - ஒலிக்கும், மங்கை - உமாதேவியை, பங்கினன் - ஒரு பாகத்தில் உடையவனாகிய, எங்கள் பராபரனுக்கு - எங்களது மிக மேலானவனும், ஆடகமாமலை அன்ன - பெரிய பொன்மலையை ஒத்த, கோவுக்கு - தலைவனுமாகிய இறைவனுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .நாடவர் ஆர்த்தல் நம்மைப் பித்தரெனக் கருதி. நாம் ஆர்த்தல் அவர் தமக்கு உறுதிப் பயனை உணராமையைக் கருதி, ‘ஆர்ப்ப ஆர்ப்ப’ என்ற அடுக்கு பன்மை பற்றி வந்தது. இறைவன் செம்மேனியம் மானாதலின், ‘ஆடக மாமலை யன்ன கோ’ என்றார்..இதனால், அடியார் உலகத்தவர் செயலை மதியார் என்பது கூறப்பட்டது..வாட்டடங் கண்மட மங்கை நல்லீர் |
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்.தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்.சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி.நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி.நாயிற் கடைப்பட்ட நம்மைஇம்மை.ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி |
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.வாள் - வாள் போன்ற, தடங்கண் - பெரிய கண்களையும், மடம் - இளமையுமுடைய, மங்கை நல்லீர் - மங்கைப் பருவப் பெண்களே, வரிவளை ஆர்ப்ப - வரிகளையுடைய வளையல்கள் ஒலிக்கவும், வண் கொங்கை பொங்க - வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோள் திருமுண்டம் துதைந்து இலங்க - தோளிலும் நெற்றியிலும் திருநீறு பிரகாசிக்கவும், எம்பிரான் - எம்பெருமானே, சோத்து என்று - வணக்கம் என்று, சொல்லிச் சொல்லி - பலகாற்கூறி, நாள் கொண்ட - அப்பொழுது பறித்த, நாள் மலர் - அன்றலர்ந்த மலர்கள் சூட்டப்பெற்ற, பாதம் காட்டி - திருவடியைக் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை - நாயினும் கீழ்ப்பட்ட நம்மை, இம்மை - இப்பிறவியிலே, ஆட்கொண்ட வண்ணங்கள் - ஆண்டு கொண்ட முறைகளை, பாடிப்பாடி - பலகாற்பாடி, ஆட - இறைவன் திருமுழுக்கிற்கு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.மடம் பெண்மைக்குணம் நான்கனுள் ஒன்று. பெண்மைக் குணம் நான்காவன - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. மங்கைப் பருவம் - பெண்கள் பருவம் ஏழனுள் ஒன்று. பெண்கள் பருவம் ஏழாவன - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பன. இவற்றுள் மங்கைப் பருவம் பன்னிரண்டு வயதுள்ள பருவம். ‘இலங்க’ என்ற குறிப்பால் ‘திருநீறு’ என்பது வருவிக்கப்பட்டது. இறைவன் உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பப் பல விதமாக ஆட்கொள்வானாதலின், ‘ஆட்கொண்ட வண்ணங்கள்’ எனப் பன்மையால் கூறினார்..இதனால், இறைவனது கருணையை நினைந்து பாட வேண்டும் என்பது கூறப்பட்டது. |
வையகம் எல்லாம் உரலதாக.மாமேரு என்னும் உலக்கைநாட்டி.மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி.மேதகு தென்னன் பெருந்துறையான்.செய்ய திருவடி பாடிப்பாடிச்.செம்பொன் உலக்கை வலக்கைபற்றி |
ஐயன் அணிதில்லை வாணனுக்கே.ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.வையகம் எல்லாம் உரல் ஆக - உலக முழுதும் உரலாகக் கொண்டு, மாமேரு என்னும் உலக்கை நாட்டி - மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலை நாட்டி, மெய்யெனும் மஞ்சள் நிறைய ஆட்டி - உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு, மேதகு - மேன்மை தங்கிய, தென்னன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது, செய்ய திருவடி - செம்மையாகிய திருவடியை, பாடிப்பாடி - பலகாற்பாடி, செம்பொன் உலக்கை - செம்பொன் மயமான உலக்கையை, வலக்கை பற்றி - வலக்கையிற்பிடித்து, ஐயன் - தலைவனாகிய, அணி - அழகிய, தில்லை வாணனுக்கு - திருத்தில்லையில் வாழும் சிவபெருமானுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.பொற்சுண்ணம் இடிக்குங்கால் உலகமே உரல் என்றும், உலக நடுவில் உள்ள மகாமேருவே உலக்கை என்றும், வாய்மையே மஞ்சள் என்றும் பாவனை பண்ண வேண்டும் என்பதாம். இறைவன் திருவடிப் புகழ்ச்சியே இங்கு உரற்பாட்டு ஆதலின், ‘செய்ய திருவடி பாடிப்பாடி’ என்றார். |
இதனால், இறைவன் பொற்சுண்ணத்தின் உண்மை நிலை கூறப்பட்டது..முத்தணி கொங்கைகள் ஆடஆட.மொய்குழல் வண்டினம் ஆடஆடச்.சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்.செங்கயற் கண்பனி ஆடஆடப்.பித்தெம் பிரானொடும் ஆடஆடப் |
பிறவி பிறரொடும் ஆடஆட.அத்தன் கருணையொ டாடஆட.ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : .முத்து அணி கொங்கைகள் - முத்து வடமணிந்த தனங்கள், ஆட ஆட - அசைந்து ஆடவும், மொய்குழல் வண்டு இனம் - நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள், ஆட ஆட - எழுந்து ஆடவும், சித்தம் சிவனொடும் - மனமானது சிவபெருமானிடத்தில், ஆட ஆட - நீங்காதிருக்கவும், செங்கயல் கண் - செங்கயல் மீன் போன்ற கண்கள், பனி ஆட ஆட - நீர்த்துளிகளை இடைவிடாது சிந்த, பித்து - அன்பு, எம்பிரானொடும் - எம்பெருமானிடத்தில், ஆட ஆட - மேன்மேற் பெருகவும், பிறவி பிறரொடும் - பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும், ஆட ஆட - சூழ்ந்து செல்லவும், அத்தன் - எம் தந்தையாகிய சிவபெருமான், கருணையொடு - அருளொடு, ஆட ஆட - நம்முன் விளங்கித் தோன்றவும், ஆட - அவன் திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : |
தனங்கள் அசைந்து ஆடுதலும், வண்டுகள் எழுந்து ஆடுதலும் பொற்சுண்ணம் இடித்தலால் உண்டாவன. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலால் கண்ணீர் அரும்பலும், இறைவனிடத்தில் அன்பு வைத்தலால் அவன் விளங்கித் தோன்றுதலும் உண்டாம் என்கின்ற காரணகாரிய முறையாய் அமைந்துள்ள இந்நயம் அறிந்து இன்புறத் தக்கது. இறைவனைப் பற்றாதார் பிறவியைப் பற்றுவார் என்பது, ‘பிறவி பிறரொடும் ஆட ஆட’ என்பதனாற்புலனாகிறது..இதனால், இறைவழிபாட்டின் அனுபவம் கூறப்பட்டது..மாடு நகைவாள் நிலாஎறிப்ப.வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்.பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்.பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் |
தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்.சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி.ஆடுமின் அம்பலத் தாடினானுக்.காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.மாடு - (பெண்களே) பக்கங்களில், நகைவாள் - பல்லினது ஒளி, நிலா எறிப்ப - நிலவு போன்று ஒளி வீசவும், அம்பவளம் - அழகிய பவளம் போன்ற உதடுகள், துடிப்ப - துடிக்கவும், வாய் திறந்து - வாயைத் திறந்து, பாடுமின் - பாடுங்கள், நந்தம்மை ஆண்டவாறும் - நம்மை அவன் ஆண்டுகொண்ட வழியையும், பணி கொண்ட வண்ணமும் - இறை பணியிலே நிற்கச் செய்ததையும், பாடிப் பாடி - அவ்வாறு இடைவிடாது பாடி, எம்பெருமானைத் தேடுமின் - எம்பெருமானைத் தேடுங்கள், தேடி - அவ்வாறு தேடி, சித்தம் களிப்ப - மனம் உன்மத்த நிலையையடைய, திகைத்து - தடுமாறி, தேறி - பின்னர் மனம் தௌ¤ந்து, ஆடுமின் - ஆடுங்கள், அம்பலத்து - தில்லையம்பலத்தில், ஆடினானுக்கு - நடனஞ் செய்தவனுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். |
விளக்கம் :.நிலா என்பது பல்லினது ஒளிக்கும், பவளம் என்பது உதட்டினது நிறத்துக்கும் உவமையாயின. இவை, பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களது இளமையைக் காட்டின..‘நந்தம்மை ஆண்டவாறும்’ என்றதனால், இறைவன் குருவாய் எழுந்தருளி வந்த ஆண்ட தன்மையையும், ‘பணி கொண்ட வண்ணமும்’ என்றதனால், ஆட்கொண்டதோடு நில்லாமல் இறைபணியிலேயும் நிற்கச் செய்தமையையும் குறிப்பிட்டார், இறைபணி நிற்றலாவது, எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியிருத்தல்..இதனால், இறைவன் ஆன்மாக்களை ஆட்கொண்டு, இறைபணியில் நிற்கச் செய்கிறான் என்பது கூறப்பட்டது..மையமர் கண்டனை வானநாடர்.மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை |
ஐயனை ஐயர்பி ரானைநம்மை.அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்.பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்.போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள்.பையர வல்குல் மடந்தைநல்லீர்.பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. |
பதப்பொருள் : .போது - தாமரை மலர் போன்ற, அரி - செவ்வரி படர்ந்த, இணைகண் - இரண்டு கண்களையும், பொன் தொடித்தோள் - பொன் வளையணிந்த தோள்களையும், அரவுபை - பாம்பின் படம் போன்ற, அல்குல் - அல்குலையுமுடைய, மடந்தை நல்லீர் - மடந்தைப் பருவத்தை யுடைய பெண்களே, மை அமர் கண்டனை - கருமையமைந்த கழுத்தினை யுடையவனும், வான நாடர் மருந்தினை - விண்ணுலகத்தாருக்கு அமுதமாயிருப்பவனும், மாணிக்கக் கூத்தன் தன்னை - செம்மை நிறமுடைய கூத்தனும், ஐயனை - தேவனும், ஐயர் பிரானை - தேவர்க்குத் தலைவனும், நம்மை அகப்படுத்து - நம்மைத் தன் வயப்படுத்தி, ஆட்கொண்டு - அடிமை கொண்டு, அருமை காட்டும் - தனது அரிய தன்மையைப் புலப்படுத்தின, பொய்யர் தம் பொய்யனை - பொய்மையாளருக்குப் பொய்மையானவனும், மெய்யர் மெய்யை - மெய்மையாளருக்கு மெய்மையானவனுமாகிய இறைவனை, பாடி - பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .‘மாணிக்கம்’ என்றதால், இறைவனது நிறமும், ‘கூத்தன்’ என்றதால், அவனது இயல்பும் கூறியவாறாம். அருமை காட்டலாவது, தன் இயல்பைக் காட்டிப் பேரின்பம் தருதலாம். அன்பில்லாதார்க்கு இறைவன் விளங்கித் தோன்ற மாட்டானாதலின், ‘பொய்யர்தம் பொய்யனை’ என்றார்..இதனால், இறைவன் மெய்யன்பர்களுக்கு உண்மைப் பொருளாய், இன்பம் தருவான் என்பது கூறப்பட்டது..மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் |
வெண்ணகைப் பண்அமர் மென்மொழியீர்.என்னுடை ஆரமு தெங்களப்பன்.எம்பெரு மான்இம வான்மகட்குத்.தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்.தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப்.பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் |
பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.மின் இடை - மின்னல் கொடி போன்ற இடையினையும், செந்துவர் வாய் - செம்பவளம் போன்ற இதழினையும், கருங்கண் - கருமையான கண்களையும், வெள்நகை - வெண்மையான பற்களையும், பண் அமர் - இசை பொருந்திய, மெல் மொழியீர் - மென்மையான மொழியினையும் உடையவர்களே, பொன்னுடைப் பூண்முலை - பொன்னாபரணம் அணிந்த தனங்களையுடைய, மங்கை நல்லீர் - மங்கைப் பருவப் பெண்களே, என்னுடை ஆர் அமுது - என்னையுடைய அமுதம் போன்றவனும், எங்கள் அப்பன் - எங்கள் அப்பனும், எம் பெருமான் - எம் பெருமானும், இமவான் மகட்கு - மலையரசன் மகளாகிய பார்வதிக்கு, தன்னுடைக் கேள்வன் - அவளை உடைய நாயகனும், மகன் - மகனும், தகப்பன் - தந்தையும், தமையன் - முன் பிறந்தானுமாகிய, எம் ஐயன் - எங்கள் கடவுளது, தாள்கள் பாடி - திருவடிகளைப் பாடி, பொன் திருச்சுண்ணம் - பொன் போலும் அழகிய வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் :.இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறானாதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அன்று..இதனால், இறைவனது தன்மை கூறப்பட்டது. |
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்.தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்.செங்கனி வாயித ழுந்துடிப்பச்.சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்.கங்கை இரைக்க அராஇரைக்குங்.கற்றைச் சடைமுடி யான்கழற்கே |
பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்.பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : .சேயிழையீர் - செம்மையாகிய அணிகளையுடைய பெண்களே, சங்கம் அரற்ற - சங்க வளையல் ஒலிக்கவும், சிலம்பு ஒலிப்ப - காற்சிலம்பு ஒலிக்கவும், தாழ்குழல் - நெடிய கூந்தலில், சூழ்தரு - சுற்றிய, மாலை ஆட - பூமாலை அசையவும், வாய் - வாயிலுள்ள, செங்கனி - சிவந்த கொவ்வைக் கனி போலும், இதழும் துடிப்ப - உதடும் துடிக்கவும், சிவலோகம் பாடி - சிவபுரத்தின் பெருமையைப் பாடி, கங்கை இரைக்க - கங்கை வெள்ளம் சத்திக்க, அரா இரைக்கும் - பாம்பு நடுங்கி ஒலிக்கின்ற, கற்றைச் சடை முடியான் - திரட்சியான சடையையடைய இறைவனது, கழற்கு - திருவடிக்கு, பொங்கிய காதலின் - மிகுந்த விருப்பத்தால், கொங்கை பொங்க - தனங்கள் விம்ம, பொற்றிருச்சுண்ணம் - பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .சிவபுரத்தைப் பாடுவதால் இன்பம் உண்டாகிறது என்பார், ‘வாயிதழும் துடிப்ப’ என்றார். கங்கை ஒலியை இடிமுழக்கம் என்று எண்ணி அஞ்சுவதால் பாம்பு இரைகின்றது என்பார், ‘கங்கை இரைக்க அரா இரைக்கும்’ என்றார். |
இதனால், இறையுணர்வின் இன்பம் கூறப்பட்டது..ஞானக் கரும்பின் தௌ¤வைப்பாகை.நாடற் கரிய நலத்தைநந்தாத்.தேனைப் பழச்சுவை ஆயினானனைச்.சித்தம் புகுந்துதித் திக்கவல்ல.கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட |
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்.பானல் தடங்கண் மடந்தைநல்லீர்.பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : .பானல் - கருங்குவளை மலர் போன்ற, தடங்கண் - பெரிய கண்களையுடைய, மடந்தை நல்லீர் - இளம் பெண்களே, ஞானக் கரும்பின் தௌ¤வை - ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தௌ¤வானவனும், பாகை - அதன் பாகான வனும், நாடற்கு அரிய நலத்தை - தேடுவதற்கு அருமையான நம்மைப் பொருளானவனும், நந்தாத்தேனை - சுவை கெடாத தேனானவனும், பழச்சுவையாயினானை - முக்கனிகளின் சுவையானவனும், சித்தம் புகுந்து - மனத்தில் புகுந்து, தித்திக்க வல்ல கோனை - இனிக்க வல்ல தலைவனும், பிறப்பு அறுத்து - பிறவித்தளையை அறுத்து, ஆண்டுகொண்ட - ஆண்டுகொண்டருளின, கூத்தனை - கூத்தப் பெருமானுமாகிய இறைவனை, நாத்தழும்பேற - நாவில் வடுவுண்டாகும்படி, வாழ்த்தி - துதித்து, பாடி - பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : |
‘ஞானக் கரும்பு’ உருவகம். தௌ¤வு - சாறு, பாகு, அதனைக் காய்ச்சியது. தௌ¤வைவிடப் பாகு சுவையுடைய பொருள். எனவே, ‘தௌ¤வைப் பாகை’ எனப் பிரித்துக் கூறினார். தேன் நாளடைவில் கெடுதல் அடையும். ஒரு நாளும் கெடுதல் அடையாத இறைவனை ‘நாந்தாத் தேன்’ என்றார். பழச்சுவையாவது, மா பலா வாழையாகிய முக்கனியின் சுவை..இதனால், இறைவன் சுவைப்பொருளாய்த் தித்திக்க வல்லவன் என்பது கூறப்பட்டது..ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ.டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்.தேவர் கனாவிலுங் கண்டறியாச்.செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் |
சேவகம் ஏந்திய வெல்கொடியான்.சிவபெரு மான்புரம் செற்றகொற்றச்.சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்.செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : .நாமும் - நாமும், அன்பர் தம்மோடு வந்து - அன்பரோடு கூடி வந்து, ஆவகை - உய்யும் வகையில், ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி - பணி செய்யும் வகைகளைப் பாடி, விண்மேல் - விண்ணுலகத்திலுள்ள, தேவர் - தேவர்கள், கனாவிலும் கண்டறியா - கனவிலும் கண்டறியாத, செம்மலர்ப் பாதங்கள் - செந்தாமரை மலர் போலும் திருவடிகளை, காட்டும் - எமக்குக் காட்டுகின்ற, செல்வச் சே அகம் ஏந்திய - செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட, வெல் கொடியான் - வெற்றியையுடைய கொடியையுடையவனும், சிவபெருமான் - சிவபெருமானும், புரம் செற்ற - முப்புரங்களை அழித்த, கொற்றச் சேவகன் - வெற்றியை யுடைய வீரனுமாகிய இறைவனது, நாமங்கள் பாடிப்பாடி - திருநாமங்களைப் பரவி, செம்பொன் செய்சுண்ணம் - சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். |
விளக்கம் : .காளை செல்வமாகக் கருதப்படுதலின், ‘செல்வச்சே’ என்றார். ‘சே’ என்பது இங்குக் காளையினது வடிவத்தைக் குறித்தது. இவ்வடிவம் கொடியின் அகத்தே எழுதப்பட்டிருத்தலின், ‘சேவகம் ஏந்திய கொடி’ என்றார். திரிபுரங்களை அழித்தமையால், வீரனாயினான் என்பார், ‘புரம் செற்ற கொற்றச் சேவகன்’ என்றார்..இதனால், இறைவனது வீரம் கூறப்பட்டது..தேனக மாமலர்க் கொன்றைபாடிச்.சிவபுரம் பாடித் திருச்சடைமேல்.வானக மாமதிப் பிள்ளைபாடி |
மால்விடை பாடி வலக்கையேந்தும்.ஊனக மாமழுச் சூலம்பாடி.உம்பரு இம்பரும் உய்யஅன்று.போனக மாகநஞ் சுண்டல்பாடிப்.பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் : |
தேன் அகம் - சிவபெருமானது தேன் நிறைந்த உள்ளிடத்தையுடைய, மா - பெருமை பொருந்திய, கொன்றை மலர் பாடி - கொன்றை மலரைப் பாடி, சிவபுரம் பாடி - சிவலோகத்தைப் பாடி, திருச்சடைமேல் - அழகிய சடையின் மேலுள்ள, வான் அகம் - விண்ணிடத்து உலாவுகின்ற, மாமதிப் பிள்ளை பாடி - பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, மால் விடை பாடி - பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையேந்தும் - வலக்கையில் தாங்கிய, ஊன் அகம் ஆம் - தசை தன்னிடத்தில் பொருந்திய, மழு சூலம் பாடி - மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, உம்பரும் - விண்ணுலகத்தாரும், இம்பரும் - மண்ணுலகத்தாரும், உய்ய - பிழைக்கும் வண்ணம், அன்று - அந்நாளில், நஞ்சு - விடத்தை, போனகமாக - உணவாக, உண்டல் பாடி - உண்டதைப் பாடி, பொற்றிருச் சுண்ணம் - பொன்போலும் அழகிய வாசனைப்பெடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .சரணடைந்தார்க்குத் தஞ்சமளித்துக் காக்க வல்ல பெருமான் என்பதை, ‘திருச்சடைமேல் வானக மாமதிப்பிள்ளை’ காட்டுகிறது. இனி, தான் துன்பத்தையேற்றும் தன்னையடைந்தவர்க்கு இன்பம் தருபவன் பெருமான் என்பதை, ‘உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாக நஞ்சுண்டல்’ காட்டுகிறது..இதனால், இறைவனது அறக்கருணை கூறப்பட்டது..அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி.அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் |
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி.காலனைக் காலால் உதைத்தல்பாடி.இயைந்தன முப்புரம் எய்தல்பாடி.ஏழை அடியோமை ஆண்டுகொண்ட.நயந்தனைப் பாடிநின் றாடியாடி.நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. |
பதப்பொருள் : .அயன் தலை கொண்டு - (சிவபெருமான்) பிரமம் தலையைக் கொய்து, செண்டு ஆடல் பாடி - பந்தாடினமையைப் பாடி, அருக்கன் எயிறு - சூரியனது பல்லை, பறித்தல் பாடி - தகர்த்தமையைப் பாடி, கயந்தனைக் கொன்று - யானையைக் கொன்று, உரி போர்த்தல் பாடி - அதன் தோலைப் போர்த்துக்கொண்டமையைப் பாடி, காலனை - இயமனை, காலால் உதைத்தல் பாடி - திருவடியால் உதைத்தமையைப் பாடி, இயைந்தன முப்புரம் - ஒருங்கே உலவிய திரிபுரங்களை, எய்தல் பாடி - அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, ஏழை அடியோமை - சிற்றறிவும் சிறு தொழிலு முடைய எங்களை, ஆண்டுகொண்ட - ஆட்கொண்ட, நயந்தனைப் பாடி - நன்மையினைப் பாடி, நின்று ஆடி ஆடி - பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி, நாதற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .அயன் தலை கொண்டு செண்டாடியது : தன்னைப் பிரமம் என்று அகங்கரித்த பிரமனுடைய செருக்கடங்கும் பொருட்டு இறைவன் வைரவ மூர்த்தியை உண்டாக்கினான். அவ்வைரவ மூர்த்தியைக் கண்டு பிரமனுடைய நடுச்சிரம் நகைக்க, வைரவர் அதனைக் கொய்து பிரமனது செருக்கை அடக்கினார்..இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது..வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி |
மத்தமும் பாடி மதியும்பாடிச்.சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்.சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்.கட்டிய மாசுணக் கச்சைபாடிக்.கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்.இட்டுநின் றாடும் அரவம்பாடி |
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே..பதப்பொருள் : .வட்டம் - சிவபெருமானது வட்ட வடிவாகிய, கொன்றை மலர் மாலை பாடி - கொன்றை மலர் மாலையைப் பாடி, மத்தமும் பாடி - ஊமத்த மலரையும் பாடி, மதியும் பாடி - பிறையையும் பாடி, சிட்டர்கள் வாழும் - பெரியோர் வாழ்கின்ற, தென் தில்லை பாடி - அழகிய தில்லை நகரைப் பாடி, சிற்றம்பலத்து - அங்குள்ள ஞான சபையிலுள்ள, எங்கள் செல்வம் பாடி - எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, கட்டிய மாசுணக் கச்சை பாடி - அரையிற்கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கங்கணம் பாடி - கையில் சுற்றியுள்ள கங்கணம் பாடி, கவித்த கைம்மேல் - மூடின கையின்மேல், இட்டு - வைக்கப்பட்டு, நின்று ஆடும் - படமெடுத்து ஆடுகின்ற, அரவம் பாடி - பாம்பைப் பாடி, ஈசற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்..விளக்கம் : .ஊமத்தம் ‘மத்தம்’ என முதற்குறையாயிற்று. இறைவனுக்கு உகந்த மலர்களுள் ஊமத்தம் ஒன்று. சிஷ்டர் என்ற வடமொழிச்சொல் சிட்டர் என வந்தது..மூடிய கைம்மேல் அரவத்தை இட்டு ஆட்டியது : |
திருப்புறம்பயத்தில் ஓர் அடியவள்பொருட்டு இறைவன் பாம்பாட்டியாய்ச் சென்று, பாம்பு தீண்டி மாண்ட அவள் கணவனை உயிர்ப் பித்தருளினன். கச்சாகவும் கங்கணமாகவும் அணிந்த ஏனையவை, தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மேல் ஏவப்பட்டவையாம்..இதனால், இறைவனது அணி கூறப்பட்டது..வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு.மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்.சோதியு மாம்இருள் ஆயினார்க்குத்.துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் |
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்.பந்தமு மாய்வீடும் ஆயினாருக்.காதியும் அந்தமும் ஆயினாருக்.காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே..பதப்பொருள் :.வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு - வேத நூலும் அவற்றுள் கூறப்படும் யாகங்களும் ஆனவரும், மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு - மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு - ஒளியுமாகி இருளும் ஆனவரும், துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு - துன்பமுமாகி இன்பம் ஆனவரும், பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு - பாதியுமாகி முழுதுமானவரும், பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு - உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு - உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, ஆட - நீர் ஆடும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். |
விளக்கம் :.இறைவன் எல்லாப் பொருளுமாய் இருக்கின்ற நிலையை வேதம், வேள்வி, மெய்ப்பொருள், பொய்ப்பொருள், ஒளி, இருள், துன்பம், இன்பம், பாதி, முற்றும், பந்தம், வீடு, ஆதி, அந்தம் ஆகியிருக்கின்றான் எனக் கூறி விளக்கினார்..மெய்ப்பொருளாவது, நிலைபேறுடைய பொருளான கடவுள், பொய்ப்பொருளாவது, நிலையில்லாதது; மாயா காரியங்களாகிய உலகம். ஒளியாவது, அறிவு. இருளாவது, அறியாமை. பாதியாவது, கட்டு நீங்காத உயிர்கள் தம் முனைப்பினால் செய்யும் செயல். முற்றுமாவது, கட்டு நீங்கிய உயிர்கள் திருவருள்வழி நின்று செய்யும் செயல். பந்தமாவது, பிறப்பு நிலை. வீடாவது, பிறப்பு நீங்கிப் பேரின்பம் உற்ற நிலை. ஆதியாவது, உலகத் தோற்றம். அந்தமாவது, அதன் முடிவு..இதனால், இறைவனது பரிபூரண வியாபகம் கூறப்பட்டது..திருக்கோத்தும்பி .சிவனோடு ஐக்கியம் |
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) .பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த .நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் .மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் .சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 4 .திருக்கோத்தும்பி/உரை 1-4 |
நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் .வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி .ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் .தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 8.திருக்கோத்தும்பி/உரை 5-8.தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே |
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் .அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் .குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 12 .திருக்கோத்தும்பி/உரை 9-12.கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் .என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி |
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் .கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 16 .திருக்கோத்தும்பி/உரை 13-16.அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் .பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே .பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற |
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 20.திருக்கோத்தும்பி/உரை 17-20 .வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் .பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் .சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த .வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24 |
திருக்கோத்தும்பி/உரை 21-24.சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் .கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை.ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் .சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 28.திருக்கோத்தும்பி/உரை 25-28 |
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு .நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த .என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் .குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 32.திருக்கோத்தும்பி/உரை 29-32 .கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் |
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு .மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த .கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 36.திருக்கோத்தும்பி/உரை 33-36 .நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து .நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் |
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் .தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 40.திருக்கோத்தும்பி/உரை 37-40 .வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே .கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட .அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் |
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 44.திருக்கோத்தும்பி/உரை 41-44.நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் .பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் .சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் .தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 48 |
திருக்கோத்தும்பி/உரை 45-48 .நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் .தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் .ஆன கருணையும் அங்குற்றே தானவனே .கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 52.திருக்கோத்தும்பி/உரை 49-52 |
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே .மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி .அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட .திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 56.திருக்கோத்தும்பி/உரை 53-56 .நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் |
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் .வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் .தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 60.திருக்கோத்தும்பி/உரை 57-60 .உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் .கள்ளப் படாத களிவந்த வான்கருணை |
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் .கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 64.திருக்கோத்தும்பி/உரை 61-64 .பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் .மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட .ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் |
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 68.திருக்கோத்தும்பி/உரை 65-68 .தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் .பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் .சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் .கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 72 |
திருக்கோத்தும்பி/உரை 69-72 .கள்வன் கடியன் கலதியிவன் என்னாத .வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே .உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்.தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 76.திருக்கோத்தும்பி/உரை 73-76 |
பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று .ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க .நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த.தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 80.திருக்கோத்தும்பி/உரை 77-80 .திருச்சிற்றம்பலம் |
பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும் . திருப்பொற் சுண்ணம் ("முத்து நல் தாமம்" எனத் தொடங்கும் பாடல்). சிவபுராணம் ("நமச்சிவாயம்" எனத் தொடங்கும் பாடல்). அச்சப் பத்து ("புற்றில் வாள்" எனத் தொடங்கும் பாடல்). யாத்திரைப் பத்து ("பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல்). பிடித்த பத்து ("உம்பர்கட்கு அரசே" எனத் தொடங்கும் பாடல்) |
புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் .கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி .மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு.அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 4 .அச்சப் பத்து/உரை 1-4.வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் |
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் .திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன .அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 8.அச்சப் பத்து/உரை 5-8.வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் .என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற |
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா .அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 12 .அச்சப் பத்து/உரை 9-12.கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்.வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் .துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு |
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 16.அச்சப் பத்து/உரை 13-16.பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் .துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் .திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு .அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 20 |
அச்சப் பத்து/உரை 17-20.வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்.தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்.தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் .ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 24 .அச்சப் பத்து/உரை 21-24 |
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் .புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் .முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி .அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 28.அச்சப் பத்து/உரை 25-28.தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் |
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் .செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா .அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 32 .அச்சப் பத்து/உரை 29-32.மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் .நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் |
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது .அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 36 .அச்சப் பத்து/உரை 33-36.கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் .நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு .வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா |
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 40 .அச்சப் பத்து/உரை 37-40.திருச்சிற்றம்பலம்.பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும் . திருப்பொற் சுண்ணம் ("முத்து நல் தாமம்" எனத் தொடங்கும் பாடல்). சிவபுராணம் ("நமச்சிவாயம்" எனத் தொடங்கும் பாடல்) |
திருக்கோத்தும்பி ("பூவேறு கோனும்" எனத் தொடங்கும் பாடல்). யாத்திரைப் பத்து ("பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல்). பிடித்த பத்து ("உம்பர்கட்கு அரசே" எனத் தொடங்கும் பாடல்).பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை .ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்.ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள் |
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 4 .யாத்திரைப் பத்து/உரை 1-4.புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் .மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் .நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட .தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 8 |
யாத்திரைப் பத்து/உரை 5-8.தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் .யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் .கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு .போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 12.யாத்திரைப் பத்து/உரை 9-12 |
அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் .கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் .செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் .பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 16 .யாத்திரைப் பத்து/உரை 13-16.விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை |
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் .அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே .புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 20 .யாத்திரைப் பத்து/உரை 16-20.புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு .இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே |
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் .நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 24 .யாத்திரைப் பத்து/உரை 21-24.நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே .பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே .நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் |
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 28.யாத்திரைப் பத்து/உரை 25-28.பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் .அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே .திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் .திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 32 |
யாத்திரைப் பத்து/உரை 29-32.சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் .போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் .ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் .போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 36 .யாத்திரைப் பத்து/உரை 33-36 |
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர் .மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் .தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் .அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 40 .யாத்திரைப் பத்து/உரை 37-40.திருச்சிற்றம்பலம் |
பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும் . திருப்பொற் சுண்ணம் ("முத்து நல் தாமம்" எனத் தொடங்கும் பாடல்). சிவபுராணம் ("நமச்சிவாயம்" எனத் தொடங்கும் பாடல்). அச்சப் பத்து ("புற்றில் வாள்" எனத் தொடங்கும் பாடல்). திருக்கோத்தும்பி ("பூவேறு கோனும்" எனத் தொடங்கும் பாடல்). பிடித்த பத்து ("உம்பர்கட்கு அரசே" எனத் தொடங்கும் பாடல்) |
உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு .வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே .செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே .எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 4 .பிடித்த பத்து/உரை 1-4.விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே |
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து .கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே .இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 8 .பிடித்த பத்து/உரை 5-8.அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே .பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் |
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே .இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 12 .பிடித்த பத்து/உரை 9-12.அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே .பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே .தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே |
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 16 .பிடித்த பத்து/உரை 13-15.ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே .மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே .செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே .எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 20 |
பிடித்த பத்து/உரை 17-20.அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப் .பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே .திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே .இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 24 .பிடித்த பத்து/உரை 21-24 |
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் .பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே .தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே .ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 28 .பிடித்த பத்து/உரை 25-28.அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச் |
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே .பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் .எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 32 .பிடித்த பத்து/உரை 29-32.பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய .ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய |
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே .யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 36 .பிடித்த பத்து/உரை 33-36.புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் .என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே .துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி |
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 40 .பிடித்த பத்து/உரை 37-40.பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும் . திருப்பொற் சுண்ணம் ("முத்து நல் தாமம்" எனத் தொடங்கும் பாடல்). சிவபுராணம் ("நமச்சிவாயம்" எனத் தொடங்கும் பாடல்). அச்சப் பத்து ("புற்றில் வாள்" எனத் தொடங்கும் பாடல்) |
யாத்திரைப் பத்து ("பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல்). திருக்கோத்தும்பி ("பூவேறு கோனும்" எனத் தொடங்கும் பாடல்).தில்லையில் அருளிச் செய்தது.கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது இப்பகுதி..சிவனோடைக்கியம்.சிவனோடு ஒன்றாதல், சிவனோடு ஐக்கியமாம். |
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா.திருச்சிற்றம்பலம்.பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த.நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்.மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்.சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. |
பதப்பொருள் :.கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் -இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா -தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் :.திருமால் முதலியோர் மாயைக்கு உட்பட்டவர்களாதலின், மாயைக்கு அப்பாற்பட்ட இறைவனைக் காண முடியாது என்க. ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை மட்டும் புரியும் உருத்திரன் வேறு; ஐந்தொழிலுக்கும் உரிய பரம்பொருளாகிய பரமசிவன் வேறு ஆதலின், ‘மாவேறு சோதியும் தாமறியா’ என்றார். வேதங்களும் சுத்த மாயையிலிருந்து தோன்றுபவை யாதலால் இறைவனை அறிய முடியாதவையாயின..சேவடிக்கே என்றதிலுள்ள நான்காம் வேற்றுமை உருபை ஏழாம் வேற்றுமை உருபாக மாற்றிக்கொள்க. வண்டு சென்று ஊதுமிடம் மலராதலால், மலர் போன்ற பாதங்களில் சென்று ஊதுவாய் என்பார், ‘சேவடிக்கே சென்றூதாய்’ என்றார்..இதனால், இறைவன் திருவடியின் பெருமை கூறப்பட்டது. |
நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்.வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி.ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்.தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! வானோர் பிரான் - தேவர் பெருமான், மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி, என்னை ஆண்டிலனேல் - என்னை ஆண்டருளாவிடின், நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன், என் உள்ளம் ஆர் - என் உள்ளம் என்ன தன்மையுடையதாயிருக்கும். ஞானங்கள் ஆர் - என் அறிவு எத்தன்மைய தாயிருக்கும், என்னை யார் அறிவார் - என்னைப்பற்றி யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள், ஆதலின், ஊன் ஆர் உடைதலையில் மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் - உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது, தேன் ஆர் கமலமே - தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. |
விளக்கம் : .இறைவன் ஆட்கொண்டமையால் தமக்கு ஏற்பட்ட மாறுதலை எண்ணி வியந்து கூறுவார். ‘நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்’ என்றார். பசுகரணம் பதிகரணமாயின என்பதாம். ‘மதிமயங்கி’ என்றதற்குப் பிரமன் என்ற பொருள் கொள்ளுவாருமுளர். ‘ஊனார் உடைதலையில் உண்பலி தேர் அம்பலவன்’ என்றது, பிரமனது செருக்கையும் தாருகாவனத்து முனிவர்களது செருக்கையும் அடக்கிய வரலாறுகளை நினைவூட்டுகிறது. கமலம் ஆகுபெயராய்த் திருவடியைக் குறித்தது..இதனால், கட்டுற்ற உயிர்களது சிறுமை கூறப்பட்டது..தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே.நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்.அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் |
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் :.கோத்தும்பீ - அரச வண்டே! தினைத்தனை உள்ளது - தினையளவாய் இருக்கின்ற, ஓர் பூவினில் தேன் உண்ணாது - மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைத்தொறும் - நினைக்குந்தோறும், காண்தொறும் - காணுந்தொறும், பேசுந்தொறும் - சொல்லுந்தொறும், எப்போதும் - மற்று எக் காலத்தும், அனைத்து எலும்பு - எல்லா எலும்புகளும், உள்நெக - உள்ளே நெகிழும்படி, ஆனந்தத் தேன் சொரியும் - பேரின்பத் தேனைப் பொழிகின்ற, குனிப்புடையானுக்கே - கூத்துடைய பெருமானிடத்திலேயே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் :.பூவிலுள்ள தேனைத் ‘தினையளவு’ என்றது, ‘உலக இன்பம் சிறிது’ என்பதையும், இறைவனது கூத்தினை, ‘தேன்மழை’ என்றது, ‘இறையின்பம் அளவற்றது’ என்பதையும் குறித்தபடியாம்..இதனால், இறைவன் திருவடி இன்பம் அழியாத் தன்மையது என்பது கூறப்பட்டது. |
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்.என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி.வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்.சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. |
விளக்கம் : .அடிகள் தமக்கு இறைவன் செய்த அருள், கண்ணப்பர் போன்ற தலையன்புடையார்க்கே செய்யத்தக்கது என்பார், ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்றார். முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்து அடிகளும், ‘நாளறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்’ என்று கண்ணப்பரின் அன்புச் செயலைப் பாராட்டியுள்ளார். ‘கோலமார்தரு பொதுவினில் வருக’ என அருளியதாக முன்னர் அடிகள் கூறியதனால், ‘வாவென்ற வான்கருணை’ என்றதற்குத் தில்லைக்கு வருக என்று பொருள் கொள்ளப்பட்டது..கண்ணப்பர் அன்பு காட்டியது :.தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்..முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்..இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது. |
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்.பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே.பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற.மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! அவர் தேவர் - அவரே கடவுள், அத்தேவர் தேவர் - அவரே அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவர், என்று - என்று, இங்ஙன் - இவ்வாறு, பொய்த்தேவு பேசி - கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து, புலம்புகின்ற - பிதற்றுகின்ற, பூதலத்தே - பூலோகத்தில், பத்து ஏதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி, என் பற்று அற - என்னுடைய பற்றுகள் அறும்படி, நான் பற்றி நின்ற - நான் பற்றிக்கொண்டிருக்கிற, மெய்த்தேவர் தேவர்க்கே - உண்மையாகிய தேவர் பிரானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. |
விளக்கம் : .சிவன் ஒருவனைத் தவிர ஏனையோரைப் பரம்பொருள் என்றல், உபசாரமேயன்றி உண்மையன்று என்பார், ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார். உலகப் பற்றை விடுதற்கு இறைவனது பற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், ‘பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர்’ என்றார், ‘பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் வாக்கையும் ஒப்பு நோக்குக..இதனால், இறைவனது பற்றே சிறந்தது என்பது கூறப்பட்டது..வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும்.பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்.சித்த விகாரக் கலக்கந் தௌ¤வித்த |
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம், பெண்டிர் - மனைவியர், மக்கள் - புதல்வர், குலம் - குலம், கல்வி - கல்வி, என்னும் - ஆகிய இவையே உறுதிப்பொருளென நம்புகின்ற, பித்த உலகில் - மயங்குகின்ற இவ்வுலகத்தில், பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற, சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை, தௌ¤வித்த - போக்கிய, வித்தகத் தேவற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையன என்று அறியும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இனி, இறைவன் அடிகளுக்கு இவ்வறியாமையைப் போக்கி அறிவை நல்கினான் ஆதலால், ‘சித்த விகாரம் தௌ¤வித்த வித்தகத் தேவர்’ என்றார். பிறவி அறியாமையால் வருகிறது என்பது மறை முடிபு..‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் |
செம்பொருள் காண்ப தறிவு’.இதனால், இறைவன் ஞானத்தை நல்குபவன் என்பது கூறப்பட்டது..சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்.கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை.ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்.சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. |
பதப்பெருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! சங்கரனை - சிவபெருமானை, சட்டோ நினைக்க - செம்மையாக நினைக்க, மனத்து அமுது ஆம் - உள்ளத்தில் அமுதம் ஊறும், கேடு படாத் திருவடியை - அழியாத அவனது திருவடியை, கெட்டேன் - அந்தோ, மறப்பேனோ - நான் மறந்துவிடுவேனோ, ஒட்டாத - ஒன்றுபடாத, பாவித் தொழும்பரை - பாவம் செய்த அடிமைகளை, நாம் உரு அறியோம் - நாம் ஒரு பொருளாக அறிய மாட்டோம், சிட்டாய சிட்டற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .இறைவனைச் செம்மையாக நினைத்தால் இன்பம் உண்டாம் என்பார், ‘சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரன்’ என்றார். ‘’மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்றென்னுள் எழுபரஞ் சோதி’’ என்று இறையனுபவம் இன்பம் தர வல்லது என்பதை அடிகள் பின்னர்க் கோயிற்றிருப்பதிகத்தில் கூறுவார். ஆனால், ஒட்டாத பாவிகளை எண்ணினால் துன்பம் உண்டாம் என்பார், ‘ஒட்டாத பாவித்தொழும்பரை நாம் உருவறியோம்’ என்று ஒதுக்கித் தள்ளினார்..இதனால், இறை அனுபவம் இன்பந்தர வல்லது என்பது கூறப்பட்டது..ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு |
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த.என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்.குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! ஒன்றாய் முளைத்தெழுந்து - ஒரு பொருளாய் முறைத்துத் தோன்றி, எத்தனையோ கவடுவிட்டு - எத்தனையோ கிளைகளாக விரிந்து, என்னை - அடியேனை, நன்றாக வைத்து - நன்மை உண்டாக வைத்து, நாய் சிவிகை ஏற்றுவித்த - நாயைச் சிவிகையில் ஏற்றினாற்போலச் சிறப்புச் செய்த, என் தாதை தாதைக்கும் - என் பாட்டனுக்கும், எம் அனைக்கும் - எம் தாய்க்கும், பெருமான் - தலைவனாகிய, குன்றாத செல்வற்கே - குறைவு படாத செல்வமுடையானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : |
இறைவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை ஆதலால், ‘ஒன்றாய் முளைத்தெழுந்து’ என்றும், அவன் உலகங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்றலால், ‘எத்தனையோ கவடுவிட்டு’ என்றும் கூறினார். ‘எம் அனை’ என்றது உமையம்மையைக் குறிக்கும் என்பாருமுளர். சென்றடையாத திருவுடையானாதலின் இறைவன், குன்றாத செல்வனாயினான்..இதனால், இறைவனது முதன்மை கூறப்பட்டது..கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்.சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு.மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த.கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. |
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! கரணங்கள் எல்லாம் - கருவிகள் எல்லாவற்றிற்கும், கடந்து நின்ற - அப்பாற் பட்ட, கறைமிடற்றன் - நஞ்சு பொருந்திய கண்டத்தை யுடையவனது, சரணங்களே - திருவடிகளையே, சென்று சார்தலும் - சென்று அடைதலும், எனக்கு - அடியேனுக்கு, மரணம் பிறப்பு என்ற - இறப்பு பிறப்பு என்று சொல்லப்பட்ட, இவை இரண்டின் - இவை இரண்டால் வரக்கூடிய, மயக்கு அறுத்த - மயக்கத்தைப் போக்கின, கருணைக்கடலுக்கே - கருணைக்கடல் போன்றவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .இறைவன் கரணங்களின் துணைகொண்டு காண முடியாதவன் ஆதலின், ‘கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்’ என்றும், அவனைத் திருவருளின் துணைகொண்டு காணலாம் ஆதலின், ‘கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே’ என்றும் கூறினார். இறைவன் திருவடியை அடைந்தும், வினையும் அதனால் வரும் பிறவியும் பற்றா ஆதலின், ‘மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடல்’ என்றார்..இதனால், இறைவன் திருவடியைச் சார்ந்தவர் பிறவித்துன்பம் நீங்குவர் என்பது கூறப்பட்டது..நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து |
நாயுற்று செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்.தாயுற்று வந்தென்னை ஆட்கொண்ட தன்கருணைத்.தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! நான் நோயுற்று - நான் பிணியையடைந்து, மூத்து - முதிர்ந்து, நுந்து கன்றாய் இங்கு இருந்து - தாய்ப்பசுவால் தள்ளப்பட்ட கன்றையொத்தவனாய் இவ்விடத்திலிருந்து, நாய் உற்ற செல்வம் - நாய் பெற்ற இழிந்த செல்வம் போன்ற இவ்வுலக இன்பத்தை, நயந்து அறியா வண்ணம் - விரும்பி அனுபவியாதபடி, எல்லாம் - எல்லா வகையாலும், தாய் உற்று வந்து - தாய் போல எழுந்தருளி, என்னை ஆட்கொண்ட - என்னை அடிமை கொண்ட, தன் கருணைத் தேயுற்ற செல்வற்கே - தன் கருணையாகிய ஒளி பொருந்திய செல்வனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : |
நுந்து கன்றாவது, தாய்ப்பசுவினால் பால் கொடுக்காமல் உதைத்துத் தள்ளப்பட்ட கன்றாம். நாயுற்ற செல்வமாவது, மாமிசம் எலும்பு முதலிய இழிந்த பொருளாம். தாயுற்று வருதலாவது, துன்பத்தினின்றும் எடுத்து இன்பத்தைக் கொடுக்க வருதல். தேசு, ‘தேயு’ எனத் திரிந்தது..இதனால், உலக இன்பத்தின் இழிவு கூறப்பட்டது..வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே.கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட.அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்.பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. |
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! வன்னெஞ்சக் கள்வன் - வலிய நெஞ்சினையுடைய கரவுடையவன், மனவலியன் - திருந்தாத மனவலிமையுடையவன், என்னாது - என்று நீக்காமல், கல்நெஞ்சு உருக்கி - கல்லைப் போன்ற என் மனத்தை உருகச் செய்து, கருணையினால் - தன் பெருங்கருணையினால், ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளின, அன்னம் திளைக்கும் - பொய்கையில் அன்னப்பறவைகள் மூழ்கி விளையாடு கின்ற, அணிதில்லை அம்பலவன் - அழகிய தில்லையம்பலவாணனது, பொன் அம் கழலுக்கே - பொன்னால் ஆகிய அழகிய கழலணிந்த திருவடியிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : .‘வன்னெஞ்சக் கள்வன்’ என்றது இறைவனிடத்தில் அன்பு கொண்டு உருகாத நிலையையும், ‘மனவலியன்’ என்றது, அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாது எத்தகைய தீய செயலையும் செய்யத் துணிதலையும் குறித்தனவாம்..இதனால், இறைவன் வலிய நெஞ்சத்தையும் உருக்கி ஆட்கொள்ள வல்லான் என்பது கூறப்பட்டது..நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் |
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்.சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்.தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ..பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! நாயேனை - நாய் போன்ற என்னை, தன் அடிகள் பாடுவித்த - தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த, நாயகனை - இறைவனும், பேயேனது - பேய்த்தன்மை யுடையேனது, உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்கள் மன்னிக்கும், பெருமையனை - பெருமையுடையவனும், சீ ஏதும் இல்லாது - இகழ்தல் சிறிதும் இல்லாமல், என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற, தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக..விளக்கம் : |
இறைவன் பாட வல்ல அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. ‘மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயால்’ என்ற தடுத்தாட் கொண்ட புராணத்தையும் நோக்குக. அடிகள் பாடிய வாசகத்தை இறைவனே எழுதிக் கொண்டான் என்றதற்கு இஃது அகச்சான்று. பேய்த்தன்மையாவது, அலையுந்தன்மையாம். தாயானவள் சேயினது குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார்..இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பது கூறப்பட்டது..நான்தனக் கன்பின்மை நானுந்தானும் அறிவோம்.தான்என்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்.ஆன கருணையும் அங்குற்றே தானவனே.கோனெனைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. |
பதப்பொருள் : .கோத்தும்பீ - அரச வண்டே! நான் - யான், தனக்கு அன்பு இன்மை - இறைவன்பால் அன்பு இல்லாதிருத்தலை, நானும் தானும் அறிவோம் - நானும் அவனும் அறிவோம், தான் என்னை ஆட்கொண்டது - அவன் என்னை அடிமையாகக் கொண்டதை, எல்லோருந்தாம் அறிவார் - உலகினர் எல்லோருமே அறிவார்கள், கோன் - என் தலைவனாகிய இறைவன், ஆன கருணையும் அங்கு உற்று - முன்பு உண்டாகிய கருணையைப் போல இப்பொழுதும் கொண்டு, அவன்தானே - அவனாகவே வந்து, என்னைக்கூட - என்னைக் கூடும்படி, குளிர்ந்து ஊது இனிமையாய் ஊதுவாயாக..விளக்கம் : .‘தான் என்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்’ என்றது, இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளி ஆட்கொண்டதை. மீண்டும் தன் முன் எழுந்தருளி வருதலாகிய திருவருளைச் செய்ய வேண்டும் என்பார், ‘ஆன கருணையும் அங்குற்றே எனைக்கூட’ என்றார். ‘தான் அவனே’ என்றதை ‘அவன் தானே’ என்று மாற்றிக்கொள்க..இதனால், இறைவன் பெருங்கருணையாளன் என்பது கூறப்பட்டது..கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே |